பங்குப்பெற்ற நிகழ்வுகள் 1994 - இந்தியா

31.01.1994 கேரள மாநிலம் வைக்கத்தில் தந்தை பெரியார் நினைவகம் திறப்பு விழா, சிலை திறப்பு விழா



தந்தை பெரியார் நினைவிடத்தின் திறப்பு விழாவும், சிலை திறப்பு விழாவும் தமிழ்நாட்டிலிருந்து வந்த திராவிடர் கழகத் தொண்டர்கள் முழங்கிய முழக்கங்களின் உணர்ச்சி போதையோடு நடந்தது. தமிழ்நாடு நிதியமைச்சர் இரா.நெடுஞ்செழியனே சிலையைத் திறந்து வைத்தார்.

எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்த சிலை அமைப்பை இப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதித்த 15 லட்சத்தை செலவாக்கியே பூர்த்தி செய்ததாக இரா.நெடுஞ்செழியன் கூறினார்.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி, தமிழ்நாடு செய்தி - விளம்பரத் துறை அமைச்சர் மு.தென்னவன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ஈ.வெ.கி.சுலோசனா சம்பத், ரமேஷ் சென்னிதாலா எம்.பி., கே.கே.பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ, நகராட்சித் தலைவர் அய்யேரி கருணாகரன் நாயர், முன்னாள் தலைவர் எஸ்.நரசிம்ம நாயக், வைக்கம் கார்த்திகேயன் நாயர், தமிழ்நாடு, செய்தி - மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குநர் பா.ஜெயப்பிரகாசம், துணை இயக்குநர் ஆர்.அண்ணாதுரை ஆகியோர் உரையாற்றினர்.

ஈ.வெ.ரா. சிலையைத் திறப்பதற்காக சத்தியாக்கிரகம் செய்த பாரதீய சாமுஹ்ய நீதிவேதியின் தலைவர் வைக்கம் கார்த்திகேயன், நாயர் நினைவு ஜோதியை நெடுஞ்செழியனிடம் கொடுத்தார்.

- ‘மலையாள மனோரமா’ நாளேடு - 1.2.1994.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - ஆல் இந்தியா ரேடியோ, புதுச்சேரி

அமுக்குப் பேய்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி