ஒவ்வொரு கவிஞனுக்கும் கவிதை அவனது கடந்த காலத் தோள்கள் மீது அமர்ந்திருக்கிறது. கடந்த கால உயரத்திலிருந்து சமகாலக் கவிதை வெளிப்பாட்டினை எடுத்துக் கொள்கிறான். பிற கலை இலக்கிய வடிவங்கள் புஞ்சைத் தானியங்கள் போல் அருகிவிட்ட நிலையிலும், இதன் காரணமாகலே கவிதைக் காடு செழித்து வளருகிறது. காலம் – மொழி இரண்டினையும் சரியாக கையகப்படுத்த கடந்தகாலம் பயனுறு வினையாற்றுகிறது. ஒரு மந்திரவாதியின் கைவினை போல் இரண்டினையும் கைக்கொள்பவனிடம் கவிதை தங்கியிருக்கிறது. அவை கால எல்லை தாண்டி நிலைக்கின்றன. ஒரு மொழிக்குள் பிறப்புக் கொண்டபோதும், அம்மொழி கடந்ததாய், புவி எல்லை தாண்டியதாய் ஆகிவிடுகின்றன. எழுத்து, பேச்சு, செயல் மூன்றிடலும் பாரதி தன் காலத்தின் ஆங்கிலேய அடிமைத்தனத்தை எதிர்த்து போர் செய்தான்! ஆங்கிலேய அடிமைத்தனத்தை மட்டுமல்ல, மொழி, சாதி, பெண்ணென அனைத்து அடிமைப்படுத்தும் குணங்களைக் கிழித்து எரிந்தவன். ”போர்த்தொழில் பழகு” என, மனிதனுக்குள் இயல்பாகப் பொதிந்துள்ள கலகக் குணத்தை உசுப்பி, புதிய ஆத்திசூடி முதலாய் தேசீய கீதங்கள் தந்தான். அடக்கவியலாச் சிந்திப்பு கொண்டவனைக் கைது செய்யும் முயற்சியில் ஆங்கிலேய ஏகாதிப