ஈழத்தின் தொன்மையான நிகழ்த்து கலைகளில் சுடர்மிகு இரு விழிகளாகத் திகழ்பவை - தென்மோடிக் கூத்து: பிறிதொன்று வடமோடிக் கூத்து. தென் பாங்கு, வட பாங்கு என்று அடையாளப்படுத்தப் படும் வகைமை அல்லது பாணி, தென் மோடி, வடமோடி என பேச்சு வழக்கில் குறிக்கப்படுவதாக ஆகியுள்ளது. தமிழ்நாட்டில் கிராமியக்கலைகள் பயிற்றுவிப்போரை ’வாத்தியார்’ என அழைப்பதுபோல், ஈழத்தில் ‘அண்ணாவியர்’ என கூப்பிடும் சொல்வழக்கு உள்ளது. பிப்ரவரி 2015-ல் அண்ணாவியர் ச.மிக்கேல்தாஸ், அவரது இளவல் ச.ஜெயராஜா ஆகிய கூத்துக் கலைஞர்கள் கனடாவிலிருந்து தமிழகம் வந்திருந்தார்கள். அண்ணாவியார் ச.மிக்கேல்தாஸ், அண்ணாவியார் ச.ஜெயராஜா போன்றோர் புலம் பெயர் தேசத்தில் ஏன் இந்தக் கூத்துக் கலையை நிகழ்த்துகிறார்கள்? இதை தம் உடல் மொழியில் தமிழ் நாட்டில் ஏன் வந்து நிகழ்த்தினார்கள்? இசை, நாட்டியம், கூத்து, பாட்டு, நாடகம் என நிகழ்த்து கலை வித்தகர்கள், எழுத்து, கவிதை, இலக்கியம், இதழியல், காட்சியியல், சொற்பொழிவு என அறிவுப்புல விற்பன்னர்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாடு சென்று தம் திறனை வெளிப்படுத்தி நாடு திரும்புதல் இயல்பு. பறவைகள் கூடடைதல் போல், விலங்கின