கட்டுக்கடங்காத கவிதைகள்
மார்ச் 1983 மார்க்ஸின் நினைவு நூற்றாண்டு ஒட்டி ‘மனஓசை’ கலை இலக்கியத் திங்களிதழில் அவரைப் பற்றியும், ஜென்னிஃபர் மார்க்ஸ் பற்றியும் சில பதிவுகளைச் ஆசிரியர் குழு செய்தார்கள். அதிலிருந்து ஒரு மீள்பதிவு இங்கே.
மார்க்ஸ் கல்லூரி நாட்களில் எழுதிய கவிதை
ஒருபோதும் நான் அமைதியாக
சும்மா இருக்க முடியாது
என் ஆத்மாவை எந்தவொரு
தடைதான் சூழ்ந்து நின்று
முற்றுகை தானிட்டாலும்
ஒருபோதும் நான் ஓய்ந்து
தளர்ச்சி கொள்ள முடியாது
முடிவற்ற தொரு
போராட்டத்திற்காக தணியாது
போராடுவேன் நான்.
நாமெல்லாம் ஒன்றிணைந்து
செய்து முடித்திடுவோம்
-முயன்றதனைத்தையும் துணிகரமாய்.
ஓய்வில்லை ஒழிச்சலில்லை
எப்போதும் நமக்கு
நம்பிக்கை நிரம்பி வழிய
எல்லாம் செய்வோம்
எப்போதும் விருப்போடு
கவலை மிகுந்து
மனமுறிவு ஏதுமின்றி
வேதனை மிகுந்து நுகத்தடியில்
தலைகுனியும் நிலையற்று
நம்பிக்கை நிரம்பி வழிய
எல்லாம் செய்வோம்
எப்போதும் விருப்போடு
நம் முயற்சிக்கும்
ஆசைக்கும் அருஞ்செயலுக்கும்
நம் நம்பிக்கையும் துணிவும்
என்றென்றும்
நிலைத்தே நிற்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக