புலி அசைவு

வடகம் பிழிந்தாள்

தொட்டில் பிள்ளை அழுமுன்
வெள்ளை வெயில் வருமுன்
விரித்தாள்.

கழுத்தில் ஏறிய தாலி
கைகளில் இறங்கியிருந்தது
வடகமாக
அச்சு அச்சாக.

"காக்காய் வெரட்டுறீங்களா?
அலையுதுங்க
கோளாறாய்க் கையாளணும்"

கைப்பிள்ளை தலை தடவி
மார்பு கொடுக்க மறைவாள்

இருட்குகையில் காலங்களாய்
பம்மிய புலி அசைந்து
எழுந்தது
இறுக்கி மூடினான் காதுகளை
கண்களையும்.

கருப்பு மேகங்கள்
கவிந்தது போல் காக்காய்க் கூட்டம்
கைப்பிள்ளை ஏந்தி
மார்பு கொடுத்து
மாடி வந்தவள் அலறினாள்
"ஐயோ போச்சே"

"போகட்டும்"
அவனுக்குள் உறுமியது
ஆறாயிரம் ஆண்டுகளின்
ஆண்புலி.

- சூரியதீபன் ("எதிர்க் காற்று" கவிதை தொகுப்பு)


கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி

திசையறிந்த தென்மோடிக் கூத்து

பாரதிபுத்திரன் என்ற மானுடன்