கி.ரா - தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கடிதம்விடுதல்:
பா.செயப்பிரகாசம், எழுத்தாளர்,
கோடம்பாக்கம், சென்னை - 600 024


பெறுதல்:
மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர்,
தலைமைச் செயலகம்,
சென்னை - 600 009


அன்புக்கும் மாண்புக்கும் உரிய முதலமைச்சர் அவர்களுக்கு,

வணக்கம்.

கி.ராஜநாராயணன் என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் இலக்கிய உலகம் இதுவதை கண்டிராத ஓர் அபூர்வம். இந்த நதிமூலம் 1923-இல் உற்பத்தியாகி தீராநதியாய் இறுதிவரை வாசிப்பும் எழுத்துமாய் தமிழ், தமிழ்ச்சமூகம் எனப் பாய்ந்து கொண்டிருந்தது. 2021 செப்டம்பர் 16, கி.ரா என்ற தீராநதியின் 99–ஆவது பிறந்த நாள்!

கி.ரா.வின் மறைவுக்குப்பின், அவரது உடலை அரச மரியாதையுடன் அடக்கம் செய்து தமிழ் ஊழியம் செய்தீர்கள். இடைசெவலில் அவரது இல்லத்தை அரசு அருங்காட்சியமாக சீரமைத்துச் செப்பனிடவும் நூலகம் அமைக்கவும், கோவில்பட்டியில் அவருக்குச் சிலை நிறுவிடவும் அறிவித்துள்ளீர்கள். அறிவிப்பு மட்டுமல்ல, வார்த்தைகளை வாழச் செய்தல் முக்கியமானது. தாங்கள் இவ்வகைப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றித் தருவீர்கள் என்பதில் எம் போல எழுத்தாளர்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை.

மக்கள் தமிழின் முன்னோடி கி.ரா.வின் 99-வது பிறந்த நாளை அரசு விழாவாக, கோவில்பட்டியில் தாங்கள் நிகழ்த்த வேண்டுமெனவும், முழுநாள் அரங்கமாக அவரது பிறந்த நாள் நிகழ்வு அமைய வேண்டுமெனவும் நாங்கள் விரும்புகிறோம். கி.ரா.வின் 99–ஆம் பிறந்த நாள் செப்டம்பர் 16-ஐ, முழுநாள் அரசு விழாவாக எடுத்து தமிழ் ஊழியத்தை தொடர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்
பா.செயப்பிரகாசம்,
மற்றும் எழுத்தாளர்கள்

நாள்: 18-06-2021

நகல் மின்னஞ்சல் வழி:
1. வெ.இறையன்பு, இ.ஆ.ப,
தலைமைச் செயலர். சென்னை - 9
2. இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை - 9

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

Mother languages that reflect India’s soul

வாசிப்பு வாசல்

சிவன் கோவில் தெற்குத் தெரு: எழுத்தாளர்களின் கிழக்கு!

காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர் - நூல் மதிப்புரை