மரண தண்டனைக்கு எதிரான எழுத்தாளர்கள், கலைஞர்கள் அறிக்கை

17 ஆகஸ்ட் 2011

மனித உயிர் பறிப்பது மனித நேயத்துக்கும் மானுட குல அறத்துக்கும் எதிரானது  என அனைவரும் அறிவோம். மனித உயிர் பறிக்க தனி மனிதருக்கோ, சமூகத்துக்கோ. அரசுக்கோ எந்த உரிமையும் இல்லை. ஆனால் மரணதண்டனையை அல்லது தூக்குத் தண்டனையை அரசே நிறைவேற்றுகிறபோது அது அறமான செயலாகவும் சட்டரீதியாகவும் கருதப்படுவது எவ்வகையில் நியாயம்? நியாயமில்லை எனப் பதில் கூறும் முகமாக மரண தண்டனையை உலகில் 135 நாடுகள் ரத்து செய்துள்ளன. காந்திதேசம் என்ற கிரீடத்தை பெருமையாகச் சூடிக் கொண்டிருக்கும் இந்தியா இதுவரை மரண தண்டனையை ரத்து செய்யவில்லை.

மேற்கு வங்கத்தில் 2000த்தில்  கடைசியாய் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1995-க்குப் பின் மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. இப்போது ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவர் தூக்குக் கயிற்றை எதிர்நோக்கி நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சிறையிலிருந்த காலம் இருபது ஆண்டுகள். வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருந்தால்  கூட இவர்களின் சிறைக்காலம் முடிந்து போயிருக்கும். எந்த ஒரு மனித உயிருக்கும் மரணதண்டனை வழங்க எவருக்கும் உரிமையில்லை எனும் உன்னதமான கருத்து உலகின் மனச் சாட்சியாக மேலெழுந்து வருகையில் 
இந்திய அரசே, மரண தண்டனையை ரத்து செய்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட அனைவரது மரண தண்டனையையும் கால அளவைக் கணக்கில் எடுத்து ரத்து செய்!
என்ற முறையீட்டை முன்வைத்து நடுவணரசை  வலியுறுத்த  தங்கள் ஒப்புதலைக் கோருகிறோம். அனைவரின் ஒப்புதலும்  அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மரண தண்டனைக்கு எதிரான எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஒருங்கிணைப்புக் குழு.
பொன்னீலன், புவியரசு, ஈரோடு  தமிழன்பன், இன்குலாப், இராசேந்திரசோழன், பா.செயப்பிரகாசம், தாமரை, ஓவியர் மருது, மாலதி மைத்ரி.

ஒப்புதல் அளிக்கும் மின்னஞ்சல் : jpirakasam@gmail.com, s.tamarai@gmail.com

இதுவரை ஒப்புதல் அளித்தவர்கள்:
 • நோம் சாம்ஸ்கி
 • பினாயக் சென்
 • ஆனந்த் பட்வர்த்தன்
 • மார்கரெட் ட்ராவிக்
 • வரவரராவ்
 • மகாசுவேதா தேவி
 • மகேஷ் தத்தானி
 • புலவர் புலமைப்பித்தன்
 • பிரபஞ்சன்
 • கலாப்ரியா
 • எஸ்.பொ.
 • தமிழவன்
 • சிவசங்கரி
 • கிருஷாங்கினி
 • நெய்வேலி பாலு
 • அ.மார்க்ஸ்
 • ஞாநி
 • ரவிசுப்ரமணியன்
 • பழநிபாரதி
 • கபிலன்
 • யுகபாரதி
 • கிருதியா
 • பிரான்சிஸ் கிருபா
 • சல்மா
 • தமிழச்சி தங்கபாண்டியன்
 • சிநேகன்
 • பா.விஜய்
 • ந.முத்துக்குமார்
 • தமிழ்நதி
 • விவேகா
 • அ.வெண்ணிலா
 • பிறைசூடன்
 • அஜயன் பாலா
 • குழந்தை வேலப்பன்
 • பாஸ்கர் சக்தி
 • இயக்குனர் தாமிரா
 • நடிகர் ஆர்.பார்த்திபன்
 • நடிகை ரோகிணி
 • நடிகர் சத்யராஜ்
 • இயக்குனர் அமீர்
 • இயக்குனர் மணிவண்ணன்
 • இயக்குனர் சேரன்
 • இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்
 • இயக்குனர் சீனு ராமசாமி
 • ஜமாலன்
 • பாமரன்
 • ச.பாலமுருகன்
 • இரா.முருகவேள்
 • கி .ராஜநாராயணன்
 • தி.க.சிவசங்கரன்
 • ம.லெ.தங்கப்பா
 • தொ.பரமசிவன்
 • பூமணி
 • தமிழவன்
 • தணிகைச்செல்வன்
 • வண்ணதாசன்
 • தமிழ்நாடன்
 • மனுஷ்யபுத்திரன்
 • அமரந்தா
 • அறிவுமதி
 • பேரா.ந.முத்துமோகன்
 • பேரா.வீ.அரசு
 • பேரா. அ,ராமசாமி
 • பேரா.க.பஞ்சாங்கம்
 • பேரா.திருமாவளவன்
 • பேரா.அரசேந்திரன்
 • பேரா.மறைமலை இலக்குவனார்
 • யமுனா ராஜேந்திரன
 • நாக.இளங்கோவன்
 • தமிழ் நாடன்
 • அருண்மொழிவர்மன்
 • சிகரம்  ச.செந்தில்நாதன்
 • சோ.தர்மன்
 • ஸ்டாலின் ராஜாங்கம்
 • யாழன் ஆதி
 • தேவிபாரதி
 • ஆர்.ஆர்.சீனிவாசன்
 • கார்டூனிஸ்ட் பாலா
 • மா.அரங்கநாதன்
 • அப்பணசாமி
 • குரு.ராதாகிருட்டிணன்
 • நா.சுப்புலட்சுமி
 • சி.சண்முகசுந்தரம்
 • தமிழ் முகிலன்
 • மணவை.தமிழ் மணி
 • அ.முத்துகிருஷ்ணன்
 • கோவை ஞானி
 • நாஞ்சில்நாடன்
 • மு. புஷ்பராஜன்
 • வெளி ரங்கராஜன்
 • கோணங்கி
 • முருகபூபதி (நாடக ஆசிரியர்)
 • பூங்குழலி
 • எச்.ஜி. ரசூல்
 • கவிதாபாரதி
 • கவி பாஸ்கர்
 • இரா.மகாராசன்
 • சுப.தேசிகன் (எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர்)
 • தமிழ்நதி
 • பிரியா தம்பி
 • கவின்மலர்
 • அப்துல் ரஹ்மான்
 • மு.மேத்தா
 • வாலி
 • தி.பரமேஸ்வரி
 • சுகிர்தராணி
 • உமாசக்தி
 • விசயலட்சுமி
 • லிவிங் ஸ்மைல் வித்யா
 • சிற்பி
 • விழி.பா.இதயவேந்தன்
 • அன்பாதவன்
 • பழமலை
 • தோப்பில் முகமது மீரான்
 • பேரா நா.தருமராசன்
 • சமயவேல்
 • சுரேஷ்குமார் இந்திரஜித்
 • வர்த்தைய ஹன்ச்டைன்
 • குமரன், நாடக இயக்குநர்
 • வசந்த், நாடக கலைஞர்
 • புதியஜீவா
 • அபிமானி
 • அழகியபெரியவன்
 • பாட்டாளி மூர்த்தி
 • நா.முருகேசபாண்டியன்
 • லீனா மணிமேகலை
 • எம்.எஸ்.எஸ்.பாண்டியன்,டெல்லி
 • மீனா கந்தசாமி
 • வசந்தா கந்தசாமி
 • பாரி செழியன்
 • ஷோபா ஷக்தி
 • கலையரசன்,நெதர்லேன்ட்ஸ்
 • ஆரிசித்தாஸ் சௌத் ஆப்பிரிக்கா
 • ராஜன்குறை
 • பானுபாரதி விமல், நோர்வே
 • பெருந்தேவி, அமெரிக்கா
 • காஞ்சனா தாமோதரன், அமெரிக்கா
 • தமயந்தி
 • மதுமிதா
 • களந்தை பீர்முகமது
 • குட்டி ரேவதி
 • திலகபாமா
 • கண்ணன்
 • கிருஷி
 • இளசை அருணா
 • ஓவியர் சந்தானம்
இந்திய குடியரசு தலைவருக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் அனுப்பிய கடிதத்தை இங்கு காணலாம்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

ஜெயந்தன் - நினைக்கப்படும்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்