அணு உலைகளுக்கு எதிரான எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்களின் கூட்டறிக்கை

கூடங்குளத்தில் அணு உலைக்கெதிராகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அறவழியில் போராடி வரும் நிலையில், மக்களின் அச்சம் நீங்கும் வரை அணு உலையை திறக்க வேண்டாம் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார் மாநில முதல்வர் ஜெயலலிதா. மேலும் போராடும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியில் ''போராடும் மக்களில் ஒருத்தியாக இருப்பேன் " என்றும் சொன்னார். ஆனால் இப்போது சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிந்த மறு நாளே ஆயிரக்கணக்கான போலீசாரை அந்தப் பகுதியில் குவித்து அணு உலையை இயக்க நடவடிக்கை எடுத்திருக்கும் மாநில அரசின் நடவடிக்கை கடும் ஏமாற்றமளிக்கிறது. முதல்வரின் வாக்குப்படியும், சட்டமன்ற தீர்மானத்தின் படியும் மக்களின் அச்சத்தைப் போக்க நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில், அச்சத்தைப் போக்க வேண்டியவர்கள் மக்களைச் சந்திக்காத நிலையில் தமிழக அரசின் இந்நடவடிக்கையை படைப்பாளிகள், பத்திரிகையாளர்களாகிய நாங்கள் கண்டிக்கின்றோம்.

கடலோரத்தை ஒட்டிய பகுதிகளில் வாழும் மீனவ மக்களின் கிராமங்களை உள்ளூரிலிருந்து துண்டித்து போராடும் மக்களை தனிமைப்படுத்தும் இப்போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம். அஹிம்சை வழியில் போராடும் மக்களை ஆயுதங்களைக் கொண்டு அடக்க முயல்வதும் மக்களை ஏனைய பிற சமூங்களிடமிருந்து தனித்துப் பிரித்து வன்முறை மூலம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை நசுக்க முயல்வதையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

நம் மாநிலத்தையும் மக்களையும் பல தலைமுறைகளுக்கு பெரும் பாதிப்புக்குள்ளாக்கக்கூடிய இந்தப் பிரச்சினையில் உடனடி கவனம் செலுத்துவது ஒவ்வொரு எழுத்தாளருக்கும் படைப்பாளிக்குமான சமூகக் கடமை என்ற அடிப்படையில் எங்கள் கருத்தை பொதுமக்கள் முன்பும் குறிப்பாக தமிழக முதலமைச்சர் கவனத்துக்கும் இந்த அறிக்கையின் வாயிலாக வைக்க விரும்புகிறோம்.

தமிழகத்தில் தற்காலிகமாக இருக்கும் மின் பற்றாக்குறையை தீர்க்க்க கூடங்குளம் அணு உலை உதவும் என்ற தவறான கருத்து பரப்பப்படுகிறது. இது உண்மையல்ல. நமது மின்பற்றாக்குறையை தீர்க்க மாற்றுவழிகளையே நாம் மேற்கொள்ளவேண்டும். அணு உலையை நாடுவது என்பது வாணலியிலிருந்து அடுப்பில் குதிப்பதற்கு சமமாகும். குண்டு பல்புகளை சி.எஃப்.எல் குழல் பல்புகளாக மாற்றினாலே 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும் என்கின்ற பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொலை நோக்குப் பார்வையில் பார்க்கும்போது மின் கடத்துவதில் விரயமாகும் 40 சதவிகிதத்தை பாதி குறைத்தாலே புதிய மின் உற்பத்தியே நமக்கு தேவைப்படாது. சூரியசக்தி, காற்று போன்ற இதர வழிகளும் உள்ளன. இவற்றையெல்லாம் மேற்கொள்ள வசதியாக, தமிழக முதலமைச்சர் அவர்கள் போராடும் மக்களை சந்திக்க வேண்டும் என்றும் அங்குள்ள மக்கள் கோரிக்கை வைத்தார்கள். மாநில அரசு அமைத்த குழுவினர் திட்டமிட்டபடி அணு உலைக்கு ஆதரவான அறிக்கை ஒன்றை தயாரித்து தமிழக அரசிடம் வழங்கியதும் அந்த அறிக்கையின் அடிப்படையில் அணு உலையை திறக்கும் முடிவை தமிழக அரசு எடுத்திருப்பதும் ஏமாற்றமளிக்கின்றது.

அணுசக்தி என்பது பல தலைமுறைகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும் ஆபத்தானதும், மனிதர்களால் இன்னமும் தீர்வு கண்டுபிடிக்கப்படாததுமான ஒரு தொழில்நுட்பமாகும். அதற்காகும் மிக அதிகப் பொருட்செலவில் அது தருவது மிகக் குறைந்த மின்சாரம்தான் என்பதும் புள்ளிவிவரங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே வருங்காலத் தலைமுறைகளுக்கெல்லாம் தலைவலியாக இருக்கக்கூடிய அணு உலைகள், நமக்கு வேண்டவே வேண்டாம் என்பதே எங்கள் கருத்தாகும். இருக்கும் அணு உலைகளையும் படிப்படியாக் மூடிவிட வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள். இந்த எங்கள் கருத்துக்கு ஆதாரமாக எண்ணற்ற அறிஞர்கள் இந்தியாவிலும் உலகெங்கும் பல தகவல்களைக் கடந்த 50 வருடங்களாக அளித்தவண்ணம் உள்ளனர்.

இந்த சூழ்நிலையில் கேரள, மேற்கு வங்க மாநில அரசுகள் அணு உலை தங்கள் மாநிலத்தில் வேண்டவே வேண்டாம் என்று பல வருடங்கள் முன்பே எடுத்துள்ள சரியான நிலைப்பாட்டை தமிழக அரசும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் அவர்களைக் கோருகிறோம். அணு உலைகளால் உலகெங்கிலும் ஏற்பட்ட பேரழிவுகளை எண்ணிப் பார்த்து அழிவின் விழிம்பில் சிக்கியுள்ள கூடங்குளம் மக்களை காப்பாற்றுமாறு கோருகிறோம். அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரை உடனடியாக விலக்கி மக்களை நேரடியாக தமிழக முதல்வர் சென்று சந்திக்க வேண்டும் எனக் கோருகிறோம்.

ஒருங்கிணைப்புக் குழு

பத்திரிகையாளர் - அருள் எழிலன், எழுத்தாளர் -சந்திரா, கார்டூனிஸ்ட் பாலா, பத்திரிகையாளர் - கவின் மலர்.

எழுத்தாளர்கள் 
இந்திரா பார்த்தசாரதி
பிரபஞ்சன்
பொன்னீலன்
நாஞ்சில் நாடன்
பா.செயப்பிரகாசம்
ஞாநி
கோணங்கி
அம்பை
பாமா
எஸ்.ராமகிருஷ்ணன்
அ.மார்க்ஸ்
பாஸ்கர் சக்தி
அழகிய பெரியவன்
யூமா வாசுகி
அஜயன் பாலா
முத்துகிருஷ்ணன்
குறும்பனை பெர்லின்
சந்திரா
யுவபாரதி மணிகண்டன்
ஸ்டாலின் ராஜாங்கம்
லட்சுமி சரவணகுமார்
கணேசகுமாரன்
யாழினி மூனுசாமி
சுபகுணராஜன்
முருகபூபதி, மணல் மகுடி நாடகக் குழுவினர்
ஆலூர் ஷானவாஷ்
சிறில் அலெக்ஸ்
பவுத்த அய்யனார்
முத்து மீனாள்
பூவுலகு - சுந்தர்ராஜன்
தி.க. சிவசங்கரன்
தொ.பரமசிவன்
லேனா.குமார்
கொற்றவை
விஷ்ணுபுரம் சரவணன்
மீனாகந்தசாமி
லிவிங்க் ஸ்மைல் வித்யா
பாமரன்
பர்வீன் சுல்தானா
பாரதி கிருஷ்ணகுமார்
ப்ரேமா ரேவதி
ஜமாலன்
யமுனா ராஜேந்திரன்.
கவிஞர்கள்
இன்குலாப்
அறிவுமதி
மாலதி மைத்ரி
குட்டி ரேவதி
கலாப்ரியா
சுகிர்தராணி
யாழன் ஆதி
மனுஷ்யபுத்திரன்
தாமரை
யுகபாரதி
தேவதேவன்
ஷங்கர் ராம சுப்ரமணியன்
ஜெயபாஸ்கரன்
செல்மா பிரியதர்ஸன்
வெளி ரங்கராஜன்
ச.விஜயலட்சுமி
தி.பரமேசுவரி
யவனிகா ஸ்ரீராம்
வசுமித்ர
நேசமித்திரன்
அரங்க மல்லிகா
திரைத்துறையினர்
இயக்குநர்- வெற்றிமாறன்
இயக்குநர் - அமீர்
இயக்குநர் - ஜனநாதன்
இயக்குநர் – ராம்
இயக்குநர்- சீனு ராமசாமி
இயக்குநர் - செந்தமிழன்
இயக்குநர் - ஆர்.ஆர் .சீனிவாசன்
இயக்குநர் - ஆர். பி. அமுதன்
பத்திரிகையாளர்கள்
பாபு ஜெயக்குமார்
அ.தா.பாலசுப்ரமணியன்
பாரதி தம்பி
ராஜுமுருகன்
அருள் எழிலன்
கார்டூனிஸ்ட் பாலா
புனிதப் பாண்டியன்
பாலச்சந்திரன்
பால பாரதி
தமிழ் கனல்
கவிதா முரளீதரன்
முரளீதரன்
ஆர்.பகத்சிங்
திருவண்ணாமலை ராஜா
ப்ரியா தம்பி
சுகுணா திவாகர்
சுந்தரபுத்தன்
யுவகிருஷ்ணா
ந.வினோத் குமார்
அதிஷா
கவின் மலர்
திருவட்டாறு சிந்துகுமார்
ஆரா
என்.அசோகன்
ஜெயராணி
தளவாய் சுந்தரம்
மகாலிங்கம் பொன்னுசாமி
அருள் செழியன்
எம்.பி.உதயசூரியன்
நீயா நானா - ஆண்டனி
வினி ஷர்ப்பனா
கீற்று ரமேஷ்
கவிதா சொர்ணவள்ளி
ஓவியர்கள்
ட்ராஸ்கி மருது
வீரசந்தானம்
ரோகிணி மணி
மணி வர்மா
முகிலன்
சந்துரு
 நட்ராஜ்
அரஸ்
ஹாசிப்கான்
தமிழரசு
புகழேந்தி
வெங்கட்
அமிர்தலிங்கம்
பாலாஜி
ஷ்யாம்
நன்றி: கீற்று - 23 மார்ச் 2012

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நீட் தேர்வு – ஒரு ஊமை கண்ட கனவு!

கி.ரா - தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கடிதம்

கரிசல் வெள்ளாமை

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

கற்பக தரு சொக்கப்பனை ஆகிறது!