பா.செயப்பிரகாசம் இரங்கல் கூட்டம், விளாத்திகுளம் - 25 அக்டோபர் 2022
இணைப்பைப் பெறுக
Facebook
Twitter
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
கரிசல்காட்டு எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்கள் 23.10.2022 அன்று காலமானார். அன்னாரது உடல் தூத்துக்குடி மருத்துவமனை மாணவர்கள் மருத்துவ பயிற்சிக்கு தானம் செய்வதற்கு முன்பாக, 25.10.2022 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் விளாத்திகுளம் அம்பாள் நகரில் (பா.செயப்பிரகாசம் அவர்கள் வசித்த இல்லத்திற்கு அருகில்) இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
பலதரப்பட்ட ஆற்றல்கள் கலந்து கொண்ட இரங்கல் கூட்டத்தில் தமுஎகச தலைவர் ச.தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர் மருத்துவர் அறம், செயலாளர் காமராஜ், எழுத்தாளர் இராகுலதாசன், தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் தலைவர் மீ.த.பாண்டியன், திமுக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், நந்தகோபால் ஐ.ஏ.எஸ், மருத்துவர் வெங்கட்ராமன், வழக்கறிஞர் அஜிதா, மகன் சூரியதீபன், எழுத்தாளர் கோணங்கி, இலக்கிய விமர்சகர் ந.முருகேசபாண்டியன், பா.செ.வுடன் மனஓசை இதழில் இணைந்து இயங்கிய வசந்தன், இகக (மா-லெ) விடுதலை மாநிலக்குழுத் தோழர் அ.சிம்சன், மக்கள் கல்வி இயக்கம் பேராசிரியர் கோச்சடை சேவுகன், கதவு ஆசிரியர் மதி கண்ணன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இரங்கல் கூட்டத்தை முனைவர் சம்பத்குமார் தொகுத்தார்.
தோழர் பா.செ எப்படி கரிசல் இலக்கியவாதியாக, புரட்சிகர மா-லெ இயக்கத்தின் சிந்தனையாளராக, மண்ணையும் மக்களையும் நேசித்த மனிதாபிமானியாக, ஈழ ஆதரவாளராக, மொழிப் போராட்டக் களப்போராளியாக, அனைத்து முற்போக்கு இடதுசாரிக் கலை இலக்கியப் படைப்பாளிகளுடன் இணக்கமானவராக, மென்மையான உரையாளராக இயங்கியதை அனைவரும் நினைவு கூர்ந்தனர்.
தமுஎகச தலைவர் ச.தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தலைவர் மருத்துவர் அறம், பொதுச்செயலாளர் தோழர் காமராஜ், தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் தலைவர் மீ.த.பாண்டியன், கதவு ஆசிரியர் மதி கண்ணன் உள்ளிட்டோர் செங்கோடி போர்த்தி செவ்வணக்க முழக்கங்களுடன் தூத்துக்குடி மருத்துவமனைக்கு பா.செயப்பிரகாசம் உடலை வழி அனுப்பி வைத்தனர்.
எழுத்தாளர் இராகுலதாசன்
வழக்கறிஞர் அஜிதா
எழுத்தாளர் கோச்சடை சேவுகன்
தமுஎகச தலைவர் ச.தமிழ்ச்செல்வன்
தமுஎகச தலைவர் ச.தமிழ்ச்செல்வன்
நந்தகோபால் ஐ.ஏ.எஸ்
திமுக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன்
தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் தலைவர் மீ.த.பாண்டியன்
1962 - 63ல், மதுரை தியாகராசர் கல்லூரியில் நான் இளங்கலை முதலாமாண்டு. கவிஞர் நா.காமராசன், இளங்கலை இரண்டாமாண்டு. கவிஞர் அபி, இளங்கலை மூன்றாமாண்டு. கவிஞர்கள் மீரா, அப்துல் ரகுமான், முதுகலைத் தமிழ் இறுதியாண்டு. கவிஞர் இன்குலாப், எனக்குப் பின்னால் அடுத்த ஆண்டு இளங்கலைத் தமிழில் சேர்கிறார். அவருடைய வகுப்புத் தோழர் – பின்னாளில் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், சட்டமன்றப் பேரவைத் தலைவராக இருந்து மறைந்த கா.காளிமுத்து. மதுரை தியாகராசர் கல்லூரி விடுதியில் 1965 சனவரி 25-ம் நாள், இந்தி எதிர்ப்பு ஊர்வலத்துக்கான அனைத்துக் கல்லூரி, உயர் நிலைப்பள்ளி மாணவர்களின் முன் ஆலோசிப்பு நடந்தது. நண்பர்கள் காமராசன், காளிமுத்து ஆகியோர், ‘இந்தியே ஆட்சி மொழி’ என்று அறிவிக்கும் சட்டப் பிரிவு பிரதியை எரிப்பதென முடிவு செய்தனர். ‘சட்டத்தை’ எரிக்கும் நண்பர்களை அக்காரியம் நிறைவேற்றும் முன் கைது செய்யாமலிருக்க, ஒரு தலைமறைவு வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்தினோம். எங்களில் சிலரைத் தவிர அந்த இடம் வேறு யாருக்கும் தெரியாது. சனவரி 25-ம் நாள் அன்று மாணவர்கள் சுற்றிலும் பாதுகாப்பாக வர, காமராசனும் காளிமுத்துவும் திடல் மேடையில் ஏறி, சட்டப
பா.செயப்பிரகாசத்தின் 51 ஆண்டு (1971 - 2022) கால படைப்பில் எழுதிய 143 சிறுகதைகள் 14 தொகுதிகளாகவும் மற்றும் 18 கட்டுரைத் தொகுப்புகள், 2 கவிதை தொகுப்புகள், 3 நாவல்கள், 2 மொழி பெயர்ப்பு நூல்கள், தொகுப்பாளராய் 15 நூல்கள் வெளிவந்துள்ளன. சிறுகதைத் தொகுப்புகள் 1. ஒரு ஜெருசலேம் - 1975, 1988 ஒரு ஜெருசலேம் (தாமரை இதழ், செப்டம்பர் 1972) அம்பலக்காரர் வீடு (டிசம்பர் 1972) குற்றம் (பா.செயப்பிரகாசத்தின் முதல் கதை, தாமரை 1971 மே மாத இதழில் வெளியானது.) பலிப்பூக்கள் கறுத்த சொப்னம் ஆறு நரகங்கள் (ஆகஸ்ட் 1973) புஞ்சைப் பறவைகள் இருளின் புத்ரிகள் (டிசம்பர் 1973) திறக்கப்படாத உள்ளங்கள் (மே 1973) வேரில்லா உயிர்கள் (நீலக்குயில் இதழ், ஜூன் 1974) சுயம்வரம் (1973) மூன்றாம் பிறையின் மரணம் (1974) பொய் மலரும் (1974) 2. காடு, 1978 காடு (ஜூன் 1977) இருளுக்கு அழைப்பவர்கள் (ஏப்ரல் 1977) கொசு வலைக்குள் தேனீக்கள் (1973) முதலைகள் (மார்ச் 1976) நிஜமான பாடல்கள் (நவம்பர் 1975) சரஸ்வதி மரணம் (மே 1977) இரவின் முடிவு (பிப்ரவரி 1976) குஷ்டரோகிகள் 1 , 2, 3 (1974) விடிகிற நேரங்கள் (செப்டம்பர் 1975) கோபுர
கி.பி.அரவிந்தன் நினைவேந்தல், சென்னை, 19 மார்ச் 2015 பிரபஞ்சன் முதலாம் ஆண்டு நினைவு மற்றும் பரிசு வழங்கும் விழா 21-12-2019 கே.ஏ.குணசேகரன் நினைவாஞ்சலி மக்கள் கலைஞர் கே.ஏ.குணசேகரன் நினைவாஞ்சலி பிரபஞ்சனுக்கு பிரியா விடை கவிக்கோ அப்துல் ரகுமான் அஞ்சலி தோழர் டொமினிக் ஜீவா அவர்களின் நினைவுகளைப் பகிர்தலும் கெளரவித்தலும் - 14 பிப்ரவரி 2021
ஈழத்தின் தொன்மையான நிகழ்த்து கலைகளில் சுடர்மிகு இரு விழிகளாகத் திகழ்பவை - தென்மோடிக் கூத்து: பிறிதொன்று வடமோடிக் கூத்து. தென் பாங்கு, வட பாங்கு என்று அடையாளப்படுத்தப் படும் வகைமை அல்லது பாணி, தென் மோடி, வடமோடி என பேச்சு வழக்கில் குறிக்கப்படுவதாக ஆகியுள்ளது. தமிழ்நாட்டில் கிராமியக்கலைகள் பயிற்றுவிப்போரை ’வாத்தியார்’ என அழைப்பதுபோல், ஈழத்தில் ‘அண்ணாவியர்’ என கூப்பிடும் சொல்வழக்கு உள்ளது. பிப்ரவரி 2015-ல் அண்ணாவியர் ச.மிக்கேல்தாஸ், அவரது இளவல் ச.ஜெயராஜா ஆகிய கூத்துக் கலைஞர்கள் கனடாவிலிருந்து தமிழகம் வந்திருந்தார்கள். அண்ணாவியார் ச.மிக்கேல்தாஸ், அண்ணாவியார் ச.ஜெயராஜா போன்றோர் புலம் பெயர் தேசத்தில் ஏன் இந்தக் கூத்துக் கலையை நிகழ்த்துகிறார்கள்? இதை தம் உடல் மொழியில் தமிழ் நாட்டில் ஏன் வந்து நிகழ்த்தினார்கள்? இசை, நாட்டியம், கூத்து, பாட்டு, நாடகம் என நிகழ்த்து கலை வித்தகர்கள், எழுத்து, கவிதை, இலக்கியம், இதழியல், காட்சியியல், சொற்பொழிவு என அறிவுப்புல விற்பன்னர்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாடு சென்று தம் திறனை வெளிப்படுத்தி நாடு திரும்புதல் இயல்பு. பறவைகள் கூடடைதல் போல், விலங்கின
அது ஒரு துணிச்சலான காரியம். மாலைமயங்கும் வேளை திருவல்லிக்கேணியிலுள்ள அச்சகத்திலிருந்து ‘மனஓசை’ என்ற கலை, இலக்கி இதழின் 2000 படிகளுள்ள கட்டுக்களை ஏற்றிக் கொண்டு ரிக்ஷா பச்சையப்பன் கல்லூரி வாசலில் நுழைந்து மாணவர் விடுதிக்குச் சென்றது (அக்காலத்தில் ’தானி’ என்று சொல்லப்படும் ஆட்டோக்கள் இல்லை). கல்லூரி விடுமுறைக் காலம்: வெளிச்சப் புள்ளிகள் ஓரிரு அறைகளில் அசைந்தன. ’மனஓசை இதழ்களை’ அஞ்சல் மூலம் அனுப்பும் பணி முதலில் என் வீட்டில் நடந்தது. வீடு சென்னை அமைந்தகரையிலிருந்தது; ஒற்றை அறை கொண்ட வீடு. அமைந்தகரை பேருந்து நிறுத்தத்துக்கு அடுத்த பேருந்து நிறுத்தம் பச்சையப்பன் கல்லூரி. மாலை வேளையில் எங்களுடன் மாணவ நண்பர்களும் இணைந்து ’மனஓசை’ இதழ்களை அஞ்சலில் அனுப்ப விடுதி பொருத்தமாயிருந்தது. ஏதேனும் ஒன்று நிகழ்ந்த பின், இப்படி செய்திருந்தால் இது நிகழ்ந்திருக்காதே என்ற யோசிப்புத் தோன்றுகிறது: அப்படித்தான் அன்றைய நிகழ்வும் நடந்தது. நிகழ்ந்த ஒன்று எப்போதும் தனக்குரிய செயல்களில் தீவிரமடைந்துவிடும். பாதகமானதும் சாதகமானதுமான விளைவுகள் வந்தடையும். அவர் விடுதியின் முதிய காவலாளி, பார்வையற்றவர்: கைத்தடியால
கருத்துகள்
கருத்துரையிடுக