நிலவை ஏற்றினோம் நாங்கள்

தீபம் ஏற்றலாம்
ஒன்பது மணித்துளிகள் தானோ ,
ஒன்பதுமணி நேரமும் !
ஒருநாள் ஊரடங்கு
ஒன்னொன்னாய் நீட்டிப்பு போல்
ஒன்பதுநாட்களும் தீபம் ஏற்றலாம் .

வீடற்று வீதியில் விடப்பட்டோர்
ஊரடங்கால் வாழ்விழந்து துரத்தப்பட்டோர்
எதை ஏற்றுவது எதை அனைப்பது?

சிறுவிளக்கு ஏற்றலில்
பெருமத நெருப்பு எரியலாமா?

ஒன்பது நாழிகையின் பின்
எலோருக்கும் மேலே
தலைதீபமாய் எரியும்
நிலவை அமர்த்துவது யார்?

வெறுப்பரசியல் அறியா வெள்ளந்தி
மண்டும் மதம் அண்டா நெருப்பு
கருமேகங்களும் கனிவு
கண்டு கையணையும்
நிலவை ஏற்றினோம் நாம்!

(கொரோனா நோயால் இந்தியா பாதிக்கபட்ட போது - அனைவரும் வீட்டில் 5 மார்ச் 2020 அன்று விளக்கேற்றுமாறு இந்திய பிரதமர் மோடி அறிவித்ததை பற்றிய கவிதை)

- சூரியதீபன் (6 ஏப்ரல் 2020)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பஞ்சாபி இலக்கியம் - ஆட்காட்டிக் குருவிகளாய் பெண் குரல்கள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

பொன்னீலன் ‘கரிசல்’ - நாவல்: நில வரைவியலும் நினைவுகளும்