ஜெயமோகன் அவதூறு - முகநூல் எதிர்வினைகள்


Ovia Rajamoni 7 ஜூன் 2020
1979 அல்லது 1980 என நினைக்கிறேன். எல்எல்ஏ கட்டிடத்தில் சென்னை மாணவர்கள் கலந்து கொண்ட ஒரு கருத்தரங்கத்தி
ல் கலந்து கொண்ட போது தோழர் சூரியதீபன் அவர்களை முதன்முறையாக சந்தித்தேன். நான் பேசியதைப் பாராட்டி விட்டு கவிதை போன்ற பிற படைப்பாக்கங்களில் நீங்கள் ஈடுபட வேண்டும் என்று இன்னொரு தளத்திற்கு என்னை நகர்த்தும் அளவிற்கு உற்சாகமளித்தார். நான் கவிதை எழுதியதில்லையே என்றேன். முயற்சி செய்யுங்கள் என்றார். என்னைப் போன்று பல மாணவர்களை அவர் ஊக்கப் படுத்தியதையும் கண்டேன். இன்றுவரை நான் கவிதை எழுதவில்லை. யார் கண்டது ஒருவேளை இனிமேல் எழுதுவேனோ என்னவோ? அந்த காலகட்டத்தில்தான் இலக்கியம் இலக்கியத்துக்காகவா மக்களுக்காகவா என்கின்ற விவாதங்களைப் பற்றியெல்லாம் நான் அறிந்து கொண்டேன். அதற்கான ஒரு துவக்கப் புள்ளியை ஏற்படுத்தியவர் தோழர் சூரியதீபன் என்று சொல்லலாம். மனதார பாராட்டி நாம் வளர வேண்டும் என்று நினைத்தவர். நமது ஆளுமைக்குக் காரணமானவர்களுக்கு என்றாவது நாம் உரிய முறையில் நன்றி சொல்ல வேண்டுமல்லவா. அதை இப்போது சொல்ல வேண்டும் என்று எனக்கு தோன்றியது. நன்றி தோழர்.

ஏர் மகாராசன் 7 ஜூன் 2020
ஈழத்தின் பக்கம் நின்றிருக்கும் தோழமையின் பக்கமே யாம்.
/முனைவர் ஏர் மகாராசன்,
சமூகப் பண்பாட்டியல் ஆய்வாளர்,
மக்கள் தமிழ் ஆய்வரண். /
*
ஈழத்தில் இனப்படுகொலை நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில், ஈழத்தின் குரலை உண்மையாக வெளிப்படுத்தியவர்களுள் தோழர் பா.செயப்பிரகாசம் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். ஈழத்தின் பக்கம் நின்றிருந்த பா.செ பக்கமே யாம்.
*
அவதூறுகளை முறியடிப்போம்.
*
எழுத்தாளர் பா. செயப்பிரகாசத்திற்கு எதிரான
ஜெயமோகனின் அவதூறுக்கு அனைத்து தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்களின் கண்டன அறிக்கை.
*
தமிழின் முதுபெரும் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் மீது தனது இணையப் பக்கத்தில் ஜெயமோகன் செய்துள்ள துல்லியத் தாக்குதல் மிக மோசமானது, உள்நோக்கமுடையது. தமிழின் கலை இலக்கியப் பண்பாட்டுச் சூழலில் காத்திரமான பங்களிப்பு செய்துள்ள அவரை, ஒரு அநாமதேயக் கடிதம் மூலம் அவதூறு செய்யவும், சிறுமைப்படுத்தவும் ஜெயமோகன் மேற்கொண்டுள்ள இழிசெயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கரிசல் இலக்கியத்தில் வேர்பதித்து எழுத்தைத் தொடங்கினாலும், எல்லைகள் கடந்த சமதர்ம சமுதாயம் நோக்கி கிளை பரப்பியவர் பா. செயப்பிரகாசம். ஏறத்தாழ 135 சிறுகதைகள், பள்ளிக்கூடம், மணல் என்னும் இரு நாவல்கள், மூன்று குறு நாவல்கள், இரு கவிதைத் தொகுப்புகள், பதினான்கு கட்டுரை நூல்கள், இலக்கிய, சமுதாய அரங்குகளில் உரைகள் எனத் தொடர்ந்து இயங்கி வருகிறவர். சமீபத்திய‌ அவருடைய மணல் நாவல் வரை அவருடைய எந்த ஒரு எழுத்தும், உரையும் செயல்பாடுகளும் சாதிய உணர்வைத் தூண்டியதாக சின்னனஞ்சிறு கறுப்புப் புள்ளி அடையாளமும் கொண்டதில்லை; ஆனால் சாதிக்கொடுமைகளைச் சாடிய அவருடைய எழுத்துகள் கணக்கற்றவை. அவருடைய பள்ளிக்கூடம், மணல் ஆகிய இருநாவல்களுக்கும் சாதியத்தை எதிர்த்த அடிநாதம்தான் பேசுபொருள். பொருளியல், வாழ்வியல் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்தும் சிறுமைகள் பேசும் அவருடைய கதைகளின் ஆற்றலை எந்த ஒரு தேர்ந்த வாசகனும் உணர்ந்து கொள்ளமுடியும். அவர் தனது எழுத்துகளை என்றும் வணிகமாக்கியதில்லை.

1965- இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் மாணவப் போராளியாய் முன்னின்று, தமிழகம் முழுமையும் போராட்டத்தை எடுத்துச் சென்றதால், இந்திய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிருந்த பத்து மாணவர் தலைவர்களில் ஒருவர். தமிழ்த் தேசியம், ஈழம், மார்கசீயம், பெரியாரியம், அம்பேத்காரியம் குறித்த எழுத்துகளில் சமரசம் இல்லாப் போராளி. இலக்கியம், களப்போராட்டம் எனத் தொடர்ந்து பல தளங்களிலும் இயங்கி வருபவர். இப்படிப்பட்ட தமிழ் ஆளுமை மீது ஜெயமோகன் கோபப்படுவதும், பழி தூற்றுவதும் நமக்கு ஒன்றும் ஆச்சரியம் அளிக்கவில்லை. தொடர்ந்த தனது பேச்சுகளின் மூலமாக, எழுத்துகளின் மூலமாக சர்ச்சைகளை உருவாக்கி, தமிழ் அறிவுச்சூழலில் தான் ஒரு பேசுபொருளாக இருக்கவேண்டும் என்ற முனைப்பில் தனது பிம்பத்தைக் கட்டமைத்துக் கொண்டு வருகிறவர் ஜெயமோகன்.

தமிழ் அறிவுச்சூழலுக்கு மிகவும் அபாயகரமானது இந்தத் தொற்று நோய், இந்தப் போக்கு என்னும் ஒட்டுவாரொட்டி நோய் தமிழ் இலக்கிய, அறிவுச் சூழலில் கேடு பயப்பதும் கூட‌. ஜெயமோகனின் சமதர்மச் சிந்தனை எதிர்க்குரல், மார்க்சிய எதிர்ப்பு என்பது நாம் அறிந்த ஒன்று. அதற்கான எதிர்வினையைப் பல்வேறு தளங்களில் மிக அமைதியாக ஆற்றி வருகிறோம். எந்த ஆதாரங்களுமில்லாது, ஒரு அநாமதேயம் எழுதியதாக தனிநபர் மீதான வன்மம், அவதூறு என்பவை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கண்டனம் செய்யப்படவேண்டிய ஒன்று. அது சமூக அக்கறையுள்ள கலை, இலக்கிய, அறிவுச் சூழல், இடதுசாரிச் சிந்தனைகள், இயக்கங்கள், எழுத்துகள், செயற்பாடுகள் அனைத்தின் மீதான அவதூறு என்பதால் ஜெயமோகனுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.

கண்டன அறிக்கைக்கு ஒப்புதல் தெரிவித்திருக்கும் எழுத்தாள‌ர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் :

எஸ்.வி. ராஜதுரை, எழுத்தாளர்
கோவை ஞானி, எழுத்தாளர்
பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன்
தோழர் தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
இரவிக்குமார்,எழுத்தாளர், நாடாளுமன்ற உறுப்பினர்,
ச. தமிழ்ச்செல்வன், கௌரவத் தலைவர், த.மு.எ.க.ச.
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர், த.மு.எ.க.ச
சு.ராமச்சந்திரன், மாநிலப் பொருளாளர், த.மு.எ.க.ச.
சி.சொக்கலிங்கம், மாநிலத் தலைவர், க.இ.பெருமன்றம்,
இரா. காமராசு, பொதுச்செயலாளர், . க.இ. பெருமன்றம்
ப.பா.ரமணி, மாநிலப் பொருளாளர், க.இ. பெருமன்றம்
எல்லை சிவகுமார், க.இ.பெருமன்றம், புதுச்சேரி,
பேராசிரியர் வீ.அரசு
சிகரம் செந்தில்நாதன், வழக்கறிஞர்
மீ. தா. பாண்டியன், தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்
பொதியவெற்பன், எழுத்தாளர்,
கண.குறிஞ்சி, சமூகச் செயற்பாட்டாளர்,
செ.சண்முகசுந்தரம், தஞ்சை இலக்கியவட்டம்
பொ.வேல்சாமி, ஆய்வாளர், எழுத்தாளர்
முனைவர் ராமசாமி, முன்னாள் துணைவேந்தர்
பேராசிரியர் சரஸ்வதி
பேராசிசிரியர் கல்விமணி, சமூகச்செயற்பாட்டாளர்
பேராசிரியர் சிவகுமார்
பேராசிரியர் கோச்சடை
பேராசிரியர் க. பஞ்சாங்கம்
தோழர் பிரேம், கவிஞர், எழுத்தாளர்
பேராசிரியர் பா. மதிவாணன்
பேராசிரியர் அரச முருகுபாண்டியன்
பேராசிரியர் சு.மாதவன்
பேராசிரியர் பி. பாலசுப்பிரமணியம்
பேராசிரியர் பாரதிபுத்ரன்
யமுனா ராஜேந்திரன், விமர்சகர், எழுத்தாளர்
கண்ணன், காலச்சுவடு பதிப்பகம்
சைலஜா, வம்சி பதிப்பகம், எழுத்தாளர்
மு.வேடியப்பன்,டிஸ்கவரி புக் பேலஸ்,
பிரளயன், நாடகவியலாளர்
பேரா.பார்த்திப ராஜா, நாடகவியலாளர்
பெருமாள் முருகன், எழுத்தாளர்
நா. விச்வநாதன், எழுத்தாளர்
ஆயிஷா நடராஜன், எழுத்தாளர்
பசு. கவுதமன், எழுத்தாளர்
அமரந்தா, எழுத்தாளர்
சுகுமாரன், ஆசிரியர், காலச்சுவடு
களந்தை பீர்முகமது, இணை ஆசிரியர், காலச்சுவடு,
வி.முத்தையா, ஆசிரியர், காக்கைச் சிறகினிலே,
க.சந்திரசேகரன், பொறுப்பசிரியர், காக்கைச் சிறகினிலே,
இரா.எட்வின், எழுத்தாளர், காக்கைச் சிறகினிலே,
கவிஞர் அறிவுமதி
மயிலை பாலு, ஊடகவியலாளர்
பி.என்.எஸ். பாண்டியன், ஊடகவியலாளர்
மகேஷ், ஊடகவியலாளர்
மு.பாலசுப்ரமணியம், துணைத்தலைவர்,
புதுவைத் தமிழ்ச் சங்கம்.
அழகியபெரியவன், எழுத்தாளர்
அன்பாதவன், எழுத்தாளர்
எஸ்.வி.வேணுகோபால், சமூகச் செயற்பாட்டாளர்,
பி.எஸ். அஜிதா, வழக்குரைஞர்
வாசுகி பெரியார், சமூகச் செயற்பாட்டாளர்,
மணவை ஆ. தமிழ்மணி, வழக்குரைஞர்
கவிஞர் மாலதிமைத்ரி
கவிஞர் சுகிர்தராணி,
கவின்மலர், எழுத்தாளர்
திருமிகு. மணிமொழி, எழுத்தாளர், வழக்குரைஞர்
ம. ஆ. சிநேகா, வழக்குரைஞர், சமூகச் செயற்பாட்டாளர்
நவீனா, எழுத்தாளர்
ஜமாலன், எழுத்தாளர்
புஷ்பராணி, எழுத்தாளர்
இரா. முருகவேள், எழுத்தாளர்,
லஷ்மி சரவணக்குமார், எழுத்தாளர்
அப்பணசாமி, எழுத்தாளர்
இரா. மோகன்ராஜன், எழுத்தாளர்
பாட்டாளி, எழுத்தாளர்
சுதீர் செந்தில், ஆசிரியர் உயிர் எழுத்து
முகுந்தன் கந்தையா, எழுத்தாளர், பாரீஸ்,பிரான்ஸ்,
சண். தவராஜா, எழுத்தாளர், சுவிட்சர்லாந்து,
குணா கவியழகன், எழுத்தாளர்,நெதர்லேந்து,
ரூபன் சிவராஜா, எழுத்தாளர், நோர்வே
கலா மோகன், எழுத்தாளர், பாரீஸ்,பிரான்ஸ்,
கார்வண்ணன், இலக்கியச் செயற்பாட்டாளர், பாரீஸ், பிரான்ஸ்,
ச. மிக்கேல்தாஸ்,
தென்மோடிக் கூத்துக் கலைஞர்,கனடா,
ச.ஜெயராஜா, தென்மோடிக் கூத்துக் கலைஞர், நோர்வே,
கவிஞர்இரா.தெ. முத்து, எழுத்தாளர்
நாறும்பூநாதன், எழுத்தாளர்
மணிமாறன், எழுத்தாளர்
தங்க. செங்கதிர், ஆசிரியர், மானுடம் இதழ்
த.ம. பிரகாஷ், ஆசிரியர், உழைப்பவர் ஆயுதம்
நீலகண்டன், கருப்புப் பிரதிகள்
பாரதிநாதன், எழுத்தாளர்
புலியூர் முருகேசன், எழுத்தாளர்
தளவாய் சுந்தரம், ஊடகவியலாளர்
சுகுணா திவாகர், ஊடகவியலாளர்
மரு. ஆமினா இன்குலாப், இன்குலாப் அறக்கட்டளை
எஸ். கே. கங்கா, எழுத்தாளர்
கடங்கநேரியான், கவிஞர்
சம்சுதீன் ஹீரா, எழுத்தாளர்
எச். பீர்முகம்மது, எழுத்தாளர்
வி. உ. இளவேனில், கவிஞர்
ஏர் மகாராசன், ஆய்வாளர், மக்கள் தமிழ் ஆய்வரண்
கருப்பு கருணா, எழுத்தாளர்,
கருப்பு அன்பரசன், எழுத்தாளர்,
சுந்தர், பதிப்பாளர்
லஷ்மி சிவக்குமார், எழுத்தாளர்
அண்டனூர் சுரா, எழுத்தாளர்
மு.சிவகுருநாதன், கல்வியாளர்,
அகிலா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர்
வெ. ஜீவக்குமார், வழக்கறிஞர்
களப்பிரன், கவிஞர்
துவாரகா சாமிநாதன், கவிஞர்
முஜிபுர் ரஹ்மான், எழுத்தாளர்
துரை குணா, எழுத்தாளர்
குமரன்தாஸ், எழுத்தாளர்
புதியமாதவி சங்கரன், எழுத்தாளர்
கதிர்நம்பி, தொ.ப வாசகர் வட்டம்
வே.சங்கர்ராம் , நாடகவியலாளர்.
கவிஞர் நந்தலாலா.
திருப்பூர் குணா, பொன்னுலகம் பதிப்பகம்
தமிழ்நதி, எழுத்தாளர்
ஆர். பாலகிருஷ்ணன், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர்
கவிஞர் இரவி குமாரசாமி
பிர்தவ் ராஜகுமாரன், எழுத்தாளர்
வெளி ரங்கராஜன், நாடகவியலாளர்
கவிவளநாடன்
முத்தையா நமச்சிவாயம்
கே. ஜீவபாரதி, எழுத்தாளர்
கி.வே. பொன்னையன், தற்சார்பு விவசாயிகள் சங்கம்
அய்யாவு ஜெயராமன்
டிராட்ஸ்கி மருது, ஓவியர்
ஆனந்தகுமார், சுற்றுச்சூழல் ஆர்வலர்
குரு, இணை இயக்குநர், திரைத்துறை
பத்மநாதன் ரஞ்சனி, பெண்ணியச் செயற்பாட்டாளர்
மு. புஷ்பராஜன், எழுத்தாளர்
கவிஞர் ஜெயதேவன்
உமா மோகன், எழுத்தாளர்
நிலவுமொழி செந்தாமரை, வழக்கறிஞர்
செந்தில்குமார் குலவை
விஜய் எம்.குமார்
உலகநாதன் கண்ணையா
நா. ராமச்சந்திரன், எழுத்தாளர்
கே. தினகரன், இணை இயக்குநர்
கு.ப. குப
சாளை பசீர்
மணலி அப்துல்காதர்
யாழினி முனுசாமி
எம். அரியநாயகம், நாடக நேசர்
நாகு அன்பழகன், எழுத்தாளர்
ரஞ்சகுமார், சோமபாலா
முஸ்டீன் இஸ்மாயில்
இரவி கார்த்திகேயன்
ரவீந்திரன் நடேசன்
கரண் பிரபா
ப. கவிதா, பத்திரிகையாளர்
கௌதம சித்தார்த்தன், எழுத்தாளர்
புகழேந்தி, ஓவியர்
ஜி.குப்புசாமி, மொழிபெயர்ப்பாளர்
சுப்ரபாரதி மணியன், எழுத்தாளர்
இராசேந்திரசோழன், எழுத்தாளர்
மணி மதிவாணன்
கவிஞர் கலாப்ரியா
இளஞ்சேரல் ராமமூர்த்தி
வெ. ஜீவகிரிதரன், வழக்கறிஞர்
சுனந்தா சுரேஷ்
கான் மஜித்
பேராசிரியர் கருணாநிதி
பேராசிரியர் செல்வி மனிதி
பேராசிரியர் சிவக்குமார்
கவிஞர் இக்பால்
சிவன், ஓவியர்
அபிமானி, எழுத்தாளர்
திருநாவுக்கரசு, நண்பர்கள் தோட்டம்
ஷாஹிதா, எழுத்தாளர்
உக்கிரபாண்டி, எழுத்தாளர்
கவிஞர் பானுபாரதி
தமயந்தி, எழுத்தாளர், நார்வே
சிவக்குமார் மோகனன், திரைத் துறை
ஜா. மாதவராஜ், எழுத்தாளர்
கவிஞர் நா. முத்துநிலவன்
ஜெயகாந்தன் சார்வாகன், மொழிபெயர்ப்பாளர்
அ. குமரேசன், ஊடகவியலாளர்
கவிஞர் தர்மினி
தெ. மதுசூதனன், எழுத்தாளர், யாழ்ப்பாணம்
காலபைரவன், எழுத்தாளர்

செ.சண்முகசுந்தரம் 7 ஜூன் 2020
தொடர்ந்து இன்றும்கூட தனது இணையத்தில் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் குறித்த அவதூறைத் தொடர்கிறார் ஜெயமோகன்

இன்று காலை வரை முழுமை செய்யப்படுள்ள தமிழ் ஆளுமைகளின் பட்டியல் கீழே. மொத்தம் 180 பேர். இன்று ஜெயமோகன் தனது இணையத்தில் எடுத்துப் போட்டிருக்கும் பட்டியல் முழுமை பெற்ற பட்டியல் அல்ல. முதலில் ஜெயமோகன் தான் எடுத்துப் போட்டிருக்கும் பட்டியலின் பொய்மையை சீர் செய்யட்டும்.

எழுத்தாளர் பா. செயப்பிரகாசத்திற்கு எதிரான ஜெயமோகனின் அவதூறுக்கு
அனைத்து தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்களின் கண்டன அறிக்கை.

தமிழின் முதுபெரும் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் மீது தனது இணையப் பக்கத்தில் ஜெயமோகன் செய்துள்ள துல்லியத் தாக்குதல் மிக மோசமானது, உள்நோக்கமுடையது. தமிழின் கலை இலக்கியப் பண்பாட்டுச் சூழலில் காத்திரமான பங்களிப்பு செய்துள்ள அவரை, ஒரு அநாமதேயக் கடிதம் மூலம் அவதூறு செய்யவும், சிறுமைப்படுத்தவும் ஜெயமோகன் மேற்கொண்டுள்ள இழிசெயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கரிசல் இலக்கியத்தில் வேர்பதித்து எழுத்தைத் தொடங்கினாலும், எல்லைகள் கடந்த சமதர்ம சமுதாயம் நோக்கி கிளை பரப்பியவர் பா. செயப்பிரகாசம். ஏறத்தாழ 135 சிறுகதைகள், பள்ளிக்கூடம், மணல் என்னும் இரு நாவல்கள், மூன்று குறு நாவல்கள், இரு கவிதைத் தொகுப்புகள், பதினான்கு கட்டுரை நூல்கள், இலக்கிய, சமுதாய அரங்குகளில் உரைகள் எனத் தொடர்ந்து இயங்கி வருகிறவர். சமீபத்திய‌ அவருடைய மணல் நாவல் வரை அவருடைய எந்த ஒரு எழுத்தும், உரையும் செயல்பாடுகளும் சாதிய உணர்வைத் தூண்டியதாக சின்னனஞ்சிறு கறுப்புப் புள்ளி அடையாளமும் கொண்டதில்லை; ஆனால் சாதிக்கொடுமைகளைச் சாடிய அவருடைய எழுத்துகள் கணக்கற்றவை. அவருடைய பள்ளிக்கூடம், மணல் ஆகிய இருநாவல்களுக்கும் சாதியத்தை எதிர்த்த அடிநாதம்தான் பேசுபொருள். பொருளியல், வாழ்வியல் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்தும் சிறுமைகள் பேசும் அவருடைய கதைகளின் ஆற்றலை எந்த ஒரு தேர்ந்த வாசகனும் உணர்ந்து கொள்ளமுடியும். அவர் தனது எழுத்துகளை என்றும் வணிகமாக்கியதில்லை.

1965- இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் மாணவப் போராளியாய் முன்னின்று, தமிழகம் முழுமையும் போராட்டத்தை எடுத்துச் சென்றதால், இந்திய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிருந்த பத்து மாணவர் தலைவர்களில் ஒருவர். தமிழ்த் தேசியம், ஈழம், மார்கசீயம், பெரியாரியம், அம்பேத்காரியம் குறித்த எழுத்துகளில் சமரசம் இல்லாப் போராளி. இலக்கியம், களப்போராட்டம் எனத் தொடர்ந்து பல தளங்களிலும் இயங்கி வருபவர். இப்படிப்பட்ட தமிழ் ஆளுமை மீது ஜெயமோகன் கோபப்படுவதும், பழி தூற்றுவதும் நமக்கு ஒன்றும் ஆச்சரியம் அளிக்கவில்லை. தொடர்ந்த தனது பேச்சுகளின் மூலமாக, எழுத்துகளின் மூலமாக சர்ச்சைகளை உருவாக்கி, தமிழ் அறிவுச்சூழலில் தான் ஒரு பேசுபொருளாக இருக்கவேண்டும் என்ற முனைப்பில் தனது பிம்பத்தைக் கட்டமைத்துக் கொண்டு வருகிறவர் ஜெயமோகன்.

தமிழ் அறிவுச்சூழலுக்கு மிகவும் அபாயகரமானது இந்தத் தொற்று நோய், இந்தப் போக்கு என்னும் ஒட்டுவாரொட்டி நோய் தமிழ் இலக்கிய, அறிவுச் சூழலில் கேடு பயப்பதும் கூட‌. ஜெயமோகனின் சமதர்மச் சிந்தனை எதிர்க்குரல், மார்க்சிய எதிர்ப்பு என்பது நாம் அறிந்த ஒன்று. அதற்கான எதிர்வினையைப் பல்வேறு தளங்களில் மிக அமைதியாக ஆற்றி வருகிறோம். எந்த ஆதாரங்களுமில்லாது, ஒரு அநாமதேயம் எழுதியதாக தனிநபர் மீதான வன்மம், அவதூறு என்பவை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கண்டனம் செய்யப்படவேண்டிய ஒன்று. அது சமூக அக்கறையுள்ள கலை, இலக்கிய, அறிவுச் சூழல், இடதுசாரிச் சிந்தனைகள், இயக்கங்கள், எழுத்துகள், செயற்பாடுகள் அனைத்தின் மீதான அவதூறு என்பதால் ஜெயமோகனுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.

கண்டன அறிக்கைக்கு ஒப்புதல் தெரிவித்திருக்கும் எழுத்தாள‌ர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் :

எஸ்.வி. ராஜதுரை, எழுத்தாளர்
கோவை ஞானி, எழுத்தாளர்
பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன்
தோழர் தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
இரவிக்குமார்,எழுத்தாளர், நாடாளுமன்ற உறுப்பினர்,
ச. தமிழ்ச்செல்வன், கௌரவத் தலைவர், த.மு.எ.க.ச.
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர், த.மு.எ.க.ச
சு.ராமச்சந்திரன், மாநிலப் பொருளாளர், த.மு.எ.க.ச.
சி.சொக்கலிங்கம், மாநிலத் தலைவர், க.இ.பெருமன்றம்,
இரா. காமராசு, பொதுச்செயலாளர், . க.இ. பெருமன்றம்
ப.பா.ரமணி, மாநிலப் பொருளாளர், க.இ. பெருமன்றம்
எல்லை சிவகுமார், க.இ.பெருமன்றம், புதுச்சேரி,
பேராசிரியர் வீ.அரசு
சிகரம் செந்தில்நாதன், வழக்கறிஞர்
மீ. தா. பாண்டியன், தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்
பொதியவெற்பன், எழுத்தாளர்,
கண.குறிஞ்சி, சமூகச் செயற்பாட்டாளர்,
செ.சண்முகசுந்தரம், தஞ்சை இலக்கியவட்டம்
பொ.வேல்சாமி, ஆய்வாளர், எழுத்தாளர்
முனைவர் ராமசாமி, முன்னாள் துணைவேந்தர்
பேராசிரியர் சரஸ்வதி
பேராசிசிரியர் கல்விமணி, சமூகச்செயற்பாட்டாளர்
பேராசிரியர் சிவகுமார்
பேராசிரியர் கோச்சடை
பேராசிரியர் க. பஞ்சாங்கம்
தோழர் பிரேம், கவிஞர், எழுத்தாளர்
பேராசிரியர் பா. மதிவாணன்
பேராசிரியர் அரச முருகுபாண்டியன்
பேராசிரியர் சு.மாதவன்
பேராசிரியர் பி. பாலசுப்பிரமணியம்
பேராசிரியர் பாரதிபுத்ரன்
யமுனா ராஜேந்திரன், விமர்சகர், எழுத்தாளர்
கண்ணன், காலச்சுவடு பதிப்பகம்
சைலஜா, வம்சி பதிப்பகம், எழுத்தாளர்
மு.வேடியப்பன்,டிஸ்கவரி புக் பேலஸ்,
பிரளயன், நாடகவியலாளர்
பேரா.பார்த்திப ராஜா, நாடகவியலாளர்
பெருமாள் முருகன், எழுத்தாளர்
நா. விச்வநாதன், எழுத்தாளர்
ஆயிஷா நடராஜன், எழுத்தாளர்
பசு. கவுதமன், எழுத்தாளர்
அமரந்தா, எழுத்தாளர்
சுகுமாரன், ஆசிரியர், காலச்சுவடு
களந்தை பீர்முகமது, இணை ஆசிரியர், காலச்சுவடு,
வி.முத்தையா, ஆசிரியர், காக்கைச் சிறகினிலே,
க.சந்திரசேகரன், பொறுப்பசிரியர், காக்கைச் சிறகினிலே,
இரா.எட்வின், எழுத்தாளர், காக்கைச் சிறகினிலே,
கவிஞர் அறிவுமதி
மயிலை பாலு, ஊடகவியலாளர்
பி.என்.எஸ். பாண்டியன், ஊடகவியலாளர்
மகேஷ், ஊடகவியலாளர்
மு.பாலசுப்ரமணியம், துணைத்தலைவர்,
புதுவைத் தமிழ்ச் சங்கம்.
அழகியபெரியவன், எழுத்தாளர்
அன்பாதவன், எழுத்தாளர்
எஸ்.வி.வேணுகோபால், சமூகச் செயற்பாட்டாளர்,
பி.எஸ். அஜிதா, வழக்குரைஞர்
வாசுகி பெரியார், சமூகச் செயற்பாட்டாளர்,
மணவை ஆ. தமிழ்மணி, வழக்குரைஞர்
கவிஞர் மாலதிமைத்ரி
கவிஞர் சுகிர்தராணி,
கவின்மலர், எழுத்தாளர்
திருமிகு. மணிமொழி, எழுத்தாளர், வழக்குரைஞர்
ம. ஆ. சிநேகா, வழக்குரைஞர், சமூகச் செயற்பாட்டாளர்
நவீனா, எழுத்தாளர்
ஜமாலன், எழுத்தாளர்
புஷ்பராணி, எழுத்தாளர்
இரா. முருகவேள், எழுத்தாளர்,
லஷ்மி சரவணக்குமார், எழுத்தாளர்
அப்பணசாமி, எழுத்தாளர்
இரா. மோகன்ராஜன், எழுத்தாளர்
பாட்டாளி, எழுத்தாளர்
சுதீர் செந்தில், ஆசிரியர் உயிர் எழுத்து
முகுந்தன் கந்தையா, எழுத்தாளர், பாரீஸ்,பிரான்ஸ்,
சண். தவராஜா, எழுத்தாளர், சுவிட்சர்லாந்து,
குணா கவியழகன், எழுத்தாளர்,நெதர்லேந்து,
ரூபன் சிவராஜா, எழுத்தாளர், நோர்வே
கலா மோகன், எழுத்தாளர், பாரீஸ்,பிரான்ஸ்,
கார்வண்ணன், இலக்கியச் செயற்பாட்டாளர், பாரீஸ், பிரான்ஸ்,
ச. மிக்கேல்தாஸ்,
தென்மோடிக் கூத்துக் கலைஞர்,கனடா,
ச.ஜெயராஜா, தென்மோடிக் கூத்துக் கலைஞர், நோர்வே,
கவிஞர்இரா.தெ. முத்து, எழுத்தாளர்
நாறும்பூநாதன், எழுத்தாளர்
மணிமாறன், எழுத்தாளர்
தங்க. செங்கதிர், ஆசிரியர், மானுடம் இதழ்
த.ம. பிரகாஷ், ஆசிரியர், உழைப்பவர் ஆயுதம்
நீலகண்டன், கருப்புப் பிரதிகள்
பாரதிநாதன், எழுத்தாளர்
புலியூர் முருகேசன், எழுத்தாளர்
தளவாய் சுந்தரம், ஊடகவியலாளர்
சுகுணா திவாகர், ஊடகவியலாளர்
மரு. ஆமினா இன்குலாப், இன்குலாப் அறக்கட்டளை
எஸ். கே. கங்கா, எழுத்தாளர்
கடங்கநேரியான், கவிஞர்
சம்சுதீன் ஹீரா, எழுத்தாளர்
எச். பீர்முகம்மது, எழுத்தாளர்
வி. உ. இளவேனில், கவிஞர்
ஏர் மகாராசன், ஆய்வாளர், மக்கள் தமிழ் ஆய்வரண்
கருப்பு கருணா, எழுத்தாளர்,
கருப்பு அன்பரசன், எழுத்தாளர்,
சுந்தர், பதிப்பாளர்
லஷ்மி சிவக்குமார், எழுத்தாளர்
அண்டனூர் சுரா, எழுத்தாளர்
மு.சிவகுருநாதன், கல்வியாளர்,
அகிலா கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர்
வெ. ஜீவக்குமார், வழக்கறிஞர்
களப்பிரன், கவிஞர்
துவாரகா சாமிநாதன், கவிஞர்
முஜிபுர் ரஹ்மான், எழுத்தாளர்
துரை குணா, எழுத்தாளர்
குமரன்தாஸ், எழுத்தாளர்
புதியமாதவி சங்கரன், எழுத்தாளர்
கதிர்நம்பி, தொ.ப வாசகர் வட்டம்
வே.சங்கர்ராம் , நாடகவியலாளர்.
கவிஞர் நந்தலாலா.
திருப்பூர் குணா, பொன்னுலகம் பதிப்பகம்
தமிழ்நதி, எழுத்தாளர்
ஆர். பாலகிருஷ்ணன், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர்
கவிஞர் இரவி குமாரசாமி
பிர்தவ் ராஜகுமாரன், எழுத்தாளர்
வெளி ரங்கராஜன், நாடகவியலாளர்
கவிவளநாடன்
முத்தையா நமச்சிவாயம்
கே. ஜீவபாரதி, எழுத்தாளர்
கி.வே. பொன்னையன், தற்சார்பு விவசாயிகள் சங்கம்
அய்யாவு ஜெயராமன்
டிராட்ஸ்கி மருது, ஓவியர்
ஆனந்தகுமார், சுற்றுச்சூழல் ஆர்வலர்
குரு, இணை இயக்குநர், திரைத்துறை
பத்மநாதன் ரஞ்சனி, பெண்ணியச் செயற்பாட்டாளர்
மு. புஷ்பராஜன், எழுத்தாளர்
கவிஞர் ஜெயதேவன்
உமா மோகன், எழுத்தாளர்
நிலவுமொழி செந்தாமரை, வழக்கறிஞர்
செந்தில்குமார் குலவை
விஜய் எம்.குமார்
உலகநாதன் கண்ணையா
நா. ராமச்சந்திரன், எழுத்தாளர்
கே. தினகரன், இணை இயக்குநர்
கு.ப. குப
சாளை பசீர்
மணலி அப்துல்காதர்
யாழினி முனுசாமி
எம். அரியநாயகம், நாடக நேசர்
நாகு அன்பழகன், எழுத்தாளர்
ரஞ்சகுமார், சோமபாலா
முஸ்டீன் இஸ்மாயில்
இரவி கார்த்திகேயன்
ரவீந்திரன் நடேசன்
கரண் பிரபா
ப. கவிதா, பத்திரிகையாளர்
கௌதம சித்தார்த்தன், எழுத்தாளர்
புகழேந்தி, ஓவியர்
ஜி.குப்புசாமி, மொழிபெயர்ப்பாளர்
சுப்ரபாரதி மணியன், எழுத்தாளர்
இராசேந்திரசோழன், எழுத்தாளர்
மணி மதிவாணன்
கவிஞர் கலாப்ரியா
இளஞ்சேரல் ராமமூர்த்தி
வெ. ஜீவகிரிதரன், வழக்கறிஞர்
சுனந்தா சுரேஷ்
கான் மஜித்
பேராசிரியர் கருணாநிதி
பேராசிரியர் செல்வி மனிதி
பேராசிரியர் சிவக்குமார்
கவிஞர் இக்பால்
சிவன், ஓவியர்
அபிமானி, எழுத்தாளர்
திருநாவுக்கரசு, நண்பர்கள் தோட்டம்
ஷாஹிதா, எழுத்தாளர்
உக்கிரபாண்டி, எழுத்தாளர்
கவிஞர் பானுபாரதி
தமயந்தி, எழுத்தாளர், நார்வே
சிவக்குமார் மோகனன், திரைத் துறை
ஜா. மாதவராஜ், எழுத்தாளர்
கவிஞர் நா. முத்துநிலவன்
ஜெயகாந்தன் சார்வாகன், மொழிபெயர்ப்பாளர்
அ. குமரேசன், ஊடகவியலாளர்
தெ. மதுசூதனன், எழுத்தாளர், யாழ்ப்பாணம்
காலபைரவன், எழுத்தாளர்
கு. அ. தமிழ்மொழி, எழுத்தாளர்

Rooban Sivarajah 7 ஜூன் 2020
ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத 'முன்னாள் இடதுசாரியிடமிருந்து' மின்னஞ்சலில் வந்ததென்ற ஒரு கடிதத்தினை தன்னைத் தானே ‘மாஸ்ரர்’ எனச் சொல்லிக்கொள்ளும் ஜெயமோகன் தனது இணையப் பக்கத்தில் வெளியிடுகின்றார்.

இடதுசாரிகள் மீதான அவதூறுகள் இந்தக் கடித்தின் உள்ளடக்கம். தவிர எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்களின் பெயரைச் சுட்டி, அவர் மீது நேரடியான மிகமோசமான இழிவுபடுத்தல், ஆளுமைச் சிதைப்புச் செய்யப்பட்டிருக்கின்றது.

ஒரு அநாமதேயக் கடிதத்தினை எந்தவித கேள்விகளுக்கும் உட்படுத்தாமல் அப்படியே தனது இணையப்பக்கத்தில் பதிவேற்றியவர் ‘மாஸ்ரர்’. இது எந்தவித ஊடகவியல் அறமுமற்ற செயல். மட்டுமல்லாது அப்பட்டமான கையாலாகாத்தனம்.

அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் கூட்டாகக் கண்டன அறிக்கை வெளியிட்டதை அடுத்து மாஸ்ரர் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். தன்னிலை விளக்கம் என்பதற்கு அப்பால் பா. செயப்பிரகாசம் மீதான ஆளுமைச் சிதைப்பினைத் தொடர்ந்துள்ளார்.

அதில் ஒரு பகுதி இப்படி இருக்கிறது:

«வழக்கம்போல கடிதத்தை வாசித்தேன் என்றாலும் இந்த வரியை கவனிக்கவில்லை. நான் பெயரில்லா கடிதங்களை வெளியிடுதுண்டு- ஆனால் மின்னஞ்சலில் முழுமுகவரி இருக்கவேண்டும். பெயர் தேவையில்லை என்ற விண்ணப்பமும் இருக்கவேண்டும்»

பொறுப்புள்ள சாதாரண மனிதர்கள் கூட ஒரு கடிதத்தை - அதன் உள்ளடக்கத்தை - முழுமையாக வாசிக்காமல்- கவனிக்காமல் வெளியிட மா‌ட்டா‌ர்க‌ள். இலக்கியத்தில் 'கரைகண்ட' 'மாஸ்ரரால்' இப்படிச் செய்ய முடிகிறது. ஆணவம், நாகரிகரின்மை என்பவற்றுடன் பொறுப்பின்மையும் 'மாஸ்டருக்கான' தகுதி என்ற தன்னிலை விளக்கம் போலிருக்கிறது.

‘வாசித்தேன் என்றாலும் இந்த வரியை கவனிக்கவில்லை’ என்ற வரி இவருடைய வாசிப்பின் லட்சணத்தினைச் சொல்கிறது. வரலாற்றினை, தரவுகள், தகவல்களை எத்தனை திருபுகளுக்கு உட்படுத்தக்கூடிய 'மாஸ்ரர்' இவர் என்பதற்கான தன்னிலை விளக்கமாக இதனைச் சந்தேகத்திற்கிடமின்றிக் கொள்ளலாம்.

ஒன்று: எழுதியவர் பெயர் குறிப்பிடாத ஒரு கடிதத்தை, அதுவும் நேரடியானதும் பொதுமைப்படுத்தல் அணுகுமுறையிலான அவதூறுகளை உள்ளடக்கமாகக் கொண்ட கடிதத்தை வெளியிடுவதென்பதற்கு எந்த வகையான ஊடக, கருத்தியல், அறம் சார்ந்த பெறுமதிகளும் இல்லை. அதனை வெளியிட்டவரே அதன் உள்ளடக்கத்திற்கான முழுப்பொறுப்பாளியுமாகின்றார். உள்ளடக்கத்தை ஏற்றுக் கொண்டே அவர் அதனை வெளியிட்டிருக்கின்றார் என்பதே நேரடியான அர்த்தம்

இரண்டு: Source criticism – ‘தகவலாதாரம் மீதான விமர்சன நோக்கு’ என ஒரு விடயம் ஊடக, மற்றும் எழுத்துத் துறையில் முக்கிய அம்சம். அது பற்றிய துளியளவு பிரக்ஞையுமற்ற ஒரு அநாமதேய அவதூறுக் கடிதம் அது.

«நான் நீங்கள் வாழும் தலைமுறையின் பெரும்படைப்பாளி- மாஸ்டர். அதை உணரவில்லை என்றால் நீங்கள் இலக்கியத்தில் எதையுமே உணரத்தொடங்கவில்லை, நீங்கள் வேறெங்கோ இருக்கிறீர்கள்.»

தன்னைத் தானே வாழும் தலைமுறையின் பெரும்படைப்பாளியென மேற்கண்டவாறு பிதற்றிக்கொள்ளும் ஒருவர் இப்படியான அவதூறுகளைத் தொடர்ந்து செய்துவருகின்றார்.

*இணைப்பு: 'தமிழ் இந்து' வில் 06/06/20 வெளிவந்த செய்தி குறிப்பு

செ.சண்முகசுந்தரம் 9 ஜூன் 2020
பினாத்தும் லஷ்மி மணிவண்ணனுக்கு தோழர் யமுனா ராஜேந்திரனின் விளாசல்.
------------------------------------------------------------------------

ஜெயமோகனின் 'இரண்டாம் நிலைத்தளபதி' லக்ஷ்மி மணிவண்ணனுக்கு இந்தப் பதில். பிரச்சினையை அட்ரஸ் செய்யாமல் குறுக்குசால் ஓட்டுவதில் மன்னனான மணிவண்ணனுக்கு 'பாயின்ட் டு பாயின்ட் பதில்கள்' இவை.

*
1.

“ஜெயமோகனுக்கான கண்டனம் தொடர்பாக சில வார்த்தைகள்.

தமிழ் நாட்டில் தங்களுடைய கலை, இலக்கிய பெருமதிகள் வழியே ஒரு அடையாளத்தை பெற வக்கற்றவர்களே பொதுவான அரசியல் நிலைகளில் இறுக்கமாக சாய்கிறார்கள். பொதுவான அரசியல் கண்ணோட்டங்களை ஓங்கிக் கடைபிடிக்கும் எழுத்தாளன் கலையிலக்கிய அறிதலில் பாமரன் என்பதே அர்த்தம். இப்போது மட்டும் என்பதில்லை. எதிர்கால நம்பிக்கைகளும் கனவும் அற்றவர்கள் இவர்கள். விதிவிலக்காக ஒரிருவர் கூட தமிழ் நாட்டில் கிடையாது. ஆனால் பிற மொழிகளில் விதிவிலக்காக ஒருவரேனும் இருப்பார்கள். காண முடியும். அரசியல் பார்வைகளுடன் இலக்கிய கண்ணோட்டமும்
கொண்டவர்களாக இருப்பது. அப்படி இருப்பவர்களாலேயே அரசியல் தரப்பினரின் நன்மை நியாயப்படும். அனந்த முர்த்தி, சச்சிதானந்தன் போன்றவர்கள் இவ்வகை.
இந்த அசிங்கம் தமிழில் நமது முன்னோர்களின் காலந்தொட்டு இன்றுவரையில் நீடிப்பது புதிதொன்றும் இல்லை. தமிழில் முதன்மை வாசகனால் நன்கு உணரபட்ட விஷயம் இது. இதில் ஒரு புதுமையும் இல்லை. இந்த நிலை எளிதில் மாறக் கூடியதில்லை என்பதும் அறிந்ததே”.

---- பின் பாராக்களில் ‘இவர்கள்’ யாரென ஒரு பட்டியலை மணிவண்ணன் கொடுத்திருக்கிறார். ‘இவர்கள்’ எழுதிய புத்தகங்கள் நூற்றுக் கணக்கிலல்ல, ஆயிரக்கணக்கில். நாவல்கள், சிறுகதைள், கவிதைகள், கலை, இலக்கிய மொழிபெயர்ப்புக்கள், கோட்பாட்டு ஆய்வுகள், தத்துவத் திரட்டல்கள், திரைப்பட ஆய்வுகள் எனச் செய்திருப்பவர்கள். இவற்றுக்கு இணையாக அரசியலின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து அவை குறித்தும் எழுதியிருப்பவர்கள். மூணே முக்கால் கவிதைகளையும் எட்டு டஜன் வசவுளையும் துப்பியிருக்கும் லக்ஷ்மி மணிவண்ணனுக்கு இவற்றில் வாசிப்பு இல்லை என்று தெரிகிறது. பரிதாபம்.

2.

“இதில் விஷேசம் என்னவெனில் இந்த கும்பலின் அதிகாரம் நாம் நினைப்பதைக் காட்டிலும் பெரியது. ஊடகம்,பண்பாட்டு அமைப்புகள்,சாகித்ய நிலையங்கள் அனைத்திலும் தன் விஷம் கொண்டு ஏறி அமர்ந்திருப்பது. எண்ணற்ற கடிகாரங்களை பொதுவில் ஓடவைக்கும் நுட்பம் இதற்குண்டு.அதிகாரத்தை மட்டுமே இலக்காக கொண்ட ஒரு கலாச்சார கும்பலின் உடல் இந்த அமைப்பு. மதிப்பீட்டில் இருந்து கலையை, இலக்கியத்தை கீழிறக்கும் நோக்கம் கொண்ட அமைப்பு இது. அதன் மூலம் கலையிலக்கியவாதிகள் அடைய வேண்டிய பெருமைகளை அதற்கு தொடர்பற்றவர்களுக்கு கூட்டிக் கொடுக்கும் அமைப்பு இதுவே. சமகாலத்தில் யார் கலையிலக்கிய மதிப்பீடுகளை தகர்க்க முடியாத வண்ணம் புதிப்பிக்கிறார்களோ அவர்களை மையம் கொண்டு தாக்கும் இலக்கு இதற்கு உண்டு. குதர்க்கம் இவர்கள் மொழி. க.நா.சு மீது சாட்டை சொடுக்கியவர்கள் இவர்கள். பின்னர் சுந்தர ராமசாமியைப் பலகாலம் எதிர்த்தவர்கள். அவர் மீது இளைஞர்கள் நெருங்கி விடா வண்ணம் தப்பான எண்ணங்களை சூழ நிறுத்தியவர்கள். இப்போது வாசகர்களின் கரங்களுக்கு காலத்தைக் கடந்து வந்து சேர்ந்திருக்கும் பல நவீன தமிழ்ப் படைப்பாளிகள் இவர்களால் மாசு உண்டாக்கப் பட்டவர்களே”.

----- பா.செயப்பிரகாசத்தின் மீதான ஜெயமோகனின் அவதூறுக்கு நிகரானது மணிவண்ணனின் இந்த அவதூறு. பிஜேபி அதிகாரத்திற்கு வந்த பின்னால் இந்தியாவின் அரசமைப்புகளும், சிவில் சமூக அமைப்புகளும், கலை, இலக்கிய, திரைப்பட அமைப்புகளும், ஊடகங்களும், நீதியமைப்பும், காவல்துறை அமைப்பும் முழுமையாக ஆர்எஸ்எஸ் எனும் பாசிச இயக்கத்தின் ஆளுகைக்குள் வந்திருக்கின்றன. எழுத்தாளர்கள் கொல்லப்பட்டார்கள். தொகையான எழுத்தாளர்கள் தமது விருதைத் திருப்பிக் கொடுத்தார்கள். ஜெயமோகனுக்கு பத்மவிருது அறிவிக்கப்பட்டது. எஸ்.வி.சேகர்-கௌதமி சென்சார் போர்ட் மெம்பர்கள். இந்த எதிலாவது மணிவண்ணன் சொல்கிற ‘இவர்கள்’ பதவியிலோ, அதிகாரம் செலுத்துபவர்களாகவோ இருக்கிறார்களா? இவர்களுக்கு ஊடக செல்வாக்கு இருக்கிறதா? ரொம்பகாலம் வெளியுலகையே பார்க்காமல் சபிக்கப்பட்ட ஜீவராசி மட்டும்தான் இப்படியான ‘உண்மைகளை’ எளிதில் நெஞ்சுரத்துடன் வைக்க முடியும். சரி. காந.சு, சுராவுடன் இடதுசாரிகளுக்கு என்ன பிரச்சினை? சிஐஏவின் சுதந்திர இலக்கியம் அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையின் கலாச்சாரத் தந்திரம் என்பது பாவம் காந.சுவுக்குத் தெரியவில்லை. சு.ராவுக்கு ஸ்டாலின் காலம் தொடர்பான விமர்சனம் என்றால் அது காட் தட் பெயில்ட் புத்தகம். இது பற்றித்தான் மாறுபாடு. மற்றபடி கா. ந.சு, சு.ரா போன்றோரின் படைப்பிலக்கியம் பற்றி எவரும் பிராது பண்ணியதில்லை. மணிவண்ணனை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. குன்சாகப் பேசாமல் குறிப்பாகப் பேசினால் மணிவண்ணன் பணால்.

3.

“தற்காலத்தில் கலையிலக்கிய மதிப்பீடுகளை உருவாக்கும், மறுவரையறை செய்யும் இடத்தில் இருப்பவர் ஜெயமோகன் ஒருவரே. எனவே ஜெயமோகன் மீது இந்த வெற்றுச் சாட்டைகள் சொடுக்கப்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை”.

---- மதிப்பீடுகள், மறுவரையரை என்று மணிவண்ணன் அனத்துகிற விஷயங்கள் இடதுசாரிகளைப் பொறுத்து பழமைக்குத் திரும்புதல் மற்றும் ஆ ர்எஸ்எஸ் அஜன்டா. இதுதான் ஜெயமோகனின் இலக்கிய புராஜக்ட் என என்னைப் போன்ற இடதுசாரிகள் சொல்கிறோம். முக்கியமாக மணிவண்ணன் திரும்பத் திரும்பப் பேத்துகிற மாதிரி ஜெயமோகன் வெறும் இலக்கியவாதி மட்டும் அல்ல. அவரது எழுத்துக்களில் சரி பாதி அரசியல் எழுத்துக்கள். சு.ரா, கா.நா.சு போன்றவர்களுக்கோ ஏன் முழு தமிழ் இலக்கிய வரலாற்றிலும் சதா அரசியலில் இடையீடு செய்தவர் ஜெயமோகன் போல எவருமிலர். அரசியல் செயல்பாட்டாளராக இருந்த ஜெயகாந்தன் கூட ஜெயமோகன் அளவு அரசியல் செய்ததில்லை. இவை அத்தனைக்கும் மேலாக, இந்திய பாசிசத்தின் வேர் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரபூர்வ இதழின் எழுத்தாளன் ஜெயமோகன். விமோசன தரிசனங்களான மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்பகரியம் போன்றவற்றின் வைரி ஜெயமோகன். இஸ்லாமிய-கிறித்தவ மக்கள் இயக்கங்களை வெறுப்பவர் ஜெயமோகன். ஜெயமோகனின் புராஜக்ட் கலாச்சார அரசியலை ஆர்எஸ்எஸ் தரிசனத்திற்கு ஏற்ப மறுவரையறை செய்வது. இந்தப் பெரும் பரிமாணத்தை மறைத்துவிட்டு ஜெயமோகனுக்கு வெறும் இலக்கியவாதி எனக் குஞ்சலம் கட்டுவது மணிவண்ணனின அறியாமை அல்ல, கயமை.

5.

“ஆனால் இந்த கலையிலக்கியதிற்கு எதிரான கும்பல் இன்று காலத்தில் சில புதிய updation பெற்று சூழலின் முன்பாக நிற்கிறது அது ஒன்றே புதுமை. வெற்று முற்போக்கு, கலையிலக்கிய கண்ணோட்டங்கள் நீங்கப் பெற்ற யமுனா ராஜேந்திரன் வகை இடதுசாரித்தனம், ஆரம்பத்தில் கல்வியாளர்களுக்குக் கீழிறங்கி; பின்பு இப்போது சூழலின் பொது ஊடக இடதுசாரித் தன்மைக்கு, சுரா வின் படைப்புக் கண்ணோட்டதிலிருந்து கீழிறங்கியிருக்கும் காலச்சுவடு, அதன் படைத்தளபதி சுகுமாரன், ஓய்வு பெற்ற கலையிலக்கிய காவல் ஏட்டு தளவாய் சுந்தரம், பெண்ணிய பொலிஸ் மாலதி மைத்ரி, இடதுசாரி மொக்கைத்தனதிற்கு நிரந்தர தமிழ் நாட்டு அதிபர் எஸ்.வி.ராஜதுரை இவர்கள் எல்லோரும் இணைந்து முற்போக்கு ஒரு சமதளத் தன்மையை அடைவதே இப்போதைய புதுமை. இதுவே NEW UPDATION. இத்தகைய சங்க நடபடிகளில் சொக்கலிங்கம், தமிழ்ச்செல்வன் இருப்பதெல்லாம் எப்போதும் உள்ளதுதான். அவர்கள் இத்தகைய விவகாரங்களில் விபரப்பிழையாக இடம்பெறும் விதி அமைந்த கோமாளிகள். நான் எப்போதும் சொல்லுகிற சுந்தர ராமசாமி ; காலச் சுவடு கண்ணன் நீக்கம் செய்யப்பட்டவர் என்பதறிக”.

---- இந்தப் பட்டியலில் எப்படி நான் முதலில் வந்தேன் எனும் ஆச்சர்யம் இப்போதுவரை தீரவில்லை. அய்யனே, தமுஎகச, தகஇபெம அறிக்கைகள் வரும் வரையில் அது எனக்குத் தெரியாது. மூன்றாவது அறிக்கையை ஒருங்கிணைப்பு செய்தது தஞ்சை இலக்கிய வட்டம் தோழர். சண்முகசுந்தரம். கையெழுத்து மட்டுமே நான் இட்டிருக்கிறேன். அதீதமாகக் கற்பனையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். மற்றபடி, பட்டியலில் தனித்தனியே குறிப்பிட்டிருப்பவர்கள் கலை இலக்கிய தளத்தில் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை வாசகர்கள் அறிவார்கள்.

6.

“மற்றபடி ‘செயப்பிரகாசத்தை இலக்கிய பெருமதி’ கொண்டவர் என கருதும் யாரும் இந்தப் பட்டியலில் இருப்பின் தாமாகவே முன்வந்து கொரோனா வார்டுக்கு செல்ல வேண்டி கேட்டுக் கொள்கிறேன். கொரோனா வியாதிபேரில் எனக்கு பகையேதும் கிடையாது”.

---- எல்லோருக்கும் பிடித்த இலக்கியத்தை எவனாலும் எழுதமுடியாது. சிறுகதைகளில் பா.செயப்பிரகாசம் சாதித்த கவித்துவ சாத்தியத்தை மணிவண்ணன் போன்றவர்கள் மோப்பம் பிடிக்கக் கூட முடியாது. அவரது ரசனை மட்டமும் மதிப்பீடுகளும் அத்தகையது. கொரானோ வந்தால் எல்லோருக்கும் மரணமில்லை. ஆறடிதான் அதிகாரபூர்வ இடைவெளி. மணிவண்ணனிடம் இருந்து 12 அடி தள்ளி நில்லுங்கள். இதற்கு வாக்சின் கண்டுபிடிக்கவும் முடியாது..

செ.சண்முகசுந்தரம் 9 ஜூன் 2020
ஜெயமோகனின் அவதூறுக்கு எதிராகவும், எழுத்தாளர் பா. செயப்பிரகாசத்துக்கு ஆதரவாகவும் கடந்த மூன்று நாட்களாகத் திரட்டப்பட்ட, திரண்ட‌ ஆதரவு உண்மையில் சமீபத்திய காலங்களில் யாரும் கண்டிராதது, கேட்டிராதது.

"இதில் கையெழுத்து போட்டுள்ள எழுத்தாளர்கள் எதிர்காலத்திலாவது இங்குள்ள இலக்கியமேதைகள் மீது சாதியக் காழ்ப்பு முத்திரைகள் குத்தப்படும்போது இதேபோல எதிர்வினைகள் ஆற்ற அணிதிரள்வார்கள் என எதிர்பார்க்கிறேன்" என்னும் ஜெயமோகனின் வரிகளில் ஒளிந்து கிடக்கிறது தமிழ் எழுத்தாளர்களின் ஒற்றுமையான அணி திரட்டலும், குரலும்.

உண்மையில் ஜெயமோகனே பதற்றம் அடைந்திருக்கிறார். அவருடைய ஆசானும், அவரை இந்த அளவுக்கு இலக்கிய உலகில் அடையாளம் காட்டியவருமான கோவை ஞானி இந்தக் கண்டன அறிக்கைக்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறார். ரவிக்குமார் தோழர் இந்த அறிக்கையை அனுப்பிய உடனேயே ஒப்புதல் கொடுத்தார்.

தோழர்கள் இரா. காமராசும், ச. தமிழ்ச்செல்வனும், ஆதவன் தீட்சண்யாவும் உடனடியாக இம்முயற்சிக்கு ஒப்புதல் தந்தார்கள். தோழர் எஸ்.வி.ராஜதுரை இம்முயற்சிக்கு நாள் முழுவதும் என்னோடு தொடர்பிலேயே இருந்து ஊக்கம் கொடுத்தார். ஒரே நாளிலேயே கிட்டத்தட்ட 180 க்கும் மேற்பட்ட தமிழ் ஆளுமைகளிடமிருந்து மின்னஞ்சல் மூலமாக, வாட்ஸ் அப் மூலமாக ஒப்புதல் பெறப்பட்டது.

மிக மூத்த தமிழ் எழுத்துலக ஆளுமைகள் சிலரை அணுகி அறிக்கைக்கு ஒப்புதல் கேட்டபோது, ஒன்று மறுக்கப்பட்டது அல்லது இழுத்தடிக்கப்பட்டது. ஆனாலும் நாம் தளரவில்லை. நேரமில்லாத காரணத்தினால வேறு சில ஆளுமைகளைத் தொடர்பு கொள்ளமுடியவில்லை. அவர்கள் நம்மை மன்னிக்கட்டும்.

தமிழ் எழுத்துலக ஆளுமைகளில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களைத் தவிர பிறர் அனைவரும் ஒட்டுமொத்தமாக இக்கண்டன அறிக்கையின் பக்கம் நின்றார்கள். இது ஏதோ ஜெயமோகன் என்னும் தனிமனிதனுக்கு எதிரான அணிதிரட்டல் என்று எவரும் நினைத்துவிடவேண்டாம். இலக்கிய சாமியாராக தன்னை நினைத்துக் கொண்டு, தனக்கான மடத்தை நிறுவ முயலும் ஜெயமோகன் என்னும் கார்ப்பொரேட் ஆசாமிக்கு எதிரான அணிதிரட்டல் இது.

கத்தை கத்தையாக எழுதித் தள்ளி, ஊடகங்களில் இலக்கிய மேலாண்மை செய்து, எவரையும் தன் வார்த்தை ஜாலங்களின் மூலம் பணிய வைத்துவிட முடியும் என்ற ஜெயமோகனின் அகந்தைக்கு மிகப்பெரிய அடி விழுந்திருக்கிறது.

ஜெயமோகன் என்னும் மாய நிழலில் ஒதுங்க இடம் கிடைக்காதா என்று ஏங்கித் தவிக்கும் சில இளைய எழுத்தாளர்களையும், எழுத்துலகின் நிஜமான ஆளுமைகள் சிலரையும் நினைத்துப் பரிதாபம்தான் ஏற்படுகிறது.

விருது மட்டுமே சிலருக்கு உவப்பாக இருக்குமானால், நேற்று ஒன்று திரண்ட தமிழ் ஆளுமைகள் மீண்டும் ஒன்றிணைந்து ஏன் உயர்தரமான விருதுகளை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது என்று சிந்தனை செய்யுமாறு வேண்டுகிறேன். தமிழ் சாகித்ய விருதுகளையும், தமிழ் ஞானபீடங்களையும் ஏன் நாமே உருவாக்கிக் கொள்ளக்கூடாது?.

தமிழ் எழுத்துலகில் சாதிக்கப்பட்ட இந்த ஒற்றுமை முயற்சிகள் தொடர்ந்து பாதுகாக்கப்படவேண்டும்.

நன்றியும், அன்பும்...

தோழமையுடன்
செ. சண்முகசுந்தரம்
தஞ்சை இலக்கியவட்டம்

புலியூர் முருகேசன் 6 ஜூன் 2020
தோழர் பா.செயப்பிரகாசம் மீதான ஜெயமோகனின் வன்மத்தைக் கண்டித்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், வாசகர்களின் கண்டன அறிக்கை சில ஈழ எழுத்தாளர்களை எரிச்சலடையச் செய்திருக்கிறது. 'ஈழத்திற்காக பா.செ. வீதிக்கு வந்து போராடியிருக்கிறாரா?' என்ற மொன்னைத்தனமான கேள்வியை எழுப்பி, ஜெயமோகனின் மீதான கண்டன வேகத்தை மட்டுப்படுத்த முனைகிறார்கள். தோழர் பா.செ.வின் ஈழ ஆதரவு இரு தமிழ் நிலமும் அறிந்ததே!

அதுசரி! ஜாதி வெறி பிடித்த ஜெயமோகன் ஈழ நிலத்திற்காக எந்தக் களையைப் பிடுங்கியிருக்கிறார் என 'காத்திரமுள்ள' ஈழப் புரட்சி எழுத்தாளர்கள் விளக்கிச் சொன்னால் புரிந்து கொள்வோம்.

புலியூர் முருகேசன் 8 ஜூன் 2020
பா.செயப்பிரகாசம் சென்ற முப்பதாண்டுகளில் தமிழ்ச்சூழலில் அரசியல் பேசுபவர்கள் பொதுவாக என்னென்ன பேசுவார்களோ அதையெல்லாம் பேசியவர், அவ்வளவுதான். பார்ப்பனிய எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு, அமெரிக்க எதிர்ப்பு, ஒட்டுமொத்தமாக அரசு எதிர்ப்பு.
-ஜெயமோகன்.

லூசுக் கூமுட்டை! இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக, மனு ஸ்மிருதிக்கு எதிராக, அதாவது பார்ப்பனக் குஞ்சான்களுக்கு எதிராக எம் பாட்டன் வள்ளுவர் பேசிய ' உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்!' என்பதன் நீட்சியாகத்தான் எம் தோழர் பார்ப்பனீய எதிர்ப்பைப் பேசுகிறார். அது உனக்கு கசக்கும்தான். பார்ப்பனீய அடிமயிற்றை வருடும் உனக்கு அது எரிச்சலைத்தான் தரும்.

கி.வே.பொன்னையன் 7 ஜூன் 2020
தோழர் சூரியதீபன் அவர்களை மன ஓசை மூலம் அறிந்தேன்.
பின்னர் அவரது மொழிப்போராட்ட வரலாற்றுப் பின்னணி குறித்தும் தெரிந்தேன்.
மன ஓசையில் அவரது எழுத்துக்கள் ஒரு புதிய புரட்சிகர பண்பாட்டுத் தளம் அமையக் காரணமாக இருந்தது.
பல்வேறு நிகழ்வுகளில் நானும் அவரும் இணைந்து செயல்பட்டு வந்துள்ளோம்.
புரட்சிகர அரசியலின் பண்பாட்டு அரங்கை இன்குலாப் உட்பட பல ஆளுமைகளை இணைத்து வளப்படுத்தினார்.
ஜெயமோகன் என்கிற ஒரு வலதுசாரி
எழுத்தாளர் சூரியதீபன் (எ) ப.செயப்பிரகாசம் அவர்களை கொச்சைப் படுத்துவதை அனுமதிக்க முடியாது.
சூரிய தீபன் எழுத்துக்கள் மக்களின் வாழ்க்கையை பேசுபவை.
ஜெயமோகன் தனது கழிசடை வேலைகளை இனியும் தொடர்ந்து செய்ய இயலாது என்பத உணர்ந்து கொள்வது நல்லது.

தன்னாட்சித் தமிழகம் (முக நூல் - 4 ஜூன் 2020)
எழுத்தாளரும் மொழியுரிமை வீரரும் இடதுசாரி சிந்தனையாளருமான தோழர் பா.செயப்பிரகாசத்துக்கு எதிராக, சங்கிச் சிந்தனையாளரும் எழுத்து உற்பத்தியாளருமான ஜெயமோகன் எழுதிய காழ்ப்பெழுத்துகளை விமர்சித்து தோழர் கண. குறிஞ்சி எழுதிய பதிவை தன்னாட்சித் தமிழகம் சார்பில் முழுமையாக நாங்கள் ஏற்று அதையே எங்கள் கருத்தாக முன்வைக்கிறோம்.

ஜெயமோகன் எந்தக் காலத்திலும் அறத்தின் பக்கம் நின்றவரல்ல. அவரது எல்லாத் திறமைகளும் நாஜிக்களிடம் இருந்த திறமைகளைப் போன்றவைதான். அது மக்களுக்கு எதிராகவே வேலைசெய்யும்.

-----

ஜெயமோகனின் அறம்
- கண. குறிஞ்சி


எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையதளத்தில் "ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்" எனத் தலைப்பிட்ட ஒரு கடிதத்தை, அக்கடிதத்தை எழுதியவர் யார் என்பதைக் குறிப்பிடாமலே, வெளியிட்டுள்ளார். இடதுசாரி அமைப்புகளையும், அதன் செயல்பாட்டாளர்களையும் மிகக் கேவலமாக இழிவுபடுத்தி அக்கடிதம் எழுதப்பட்டுள்ளது. தவிரவும், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்களை ஒரு "சாதி வெறியர்" என அக்கடிதம் அவதூறு செய்கிறது.

கடிதத்தில் குறிப்பிடப்பட்டதற்கெல்லாம் ஆதாரம் ஏதும் உள்ளதா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், ஜெயமோகன் பொறுப்பற்ற முறையில் அதை வெளியிட்டுள்ளது கடும் கண்டனத்திற்கு உரியது. இக்கடிதத்தை அவரே எழுதி இருக்கக் கூடும் என்றும் சில இலக்கிய வட்ட நண்பர்கள் கருதுகின்றனர்.
இடதுசாரி அமைப்புகளையோ, அதன் படைப்பாளிகளையோ யாரும் விமர்சனம் செய்யவே கூடாது என எவரொருவரும் கூறவில்லை. இன்னும் கூறப் போனால், அரசியல் கட்சிகளில் காணப்பெறாத அரிதான ஓர் அணுகுமுறை பொதுவுடைமை இயக்கங்களில்தான் உள்ளது. அதுதான் சுயவிமர்சனம் எனும் அரிதான கூறு. தாங்கள் செய்துவிட்ட தவறுகளை பகிரங்கமாகப் பொதுவெளியில் வெளியிட்டு, அதற்காக வருத்தம் தெரிவிப்பதோடு, அத்தகைய தவறுகளை / போதாமைகளை எதிர்வரும் காலத்தில் தவிர்த்துக் கொள்வதாகப் பறைசாற்றுபவர்கள் இடதுசாரிகள். எனவே விமர்சனங்களுக்கு அஞ்சுபவர்களல்ல, இடதுசாரிகள். ஆனால் விமர்சனங்கள், தகுந்த ஆதாரத்தோடும், உள்நோக்கம் இன்றியும், தனி மனித அவதூறு இல்லாமலும் இருக்க வேண்டும்.

ஆனால், எவ்வித ஆதாரமும் இல்லாமல் இடதுசாரிகள் மீது தாக்குதல் தொடுக்கும் இக்கடிதத்தை வெளியிட்டதற்குத் திட்டவட்டமான உள்நோக்கம் ஜெயமோகனுக்கு இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதுதான் பொதுவுடைமை இயக்கங்கள் மீதான அவரது ஆறாத வன்மம்.

பா.செயப்பிரகாசம் அவர்களின் கடந்த கால இலக்கிய மற்றும் சமூக அர்ப்பணிப்பு குறித்து அனைவரும் அறிவர். சாதி ஒழிப்பு, மத மறுப்பு, வல்லரசிய எதிர்ப்பு, தேசிய இனஉரிமை பறிப்பு, சூழல் பாதுகாப்பு ஆகிய தளங்களில் தொய்வுறாமல் தொடர்ந்து களமாடி வருபவர், பா.செயப்பிரகாசம் அவர்கள். எழுத்தைத் தாண்டிய ஓரு வாழ்க்கை படைப்பாளிக்கு உள்ளது என்பதை வலியுறுத்துவதோடு, அதற்குச் சான்றாக இயன்றவரை தனது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டவர்.

அப்படிப்பட்ட சக படைப்பாளி ஒருவரைப் பற்றி யாரோ ஒருவர் அவதூறு செய்தால், ஜெயமோகனே அதற்குத் தக்க பதிலடி கொடுத்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் ஒரு பொதுக்கழிப்பிடத்தைப் போலத் தனது இணையதளத்தைப் பயன்படுத்துவது சுகாதாரக் கேடானதாகும்.

பா.செயப்பிரகாசத்தை மட்டுமல்ல, இதைப் போல பலரையும் வசை பொழிந்தே வாழ்க்கையை ஓட்டுபவர் இந்தப்பேர்வழி. பேராசான் கார்ல் மார்க்சு அவர்களைப் பற்றியும், தமிழீழப் போராட்டம் பற்றியும் இவர் செய்து வரும் அவதூறுகளுக்கு அளவே இல்லை.
இனி பொறுப்பதில்லை.

ஜெயமோகன் தனது வன்மத்தை மாற்றிக் கொள்ளாவிட்டால், அவரது ஆணவப்போக்கைச் சனநாயக சக்திகள் அடக்குவார்கள் என்பதை மட்டும் அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

- கண. குறிஞ்சி

Annamalai Arulmozhi (முக நூல் - 7 ஜூன் 2020)
தமிழ்நாடு முழுவதிலும் எத்தனையோ நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. இலக்கியக் கூட்டங்கள், மனித உரிமைப் போராட்டங்கள், மொழிக்காக, இனத்துக்காக, பெண்ணுரிதைக்காக,கொத்தடிமைகள்மீட்பு, குடிசைகள் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்பு, அன்னாடங்காய்ச்சிகளின் வாழ்க்கைப்பதிவுகள், கருத்தரங்க ஆராய்ச்சிக் கட்டுரைகள் என அத்தனைத் துறையிலும் ஈடுபட்டு தன்முனைப்பின்றி மனிதம் என்ற ஒற்றைச் சொல்லாக ஒலிக்கும் அரிய மனிதர்களில் ஒருவர் பா.செயப்பிரகாசம் அவர்கள். எழுத்துலகில் சூரியதீபன் என்ற பெயரில் வெளியான அவரது கவிதைகளும் அவரது கதைகளும் தமிழ் இலக்கிய உலகில் அவரது அடையாளத்தைச் சொல்லும்.

அவரது உழைப்பு ஏழை எளிய மக்களுக்கானது. ஒடுக்கப்படும் மக்களின் உரிமைக்குரல் அவருடையது.

இதற்கு நேர் மாறாக மனித நேயமற்ற காவிச் சிந்தனையை தொழுது பரப்பி வருபவர் எழுத்தாளர் ஜெயமோகன். அந்த காவி வன்மத்தை விமர்சனம் என்ற பெயரில் மக்களுக்காக எழுதும் ஒவ்வொரு போராளியின் மீதும் வீசிக்கொண்டே வருகிறார். முன்பு தோழர் இன்குலாப், இப்போது தோழர் செயப்பிரகாசம் அவர்கள்.

பொதுவாக தோழர் செயப்பிரகாசம் அவர்கள் அவரது உழைப்புக்கேற்ற புகழை பெறவில்லை என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. அவர் பெற வேண்டிய சிறப்புகளை ஜெயமோகன் விமர்சனத்தினர்கான எதிர்வினை மூலம் அவருக்கு கற்றறிந்த தமிழர்கள் வழங்கி வருகின்றனர்.

ஜெயமோகன் என்ற எழுத்தாளரின் நோக்கம் மீண்டும் மீண்டும் தோற்கும் . ஏனெனில் அது வெறுப்பின் விளைச்சல். அன்பின் அறம் அதை ஊதித் தள்ளிவிடும்.பெருமாள் முருகன் (முக நூல் - 5 ஜூன் 2020)
ஜெயமோகன் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள 'இடதுசாரிக்' கடிதத்தில் வரும் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்கள் பற்றிய குறிப்பு மிகவும் தவறானது. பா.செயப்பிரகாசம் அவர்களோடு சில ஆண்டுகள் நெருங்கிப் பழகியவன் நான். தவறான தகவல்கள், அவதூறு ஆகியவற்றைக் கொண்ட இக்கடிதம் எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.Pothi (முக நூல் - 3 ஜூன் 2020)
காரல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் என மகத்தான தலைவர்கள் மீதும்; அருந்ததி ராய், எஸ்விஆர், பா.செயப்பிரகாசம் ஆகிய இடதுசாரி எழுத்தாளர் மீதும் அவதூறு தூற்றிய வண்ணமே இருக்கும் ஜெயமோகனுக்குக் கண்டனம் புரியாமல் கள்ளமௌனம் சாதிப்போரும் கண்டனத்துக்குரியோரே. இதில் மாறுபடுவோர் எவரேயாயினும் இனியேனும் கண்டனம் புரிக. இசைவில்லையெனில் எனை நட்பு நீக்கம் செய்துவிடலாம். இது அளவு மாற்றம் பண்பு மாற்றம் ஆகிய தருணம். இனிப்பொறுப்பதில்லை.புலியூர் முருகேசன் (முக நூல் - 3 ஜூன் 2020)
ஜெயமோகன் எனும் ஜாதிப்பிரியன்.

தமிழ்நாட்டில் நடைபெற்ற 'இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்ட' வரலாற்றில் என்றென்றும் தோழர் பா.செயப்பிரகாசத்தின் பெயர் இருக்கும். மாணவப் பருவத்திலிருந்தே மொழி, இனம் குறித்த அக்கறையுடன் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர். மார்க்சிய-லெனினிய கருத்தியலை ஏற்றுக் கொண்டு தன்னுடைய தொடர் செயல்பாடுகளில் அதை முன்னெடுத்தவர். சூரியதீபன் எனும் புனைப்பெயரில் எழுதினாலும் அது யார் என்பது உளவுத்துறைக்கும், அரசுக்கும் நன்றாகத் தெரிந்தே இருந்தது. 'இரவுகள் உடைபடும்' சிறுகதைத் தொகுப்பைப் போல, அன்றைய நாட்களில் காத்திரமான கதைகளை எழுதிவிட முடியுமா என்பது சந்தேகமே! அதேபோல், மனஓசை இதழின் ஆசிரியர் குழுவில் முக்கியப் பொறுப்பு வகித்ததும்.

காலாவதியான எழுத்தாளர் ஜெயமோகன், தோழர் பா.செ மீது வன்மம் கக்கியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஒரு பெயரற்ற நபரின் கடிதமென சொல்லிக் கொண்டு ஜெமோ பகிர்ந்திருப்பது மகா கேவலமான கடிதம். தோழர் பா.செயப்பிரகாசம் அவர்களை ஜாதிவெறியர் எனக் குறிப்பிடும் அந்த நபர் யாரென ஜெயமோகன் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அது ஜெயமோகன்தான் என்ற சந்தேகமும் இருக்கிறது.

எத்தனை புனைப்பெயரில் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், யாருக்காக எழுதுகிறோம் என்பதுதான் முக்கியம். ஆளும் ஃபாசிச பா.ஜ.க.வைக் கண்டித்து எழுத முடியாத ஆர்.எஸ்.எஸ்.சின் 'பென்சர்தாரர்' ஜெயமோகனெல்லாம் தோழர் பா.செயப்பிரகாசம் அவர்களைப் பற்றிப் பேசுவது காலக்கொடுமை!ஆ.தமிழ்மணி, வழக்கறிஞர் (முக நூல் - 3 ஜூன் 2020)
தமிழ் நிலத்தின் மிக முக்கியமான படைப்பாளி பா.செயப்பிரகாசம். தமிழ் மொழியின் மீதும், தமிழ் நிலத்தின் மீதும் தீராத காதல் கொண்டு கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயலாற்றி வருபவர். தமிழ் மொழி காக்கும் போரில் தங்களை அர்பணித்துக்கொண்ட தளகர்த்தகர்களில் குறிப்பிடத்தக்கவர்.

பா.செயப்பிரகாசத்தின் மீது வன்மத்தோடு ஜெயமோகன் செயலாற்றியிருக்கிறார். ஜெயமோகன் தனது இணையதளப் பக்கத்தில் ‘ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்’ என்ற அறிமுகத்துடன் ‘மருதையன், வினவு, பின்தொடரும் நிழலின் குரல்’ என்ற தலைப்பில் தனக்கு எழுதப்பட்டதாக ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

அந்தக் கடிதம் இப்படித்தான் தொடங்குகிறது

‘அன்புள்ள ஜெ, வினவு தளம் பற்றி எழுதியிருந்தீர்கள். என் பெயர் வேண்டாம். இந்தக் கடிதத்தில் உள்ள பிழைகளை எல்லாம் திருத்திக்கொள்ளுங்கள். நான் மீண்டும் இதைப் படிக்கும் மனநிலையில் இல்லை’.....

இந்தக் கடிதத்தின் முதல் பத்தியே அதன் உண்மைத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்குகிறது. நாடறிந்த ஒரு எழுத்தாளர் தனது இணைப் பக்கத்தில் ஒரு அனாமதேய கடிதத்தை வெளியிடுகிறார் என்றால், அந்தக் கடிதத்தின் உள்ளடக்கத்தில் அவர் முழுமையாக உடன்படுகிறார் என்றோ? அல்லது அதை அவரே எழுதியிருக்கிறார் என்றோ? தான் கருத வேண்டும்.

‘இந்தக் கடிதத்தில் உள்ள பிழைகளை எல்லாம் திருத்திக்கொள்ளுங்கள். நான் மீண்டும் இதைப் படிக்கும் மனநிலையில் இல்லை’ என்று தொடக்கத்திலேயே எழுதியிருப்பதன் மூலம் ஏதோ ஒரு இடத்தில் ஜெயமோகனின் மனசாட்சி தடுத்திருக்கிறது. ஆனால் அதையும் மீறி அவர் தனது வன்மத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே கருத வேண்டியிருக்கிறது.

இடதுசாரிக் குழுக்களின் உண்மையான அரசியல் என்ன? என்று தொடங்கும் அந்தக் கடிதத்தில் இடதுசாரிகளை நான்கு வகையாக பிரித்து எழுதப்பட்டிருக்கிறது. அதில் ஒரு பத்தியில்,

‘நான்காவது கூட்டம் தலைவர்கள். இவர்கள் யார் என்றே நமக்குத் தெரியாது. இவர்களில் சிலர் பணக்காரர்கள். அதிகாரப்பதவிகளில் இருந்தவர். பா.செயப்பிரகாசம் போன்ற சாதிவெறிகொண்ட அரசாங்க உயரதிகாரியெல்லாம் இங்கே இடதுசாரிக்குழுவின் தலைவராக புனைபெயரில் இருந்திருக்கிறார். சூரியதீபன் என்ற பேரில். இதெல்லாம் எந்த ஊர் பித்தலாட்டம். இதெல்லாம்கூட தெயாததா நம்மூர் உளவுத்துறை? இந்த தலைமையை நாம்மால் புரிந்து கொள்ளவே முடியாது.’ என்று பா.செயப்பிரகாசத்தின் மீதான வெறியைக் கக்கியிருக்கிறார்.

பா.செயப்பிரகாசம் ஒருபோதும் இடதுசாரி குழுவிற்கு தலைவராக இருந்தவர் அல்ல. சாதி வெறி கொண்டும் செயல்பட்டவர் அல்ல.

வயதைப் பொருட்படுத்தாது, தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பயணப்பட்டு இனம், மொழி, சூழலியல் என களப்பணிகளைச் செய்து கொண்டிருக்கும் பா.செயப்பிரகாசத்தை சாதி வெறியராக காட்டி அவரை இழிவுபடுத்திவிட முடியாது. அவருடைய செயல்பாடுகளும், படைப்புகளும் எப்போதும் மிளிரக்கூடியவை.

பா.செயப்பிரகாசம் என்ற ஆளுமையின் மீதான, அவரது படைப்புகளின் மீதான ஜெயமோகனின் கடந்த கால வன்மங்களின் தொகுப்பு மனமாகவே இந்தப் பதிவு வெளிப்பட்டிருக்கிறது. இது ஒரு திட்மிட்ட அவதூறு. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அறம் எழுதிய ஜெயமோகன் அறம் தவறியிருக்கிறார். கொரோனா கொடுமைகளை திசை திருப்ப எத்தனையோ ஆயுதங்கள் ஏவப்பட்டிருக்கிறது. அதில் இதுவும் ஒன்றோ...?தங்க.செங்கதிர் (முக நூல் - 3 ஜூன் 2020)
அவதூறுக்கு மறுபெயர் ஜெயமோகனா.?

எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணைய பக்கத்தில் "ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்" என்ற பெயரில், "மருதையன், வினவு, பின் தொடரும் நிழலின் குரல்" என்ற தலைப்பில் பெயர் குறிப்பிடாத கடிதத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். கடிதத்தின் இரண்டாம் வரியே, "இக்கடிதத்தில் உள்ள பிழைகளை நீங்களே திருத்திக் கொள்ளுங்கள்" என ஜெயமோகனுக்குக் கட்டளையிடுகிறது. ஆனால் அக்கடிதமே "பிழைதான்" - அபத்தம் நிறைந்ததுதான் என்பதைத் தெரிந்துதான் அதனை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். எனவே பெயர் குறிப்பிடாத அக்கடிதத்தை வெளியிட்டதன் மூலம் அதிலுள்ள அபத்தங்களுக்கு அவரே பொறுப்பு என்பதை தலையனை 'சைஸில்' நூல்களை எழுதிக்குவிக்கும் ஜெயமோகன்
அறிவார் என நம்புவோம்!

மேலும் அக்கடிதத்தில் இடதுசாரிக் குழுக்களின் உண்மையான அரசியல் என்ன என்பது குறித்து, நான்கு குழுக்களாகப் பிரித்துக் கொண்டு - நான்கு வெவ்வேறு வகையான மனிதர்கள் என வகைப்படுத்துகிறார்.

குறிப்பாக இடதுசாரிகள் குறைவான கல்வித்தகுதி கொண்டவர்கள், வாசிப்பு அறிவு அற்றவர்கள், எல்லாவற்றையும் ஏளனம் செய்பவர்கள், எளிதாக மூளைச் சலவைக்கு ஆளாபவர்கள் என இடதுசாரிக் கண்ணோட்டத்தையும், இடதுசாரி சிந்தனையாளர்களையும் கொச்சைப்படுத்துகிறார். முன்னாள் இடதுசாரியான அந்த கடிதக்காரர், தனது அமைப்பு நிலைமைகளைப் பற்றி ஜெயமோகனிடம் பகிர்ந்துகொள்ளும் அளவிற்குத்தான் கட்சிக்குள் அரசியல் பயிற்றிருக்கிறார் என்பது அவருக்கே அவமானம்.

இடதுசாரி இயக்கத்தின் மகத்துவத்தையும், மக்களின் மீது இடதுசாரிகள் கொள்ளும் அளவற்ற பேரன்பையும், அதற்காக இடதுசாரிகள் அர்ப்பணித்த ஈகத்தையும் குறிப்பிட மறுக்கிறார் அல்லது மறைக்கிறார் அல்லது சுயநல வாழ்க்கைக்காக கோடாரிக் காம்பாக தன்னைத் தகவமைத்துக் கொள்ள எத்தனித்துவிட்டார் என்பதாகத்தான் நாம் அவரைப் புரிந்துகொள்ள முடிகிறது.

அக்கடிதம் ஒரு கட்டத்தில் தனிமனிதர்களின் மீது அவதூறுச் சகதியை அள்ளி வீசுகிறது.

குறிப்பாக தமிழ் மொழிக்கான போராட்டம், ஈழச் சிக்கல், சுற்றுச்சூழல், சாதியொழிப்பு சார்ந்து எழுத்துலகிலும், அரசியல் தளத்திலும் தொடர்ந்து இயங்கிவரும் தோழர் பா.செயப்பிரகாசம் அவர்களை வம்புக்கு அழைக்கிறது அக்கடிதம். இலக்கிய உலகில் ஜெயமோகனோடு சமகாலத்தில் இயங்கிவரும் பா.செயப்பிரகாசம் அவர்களைத் தம் தளத்தில் அவதூறு செய்ய முனைந்திருப்பதன் மூலம் தமது அரிப்புக்கு வடிகால் தேடுகிறாரே என்பதாகவே எண்ணத்தோன்றுகிறது.

எழுத்துலகில் அறிமுகமான தருணத்தில், "ஒரு மனநோயாளிக்குரிய தீவிரத்துடன் இயங்கினேன்" என்று தனது தளத்தின் அறிமுகப்பகுதியில் குறிப்பிடும் ஜெயமோகன், இன்றும் அந்தத் தன்மையிலிருந்து மீளாதவராகவே இதுபோன்ற பதிவுகளை வெளியிடுகிறாரோ என்று நம் மனதில் இயல்பாக எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.!செ.சண்முகசுந்தரம் (முக நூல் - 2 ஜூன் 2020)
அநாமதேயக் கடிதங்கள் எழுதுவது போக்கிரிகளின் வேலை. அப்படிப்பட்ட கடிதங்களை வெளியிடுவது அநாகரிகத்தின் உச்சம்.

கம்யூனிசத்தின் மீது ஜெமோ வுக்கு இருக்கும் காட்டம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் தோழர் பா.செயப்பிரகாசத்தை கொச்சையாகப் பேச ஜெ.மோ.வுக்கு என்ன அருகதை இருக்கிறது? பா.செ.வின் ஒரு சிறுகதையிடம் ஜெ.மோ நெருங்கமுடியுமா?

இந்தக் கடிதத்தை எழுதியதே ஜெயமோகன் தான் என்று நான் உறுதியாகச் சொல்கிறேன். கடிதத்தின் நடை அப்படித்தான் உள்ளது. யார் எழுதியது என்று சொல்லாதவரை அக்கடிதத்தை எழுதியது ஜெயமோகன்தான்.ப.தனஞ்ஜெயன், Rooban Sivarajah (முக நூல் - 7 ஜூன் 2020)
இலக்கிய அறம் மீறிய செயலை வன்மையாக கண்டிக்கிறோம்:எழுத்தாளர் ஜெயமோகனின் இந்த செயல் அவருடைய படைப்புலகிற்க்கு பெரிய அவமானம்.

ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத 'முன்னாள் இடதுசாரியிடமிருந்து' மின்னஞ்சலில் வந்ததென்ற ஒரு கடிதத்தினை தன்னைத் தானே ‘மாஸ்ரர்’ எனச் சொல்லிக்கொள்ளும் ஜெயமோகன் தனது இணையப் பக்கத்தில் வெளியிடுகின்றார்.

இடதுசாரிகள் மீதான அவதூறுகள் இந்தக் கடித்தின் உள்ளடக்கம். தவிர எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்களின் பெயரைச் சுட்டி, அவர் மீது நேரடியான மிகமோசமான இழிவுபடுத்தல், ஆளுமைச் சிதைப்புச் செய்யப்பட்டிருக்கின்றது.

ஒரு அநாமதேயக் கடிதத்தினை எந்தவித கேள்விகளுக்கும் உட்படுத்தாமல் அப்படியே தனது இணையப்பக்கத்தில் பதிவேற்றியவர் ‘மாஸ்ரர்’. இது எந்தவித ஊடகவியல் அறமுமற்ற செயல். மட்டுமல்லாது அப்பட்டமான கையாலாகாத்தனம்.

அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் கூட்டாகக் கண்டன அறிக்கை வெளியிட்டதை அடுத்து மாஸ்ரர் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். தன்னிலை விளக்கம் என்பதற்கு அப்பால் பா. செயப்பிரகாசம் மீதான ஆளுமைச் சிதைப்பினைத் தொடர்ந்துள்ளார்.

அதில் ஒரு பகுதி இப்படி இருக்கிறது:

«வழக்கம்போல கடிதத்தை வாசித்தேன் என்றாலும் இந்த வரியை கவனிக்கவில்லை. நான் பெயரில்லா கடிதங்களை வெளியிடுதுண்டு- ஆனால் மின்னஞ்சலில் முழுமுகவரி இருக்கவேண்டும். பெயர் தேவையில்லை என்ற விண்ணப்பமும் இருக்கவேண்டும்»

பொறுப்புள்ள சாதாரண மனிதர்கள் கூட ஒரு கடிதத்தை - அதன் உள்ளடக்கத்தை - முழுமையாக வாசிக்காமல்- கவனிக்காமல் வெளியிட மா‌ட்டா‌ர்க‌ள். இலக்கியத்தில் 'கரைகண்ட' 'மாஸ்ரரால்' இப்படிச் செய்ய முடிகிறது. ஆணவம், நாகரிகரின்மை என்பவற்றுடன் பொறுப்பின்மையும் 'மாஸ்டருக்கான' தகுதி என்ற தன்னிலை விளக்கம் போலிருக்கிறது.

‘வாசித்தேன் என்றாலும் இந்த வரியை கவனிக்கவில்லை’ என்ற வரி இவருடைய வாசிப்பின் லட்சணத்தினைச் சொல்கிறது. வரலாற்றினை, தரவுகள், தகவல்களை எத்தனை திருபுகளுக்கு உட்படுத்தக்கூடிய 'மாஸ்ரர்' இவர் என்பதற்கான தன்னிலை விளக்கமாக இதனைச் சந்தேகத்திற்கிடமின்றிக் கொள்ளலாம்.

ஒன்று: எழுதியவர் பெயர் குறிப்பிடாத ஒரு கடிதத்தை, அதுவும் நேரடியானதும் பொதுமைப்படுத்தல் அணுகுமுறையிலான அவதூறுகளை உள்ளடக்கமாகக் கொண்ட கடிதத்தை வெளியிடுவதென்பதற்கு எந்த வகையான ஊடக, கருத்தியல், அறம் சார்ந்த பெறுமதிகளும் இல்லை. அதனை வெளியிட்டவரே அதன் உள்ளடக்கத்திற்கான முழுப்பொறுப்பாளியுமாகின்றார். உள்ளடக்கத்தை ஏற்றுக் கொண்டே அவர் அதனை வெளியிட்டிருக்கின்றார் என்பதே நேரடியான அர்த்தம்

இரண்டு: Source criticism – ‘தகவலாதாரம் மீதான விமர்சன நோக்கு’ என ஒரு விடயம் ஊடக, மற்றும் எழுத்துத் துறையில் முக்கிய அம்சம். அது பற்றிய துளியளவு பிரக்ஞையுமற்ற ஒரு அநாமதேய அவதூறுக் கடிதம் அது.

«நான் நீங்கள் வாழும் தலைமுறையின் பெரும்படைப்பாளி- மாஸ்டர். அதை உணரவில்லை என்றால் நீங்கள் இலக்கியத்தில் எதையுமே உணரத்தொடங்கவில்லை, நீங்கள் வேறெங்கோ இருக்கிறீர்கள்.»

தன்னைத் தானே வாழும் தலைமுறையின் பெரும்படைப்பாளியென மேற்கண்டவாறு பிதற்றிக்கொள்ளும் ஒருவர் இப்படியான அவதூறுகளைத் தொடர்ந்து செய்துவருகினறார்.முனைவர் ஏர் மகாராசன், சமூகப் பண்பாட்டியல் ஆய்வாளர், மக்கள் தமிழ் ஆய்வரண் (முக நூல் - 7 ஜூன் 2020)
ஈழத்தின் பக்கம் நின்றிருக்கும் தோழமையின் பக்கமே யாம்.

ஈழத்தில் இனப்படுகொலை நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில், ஈழத்தின் குரலை உண்மையாக வெளிப்படுத்தியவர்களுள் தோழர் பா.செயப்பிரகாசம் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். ஈழத்தின் பக்கம் நின்றிருந்த பா.செ பக்கமே யாம்.ஜெயதேவன் (முக நூல் - 6 ஜூன் 2020)

நான் கேள்விப்பட்ட *ஜெ.பி"
-----------------------------
நான் பெரும்பாலும் இலக்கியவாதிகள் சர்ச்சைகளில் தலையிடுவது இல்லை. அது பெரியவர்கள் விசயம். ஏதோ முகநூலில் ஒரு 500 பேர் என் பதிவுகளை படிக்கிறார்கள் என்பது தவிர வெளி உலகில் ஜெயமோகன் போல பெரிய ஆள் அல்ல.. சாதாரண கவிஞன். அவரோ விருது தரும் இடத்திலிருந்து தமிழகத்தின் பல விருதுகளை நிரணயிக்கும் அளவு செல்வாக்கானவர். நிறைய எழுதி சாதித்தவர். *அதே சமயம் சமூகப் பயன்பாடு அற்ற எழுத்துக்களின் சொந்தக்காரர்.*

ஜெயகாந்தனின் ஒரு சிறுகதையை படித்து விட்டு அரை மணி நேரம் அசை போடலாம். அக்கினிப் பிரவேசம் இன்னும் நிற்கிறது. புதுமைப் பித்தனின் பொன்னகரம் அன்று அதிர்வை ஏற்படுத்திய கதை. இன்றும் ஒரு சிலர் அசை போட வைக்கும்படி எழுதி வருகின்றனர். இயல்பாக மனித மனங்களை பதிவு செய்து உயிருள்ள
மனிதர்களாக உலவ விடும் பல கதைளை வண்ணதாசன் எழுதுகிறார். பிரபஞ்சனின் வேட்டி இன்னும் மனதில் இருக்கிறது..இப்படி புதியவர் கூட ஒரு சிலர் எழுதுகின்றனர்..

ஜெயமோகன் எழுத்தை கண்டு பிரமிக்கிறேன். விஷ்ணுபுரம் பிரமாண்டம். ஆனால் சாதாரண வாசகன் படிக்க முடியாது. அதே சமயம் சு.வெங்கடேசனின் வேள்பாரியை தன் ஏழாவது படிக்கும்
மகள் படித்து முடித்து விட்டதாக தம்பி கவிஞர் இரா.பூபாலன் அலைபேசியில் சொன்னார்... ஜெயமோகனின் வலைப் பக்க கதைகளை தொடர்ந்து படித்தேன்.. வியந்தேன்... ஆனால் ஒன்று கூட மனதை தொடவில்லை.

....அவர் தொடர்ந்து பரபரப்பாக இருப்பது அந்த *டீக்கடை பெஞ்ச்* வலைப் பககம்தான் காரணம்

அவர் கடந்த மே 29 ல் தனது வலைப் பக்கத்தில் ஒரு ஜோடிக்கப்பட்ட கடிதத்தை வெளியிட்டுள்ளார். தலைப்பு *ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்* இதை எழுதியவர் பெயரையே குறிப்பிட விரும்பாத ஒரு முன்னாள் இடதுசாரியாம்.. அதை பெரிய எழுத்தாளர் வெளியிடுவதே அறமற்ற செயல்...... அதில் இடதுசாரிகளை நான்கு வகையாக பிரித்து அவர்களின் குணாதிசயங்களை பட்டியல் போடுகிறார் அந்த முன்னாள் இடதுசாரி. அதுவும் கூட சரி... அவரது பார்வையில் அவர் எழுதுகிறார் அதாவது அந்த *முன்னாள் இடதுசாரி* எழுதுகிறார்.. நான்காவது வகை இடதுசாரிகளை எழுதும் போதுதான் அந்த *முன்னாள் இடதுசாரிக்கு* என்னமோ ஆகி விடுகிறது....சம்பந்தமே இல்லாமல் இந்தி எதிர்ப்பு போராளியும், மனஓசை என்னும் தீவிர இதழ் ஆசிரியர் குழுவின் முக்கியமானவரும், களப்போராளியுமான எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் அவர்களை வம்புக்கு இழுக்கிறார்.

*பா.செயப்பிரகாசம் போல ஜாதி வெறி பிடித்த அரசாங்க உயர் பதவியில் இருக்கும் இவரெல்லாம் இடதுசாரி தலைவராம்.. அரசாங்க உயர் பதவியில் இருந்து கொண்டு சூரியதீபன் என்னும் பெயரில் எழுதி வரும் பித்தலாட்டத்தை உளவுத்துறை இன்னுமா கண்டு கொள்ளவில்லை*
.....கண்டனத்துக்கு உரிய இந்த பகுதி இப்போது சர்ச்சை ஆகி விட்டது..அவருக்கு எதிராக நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் இணைந்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
....ஆதாரமற்ற இந்த குற்றச்சாட்டு வழக்குக்கு உரியது என்பதை அந்த *முன்னாள்* இடதுசாரிக்கு தெரியாதா? அதை வெளியிட்ட ஜெயமோகனுக்கு தெரியாதா?

திரு.பா.ஜெயப்பிரகாசம் அவர்களை எனக்கு தெரியாது. சில கதைகளை படித்துள்ளேன்.. ஆனால் இவர் பெயர் ஒன்பதாவது படிக்கும் போதே அறிமுகம்... எப்படி?

1965ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அனைவரும் அறிவோம்..நான் அப்போது ஒன்பதாவது வகுப்பு மாணவன்.. நானும் தீவிரமாக அப்போது போராடி சிறை சென்றவன். (மாணவர்களை கூட சிறை வைத்தனர் அப்போது) அந்த மாணவர்கள் போராட்டத்தில் அதிகம் அடிபட்ட பெயர் காளிமுத்து, நா.காமராசன்.
அடுத்து ஜெபி...

மதுரை தியாகராயர் கல்லூரிதான் மதுரையின் புயல் கொண்ட மையம்
அங்கு ஆங்கில இலக்கியம் படித்த லோகநாதன் (கா.காளிமுத்துவின் நண்பர்) என்ற எங்கள் ஊர் சீனியர்தான் எங்கள் ஊரில் போராட்டத்தை வழி நடத்தினார். காவலரின் துப்பாக்கியை பிடுங்கிப் போய் எங்கள் ஊர் தெப்பக்குளத்தில் வீசிய அளவு துணிவானவர்... அவரும் தியாகராய கல்லூரி மாணவரே.. (அவர் பேராசிரியராகி இப்போது உயிரோடு இல்லை).... அவர்
ஒவ்வொரு போராட்ட வழிகாட்டுதலையும் யாரிடம் பெற்று எங்களை வழி நடத்தினார் என்றால் ஜெபியிடம்தான்...
"இன்று ஜெபியிடமிருந்து என்ன தகவல்....என்ன தகவல. என்று கேட்டுக் கொண்டே இருப்போம்.. அந்த ஜெபிதான் போராடிய மாணவர் சங்கத் தலைவர்.... அவரும் காளிமுத்து, காமராசனும் அதே தியாகராய கல்லூரி மாணவர்களே.
....அப்படி இளமைப் போராளி ஜெபி

அவரது *மனஓசை*யை முன்பு பயந்து கொண்டே எப்போதாவது படிப்பேன்... காரணம் அதன் தீவிர இடதுசாரித்தன்மை

இப்படி எழுத்தை இரண்டாம் பட்சமாக்கி, களப் போராளியான ஜெபியை களங்கப் படுத்திய கடிதத்தை வெளியிட்ட ஜெயமோகனை வன்மையாக கண்டிக்கிறேன்.Ovia Rajamoni (முக நூல் - 7 ஜூன் 2020)
1979 அல்லது 1980 என நினைக்கிறேன். எல் எல் ஏ கட்டிடத்தில் சென்னை மாணவர்கள் கலந்து கொண்ட ஒரு கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட போது தோழர் சூரியதீபன் அவர்களை முதன்முறையாக சந்தித்தேன். நான் பேசியதைப் பாராட்டி விட்டு கவிதை போன்ற பிற படைப்பாக்கங்களில் நீங்கள் ஈடுபட வேண்டும் என்று இன்னொரு தளத்திற்கு என்னை நகர்த்தும் அளவிற்கு உற்சாகமளித்தார். நான் கவிதை எழுதியதில்லையே என்றேன். முயற்சி செய்யுங்கள் என்றார். என்னைப் போன்று பல மாணவர்களை அவர் ஊக்கப் படுத்தியதையும் கண்டேன். இன்றுவரை நான் கவிதை எழுதவில்லை. யார் கண்டது ஒருவேளை இனிமேல் எழுதுவேனோ என்னவோ? அந்த காலகட்டத்தில்தான் இலக்கியம் இலக்கியத்துக்காகவா மக்களுக்காகவா என்கின்ற விவாதங்களைப் பற்றியெல்லாம் நான் அறிந்து கொண்டேன். அதற்கான ஒரு துவக்கப் புள்ளியை ஏற்படுத்தியவர் தோழர் சூரியதீபன் என்று சொல்லலாம். மனதார பாராட்டி நாம் வளர வேண்டும் என்று நினைத்தவர். நமது ஆளுமைக்குக் காரணமானவர்களுக்கு என்றாவது நாம் உரிய முறையில் நன்றி சொல்ல வேண்டுமல்லவா. அதை இப்போது சொல்ல வேண்டும் என்று எனக்கு தோன்றியது. நன்றி தோழர்.Yamuna Rajendran
(முக நூல் - 6 ஜூன் 2020)
பின்நவீனத்துவ அரசியல் பார்வை உருப்படியாக எந்தவொரு இயக்கத்தையும் உருவாக்கவில்லை. எப்போதுமே அலைகிற ஒன்று, குறிப்பிட்ட வகையில் நண்பர்களையும் எதிரிகளையும் இனங்காணாத ஒன்று எவ்வாறு ‘இயங்க’ முடியும்? பன்மைத்துவம் என்ற பெயரில் மனதுக்கு வந்தததை எழுதுவது அல்லாமல் அது ‘மாற்றம்’ என்பதை நோக்கி ஒரு தப்படியும் வைக்க முடியாது.

ஜெயமோகன் ‘ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்’ என்று பகிர்ந்திருப்பது இரு அடிப்படையான விஷயங்களைப் பேசுகிறது. ஓன்று இடதுசாரிகள் படிப்பறிவற்ற அறிவிலிகள். இரண்டாவது பா.செயப்பிரகாசம் ஒரு சாதிவெறியர். இரு கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புகளிலும் பா.செ.இல்லை. என்றாலும், ஏன் இரு கலை இலக்கிய அமைப்புகளும் கண்டனம் தெரிவிக்கின்றன? பா.செ இடதுசாரி-சமூகநீதி இலக்கியத்தின் முன்னத்தி ஏர். ஜெமோ பா.செவை முன்வைத்து முழு இடதுசாரி மரபின் மீதும் சேறடிக்கிறார். பா.செ நாவலாசிரியர். சிறுகதையாசிரியர். கவிஞர். இதனுடன் அரசியல் பார்வையும் கொண்டவர்.

கண்டன அறிக்கைகள் என்பதன் அடிப்படைகள் இவைதான்.

ஈழத்து எழுத்தாளர்கள் இந்தக் கண்டனத்தில் சேர்வதும் சேராததும் அவர்தம் உரிமை. ஏதோ பா.செவின் ஆளுமையே ஈழம் பற்றிய அவரது பார்வைதான் என்று கருதுவது குறும்பார்வை. கண்டனத்தை இழிவுபடுத்துவதன் வழி ஒருவர் இப்பிரச்சினையில் அறுதியில் எதனைத் தேர்கிறார்? ஜெயமோகனின் சத் சங்கத்தையா? ஜெயமோகன் ஈழத்தமிழர்களின் நண்பராக எப்போது இருந்தார்?

ஜெயமோகன் திருந்திவிடுவார் என எதிர்பார்ப்பது மோடி திருந்திவிடுவார் என எதிர்பார்ப்பது போல. இந்த அறிக்கைகளின் முக்கியத்துவம் என்ன? ‘மார்க்சியர்களின் நண்பன் போல நடிப்பதை நிறுத்து. நீ எங்களின் எதிரி. வெறுப்பாளன்’ என ஜெமோவுக்கும் அவரது அடிப்பொடிகளுக்கும் தீர்க்கமான ஒரு செய்தியைத்தான் இரு இடதுசாரி அமைப்புகளின் அறிக்கைகளும் சொல்கின்றன.

இடதுசாரிகளை இழிவுபடுத்துவதும் நிலைகுலைப்பதும், அறுதியில் அவர்களை அழிப்பதும் பிஜேபியின் அரசியல். ஜெயமோகன் அதனது கலாச்சாரக் குரல். இதனை வெளிப்படையாக சகலருக்கும் அதிகாரபூர்வமாக அறிவித்ததுதான் மூன்று கண்டன அறிக்கைகளதும் முக்கியத்துவம்.

********************************

(முக நூல் - 6 ஜூன் 2020)
ஐபிகேப் பற்றி அதில் பங்குபற்றிய ஒருவர் கடிதத்தைப் போட்டுவிட்டு, அதை அப்படியே டிபன்ட் பண்ணிவிட்டு, பாதிக்கப்பட்டவர்கள் பலர் எழுதிய பிற்பாடு, ஐயோ தனக்கு அங்கு நடந்தது தெரியாது என எழுதிய மகானுபாவன்தான ஜெயமோகன். ஐபிகேஎப் பினமினா என்பது இந்திய-தமிழக, ஈழ, இலங்கை அரசியலில் அதிகம் விவாதிக்கப்பட்ட, ஆவணப்படுதப்பட்ட ஒரு நிகழ்வு. நாவல், சினிமா எனவே பல புனைவுகளும் இருக்கின்றன. மாஸ்டருக்கு அது தெரியவில்லை. ஒரு பெயர் சொல்ல விரும்பாதவரின் கடிதம். அதை வெளியிடுவது ரிஸ்க் என்பது ஒரு எடிட்டோரியல் அடிப்படை. மாஸ்ட்டர் அவதூறைக் 'கவனிக்காமல்' விட்டுவிட்டாராம். இவரது மற்ற டிபன்சுகளை விடுங்கள். இவரது ‘வாசிப்பு’ இலட்சணம் இதுதான் என்றால், இவர் எழுதுகிற வரலாறு, தரவுகளின் நிலை என்ன என யோசித்துப் பாருங்கள். இதில், தான் கலை இலக்கிய, மானுடவியல், சமூகவியல் மாஸ்ட்டர் எனப் பீத்தல் வேறு...

*******************************

(முக நூல் - 5 ஜூன் 2020)
ஜெயமோகன் இந்துத்துவ ஹிடன் அஜன்டாவைக் கொண்டிருக்கிற ஒரு ஆர்எஸ்எஸ்காரர் என்பதையும், மார்க்சியச் சிந்தனையின் மீது வெறுப்பும் காழ்ப்பும் கொண்ட ஒரு வலதுசாரி இலக்கியவாதி எனவும் தொடர்ந்து இரு தசாப்தங்களாக எழுதி வந்திருக்கிறேன்.

ரஸ்யப் புரட்சியும் இந்தியக் கம்யூனிஸ்ட் தொழிற்சங்க இயக்கமும் குறித்த அவதூறுகளும் வரலாற்றுப் பிழைகளும் கொண்ட ஜெயமோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலை மார்க்சிய மரபு குறித்த வலதுசாரி வாசிப்பு என நான் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறேன். கம்யூனிச இயக்கத்தில் தோழர்கள் நா. முத்துமோகன், சு.வெங்கடேசன் போன்றவர்கள் இதையொத்த பார்வையுடன் விமர்சனங்களும் எழுதியிருக்கிறார்கள். துரதிருஷ்ட்டவசமாக கோவை ஞானி, நாவலாசிரியர் பொன்னீலன் போன்றவர்கள் ஜெயமோகனுக்கு சிவப்புத் தீர்த்தம் தெளித்து புனிதபீடம் தந்திருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் பொதுவாக கம்யூனிஸ்ட்டுகள், குறிப்பாக தோழர்.பா.செயப்பிரகாசத்தை முன்வைத்த ஜெயமோகன் தள அவதூற்றுக்கு எதிராக இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் இரு கலை இலக்கிய அமைப்புகளான தமுஎகசவும், தகஇபெமமும் அதிகாரபூர்வமாகக் கண்டன அறிக்கைகள் வெளியிட்டிருக்கின்றன.

கலை இலக்கிய விமர்சன-விவாதங்களில் இந்த அறிக்கைகள் தமிழகச் சூழலில் மிக முக்கியமான நகர்வு. எதிரிகளை இனம் காண்பதும் நண்பர்களை அரவணைப்பதும் எனும் நிலைபாடு எமது எதிர்கால நோக்கை இன்னும் சமரசமற்று வழிநடத்தும். இது ஆசீர்வதிக்கப்பட்ட நல்ல நாள்..


Somee Tharan (முக நூல் - 6 ஜூன் 2020)
மக்கள் பிரச்சனைகளுக்கும் சமூகநீதிக்கும் இனமானத்திற்கும் எப்போதும் ஒங்கி குரல் எழுப்பும் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் அய்யா அவர்களுக்கெதிராக, காழ்ப்பை வெளிப்படுத்திய ஓய்வின்றி எழுதிக் குவிக்கும் பரபரப்பு எழுத்தாளர் செயமோகன் அவர்களுக்கு கண்டனம். “செமோ”நல்ல எழுத்தாளர் ஆனால் காலத்துக்குக் காலம் இப்படிக் காழ்ப்பை உமிழ்ந்து ஏதாவது பரப்பைக் கிளப்பிக் கொண்டிருப்பார் கண்டுக்காதீங்க என்று நண்பர் சிலர் சொல்வர். வித்தை தெரிந்தவன் எல்லாம் மக்களைக் காக்கும் வீரர்கள் அல்ல. வித்தை தெரிந்திருக்கிறது அவ்வளவுதான்.


பேரா.மானசீகன், நிறுவனர் & பொதுச்செயலாளர், அன்றில் இலக்கியச் சுற்றம் (முக நூல் - 6 ஜூன் 2020)
நான் ஜெயமோகனின் எழுத்துக்கு மட்டுமே ரசிகன்.. அவருடைய அரசியல் எனக்கு உவப்பில்லாதது..

இடதுசாரிகளோடு முரண்படுவதற்கான உரிமை அவருக்குண்டு.. ஆனால் விமர்சனங்களை நேரடியாக முன்வைப்பதுதான் சரியானது.. அவர் அப்படி எழுதவும் செய்திருக்கிறார்..

ஆனால் அவ்வப்போது இதுமாதிரி விஷமத்தனம் வாய்ந்த தனிமனிதத் தாக்குதல்களையும் நிகழ்த்தி விடுகிறார்.. அதை எப்போதும் நான் ரசிப்பதில்லை..

பெயர் குறிப்பிடாத ஒரு வாசகரின் கடிதத்தை தன் தளத்தில் போட்டு ஒரு மூத்த எழுத்தாளரை சாதி ரீதியாக முத்திரை குத்த நினைப்பது பல நூறுபக்கங்களில் இலக்கிய விமர்சனம் செய்யும் இலக்கியவாதிக்கு அழகன்று..

நாடெங்கும் வலதுசாரிகள் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்று அதிகாரத்தை தம் வசப்படுத்தியிருக்கும் தருணத்தில் அவர் தொடர்ந்து இடதுசாரிகளைச் சீண்டுவதும், திராவிட இயக்கத்தை அவதூறு செய்வதும் சரியான அணுகுமுறை அன்று..

அவர் தன் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஒரு எழுத்தாளராகக் கூறாமல் அவருடைய எளிய வாசகனாகவே வலியுறுத்த விரும்புகிறேன்.

இந்தப் பிரச்சினையில் திரு.செயப்பிரகாசம் அவர்களின் பக்கமே நின்று எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எதிரான என் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்..

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) வாழ்க்கை வரலாறு

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை