கண்ணாமூச்சி இலக்கிய இதழ் - ஐப்பசி 2022
Pa Jayaprakasam passed away: எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் காலமானார்
- ஹிந்துஸ்தான் டைம்ஸ், 23 அக்டோபர் 2022, 21:22 IST
தமிழின் முதுபெரும் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் உடல்நலக்குறைவு காரணமாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இன்று காலமானார்.
தமிழ் இலக்கியத் துறையில் சமூக அக்கறையோடு, மக்கள் நலன் சார்ந்து இயங்கக்கூடிய மிக மிக்கிய எழுத்தாளர்களில் பா.செயப்பிரகாசம் ஒருவர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் கிராமத்தில் 1941 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
மாணவப் பருவத்தில் 1965 -ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்குபெற்று, இந்தியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (DEFENSE OF INDIA RULES) கைதாகி பாளையங்கோட்டைச் சிறைக்கு சென்றவர். தமிழ் ஈழத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தவர். பேரறிவாளன் விடுதலைக்காக பல்வேறு இலக்கிய கூட்டங்களிலும் அவர் பேசியுள்ளார்.
ஒரு ஜெருசலேம், அம்பலக்காரர் வீடு, குற்றம், வேரில்லா உயிர்கள், பொய் மலரும், காடு, கரிசலின் இருள்கள், இரவுகள் உடையும், இரவுகள் உடையும், ஒரு கிராமத்து ராத்திரிகள், கந்தக பூமி, பனை நிழலில் வாழ்க்கை, கோபுரங்கள், அக்னி மூலை, மயான காண்டம் சுதந்திர நேரம், சாமியார் மடம், கொடை உள்பட ஏராளமான சிறுகதைத் தொகுப்புகளை பா. செயப்பிரகாசம் எழுதியுள்ளார்.
சூரிய தீபன் என்ற புனைப்பெயரில் பல்வேறு கதைகள், கவிதைகள், நாவல்கள் மற்றும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல் குறித்தும் பா. செயப்பிரகாசம் எழுதியுள்ளார். இவரது படைப்புகள் தமிழின் முன்னணி இதழ்களில் வெளிவந்துள்ளன. பள்ளிக்கூடம், மணல் என இரண்டு நாவல்களையும் அவர் எழுதியுள்ளார்.
1968 முதல் 1971 ஆம் ஆண்டு வரை மதுரையில் கல்லூரி விரிவுரையாளராகவும். 1971-ம் ஆண்டு முதல் 1999 வரை, தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் இணை இயக்குனராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக விளாத்திகுளத்தில் இன்று (அக்.23) அவர் காலமானார். விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள பா.செயப்பிரகாசம் இல்லத்தில் நாளை இரங்கல் கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் காலமானார்
மதுரை, அக்.23- முற்போக்கு எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் ஞாயிறன்று மாலை விளாத்திகுளத்தில் காலமானார். அவருக்கு அஞ்சலி கூட்டம் விளாத்திகுளம் அம்பாள் நகரில் மதியம் 12 மணியளவில் நடைபெறும். பின்னர் அவருடைய உடல் தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.செயப்பிரகாசம் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என ஏராளமான படைப்புகளை தந்துள்ளார். சிறுகதைத்துறையில் இவரது பங்களிப்பு முக்கியமானது. சூரிய தீபன் என்ற புனை பெயரிலும் ஏராளமான படைப்புகளை எழுதியுள்ளார். மன ஓசை ஏட்டின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார். இந்தி மொழி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் மாணவப் போராளியாக பங்கேற்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். அவருடைய மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் விடுத் துள்ள இரங்கல் செய்தியில், கரிசல் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளில் பா. செயப்பிரகாசம் ஒருவர். எளிய மக்களின் வாழ்வியல் போராட்டத்தையே அவர் படைப்புகளாக்கினார். எழுத்தாளராக மட்டுமின்றி, களப் போராளியாக வாழ்ந்தவர் பா.செயப்பிரகாசம் என குறிப்பிட்டுள்ளனர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமுஎகச ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மறைந்தார் படைப்பாளி சூரியதீபன் (பா.செயப்பிரகாசம்)
மிகச்சிறந்த படைப்பிலக்கிய ஆளுமையும், மார்க்சிய லெனினியரும், தமிழ்த் தேசிய உணர்வாளருமானபா. செயப்பிரகாசம் அவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23.10.2022) மாலை தூத்துக்குடி மாவட்டத் தில் அமைந்துள்ள விளாத்திக்குளத்தில் மாரடைப்பால் காலமானார்.
விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்காவும் இடையிலான சமாதான கால கட்டத்தில் 2002 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக்கழகம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடத்திய மானுடத்தின் தமிழ்க்கூடலில் பங்கேற்றார். இந்நிகழ்வை விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை அவர்கள் தலைமை தாங்கியிருந்தார்.
மாநாட்டிற்கு பலருடைய வருகையும் அவர்களுக்கு முக்கியமாகப் பட்டது. சிங்களப் பகுதியில் ஈழத் தமிழர்களின் போராட்டம் பற்றிய நியாயமான உணர்வு பங்களிப்பு ஏற்பட வேண்டுமென்பதற்காக, இலங்கையிலிருந்து செய்தியாளர்கள், அறிஞர்கள், இலக்கிய வாதிகள் எனப் பலரையும் அழைத்திருந்தனர். தமிழகத்தின் ஐவர் அழைக்கப்பட்டனர்.
இந்த ஒன்றுகூடல் நிகழ்வில் பங்கேற்க வந்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம், திரைப்பட இயக்குநர் புகழேந்தி, ஓவியர் மருது, கவிஞர் இன்குலாப் ஆகியோரும் வந்திருந்தனர் என்பது நினைவூட்டத்தக்கது.
விடுதலைப் புலிகளின் அழைப்பில் வன்னிக்குச் சென்று திரும்பினார். தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரனை சந்தித்து உரையாடினார் பா.செயப்பிரகாசம். அவருக்கு சூரியத்தீபன் என்ற பெயரை சூட்டினார் தமிழீழத் தேசியத் தலைவர்கள் அவர்கள்.
சந்திப்பு தொடர்பில் பின் அவர் குறிப்பிடுகையில்:
போராளிகளோ, மக்களோ ஆயுதச் சுவாசம் செய்யவில்லை. அமைதி வழியில் தீர்வு காணவே விரும்புகிறார்கள். எதிரி அமைதி வழியில் நம்பிக்கை இல்லாதவன்.
"எமது மக்களின் தேசியப் பரிசீலனைக்குச் சமாதான வழியில் தீர்வு காண நாம் முழு மனதுடனும், நேர்மையுடனும் செயற்பட்டபோதும், பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன..... புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தி தமிழர் தேசத்தையும் அனைத்துலக சமூகத்தையும் ஏமாற்றுவதற்கே சிங்கள அரசு இப்பேச்சுவார்த்தைகளை பயன்படுத்தியது. பேச்சு என்ற போர்வையில் சிங்கள அரசு தமிழர் தேசம் மீது ஒரு பெரும் படையெடுப்பினைச் செய்வதற்கான ஆயத்தங்களைச் செய்தது. போர் ஓய்வையும் சமாதானச் சூழலையும் பயன்படுத்தி, தனது நலிந்துபோன பொருளாதாரத்தை மீளக்கட்டி தனது சிதைந்துபோன இராணுவ பலத்தை கட்டியெழுப்பியது" - என்று தெளிவான சித்திரம் தருகிறார் பிரபாகரன்.
பிரபாகரனுடனான ஒரு நேர்ப்பேச்சில் "இப்போது நார்வேயின் ஒத்துழைப்பால் அமைதி ஒப்பந்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீங்கள் நார்வேயை நம்புகிறீர்களா?" என்று கேட்டோம். உலகப்பேரரசு ஆசைகொண்ட அமெரிக்காவின் செயல்பாடுகளை விளக்கியபின், பிரபாகரன் சொன்னார். "நாங்கள் நம்பவில்லை. இஸ்ரேல் அமெரிக்காவின் கொடூர முகம். நார்வே – அமெரிக்காவின் மென்மையான முகம்".
ஒவ்வொரு நாட்டின் அரசியலும், எதற்காக எவ்வாறு நடைபெறுகிறது என்ற தெளிந்த உண்மை அப்போது எங்களுக்குத் தரிசனமானது.
"அனைத்துலகத் துணையோடு நடந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஒரு தலைபட்சமாக இலங்கை கிழித்தெறிந்தபோது, சமாதானம் பேசிய உலக நாடுகள் ஒப்புக்குத்தானும் இதனை கண்டிக்கவில்லை. கவலைக்கூட கொள்ளவில்லை: மாறாக சில உலக நாடுகள் அழிவாயுதங்களை அள்ளி கொடுத்து இராணுவப் பயிற்சிகளையும் இராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன" என்று கூறுகையில் அனைத்துலக நாடுகளின் கபட வேடங்களை கலைக்கிறார் பிரகாகரன் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
கல்வித் தகுதி: முதுகலை (தமிழ்), மதுரைத் தியாகராசர் கல்லூரி.
மாணவப் பருவத்தில் 1965 -ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர். அதனால் இந்தியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (DEFENSE OF INDIA RULES) கைதாகி பாளையங்கோட்டைச் சிறையில் மூன்று மாதங்கள் சிறையிருந்த பத்து மாணவர் தலைவர்களில் ஒருவர்.
பணி அனுபவம்: 1968 முதல் 1971 வரை மதுரையில் கல்லூரி விரிவுரையாளர். 1971-ம் ஆண்டு முதல்- 1999 வரை, தமிழ்நாடு அரசின் செய்தி-மக்கள் தொடர்புத் துறைப் பணி. இணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு.
தாமரை, கணையாழி, தினமணி, புதிய பார்வை, தீராநதி, கதைசொல்லி, ஆனந்த விகடன், காலச்சுவடு, அம்ருதா, உயிர்மை, நந்தன், சதங்கை, இந்தியா டுடே, தமிழ் நேயம், மனஓசை போன்ற இதழ்களில் இவரது படைப்புக்கள் வெளிவந்துள்ளன. கவிதை, கதை, கட்டுரை, உருவகக் கதைகள் எனப் பல அடங்கும்.
கீற்று, பொங்கு தமிழ் போன்ற இணைய இதழ்களில் படைப்புக்கள் தொடர்ந்து வெளிப்படுகின்றன.
தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி - என்னும் அமைப்பின் செயலாளராக இருந்தார். 2008-ல் ஈழத்தின் மீதான யுத்தம் உச்சத்திலிருந்த வேளையில் அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு (ஈழம்) எழுதி வெளிவந்த “
இந்தியாவைத் தொடர்ந்து தோற்கடிக்கும் இலங்கையின் இராசதந்திரம்” என்னும் சிறு வெளியீடு பத்தாயிரம் படிகள், தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி சார்பில் இவரது முயற்சியில் மறுபதிப்பு செய்து, இலவசமாக தமிழக முழுவதும் விநியோகம் செய்யப் பட்டது.
மு. திருநாவுக்கரசு எழுதி 1985-ல் வெளியான “தமிழீழ விடுதலைப் போராட்டமும் இந்தியாவும்” என்னும் நூலும் தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி சார்பில் மறுபதிப்புச் செய்து, அனவருக்கும் சென்று சேரும் நோக்கில் ரூ.10/= என குறைவு விலையில் அச்சிட்டு விநியோகிக்கப்பட்டது. இந்நூலின் மறுபதிப்பில் உள்ள முன்னுரை இவர் எழுதியது.
தமிழீழ அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் 2007-ல் இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சில் கொல்லப்பட்டதற்கு கண்டணம் தெரிவித்து சென்னையில் நடைபெற்ற பேரணியயில் கலந்து கொண்டதால் கைதாகி, பழ.நெடுமாறன், வை.கோ, பெ.மணியரசன், தியாகு ஆகியோருடன் சென்னை ’புழல்’ சிறையிலிருந்தவர்.
2002 ஈழத்தில் ’அமைதி ஒப்பந்த காலம்’. 2002 அக்டோபரில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் விடுதலைப் புலிகளின் முன்னெடுப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ”மானுடத்தின் தமிழ்க்கூடல் மாநாட்டில்” பங்கேற்றார். கவிஞர் இன்குலாப், ஓவியர் மருது, திரை இயக்குநர் புகழேந்தி, விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் - என ’சரிவிகித உணவுக் கலவை போல்’ ஐவர் பங்கேற்ற அந்நிகழ்வில் ஒவ்வொருநாள் நிறைவிலும் ஒருவர் உரையாற்றினர். மூன்றாம் நாள் நிகழ்வில் இவருடைய உரை நிகழ்ந்தது. ’மானுடத்தின் தமிழ்க்கூடல்‘ மாநாட்டின் தொடர்ச்சியாய் ஈழத்தில் பத்து நாட்கள் மேற்கொண்ட பயண அனுபவங்களின் தொகுப்பாக ”ஈழக் கதவுகள்” என்னும் நூல் வெளியானது.
``எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்தின் வெளிவராத படைப்புகளை வெளியிடவேண்டியது நம் கடமை!"- ச.தமிழ்ச்செல்வன்
சூரிய தீபன் என்ற புனைப் பெயரில் பல்வேறு கதைகள், கவிதைகள், அரசியல், நாவல்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் உடல்நலக் குறைவு காரணமாக தனது சொந்த ஊரான விளாத்திகுளத்தில் (23.10.2022) ஞாயிற்றுக்கிழமை காலமானார். எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் எழுதியிருக்கிறார். எழுத்து வட்டத்திற்குள் மட்டுமே தன்னை சுருக்கிக் கொள்ளாமல், போராட்டக் களத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். திராவிட மற்றும் இடதுசாரி சிந்தனையாளர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். எழுத்தாளர், பேச்சாளர், பேராசிரியர் உள்ளிட்ட பன்முகத் திறமை கொண்டவர். தமிழ் இலக்கிய உலகில் மிகப்பெரும் பங்காற்றியவர்.
1941-ல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ராமச்சந்திராபுரத்தில் பிறந்தார். இவர் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். 1968ம் ஆண்டு முதல் 1971 ம் ஆண்டு வரை மதுரையில் கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றினார். 1971ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இணை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
எழுத்தாளராக ஆற்றிய பணிகள்.!
திராவிட இயக்கச் சிந்தனை கொண்ட எழுத்தாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். காடு, இரவுகள் உடையும், புதியன, இரவு மழை உள்ளிட்ட ஏராளமான சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். பள்ளிக்கூடம், மணல் என இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார். சூரிய தீபன் என்ற புனைப் பெயரில் பல்வேறு கதைகள், கவிதைகள், அரசியல், நாவல்கள், கட்டுரைகள் ஆகியவற்றையும் எழுதினார்.
இவருடைய கதைகளில் கரிசல் மக்களின் வாழ்வியலையும் பண்பாட்டையும் எடுத்துரைத்தார். கரிசல் மண் சார்ந்த கதைகளை எழுதி உள்ளார். `மன ஓசை' என்ற கலை இலக்கிய மாத இதழின் பொறுப்பாசிரியராக பணியாற்றினார். தமிழ் படைப்பாளிகள் முன்னணி என்ற அமைப்பின் செயலாளராக பொறுப்பு வகித்தார். கல்லூரி காலங்களில் இருந்து பேச்சாளராக திகழ்ந்துள்ளார். அரசியல் மேடைகளிலும் கருத்தரங்குகளிலும் பல சொற்பொழிவுகள் நடத்தியுள்ளார். தன்னுடைய மரணம் வரை, பல சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதி வந்துள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளாக தனியாகவே வாழ்ந்தார். இவரின் மனைவி மணிமேகலை. இத்தம்பதிகளுக்கு தீபன் என்ற மகனும் சாரு நிலா என்ற மகளும் உள்ளனர். தீபன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். சாரு நிலா அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தனது மறைவுக்குப் பின் எவ்வித சடங்கு சம்பிரதாயங்களும் மேற்கொள்ளாமல் தன்னுடைய உடலை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்காக ஒப்படைக்க வேண்டும் என எழுதி வைத்துள்ளார்.
இன்று நண்பகல் 12 மணியளவில் விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள இவரது வீட்டில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டு அதன் பின்பு பா.செயப்பிரகாசத்தின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வசம் ஒப்படைக்கப்பட்டது.
இவரது மறைவு குறித்து பேசிய எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், ``எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்களது மறைவு, தமிழ் இலக்கிய உலகில் மிகப்பெரிய இழப்பு. சக எழுத்தாளர்களை மதிக்கக் கூடியவர், அவர்களுக்காக உழைக்கக் கூடியவர். இவரது படைப்புகளில் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியலை எடுத்துரைத்தார். முற்போக்கு சிந்தனை கொண்ட எழுத்தாளர். போராட்ட உணர்வு உள்ளவர். மார்க்சிய கொள்கையோடு எழுதக்கூடிய எழுத்தாளர். கரிசல் எழுத்தாளர்களின் மீது அதிக அன்பும் பாசமும் கொண்டவர்.
நான் ஆசிரியராக உள்ள `செம்மலர்' இதழுக்கு பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது புகழ் தமிழ் இலக்கிய உலகில் நிலைத்து நிற்கும். அனைவரிடமும் எளிமையாகவும் அன்பாகவும் பழகுவார். தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையில் பணியாற்றியபோதும், எந்தவித கர்வமும் இன்றி செயல்பட்டவர். கவிஞர் கிரா (கி.ராஜநாராயணன்) அவர்களுடன் நெருங்கிய பழக்கம் கொண்டவர். அவர் மீது கொண்ட பற்றால் ஒரு புத்தகத்தையும் எழுதி உள்ளார். இவருடைய படைப்புகள் பல இன்னும் வெளிவராமல் உள்ளது. அவற்றை விரைவில் வெளியிட உள்ளோம். 'உச்சி வெயில்' என்ற நாவலை எழுதி முடித்துள்ளார். அதை வெளியிட வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது." எனக் கூறினார்.
எழுத்தாளர் சூரிய தீபன் என்னும் பா.ஜெயப்பிரகாசம் காலமானார்
எழுத்தாளர் சூரிய தீபன் என்னும் பா.ஜெயப்பிரகாசம் (23.10.2022) காலமானார்.
1965 -களில் மதுரைக் கல்லூரியில் மாணவராய் பயிலும் போது இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் தன்னை இணைத்துக் கொண்டவர். முன்னாள் அமைச்சர் காளிமுத்து, நா.காமராசன், மு.மேத்தா போன்ற நண்பர்களோடு மொழி போராட்டத்தில் முன் நின்றவர்களில் ஒருவர்.
பின்னாளில் கலைஞர் அவர்களின் அரசு, மொழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வழங்கிய மக்கள் தொடர்பு அதிகாரியாக அரசுப் பணியில் இணைந்தவர்.
மார்க்சிய-லெனினிய இயக்கங்களோடு தொடர்பு கொண்டு தமிழ்நாடு அமைப்புக்குழு என்று அன்று செயல்பட்ட இ.பொ.க (மா.லெ) அமைப்போடு இணைந்து நின்றவர்.
1980- களில் மன ஓசை என்னும் தலைசிறந்த இதழ் தமிழ்நாட்டில் வெளி வந்ததில் முக்கிய பங்காற்றியவர். மனஓசையில் பல்வேறு ஆளுமைகளை இணைத்து புதிய, புதிய கருத்துகளை எண்பதுகளில் தமிழகத்தில் பதிவு செய்த வரலாறு கொண்டவர்.
பின்னாளில், தமிழ்நாடு மார்க்சிய லெனினிய கட்சியின் உறவிலிருந்து விலகி நின்றாலும் கள செயல்பாடுகளில் இயங்கி வந்தவர். தமிழீழத்திற்கு சென்று தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களோடு இலக்கியம் மற்றும் பல்வேறு செய்திகள் குறித்து பேசி வந்தவர்களில் இவரும் ஒருவர்.
மிக மென்மையாகப் பேசக்கூடிய இயல்பு கொண்டவர். கி.ராஜநாராயணனை அடியொற்றி கரிசல் காட்டின் வாழ்வை இலக்கியமாகப் பதிவு செய்வதில் முன் நின்றவர். தன்னுடைய இறுதிக் காலத்தில் சொந்த ஊரான விளாத்திகுளத்தில் வாழ்வை நிறைவு செய்துள்ளார்.
அன்புத் தோழர் ஜெயப்பிரகாசம் என்னும் சூரியதீபன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதாக தற்சார்பு விவசாயிகள் சங்க நிர்வாகி கி.வே.பொன்னையன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பா.செயப்பிரகாசம்
எழுத்தாளர், பத்திரிகையாளர், விரிவுரையாளர் எனப் பல களங்களில் இயங்கிய பா.செயப்பிரகாசம் (81) காலமானார். இவர், 1941ல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ராமச்சந்திரபுரத்தில் பிறந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்ற இவர், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறைசென்றார். கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றிய செயப்பிரகாசம், தமிழக அரசின் மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குநராகப் பணியாற்றினார். ஆனந்த விகடன், கணையாழி, தினமணி, காலச்சுவடு, அம்ருதா, உயிர்மை, நந்தன், சதங்கை, இந்தியா டுடே, தாமரை, புதிய பார்வை, தீராநதி போன்ற இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
இடதுசாரி இலக்கிய இதழான மன ஓசையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். இவரது ஒரு ஜெருசலேம், காடு, மூன்றாவது முகம் போன்ற சிறுகதைத் தொகுப்புகள் முக்கியமானவை. பள்ளிக்கூடம், மணல் என்பன இவரது நாவல்கள். .தெக்கத்தி ஆத்மாக்கள், வனத்தின் குரல், கிராமங்களின் கதை போன்ற கட்டுரைத் தொடர்கள் வாசக வரவேற்பைப் பெற்றன. சூரியதீபன் என்ற புனைபெயரிலும் இயங்கிவந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், 23 அக்டோபர் 2022 அன்று பா. செயப்பிரகாசம் காலமானார்.
எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் காலமானார்
எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் உடல்நலக் குறைவு காரணமாக தமது சொந்த ஊரான விளாத்திகுளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார்.
காடு, இரவுகள் உடையும், புதியன, இரவு மழை உள்பட ஏராளமான சிறுகதைத் தொகுப்புகளை பா. செயப்பிரகாசம் எழுதியுள்ளார். பள்ளிக்கூடம், மணல் என இரண்டு நாவல்களையும் அவர் எழுதியுள்ளார்.
தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பர துறையின் முன்னாள் இணை இயக்குனரும், சூரிய தீபன் என்ற புனைப் பெயரில் பல்வேறு கதைகள், கவிதைகள், நாவல்கள் மற்றும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல் குறித்து எழுதியவர் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம்.
மறைந்த பா செயப்பிரகாசம் 1965ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற மாணவர். அதன் காரணமாக இந்தியா பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் மூன்று மாதங்கள் சிறை வாசம் அனுபவித்துள்ளார்.
தமிழ் இலக்கியத்தில் சமூக அக்கறை கொண்ட, மக்கள் நலன் சார்ந்து இயங்கக்கூடிய மிக முக்கிய எழுத்தாளர்களில் பா. செயப்பிரகாசம் ஒருவர். இவர் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். 1965-இல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்குபெற்று சிறை சென்றவர்.
1968 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை மதுரையில் கல்லூரி விரிவுரையாளராகவும், 1971 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை இணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தினமணி, தாமரை, கணையாழி, புதிய பார்வை, தீராநதி, கதை சொல்லி, ஆனந்த விகடன், காலச்சுவடு, அம்ருதா, உயிர்மை, நந்தன், சதங்கை, இந்தியா டுடே, தமிழ் நேயம், மன ஓசை போன்ற இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. கவிதை,, கதை, கட்டுரை, உருவகக் கதைகள் என பல அடங்கும்.
மன ஓசை என்ற கலை இலக்கிய மாத இதழின் பொறுப்பாசிரியராகவும், தமிழ் படைப்பாளிகள் முன்னணி என்ற அமைப்பின் செயலாளராகவும் இருந்துள்ளார்.
ஆய்வு மாணவர்கள் சிலர் இவரது படைப்புகளில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். அதில் பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல் காட்டு மக்களின் வாழ்வியல் என்ற ஆய்வும், பா.செயப்பிரகாசம் கதைகளில் மண்ணும் மக்களும் என்கிற மற்றொரு ஆய்வும் குறிப்பிடத்தக்கது.
கல்லூரி நாட்களில் இருந்து இவர் சிறந்த பேச்சாளராக திகழ்ந்துள்ளார். பல இலக்கிய மேடைகளிலும் கருத்தரங்குகளிலும் அரசியல் அரங்குகளிலும் இவர் சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.
மறைந்த எழுத்தாளர் பா செயப்பிரகாசத்துக்கு மணிமேகலை என்ற மனைவியும் தீபன் என்ற மகனும் சாருநிலா என்ற மகளும் உள்ளனர். தீபன் ஆஸ்திரேலியாவிலும், சாரு நிலா அமெரிக்காவிலும் உள்ளனர்.
பா.செயப்பிரகாசம் தனது மறைவுக்குப் பிறகு எவ்வித சடங்கு சம்பிரதாயங்களும் மேற்கொள்ளாமல் தன்னுடைய உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்காக ஒப்படைக்க வேண்டும் என தான் வாழ்ந்த போது தனது உறவினர்களிடமும் சக நண்பர்களிடமும் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் நாளை 25 ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில் விளாத்திகுளம் அம்பாள் நகரில் அவரது வீட்டில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டு அதன் பின்பு பா.செயபிரகாசத்தின் உடல் மருத்துவக் கல்லூரி வசம் ஒப்படைக்கப்பட இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
எழுத்தாளா் பா. செயப்பிரகாசம் மறைவு: விளாத்திகுளத்தில் இரங்கல் கூட்டம்
மூத்த எழுத்தாளா் பா.செயப்பிரகாசம் மறைவை அடுத்து, விளாத்திகுளம் அம்பாள் நகரில் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி.மாா்க்கண்டேயன் தலைமையில் இரங்கல் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
எழுத்தாளா் பா.செயப்பிரகாசம், உடல் நலக் குறைவு காரணமாக விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள அவரது வீட்டில் கடந்த 23ஆம் தேதி காலமானாா்.
செவ்வாய்க்கிழமை நடந்த இரங்கல் கூட்டத்தில் பா. செயப்பிரகாசத்தின் மகன் சூரியதீபன், ஐ.ஏ.எஸ். அதிகாரி நந்தகோபால், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா் சங்க மாநில கௌரவ தலைவா் ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளா்கள் கோணங்கி, தாமிரபரணி மதியழகன், சங்கர்ராம், முருகேசபாண்டியன், பழனி ராகுலதாசன், ஸ்ரீதா் கணேசன், மருத்துவா் பி.வி. வெங்கட்ராமன், வழக்குரைஞா் பி.எஸ். அஜீதா, பேராசிரியா்கள் சம்பத்குமாா், முனியசாமி, ஆவணப்பட இயக்குநா் ஸ்ரீராம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவா் இரா.காமராசு, ஏ.ஐ.டி.யு.சி மாநில தலைவா் காசி விஸ்வநாதன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற பொதுச்செயலா் மருத்துவா் அறம், டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனா் மற்றும் பதிப்பாளா் மு.வேடியப்பன், மக்கள் சிவில் உரிமைக் கழக மாவட்ட செயலா் கோச்சடை, சிபிஐ (எம்.எல்) மாநில குழு உறுப்பினா் சிம்சன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவா் மீ.த.பாண்டியன், ஆடிட்டா் ஹரிராம் ஆகியோா் இரங்கல் தெரிவித்துப் பேசினா்.
அதைத் தொடா்ந்து பா.செயப்பிரகாசம் உடலுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி.மாா்க்கண்டேயன் தலைமையில் எழுத்தாளா்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினா்.
இந்நிகழ்வில் முன்னாள் எம்.எல்.ஏ.குமரகுருபர ராமநாதன், பல்வேறு கட்சிகளின் நிா்வாகிகள், இலங்கை, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழீழ ஆதரவாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னா், பிற்பகல் 2 மணி அளவில் அவரது உடல் தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது. உரிய சட்ட நடைமுறைகளுக்குப் பின் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வசம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
பிரபல எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் மரணம்!!
1941-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ராமச்சந்திராபுரம் கிராமத்தில் பிறந்த செயப்பிரகாசம், மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றார். 1968 முதல் 1971-ம் ஆண்டு வரை விரிவுரையாளராகப் பணியாற்றினார் இவர், 1971 முதல் 1999-ம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குநராகப் பணியாற்றி ஒய்வு பெற்றார்.
காடு, இரவுகள் உடையும், புதியன, இரவு மழை உள்பட ஏராளமான சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ள பா. செயப்பிரகாசம், பள்ளிக்கூடம், மணல் என இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார். மேலும் சூரிய தீபன் என்ற புனைப் பெயரில் பல்வேறு கதைகள், கவிதைகள், நாவல்கள் மற்றும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல் குறித்து எழுதியுள்ளார்.
1965-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்குபெற்று சிறைக்கு சென்ற இவர், கடந்த 23-ம் தேதி மாலை விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். மறைந்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்துக்கு மணிமேகலை என்ற மனைவியும் தீபன் என்ற மகனும் சாருநிலா என்ற மகளும் உள்ளனர். தீபன் ஆஸ்திரேலியாவிலும், சாரு நிலா அமெரிக்காவிலும் உள்ளனர்.
பா.செயப்பிரகாசம் தனது மறைவுக்குப் பிறகு எவ்வித சடங்கு சம்பிரதாயங்களும் மேற்கொள்ளாமல் தன்னுடைய உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்காக ஒப்படைக்க வேண்டும் என தான் வாழ்ந்த போது தனது உறவினர்களிடமும் சக நண்பர்களிடமும் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்று 25-ம் தேதி நண்பகல் 12 மணியளவில் விளாத்திகுளம் அம்பாள் நகரில் அவரது வீட்டில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டு அதன் பின்பு பா.செயபிரகாசத்தின் உடல் மருத்துவக் கல்லூரி வசம் ஒப்படைக்கப்பட இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
பிரபல தமிழ் எழுத்தாளர் விளாத்திகுளத்தில் மரணம்; தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு உடல் தானம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இராமச்சந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபல தமிழ் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம், இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், தீபன், சாரு நிலா என்ற மகன் மற்றும் மகள் உள்ளனர். பிரபல எழுத்தாளரும், பேச்சாளருமாக திகழ்ந்த பா. செயப்பிரகாசம், சூரிய தீபன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகள், கவிதைகள் போன்ற பல்வேறு சமூக அக்கறையுடனான படைப்புகளை எழுதியுள்ளார்.
அதுமட்டுமின்றி, இவர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பர துறையின் இணை இயக்குனராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கரிசல் மண் இலக்கியத்தில் சிறந்த முற்போக்கு எழுத்தாளராகவும், சொற்பொழிவாளராகவும் திகழ்ந்த இவர், விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் (23.10.2022) மாலையில் திடீர் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார்.
இந்நிலையில், இன்று (25.10.2022) செவ்வாய் கிழமை எழுத்தாளர்கள் சார்பில், இவருக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான எழுத்தாளர்கள் கலந்து கொண்டு, மறைந்த பிரபல கரிசல் இலக்கிய எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்துடனான நட்பு பற்றியும், அனுபவங்கள் பற்றியும் கூறி தங்களது இரங்கலை தெரிவித்தனர். இரங்கல் கூட்டத்தில் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன், தமிழ் எழுத்தாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தனது உடலை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்துள்ளார். அதன்படி, அவரது கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு எழுத்தாளரின் குடும்பத்தினரால் அவரது உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. அப்போது அவரது மகன் தீபன் உட்பட குடும்பத்தினர், சக எழுத்தாளர்கள் அனைவரும் கதறி அழுத காட்சிகள் காண்போரை கலங்கச் செய்தது. மறைந்த முற்போக்கு எழுத்தாளரின் உடலை கொண்டு செல்லும்போது, சக எழுத்தாளர்கள் பா.செயப்பிரகாசத்தின் உடலுக்கு வீரவணக்கம் செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் மறைந்தார்
எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் உடல்நலக் குறைவு காரணமாக தமது சொந்த ஊரான விளாத்திகுளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார்.
தமிழ் இலக்கியத்தில் சமூக அக்கறை கொண்ட, மக்கள் நலன் சார்ந்து இயங்கக்கூடிய மிக முக்கிய எழுத்தாளர்களில் பா. செயப்பிரகாசம் ஒருவர். இவர் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். 1965-இல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்குபெற்று சிறை சென்றவர்.
தமிழ் ஈழத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்த இவர், இதற்காகவும் கைதாகியிருக்கிறார்.
இவரது படைப்புகள் தமிழின் முன்னணி இதழ்களில் வெளிவந்துள்ளன. தமிழ்ச் சிறுகதைகளில் தவிர்க்க முடியாதவர் பா. செயப்பிரகாசம்
காடு, இரவுகள் உடையும், புதியன, இரவு மழை உள்பட ஏராளமான சிறுகதைத் தொகுப்புகளை பா. செயப்பிரகாசம் எழுதியுள்ளார். பள்ளிக்கூடம், மணல் என இரண்டு நாவல்களையும் அவர் எழுதியுள்ளார்.
எழுத்தாளர் பா. ஜெயப்பிரகாசம் காலமானார்!
எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான பா. ஜெயப்பிரகாசம் வயது முதிர்ச்சி மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக விளாத்திகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பர துறையின் முன்னாள் இணை இயக்குனரும், சூரிய தீபன் என்ற புனைப் பெயரில் பல்வேறு கதைகள், கவிதைகள், நாவல்கள் மற்றும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல் குறித்தும் எழுதியுள்ளார். இந்நிலையில், எழுத்தாளர் பா. ஜெயப்பிரகாசம் வயது முதிர்ச்சி மற்றும் உடல் நல குறைவு காரணமாக விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று (23ம் தேதி) மாலை காலமானார்.
மறைந்த பா. ஜெயப்பிரகாசம் தன்னுடைய மாணவப் பருவத்தில் 1965ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றார். அதன் காரணமாக இந்திய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் மூன்று மாதங்கள் சிறை வாசம் அனுபவித்துள்ளார்.
1968ஆம் ஆண்டு முதல் 1971ஆம் ஆண்டு வரை மதுரையில் கல்லூரி விரிவுரையாளராகவும், 1971ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை இணை இயக்குனராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் பா. ஜெயப்பிரகாசம். கல்லூரி நாட்களில் இருந்து இவர் சிறந்த பேச்சாளராக திகழ்ந்துள்ளார். பல இலக்கிய மேடைகளிலும் கருத்தரங்குகளிலும் அரசியல் அரங்குகளிலும் இவர் சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.
கவிதை, கதை, கட்டுரை, உருவகக் கதைகள் என இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. மன ஓசை என்ற கலை இலக்கிய மாத இதழின் பொறுப்பாசிரியராகவும், தமிழ் படைப்பாளிகள் முன்னணி என்ற அமைப்பின் செயலாளராகவும் இருந்துள்ளார்.
ஆய்வு மாணவர்கள் சிலர் இவரது படைப்புகளில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். அதில் பா.ஜெயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல் காட்டு மக்களின் வாழ்வியல் என்ற ஆய்வும், பா. ஜெயப்பிரகாசம் கதைகளில் மண்ணும் மக்களும் என்கிற மற்றொரு ஆய்வும் குறிப்பிடத்தக்கது.
மறைந்த எழுத்தாளர் பா. ஜெயப்பிரகாசம், தனது மறைவுக்குப் பிறகு எவ்வித சடங்கு சம்பிரதாயங்களும் மேற்கொள்ளாமல் தன்னுடைய உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்காக ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்படி நாளை (25ம் தேதி) நண்பகல் 12 மணியளவில் விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள அவரது வீட்டில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டு, அதன் பின்பு அவரது உடல் மருத்துவக் கல்லூரி வசம் ஒப்படைக்கப்பட இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
கரிசல் காட்டு இலக்கிய படைப்பாளி செயப்பிரகாசம் காலமானார்
புகழ் பெற்ற கரிசல் காட்டு இலக்கிய படைப்பாளி செயப்பிரகாசம் காலமானார்.
சென்னை: காய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் தொடங்கி, தமிழ்ச் சிறுகதைகளை படைத்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் (எ) சூரியதீபன் நேற்று (அக் 23) இயற்கை எய்தினார். இவர் தனது படைப்பு மற்றும் செயல்பாடுகளில் சமூக அக்கறை சார்ந்து வெளிப்படுவதில் கவனம் கொண்டவர்.
எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்கால கட்டத்தில், சமூகத்தின் மனசாட்சியாக இயங்கும் ஒரு கலைஞன். சமகாலப் படைப்புக் கலைஞனான இவர், சமூக விஞ்ஞானியாக தனக்குள்ளும், தன்னைச் சுற்றியும் நிகழ்கிறவைகளைக் காண வேண்டும் என்ற கருத்தில் ஆழம் உடையவர்.
கவித்துமான மொழியில் இவரது தொடக்க காலக் கதைகள் அமைந்தபோதும், பின்னர் மக்களின் மொழியில், மொழியும் கருத்தும் பிண்ணிப் பிணைந்தவாறு இவரது கதைகளில் வெளிப்பட்டன. இப்படிப்பட்ட செயப்பிரகாசம், தனது முதுகலை தமிழ் படிப்பை மதுரை தியாகராசர் கல்லூரியில் முடித்தார்.
1965ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவப் போராளியாய்ச் செயலாற்றினார். தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த 10 மாணவர்களில் இவரும் ஒருவர். 1968ஆம் ஆண்டு முதல் 1971ஆம் ஆண்டு வரை மதுரையில் கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றினார்.
பின்னர் 1971ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறைப் பணி மற்றும் இணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். தாமரை, கணையாழி, தினமணி, புதிய பார்வை, தீராநதி, கதைசொல்லி, ஆனந்த விகடன், காலச்சுவடு, அம்ருதா, உயிர்மை, நந்தன், சதங்கை, இந்தியா டுடே, தமிழ் நேயம், மனஓசை போன்ற இதழ்களில் இவரது படைப்புக்கள் வெளி வந்துள்ளன.
இதில் கவிதை, கதை, கட்டுரை மற்றும் உருவகக் கதைகள் எனப் பலவற்றை இவர் படைத்துள்ளார். இவரது படைப்புகள் கீற்று, பொங்கு தமிழ் போன்ற இணைய இதழ்களில் தொடர்ந்து வெளிப்படுகின்றன. ‘மனஓசை’ என்ற கலை இலக்கிய மாத இதழின் பொறுப்பாசிரியராகவும் இருந்தார்.
1981 முதல் 1991 வரை வெளியான மனஓசை இதழ், பத்து ஆண்டுகள் தமிழிலக்கிய உலகில் முன் மாதிரிப் பதிவுகளை உருவாக்கியது. இந்த இதழ் ஏற்கனவே இயங்குகிற சமூக நீரோட்டத்துடன் செல்லாமல் எதிர்க் கருத்தியலை வைத்து நடை போட்ட இதழ் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி என்னும் அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். 2008ல் ஈழத்தின் மீதான யுத்தம் உச்சத்திலிருந்த நேரத்தில், அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு (ஈழம்) எழுதி வெளிவந்த “
இந்தியாவைத் தொடர்ந்து தோற்கடிக்கும் இலங்கையின் இராசதந்திரம்” என்னும் சிறு வெளியீடு, பத்தாயிரம் படிகள், தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி சார்பில் இவரது முயற்சியில் மறுபதிப்பு செய்து, இலவசமாக தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.
2002ல் ஈழத்தில் ‘அமைதி ஒப்பந்த காலம்’, 2002 அக்டோபரில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் விடுதலைப் புலிகளின் முன்னெடுப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘மானுடத்தின் தமிழ்க்கூடல் மாநாட்டில்’ பங்கேற்றார். கவிஞர் இன்குலாப், ஓவியர் மருது, திரை இயக்குநர் புகழேந்தி, விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் ஆகிய ஐந்து பேரும் பங்கேற்ற அந்நிகழ்வில், ஒவ்வொரு நாள் நிறைவிலும் ஒருவர் உரையாற்றினர்.
மூன்றாம் நாள் நிகழ்வில் இவருடைய உரை நிகழ்ந்தது. ’மானுடத்தின் தமிழ்க்கூடல்‘ மாநாட்டின் தொடர்ச்சியாய் ஈழத்தில் பத்து நாட்கள் மேற்கொண்ட பயண அனுபவங்களின் தொகுப்பாக ”ஈழக் கதவுகள்” என்னும் நூல் வெளியானது. இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக விளாத்திக்குளத்தில் வசித்து வந்தார்.
இவருக்கு இதயக் கோளாறு ஏற்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று காலமானார். இவரது இறப்பிற்கு இலக்கிய ஆசிரியர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல தமிழ் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் மரணம்
விளாத்திகுளத்தில், பிரபல தமிழ் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் மரணம்: இரங்கல் கூட்டம் நடத்திய எழுத்தாளர்கள்: கடைசி ஆசையின்படி, மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம்!
விளாத்திகுளம் அருகே உள்ள இராமச்சந்திரபுரம் கிராமத்தை சேர்ந்த பா. செயப்பிரகாசம் என்ற பிரபல தமிழ் முற்போக்கு எழுத்தாளர் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத் துறையின் முன்னாள் இணை இயக்குனர் கடந்த 23. 10. 2022 ஞாயிற்றுக்கிழமை மாலை விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள அவரது இல்லத்தில் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில், இன்று (25. 10. 2022) எழுத்தாளர்கள் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான எழுத்தாளர்கள் கலந்து கொண்டு எழுத்தாளர் பா. செயபிரகாசத்தினுடனான நட்பு பற்றி தங்களது அனுபவங்களை பகிர்ந்து வீரவணக்கம் செலுத்தினர். மேலும் பல்வேறு சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் மூலமாக கரிசல் இலக்கிய உலகில் தனி இடம் பிடித்த இவர் தனது கடைசி ஆசையாக. அவரது உடலை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்துள்ளார். அதன்படி, எழுத்தாளரின் குடும்பத்தினர் சார்பில், அவரது உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இராமச்சந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபல தமிழ் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம், இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், தீபன், சாரு நிலா என்ற மகன் மற்றும் மகள் உள்ளனர். பிரபல எழுத்தாளரும், பேச்சாளருமாக திகழ்ந்த பா. செயப்பிரகாசம், சூரிய தீபன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகள், கவிதைகள் போன்ற பல்வேறு சமூக அக்கறையுடனான படைப்புகளை எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி, இவர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பர துறையின் இணை இயக்குனராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கரிசல் மண் இலக்கியத்தில் சிறந்த முற்போக்கு எழுத்தாளராகவும், சொற்பொழிவாளராகவும் திகழ்ந்த இவர், விளாத்திகுளம்: அம்பாள் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் (23. 10. 2022) மாலையில் திடீர் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். இந்நிலையில், இன்று (25. 10. 2022) செவ்வாய் கிழமை எழுத்தாளர்கள் சார்பில், இவருக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான எழுத்தாளர்கள் கலந்து கொண்டு, மறைந்த பிரபல கரிசல் இலக்கிய எழுத்தாளர் பா. செயப்பிரகாசத்துடனான நட்பு பற்றியும், அனுபவங்கள் பற்றியும் கூறி தங்களது இரங்கலை தெரிவித்தனர்.
மேலும், எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் தனது உடலை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்துள்ளார். அதன்படி, அவரது கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு எழுத்தாளரின் குடும்பத்தினரால் அவரது உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. அப்போது அவரது மகன் தீபன் உட்பட குடும்பத்தினர், சக எழுத்தாளர்கள் அனைவரும் கதறி அழுத காட்சிகள் காண்போரை கலங்கச்செய்தது.
(மறைந்த முற்போக்கு எழுத்தாளரின் உடலை கொண்டு செல்லும்போது, சக எழுத்தாளர்கள் பா. செயப்பிரகாசத்தின் உடலுக்கு வீரவணக்கம் செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. )
அதேபோல் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் மறைந்த செய்தியை அறிந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொலைபேசி வாயிலாக இவரின் குடும்பத்தினரிடம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அதேபோல் இவரின் உடலுக்கு பல்வேறு எழுத்தாளர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர்.
(இவர் தனது மாணவப் பருவத்திலேயே 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றதால், இந்தியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் 3 மாதங்கள் இருந்துள்ளார். )
"மன ஓசை" என்ற கலை இலக்கிய மாத இதழின் பொறுப்பாசிரியராகவும் இருந்துள்ளார்.
(இவரின் படைப்புகள் சில;)
கவிதைகள்: சமத்துவ தீர வாசம், விதைகள் உறங்குவதில்லை, மக்களே போல் மரணத்துள் வாழ்வு, அழகின் சிரிப்பு, எழுதிய கை.
கதைகள்: அவர்களை கைது செய், விஷக்கடி, குடிபெயர்வு, மகன், தடயம்,.
கட்டுரைகள்: மணல், பள்ளிக்கூடம் நாவல் ஏற்புரை, கிராம வாழ்வை படைப்பின் ஆதாரம், இனப்படுகொலை: தமிழ் ஈழமும் - இந்தியாவின் பாதுகாப்பும். உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை படைத்துள்ளார்.
பிரபல எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் காலமானார்..!
முதுபெரும் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 81.
தூத்துக்குடி மாவட்டம் ராமச்சந்திராபுரம் கிராமத்தில் 1941-ஆம் ஆண்டு பிறந்த செயப்பிரகாசம், தமிழில் முதுகலை பட்டம் பெற்றவர். இந்தி எதிர்ப்பு, தமிழ் ஈழம் என பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர். காடு, இரவுகள் உடையும், இரவு மழை உள்ளிட்ட சிறுகதை தொகுப்புகளையும், பள்ளிக்கூடம், மணல் ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார்.
கல்லூரி விரிவுரையாளராகவும், தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குனராகவும் பணியாற்றியவர். இந்நிலையில், விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பிற்பகல் இரங்கல் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக