பங்குப்பெற்ற நிகழ்வுகள் 2020 - இந்தியா
மானுடத்திற்கு எதிரான மநு - 9 நவம்பர் 2020
தமிழ் ஸ்டுடியோவும் தம்மம் சிந்தனையாளர் பேரவையும் இணைந்து நடத்திய "மானுடத்திற்கு எதிரான மநு” என்கிற நிகழ்வு 9 நவம்பர் 2020 மாலை சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, பத்திரிக்கையாளர் ஆழி செந்தில்நாதன், கவிஞர் சூரியதீபன், கள செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி, பெண் விடுதலைக் கட்சித் தலைவர் சபரிமாலா, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இளஞ்சேக்குவாரா, தமிழ் ஸ்டுடியோ அருண், வெற்றி சங்கமித்ரா, வழக்கறிஞர் மணியம்மை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
"இந்த மனுவை டெல்லி ஜேஎன்யூ மாணவர் கன்னையா குமார் அவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்திய ABVP பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பு கூட எதிர்த்து இருக்கிறது. நான் 2016யில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழ்மண் பத்திரிகையில் மநுவை எரித்தால் என்ன? என்கிற கட்டுரையை எழுதினேன். ஆட்சியாளர்கள் நடத்தக்கூடிய கூட்டங்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை நம்மை போன்று மக்களுக்காக கூட்டம் நடத்துபவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள்.அறிஞர் அண்ணா அவர்கள் இந்து சட்டமான மனுதர்மத்தின் அடிப்படையில் ஆரிய மாயையாக வெளிவந்த ராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் எரிப்பதா? கொளுத்துவதா? என்று கேள்வி எழுப்பினார் அண்ணா தொடங்கிய பணியை தம்பி திருமா முன்னெடுத்து வருகின்றார்" என்று கவிஞர் சூரியதீபன் சொன்னார்.
டிஸ்கவரி புக் பேலஸில் புத்தகக் காட்சி - 11/03/2020
மூத்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்கள் துவக்கி வைக்க, உடன் எழுத்தாளர்கள் Ajayan Bala Bhaskar Sakthi, இயக்குநர் எம்.ஆர்.பாரதி, இயக்குநர்- கதாசிரியர் - நடிகர் E Ramdoss ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்ச்சி காணொளியை இங்கு காணலாம்.
ஆல் இந்தியா ரேடியோ பாண்டிச்சேரி (AIR) நேர்காணல் - 21 பிப்ரவரி 2020
முதல் பாகம் ஒளிபரப்பு - 27 பிப்ரவரி 2020
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfW6LJQJnVtP3OHiisV1M3n_uEUV1hEqknOiE9wqDQrUu7L3MckwKR96zuxQ-pVImjC6xm6JtsXHvcPmGGRDG3Rbg30qaNyRSfE4bJNG8D6J0VrpAagLbw93uM5h5ZfFajxXAPBV1iH6f8/s640/Jayanthan+2.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg41msAa4J3Yvsfy7-5LVx-9DAmC8QA1aBt5wmeiRQn7PRPNHIkhXaP8x7UBw5tcyr6MjlT5D8vpslYR_iI_oOBDe4zFuvqa3LwDn7sBQPBk0tWchB6keVZHPs0Ek3aWF45yYTdGn45aT2S/s640/Jayanthan+3.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9SOhsKgthGMzVA-QSn4UVa9Mx_9cA1fRyjTPKTAgbQckELZLWvN1m-T-9XYHRpt75n9xprXTYtyAr8ZXdAeLare9Iz2bvRjtpoBZPUbPQW6etJRFishjHBj7WHP80gw2DUCk6vl_U7XFl/s640/Jayanthan+5.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVRgPnfsOWMD7HxKMzj4CrVF2s2fq-qYOC4SOyZNExuRZ5P1cP8kL7jkSLGI2QvjxhYK77iySGDbh8wODCihyvtWOE_07L-pWaXAmv1E4d7-xMWR1awUv8Wep8XMFGOqLbEKtQZWgwI4g2/s640/Jayanthan+16.jpg)
ஆல் இந்தியா ரேடியோ பாண்டிச்சேரி (AIR) நேர்காணல் - 21 பிப்ரவரி 2020
முதல் பாகம் ஒளிபரப்பு - 27 பிப்ரவரி 2020
வல்லிக்கண்ணன் நூற்றாண்டு நிறைவரங்கு, 13 நவம்பர் 2020 மாலை 6 மணி
உரையாற்றுவோர் கி.ராஜநாராயணன், வண்ணதாசன், ச.செந்தில்நாதன், பா.செயப்பிரகாசம்,
திருப்பூர் கிருஷ்ணன்,
வண்ணநிலவன், ரவிசுப்பிரமணியன்,
பிரின்ஸ் கஜேந்திரபாபு, முகம் இளமாறன், பூ.முருகவேள்
கருத்துகள்
கருத்துரையிடுக