மந்தை வேம்புகளுக்கு மேலாக, கிழக்குத் திசையிலிருந்து ஊருக்குள் இறங்கும் நிலா. உயர்ந்த ஒற்றைத் தென்னை வழியாக வெள்ளித் தகடாய் உருகி வழிகிறது. உயரமான ஒரு நெஞ்சுக்குள்ளிருந்து குளுமை புறப்பட்டு, ஊர் முழுதையும் குளிப்பாட்டி நிற்பது போல் தெரிகிறது. இருபது, முப்பது வருசங்கள் முன், கிராமம் முன்னிருட்டி விடும், ஏழு மணிக்கு ஒதுங்க வைத்து தூங்கப் போய் விடும். ஒரு சின்னப் பிள்ளை முழித்தெழுவதைப் போல், வாழ்வு தொடங்கும் காலை; இரவின் மிச்சமான கறுப்பு படிவங்களை உடைத்துவிட்டு, மிதக்கும் வெள்ளை வெயில், கண்மாய் ஓடுகால் காலாங்கரை நெடுகிலும், அந்திக்காற்றில் சாய்ந்தாடம்மா, சாய்ந்தாடு என்று ஆடுகிற மஞ்சள் ஆவாரம்பூக்கள். குழந்தைகளுக்கு 'சீர் அடிச்சிருச்சி' என்பார்கள். ஆவரம் பூக்களின் மொட்டையும், பேர் சொல்லாததையும் சேர்த்து அரைத்துக் கொடுத்தால், அந்த நோய்க்கு சட்டென்று கேட்கும். “ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ” என்பது சொலவம். ஊர் தலை கீழாக உருண்டிருந்தது. ராத்திரி 10 மணிக்கு கடைசி பஸ் ஊரில் கால் வைக்கிறபோது வெளிச்சம் மூஞ்சியில் படுவதை, துடைத்துக்கொண்டே பெண்...
கருத்துகள்
கருத்துரையிடுக