பா.செயப்பிரகாசத்தின் புகழ்பெற்ற வரிகள்



"நெல்வயலில் ரோஜாவும் களைதான்!"



"கேள்வியும் சிந்திப்பும் மாற்றை முன்னகர்த்தும் இயக்கிகள்"



”சொந்த ஊரை நோக்கிச் செல்லும் அந்தப் பாதையைப் போல் இனிமையானது வேறெதுவுமில்லை”




“யார் எழுதுகிறார்கள் என்பதல்ல; என்ன எழுதுகிறார்கள் என்பதுதான் எழுத்து நம் முன்னால் வைக்கும் மிகப் பெரிய சவால்” 




 "யார் முன்தெரிவது, யாரை முன்னிறுத்துவது என்பது ஒரு போராளியாய் இருப்பவருக்கு முக்கியம் அல்ல. யார் தொண்டு செய்வது என்பது முக்கியம்"




"நாற்காலி என்பது தேர்தல் மூலம் பெறப்படும் அதிகாரத்தின் குறியீடு. நாற்காலியில் உட்கார்ந்தவன் நாற்காலியாகவே ஆகிப் போனான் என்பது உள்ளுறையும் பொருள்."




"பெரியார் காட்டிய ஒளிமிக்க புதிய சமுதாயத்துக்கும் பழஞ் சமுதாயத்துக்குமான போராட்டம் நடந்துகொண்டிருக்கிற காலத்தில் நாம் வாழுகிறோம். நாம் எந்தப்பக்கம் என்பதை தீர்மானம் செய்யவேண்டும்."


 
இன்றைய சமகால உலகறிவு என்பது -
”ஏதேனும் ஒன்றைப் பற்றி முழுமையாக அறிந்திருத்தல்,  
எல்லாவற்றைப் பற்றியும் ஏதேனும் அறிந்திருத்தல்”
என்னும் வழியில் அறிவுச் சேகர ஆற்றலாக ஒவ்வொரு படைப்பாளிக்கும் கைவசப்பட வேண்டும்.



 

"படைப்பாளிகளது வேர் எப்போதும் மக்களின் வாழவியலில் மட்டுமல்ல, வெளிப்பாட்டு மொழியிலும் ஊன்றி நிற்க வேண்டும்."

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பஞ்சாபி இலக்கியம் - ஆட்காட்டிக் குருவிகளாய் பெண் குரல்கள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

பொன்னீலன் ‘கரிசல்’ - நாவல்: நில வரைவியலும் நினைவுகளும்