பங்குப்பெற்ற நிகழ்வுகள் 2021 - இந்தியா

கி.ரா பிறந்த நாள் மற்றும் கண்மணி குணசேகரனுக்கு விருது வழங்கு விழா

புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்து வரும் எழுத்தாளர் கி.ரா.வின் 99-ஆவது பிறந்த நாள் விழா "கி.ரா நூற்றாண்டை நோக்கி" என்ற பெயரில், அவரது வீட்டில் 15 செப்டெம்பர் 2021 புதன்கிழமை எளிமையாகக் கொண்டாடப்பட்டது. மாலையில் கி.ரா விருது வழங்கும் நிகழ்ச்சி காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. எழுத்தாளர் கி.ரா பெயரில் கோவை விஜயா வாசகர் வட்டம் சார்பில், இந்த விருது வழங்கப்பட்டது. விருதுக்கான கொடையை ஈரோடு சக்தி மசாலா குழுமம் வழங்கியது.

இந்த விருதுக்கு தேர்வான எழுத்தாளர் கண்மணி குணசேகரனுக்கு விருதையும், ரூ.1  லட்சத்துக்கான காசோலையையும் வழங்கி கி.ரா பாராட்டினார். பேராசிரியர் ரகு, அட்சரம் பதிப்பக பதிப்பாளர் என்.ஏ.எஸ்.சிவக்குமார், கி.ரா.வின் மகன்கள் ரா.திவாகர், ரா.பிரபா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

விழா இணைய வழியில் நேரடியாக ஒளிபரப்பானது. விஜயா பதிப்பக நிறுவனர் மு.வேலாயுதம் வரவேற்றார். எழுத்தாளர் கி.ராஜநாராயணன், ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன், சக்தி மசாலா நிறுவனத்தின் பி.சி.துரைசாமி, சாந்தி துரைசாமி, எழுத்தாளர்கள் பா.செயப்பிரகாசம், நாஞ்சில் நாடன், க.பஞ்சாங்கம், நடிகர் சிவகுமார், வழக்குரைஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நீதியரசர் ஆர்.மகாதேவன் சிறப்புரையாற்றினார். கண்மணி குணசேகரன் ஏற்புரை வழங்கினார். பேராசிரியர் கந்தசுப்பிரமணியன் ஒருங்கிணைத்தார்.


மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நாள் பேரணி, சென்னை, சனவரி 25, 2021

தங்கச்சாலையில் தொடங்கி நடராசன் தாளமுத்து நினைவுத் தூண் நிறுவப்பட்ட மூலக்கொத்தளம் ஈகியர் நினைவிடத்தில் நிறைவுற்றது. வீர வணக்க நாளில் புலவர் ரத்தினவேல், வாலாசா வல்லவன், தோழர் பொழிலன் , பா.செயப்பிரகாசம், கவிஞர் பூங்குன்றன், காஞ்சி அமுதன், தமிழர் தேசிய இயக்கம் அருண பாரதி, வெற்றித்தமிழன், பழ.நல் ஆறுமுகம், வழக்குரைஞர் புகழேந்தி, அ.பத்மநாபன் இன்னும் பலர் நினைவேந்தலில் பங்கேற்றனர். 

நிகழ்ச்சி காணொளியை இங்கு காணலாம்.

நிகழ்ச்சி காணொளியை இங்கு காணலாம்.கி.ரா.வின் படைப்புலகம் - எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவு தேசியக் கருத்தரங்கம்
நாள்: 26.05.2021 நேரம்: மாலை 5.00 மணி

நிகழ்ச்சி நடத்தியோர்: வேளாளர் மகளிர் கல்லூரி தமிழ்த் துறை & சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் மற்றும் இந்தியத் தமிழ் ஆய்விதழ்

தலைப்பு: எழுத்தில் மட்டுமல்ல முன்னத்தி ஏர்

சிறப்புரையாளர்: பா.செயப்பிரகாசம், எழுத்தாளர்

நிகழ்ச்சி காணொளியை இங்கு காணலாம்.நிகழ்ச்சி காணொளியை இங்கு காணலாம்.


விருட்சம் - குவிகம் நடத்தும் முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாரயணன் நினைவு  கூட்டம். 21.05.2021 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி.


கீழ்க்கண்ட படைப்பாளிகள் அவர் குறித்துப் பேச உள்ளார்கள்.

உயர் திரு 

 1. பா.செயப்பிரகாசம்
 2. வண்ணதாசன்
 3. சிட்டி வேணுகோபாலன்
 4. பாரதி மணி
 5. இந்திரன்
 6. பஞ்சாங்கம்
 7. இளவேனில்
 8. கீரா பிரபி
 9. அம்சா
 10. அம்ஷன்குமார்
 11. தமிழ்ச்செல்வன்
 12. சமயவேல்
 13. நாறும்பூநாதன்
 14. டாக்டர் பாஸ்கரன்
 15. எஸ்.வி வேணுகோபாலன்
நிகழ்ச்சி காணொளியை இங்கு காணலாம்.நிகழ்ச்சி காணொளியை இங்கு காணலாம்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) வாழ்க்கை வரலாறு

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை