நா.காமராசன் ஓய்ந்த நதியலை
1962 - 63ல், மதுரை தியாகராசர் கல்லூரியில் நான் இளங்கலை முதலாமாண்டு. கவிஞர் நா.காமராசன், இளங்கலை இரண்டாமாண்டு. கவிஞர் அபி, இளங்கலை மூன்றாமாண்டு. கவிஞர்கள் மீரா, அப்துல் ரகுமான், முதுகலைத் தமிழ் இறுதியாண்டு. கவிஞர் இன்குலாப், எனக்குப் பின்னால் அடுத்த ஆண்டு இளங்கலைத் தமிழில் சேர்கிறார். அவருடைய வகுப்புத் தோழர் – பின்னாளில் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், சட்டமன்றப் பேரவைத் தலைவராக இருந்து மறைந்த கா.காளிமுத்து. மதுரை தியாகராசர் கல்லூரி விடுதியில் 1965 சனவரி 25-ம் நாள், இந்தி எதிர்ப்பு ஊர்வலத்துக்கான அனைத்துக் கல்லூரி, உயர் நிலைப்பள்ளி மாணவர்களின் முன் ஆலோசிப்பு நடந்தது. நண்பர்கள் காமராசன், காளிமுத்து ஆகியோர், ‘இந்தியே ஆட்சி மொழி’ என்று அறிவிக்கும் சட்டப் பிரிவு பிரதியை எரிப்பதென முடிவு செய்தனர். ‘சட்டத்தை’ எரிக்கும் நண்பர்களை அக்காரியம் நிறைவேற்றும் முன் கைது செய்யாமலிருக்க, ஒரு தலைமறைவு வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்தினோம். எங்களில் சிலரைத் தவிர அந்த இடம் வேறு யாருக்கும் தெரியாது. சனவரி 25-ம் நாள் அன்று மாணவர்கள் சுற்றிலும் பாதுகாப்பாக வர, காமராசனும் காளிமுத்துவும் திடல் மேடையில் ஏறி, சட்டப