நம் நாய்கள் இனம் அழிப்பு – பீட்டாவின் அட்டூழியம்

தமிழின காளைகளைப் போல் இன்னுமொரு இனம் தமிழகத்தில் தனித்துவம் பெற்றதுண்டு ; அது நம் மண்ணின் நாய்கள் இனம்.

அவை சிப்பிப் பாறை,கன்னி, கோம்பை, ராஜபாளையம் – இந்த நான்கு இன நாய்களும் அழிந்து போகும் தருவாயில் இருக்கிறது.

இந்த நாட்டு நாய்களைப் பாதுகாக்கவும், அழிவைத் தடுக்கவும் தமிழ்நாடு அரசு ”நாய் வளர்ப்புப் பிரிவு” சைதாப்பேட்டையில் இயங்கி வந்தது. இந்தப் பிரிவு நம்மின நாய்களை இனவிருத்தி செய்து அழியாமல் பாதுகாத்து வந்தது. யார் வேண்டுமென்றாலும் இங்கு சென்று நம்மின நாய்களை வாங்கி வளர்க்கலாம்;

பீட்டா (PETA) அமைப்பு தமிழ்நாடு உயர் நீதிமன்றத்தில் ” நாய்கள் வளர்ப்புக் கூடத்தில்” நாய்கள் சித்திரவதை செய்யப்படுகிறன என்றும், இக்கூடத்தை மூட வேண்டுமெனவும் 2014 ஆகஸ்டில் வழக்குத்தொடர்ந்தது.பீட்டாவின் (PETA) கைப்பவையான AWBI ( நடுவணரசின் விலங்குகள் நல வாரியம்) ஆய்வு செய்து “ நாய் வளர்ப்புக் கூடத்தை” மூட பரிந்துரைத்தது. அதன்படி சென்னை உயர்நீதிமன்றம், டிசம்பர் 16-ல் நம்மின நாய்கள் வளர்ப்புக் கூடத்தை மூட உத்தரவிட்டது.

வெளிநாட்டு அமைப்பான ‘பீட்டா’ ஏன் இந்த நாய் வளர்ப்புக் கூடத்தை மூடச் செய்தது? நம் நாட்டு நாய்களுக்கு தனியாக உணவு தேவையில்லை; நாம் சாப்பிடும் உணவே போதும். நம் நாட்டு நாய்களை எளிதாக நோய்கள் அண்டுவதில்லை. முடி உதிரும் தன்மை கிடையாது. படித்துக் கொளுத்த - பணத்தால் கொளுத்த மக்கள் வளர்க்கிற PUG, LABRADOR, GERMAN SHEPHERD - வெளிநாட்டு நாய்கள் நம் உணவைச் சாப்பிடாது. அதற்கென்று உணவு ’சூப்பர் மார்க்கெட்டில்’ வாங்க வேண்டும். அதைப் பராமரிக்க மருந்துகள் வாங்க வேண்டும். ஒவ்வொரு நாளும் உதிரும் முடியைக் கூட்டி அள்ளவேண்டும்.

அதைக் குளிப்பாட்ட ‘தனீ சோப்’ இல்லையென்றால் உண்ணிகள் அப்பிவிடும்.இவை அணைத்தும் வெளிநாட்டு ’கார்ப்பொரேட் கம்பெனிகளால்’ இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. பீட்டா என்கிற வெளிநாட்டு அமைப்பின் ஒரே குறிக்கோள் வெளிநாட்டுத் தயாரிப்புகளை இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்காக நம் சொந்தமண்னின் பிராணிகளை அழிப்பது!

இதுவரை எந்த ஊடகங்களும் நம்மின நாய் அழிப்பை பேசாதது ஏன்?

ஆட்சியிலிருப்பவர்கள் கேடுகெட்டுப் போகட்டும்:அவர்கள் இயல்பு அது. போக்கழிந்துதான் போவார்கள். ஆனால் எதிர்க்கட்சிகள் கூட ஏன் போக்கழிந்து, கேடு கெட்டுப் போய்நின்றார்கள்.

நன்றி: தமிழ்வலை 

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

இன்குலாப் - பாரதிக்குப் பின்

பா.செயப்பிரகாசம் நூல்கள்