பா.செயப்பிரகாசம் நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலி - 2026

பகிர் / Share:

  தினமலர்: இதே நாளில் அன்று அக்டோபர் 23, 2022 துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே ராமச்சந்திராபுரத்தில், பாலசுப்பிரமணியன் – வெள்ளையம...

 தினமலர்: இதே நாளில் அன்று

அக்டோபர் 23, 2022

துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே ராமச்சந்திராபுரத்தில், பாலசுப்பிரமணியன் – வெள்ளையம்மாள் தம்பதியின் மகனாக, 1941, டிசம்பர் 7ல் பிறந்தவர், பா.ஜெயப்பிரகாசம். உள்ளூர் மற்றும் மதுரையில் பள்ளி படிப்பை முடித்த இவர், மதுரை தியாகராஜர் கல்லுாரியில் தமிழில் முதுகலை பட்டம் பெற்றார்.

ஆரம்ப காலத்தில் தீவிர மார்க்சிய கொள்கையுடன் பொது வாழ்வில் இயங்கிய இவர், 1965ல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதாகி சிறை சென்றார். 1971ல், ‘குற்றம்’ என்ற சிறுகதை வாயிலாக எழுத்தாளர் ஆனார். சிறை அனுபவங்களும், எளிய மக்களின் துயரங்களும் இவரது எழுத்துகளுக்கு அசல் தன்மையையும், அனலையும் அளித்தன.

சிறுகதை, நாவல், கட்டுரை என பல தளங்களில் இயங்கிய இவரது, ‘துாரத்து இடிமுழக்கம், காட்டுமல்லி’ உள்ளிட்ட படைப்புகள் வாசகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. கரிசல் மண் மக்களின் வாழ்வியலையும், சமூக அவலங்களையும் சிறுகதைகளில் பதிவு செய்தார்.

தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கிய இவர், தன் 81வது வயதில், 2022ல் இதே நாளில் காலமானார். அவரது விருப்பப்படி, உடல் மருத்துவ கல்லுாரிக்கு தானமாக வழங்கப்பட்டது.

இவரது நினைவு தினம் இன்று!



ஆறுமுகம் (முகநூல், 23 அக்டோபர் 2026)

அக்டோபர் - 23, எழுத்தாளர் சூரியதீபன் நினைவுநாள்


R Ashok Kumar (முகநூல், 23 அக்டோபர் 2026)

எழுத்தாளர்‌ பா. செயப்பிரகாசம்‌ நினைவு தினம்‌.



Thulakol Soma Natarajan (முகநூல், 23 அக்டோபர் 2026)
பகுத்தறிவுப் பொதுஉடைமைப்  போராளி, படைப்பாளி #பா_ஜெயப்பிரகாசம் (#சூரியதீபன்) #நான்காம்_ஆண்டு நினைவுநாள் அக்டோபர் 23 (2022)

பா.செயப்பிரகாசம் (1941 – 23 அக்டோபர் 2022)  தமிழ்நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் #திராவிட_பொதுவுடைமைச் சிந்தனையாளர்.
பேராசிரியராகவும், தமிழ்நாட்டரசில் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர்.

சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். குறிப்பாகச் சிறுகதைகளில் இவரது பங்களிப்பு தனித்துவமானது. எழுத்து வட்டத்திற்குள்  மட்டுமே தன்னை சுருக்கிக் கொள்ளாமல், போராட்டக் களத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். 

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். எழுத்தாளர், பேச்சாளர், பேராசிரியர் உள்ளிட்ட பன்முகத் திறமை கொண்டவர். தமிழ் இலக்கிய உலகில் மிகப்பெரும் பங்காற்றியவர். உடல் நலக்குறைவால் சென்ற ஆண்டு 2022, அக்டோபர். 23 ஆம் நாள் அமரரானார்.
                        ⚖️ #துலாக்கோல்⚖️

குப்பன் சா (முகநூல், 23 அக்டோபர் 2026)

எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்(சூரியதீபன்) மறைந்த நாள் 23.10.2022
1965இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர் தலைவராக இந்திய பாதுகாப்புச் சட்டத்தில் தளைப்படுத்தப்பட்டவர்.
"மனஓசை" இதழில் அவர் தொடர்ந்து எழுதிவந்தார். பல இதழ்களில் அவர் எழுதிவந்தார். நூல்கள் பல வெளிவந்துள்ளன.
ஈழவிடுதலைப் போராட்டம் தொடர்பில் மிகவும் ஈடுபாடு காட்டியவர்.
புகழ் வணக்கம்.

Baskaran Srinivasan (முகநூல், 23 அக்டோபர் 2026)

அக்டோபர் 23, வரலாற்றில் இன்று.
எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் நினைவு தினம் இன்று (2022).
செயப்பிரகாசம், தனது முதுகலை தமிழ் படிப்பை மதுரை தியாகராசர் கல்லூரியில் முடித்தார்.
1965இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவப் போராளியாய்ச் செயலாற்றினார். தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த 10 மாணவர்களில் இவரும் ஒருவர். 1968ஆம் ஆண்டு முதல் 1971ஆம் ஆண்டு வரை மதுரையில் கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றினார்.
பின்னர் 1971ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறைப் பணி மற்றும் இணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். 
தாமரை, கணையாழி, தினமணி, புதிய பார்வை, தீராநதி, கதைசொல்லி, ஆனந்த விகடன், காலச்சுவடு, அம்ருதா, உயிர்மை, நந்தன், சதங்கை, இந்தியா டுடே, தமிழ் நேயம், மனஓசை போன்ற இதழ்களில் இவரது படைப்புக்கள் வெளி வந்துள்ளன.
இதில் கவிதை, கதை, கட்டுரை மற்றும் உருவகக் கதைகள் எனப் பலவற்றை இவர் படைத்துள்ளார். இவரது படைப்புகள் கீற்று, பொங்கு தமிழ் போன்ற இணைய இதழ்களில் தொடர்ந்து வெளிப்படுகின்றன. ‘மனஓசை’ என்ற கலை இலக்கிய மாத இதழின் பொறுப்பாசிரியராகவும் இருந்தார்.
1981 முதல் 1991 வரை வெளியான மனஓசை இதழ், பத்து ஆண்டுகள் தமிழிலக்கிய உலகில் முன் மாதிரிப் பதிவுகளை உருவாக்கியது. இந்த இதழ் ஏற்கனவே இயங்குகிற சமூக நீரோட்டத்துடன் செல்லாமல் எதிர்க் கருத்தியலை வைத்து நடை போட்ட இதழ் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி என்னும் அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். 2008இல் ஈழத்தின் மீதான யுத்தம் உச்சத்திலிருந்த நேரத்தில், அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு (ஈழம்) எழுதி வெளிவந்த “இந்தியாவைத் தொடர்ந்து தோற்கடிக்கும் இலங்கையின் இராசதந்திரம்” என்னும் சிறு வெளியீடு, பத்தாயிரம் படிகள், தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி சார்பில் இவரது முயற்சியில் மறுபதிப்பு செய்து, இலவசமாக தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.2002இல் ஈழத்தில் ‘அமைதி ஒப்பந்த காலம்’, 2002 அக்டோபரில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் விடுதலைப் புலிகளின் முன்னெடுப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘மானுடத்தின் தமிழ்க்கூடல் மாநாட்டில்’ பங்கேற்றார். கவிஞர் இன்குலாப், ஓவியர் மருது, திரை இயக்குநர் புகழேந்தி, விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் ஆகிய ஐந்து பேரும் பங்கேற்ற அந்நிகழ்வில், ஒவ்வொரு நாள் நிறைவிலும் ஒருவர் உரையாற்றினர்.
மூன்றாம் நாள் நிகழ்வில் இவருடைய உரை நிகழ்ந்தது. ’மானுடத்தின் தமிழ்க்கூடல்‘ மாநாட்டின் தொடர்ச்சியாய் ஈழத்தில் பத்து நாட்கள் மேற்கொண்ட பயண அனுபவங்களின் தொகுப்பாக ”ஈழக் கதவுகள்” என்னும் நூல் வெளியானது.

Sankar Sankar (முகநூல், 23 அக்டோபர் 2026)
அக்டோபர் 23, 2022   முற்போக்கு எழுத்தாளர் பா.செயப்பிர காசம் நினைவு நாள்.    பா.செயப்பிரகாசம் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என ஏராளமான படைப்புகளை தந்துள்ளார். சிறுகதைத்துறையில் இவரது பங்களிப்பு முக்கியமானது. சூரிய தீபன் என்ற புனை பெயரிலும் ஏராளமான படைப்புகளை எழுதியுள்ளார். மன ஓசை ஏட்டின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார். இந்தி மொழி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் மாணவப் போராளியாக பங்கேற்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.  கரிசல் இலக்கியத்தின் முக்கிய  ஆளுமைகளில் பா. செயப்பிரகாசம் ஒருவர். எளிய மக்களின் வாழ்வியல் போராட்டத்தையே அவர் படைப்புகளாக்கினார். இவருடைய ஒரு ஜெருசலேம், காடு ஆகிய தொகுப்புகள் முக்கியமானவை. மூன்றாவது முகம், இரவுகள் உடைபடும் ஆகிய தொகுப்புகள் சூரியதீபன் என்னும் பெயரில் வெளிவந்துள்ளன.
தமிழ் படைப்பாளிகள் முன்னணி என்ற அமைப்பின் செயலாளராகவும் இருந்துள்ளார். ஈழப் போராட்டத்தை குறித்தும்  படைப்புகளை எழுதியுள்ளார். பா. செயப்பிரகாசம் தனது மொழியை அதிகாரத்துக்கெதிரான, ஒடுக்குமுறைக்கு எதிரான வலிமையான உரையாடலாக நிகழ்த்தியவர் எழுத்தாளராக மட்டுமின்றி, களப் போராளியாக வாழ்ந்தவர் .   மரணத்துக்குப் பின்னர் அவருடைய உடல் அவருடைய விருப்பப்படி தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது
TP Jayaraman


இரவி கார்த்திகேயன் (முகநூல், 23 அக்டோபர் 2026)

1963  இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் மாணவ தளபதிகளாக இயங்கியவர்கள் விருதுநகர் சீனுவாசன், பா.செயப்பிரகாசம், எல்.கணேசன், காளிமுத்து, நா.காமராஜன், துரை.முருகன் கூறிப்பிடத்தக்கவர்கள் இதில் பா.செயப்பிரகாசம் அரசியல் பதவி பெறாமல் அரசு பணியை செய்தி மக்கள் துறையில் பெற்றார். எழுத்தாளுமை கொண்ட இவர் தமது மகன் சூரியதீபன் பெயரில் எழுதினார். முற்போக்கு அரசியலில் ஈர்க்கப்பட்ட இவர் காலம் முழுவதும் போராளியாக வாழ்ந்து மறந்தார். இவரது மனஓசை இதழ் இளம் படைப்பாளிகளை மாணவர்களிடன் இருந்து அடையாளம் காட்டியது இன்று நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று.
வீர வணக்கம்


இறையழகன் (முகநூல், 23 அக்டோபர் 2026)

தூய தமிழ்த்தேசியர், இந்தி எதிர்ப்பு போராளி, எழுத்தாளர் ஐயா சூரிய தீபன் எனும்  பா.செயப்பிரகாசம் அவர்களின் நான்காமாண்டு நினைவேந்தல் இன்று.
மாணவர் நகலகம் ஐயா அருணாசலம் அவர்கள் முன்னெடுத்த தமிழ்வழிக்கல்விக்கான போராட்ட காலத்தில் ஐயாவோடு பழகும் வாய்ப்பு பெற்றேன்.
புகழ் வணக்கம் ஐயா.


பொன். குமார் (முகநூல், 23 அக்டோபர் 2026)

எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் நினைவு நாள்
எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் - அஞ்சலி 
சாந்தி அடையட்டும் ' தெக்கத்தி ஆத்மா'


Pothi (முகநூல், 23 அக்டோபர் 2026)

இன்று தோழர் பா.செயப்பிரகாசம் நினைவுநாள்
நினைவஞ்சலியாக
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
•பாசெ உடனான அவரது மகன் சூரியதீபன் மேற்கொண்ட
(அதுவே அவரது கடைசி) நேர்காணல் வித்தியாசமானது.
இருவர் உலகங்களும் வெவ்வேறே. இதற்கூடாக எனைப்
பாதித்த , பிடித்த புலன(விடய)ங்கள்:
1. அவர் தம் இணையர்க்கும் தந்தையார்க்கும் இழைத்த பாதகங்கள்; குடும்பத்தை குடும்ப வாழ்வை இழந்த ஆற்றாமை குறித்த ஒப்புதல் வாக்குமூலங்கள்

2. "உங்கள் மகன் பற்றிய உங்கள் அபிப்ராயம்?" -
சூரியதீபன்
"எனக்குக் கணினி தொடர்பாக நீ முன்முயற்சி மேற்கொண்டு ஆற்றிவரும் பணிக நிறைவானவை.என்
வாழ்நாள் செயல்களைத் தொகுத்து இணையம், முகநூல்
எனத் தொடர்கின்றாய் தொடரட்டும் உன் பணி"- பாசெ

3. "உங்கள் அரசாங்கப் பணியில் நீங்களௌ சாதித்தன -
இழந்ததன யாவை?"
"முதலில் அரசாங்கத்துறைக்கே போயிருக்கக்கூடாது
என்பது என் கருத்து.இறுதிநாள்வரை அரசுப்பணியில்
நான் ஒட்டவேயில்லை"
ஆம் அவரின் பணிஓய்வுநாளில் நானவர்க்கு அனுப்பிய
சேதி: 'விடுதலை நாள் வாழ்த்தே!'

4. முதுமையையும் ,மரணத்தையும் எதிர்கொள்ளும்
ஆதங்கம், புரிந்துணர்வு,பரிபக்குவம் சித்திரிப்பு
பொதிகைச்சித்தர் (தளம் : 25 - அக்.திச. 2022)
12/02/2023

"இது என் முதல் கட்டுரை. நான் எழுதும் முதல் கட்டுரையே என் தந்தையின் நினைவுக் கட்டுரையானது எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. ஆனால் அவரைப் பற்றி என் பார்வையில் நான் புரிந்துகொண்ட விடயங்களை நினைவுகளாகப் பகிர்ந்து கொள்வது என் தந்தைக்கு நான் செய்ய வேண்டிய கடமையாகக் கருதுகிறேன்.
அப்பாவுக்கு விடியற் காலையில் எழுந்திருக்கும் பழக்கம் இருந்தது. காலை அமைதியில் எழுதுவது அவருக்குப் பிரியமான ஒன்று. அதுவும் பால்கனியில் இருந்து அதிகாலையை ரசித்தபடி எழுதுவது அவருக்குப் பிடிக்கும். மழை பெய்தால் இன்னும் கூடுதல் உற்சாகதோடு இருப்பார். அதிகாலை நேரங்களில் அவர் எழுதுவதை அல்லது புத்தகம் படிப்பதை வழமையாகக் கடைசிவரை கொண்டிருந்தார். அவர் கடைசி நேர்காணலையும் அவர் மறந்த அன்று காலை செழுமை செய்து எனக்கு அனுப்பி வைத்தார்" - சூரியதீபன்
தமக்கு முதலில் செப்டம்பர் 2021 -இல் அனுப்பிய செவ்வியை, அவர் மரணத்தை உணர்ந்ததாலோ, அல்லது பிற காரணத்தாலோ, அவர் இறந்த 23/10/2022
அன்றைய காலையில் மீளவும் சரிசெய்து அனுப்பினார் எனத்தொடர்வார். அது 'தளம்:24 -திச.2022 இதழில் இடம்பெற்றுள்ளது.

தம் வாணாள் முழுதும்  பணத்தை ஒரு பொருட்டாகவே மதியாமல் கொடைமடம் பட்டே தம் நண்பர், உறவினர்க்கே வழங்கியமை குறித்தும்; அந்திம திசையில் மூதாதையர் நிலத்தை விற்றுப் பிறர்க்கு உதவியதையும்; தம் நூல்களைக் கல்லூரிகளுக்கும்  இறுதியாக உடலையும் மருத்துவக் கல்லூரிக்கும் அளித்துச் சென்றதையுமாக என்பும் உரியர் பிறர்க்கென வாழ்ந்த ஈகப் பெருந்தகைமை குறித்தும் எடுத்துரைத்துள்ளார்.
('குடும்பத்தார் நோக்கில் : தனிவாழ்வும் பொதுவாழ்க்கையும்' நூலில் இருந்து…)
'கிளைகளுக்கும் இலைகளுக்கும் அவற்றைத் தாங்கிப்பிடிக்கும் ஆணிவேர் வியர்வை தெரிவதில்லை


தோழர் புலியூர் 

நேசிப்பிற்குரிய தோழர், இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராளியாக வரலாற்றில் நிலைத்து நிற்பவர், போற்றுதலுக்குரிய படைப்பாளுமை எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்களின் நான்காமாண்டு நினைவு நாளில் புகழ் வணக்கம் செலுத்துவோம்...
கரிசல் ஆளுமை எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் 4-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.


Perasiriyar Jayaraman

ஐயா பா.செயப்பிரகாசம் அவர்களை அழைத்து மயிலாடுதுறை A.V.C கல்லூரியில் மிகப் பெரும் கருத்தரங்கு நிகழ்ச்சியை நடத்தினேன். எழுத்தாளர் சூரிய தீபன் என்று மட்டுமே கூறி அனுமதி பெற்றிருந்தேன். அவருடைய அமைதியான குரலில் பிறந்த சிவப்புக் கருத்துகள் அரங்கை கட்டிப்போட்டன. கல்லூரி தாளாளரையும் சேர்த்துத்தான். என்னிடம் பேரன்பு கொண்ட ஒரு ஆளுமையை இழந்து போனேன்.
ஐயா அவர்களுக்கு புகழஞ்சலி செய்கிறோம்!

கருத்துகள் / Comments

அனைத்து இடுகைகளும் ஏற்றப்பட்டன / Loaded All Posts எந்த இடுகைகளும் கிடைக்கவில்லை அனைத்தையும் காண்க மேலும் படிக்கவும் மறுமொழி கூறு மறுமொழி ரத்துசெய் நீக்கு By முகப்பு பக்கங்கள் இடுகைகள் அனைத்தையும் காண்க உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுகிறது லேபிள் காப்பகம் / Archive தேடு / Search அனைத்து இடுகைகள் / All Posts உங்கள் கோரிக்கையுடன் பொருந்தக்கூடிய எந்த இடுகையும் கிடைக்கவில்லை முகப்பு / Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec சற்றுமுன் 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago பின்தொடர்பவர்கள் / Followers பின்தொடர் / Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content