மண்ணின் குரல் - நூல் அறிமுகம்

கரிசல் மண்ணின் படைப்பாளிகளில் ஒருவரான வீர. வேலுச்சாமியின் சிறுகதைகள், கவிதை, கடிதங்கள், சிறுவர் கதைகள் ஆகியவற்றைத் தொகுத்து உருவான நூல்.  1970களின் தொடக் கத்தில் இவரது நிறங்கள் என்ற தொகுப்பு வெளிவந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து அவர் சேகரித்த ‘தமிழ்நாட்டு சிறுவர் கதைகள்’  வெளியானது. இவற்றுடன் வேறு சில படைப்புகள் கடிதங்களையும் சேர்த்து இந்த தொகுப்பு உருவாகி உள்ளது. அவரது சிறுகதைகள் எதார்த்த வாழ்விலிருந்து உருவி எடுத்து கோர்த்த அழகான ஆபரணங்கள். பா.செயப்பிரகாசம் குறிப்பிட்டிருப்பதுபோல் ‘மனதைச் சுண்டியிழுக்கும் அளவான உச்சரிப்பு; நம்முடன் நேரடியாகப் பேசும் வாஞ்சனையான உரையாடல்’ கொண்டவை. சிறுவர் கதைகள் பகுதியில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையுமே இன்றைக்கு நாற்பதைக் கடப்பவர்கள் தங்கள் பால்யத்தில் கேட்ட கதைகள் என்பது மிகமுக்கியமானது. குறிப்பாக ‘வால் போயி கத்தி வந்துச்சு’  கதையை இப்போது யாராவது  குழந்தைகளுக்குச் சொல்கிறார்களா? இலக்கிய ஆர்வலர்கள் மட்டுமின்றி எல்லோரும் எளிமையாகப் படிக்கக் கூடிய நூல் இது.

வீர. வேலுச்சாமி படைப்புகள் தொகுப்பு: பா.செயப்பிரகாசம்,

விலை ரூ 250

வெளியீடு: பரிசல் புத்தக நிலையம், 41/71 ஏ, ஆர் கே மடம்  சாலை, மயிலாப்பூர், சென்னை - 4

பேச: 9382853646 

மதிமலர்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

ஜெயந்தன் - நினைக்கப்படும்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்