பங்குப்பெற்ற நிகழ்வுகள் 2015 - இந்தியா

1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் 50ஆம்  ஆண்டு நினைவை மொழி உரிமை ஆண்டாக கடைபிடித்தலும் கூட்டமைப்பு உருவாக்கமும் - 4 ஜனவரி 2015, சென்னை 

1965 ஆம் ஆண்டு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் 50 ஆம் ஆண்டை நினைவுகூர்வதற்கும் அதை மொழி உரிமை ஆண்டாகக் கடைப்பிடிப்பதற்கும் தமிழ்நாட்டில் மொழி உரிமைகளுக்காகப் போராடுவதற்கும் தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம் என்கிற ஒரு புதியக் கூட்டமைப்பு சென்னையில் இன்று தொடங்கப்பட்டது.


தமிழை மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்குவது, தமிழ்நாட்டில் அனைத்துத் தளங்களிலும் தமிழ் ஆட்சிமொழி என்பதை உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு மொழி உரிமைக் கோரிக்கைகளை முன்வைத்து பல தமிழ் அமைப்புகளும் மக்கள் அமைப்புகளும் தமிழறிஞர்களும் படைப்பாளிகளும் சேர்ந்து இந்தக் கூட்டமைப்பை உருவாக்கினார்கள். கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக எழுத்தாளரும் மக்கள் இணையம் கட்சியின் பொதுச்செயலருமான திரு ஆழி செந்தில்நாதன் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டியக்கத்தின் நெறியாளுகைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக எழுத்தாளர் திரு. பா.செயப்பிரகாசம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


தமிழகத்தில் இதுவரை இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள் நினைவாக பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய கூட்டியக்கம் முடிவு செய்திருக்கிறது. 1965 மொழிப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சனவரி 25 மொழிப் போர்த் தியாகிகள் தினத்தை இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் நடத்துவது என்று தீர்மானம் இயற்றப்பட்டது.

சென்னையிலும் அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் இந்தி எதிர்ப்புப் போரில் பேரளவு உயிரிழப்பும் தியாகங்களும் நடந்த நகரங்களிலும் சனவரி 25 இல் எல்லா இயக்கங்களும் இணைந்து நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டது. அத்துடன், 1938 இல் முதலில் மொழிக்காக உயிரீந்த தியாகி நடராசன் நினைவு நாளான சனவரி 15 இல் அவருக்கு சிறப்பு நினைவேந்தல் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


நிழக்ச்சியில் கலந்துகொண்ட மொழி உரிமைச் செயல்பாட்டாளர்கள், தமிழ் மொழிக்கான உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிய தேவை முன்பைவிட இப்போது அதிகமாக இருக்கிறது என கருத்து தெரிவித்தார்கள். நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு மிகத்தீவிரமாக இந்தியையும் சமற்கிருத்ததையும் திணித்துக்கொண்டிருக்கிறது என்று அவர்கள் குற்றம்சாட்டினார்கள். மோடி அரசின் மொழிக்கொள்கை காரணமாக விரைவில் மத்திய அரசின் எந்த துறையிலும் தமிழர்கள் நுழையமுடியாதச் சிக்கல் வரும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்தார்கள். தமிழ்நாட்டில் கல்வித் துறையில் தமிழின் நிலை பற்றியும் கவலை தெரிவிக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய பேரியக்கம், தமிழ்நாடு மக்கள் கட்சி, தமிழ்த்தேச மக்கள் கட்சி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி, தமிழக மக்கள் புரட்சிக் கழகம், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தமிழ் இளைஞர்கள் – மாணவர்கள் கூட்டமைப்பு, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு, தமிழ்த்தேச நடுவம், மக்கள் இணையம், தமிழர் பண்பாட்டு நடுவம், தமிழர் முன்னணி, தமிழர் முன்னேற்றக் கழகம், தமிழர் விடுதலைக் கழகம், தமிழ் படைப்பாளிகள் உணர்வாளர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம், தென்மொழி இயக்கம், தமிழக இளைஞர் எழுச்சி இயக்கம், மக்கள் வழக்கறிஞர் கழகம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு மாணவர் இணையம், தமிழியக்கம், பாவேந்தர் பேரவை, கொற்றவை இலக்கிய இயக்கம், சிங்காரவேலர் பெரியார் பேரவை, வளரி ஆகிய இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் தமிழ் மொழிக்காக போராடிய சான்றோர்களும் 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில் கலந்துகொண்ட தியாகிகளும் மாணவர் அமைப்பினரும் புதிய கூட்டமைப்பின் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.

மேலும் பல அமைப்புகளையும் தமிழறிஞர்களையும் இணைத்துக்கொண்டு கூட்டியக்கம் பல போராட்டங்களையும் பரப்புரை இயக்கங்களையும் நடத்தும் என்று ஒருங்கிணைப்புக் குழுவினர் கூறினார்கள்.

நன்றி: சமகளம்

கனடா வாழ் ஈழத் தமிழரான அண்ணாவியார் ச.மிக்கேல்தாஸுக்கு “கூத்துக்கலைச் செம்மல் விருது” வழங்கிய பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்




பூமிப்பந்தின் மூத்த மனிதர்களான தமிழினத்தின் மிகப் பிரதானமானது கூத்துக்கலை. அதன் வளர்ச்சிக்காக தொன்று தொட்டு பல கலைஞர்களும், அறிஞர்களும் வாழ்ந்து மறைந்து போயுள்ளனர். உலகத் தமிழினத்திற்க்காக அவர்கள் விட்டுச்சென்ற உன்னதக் கூத்துக் கலைக்காக அவர் தம் பின்னால் நடந்து ஆயுள் பரியந்தம் உழைத்த அண்ணாவிமாரையும், கலைஞர்களையும் வரலாறு குறித்து வைத்திருக்கின்றது.

ஈழதேசத்தின் மிகத்தொன்மையான கூத்துக்கலைகளில் சுடர்மிகு இரு விழிகளாக திகழ்பவை தென்மோடி, வடமோடி கூத்துக்களாகும். தென்மோடிக் கூத்தின் மூலவராகவும், தனித்துவம் மிக்க கம்பீரக் கலைஞராக, உச்சநிலை கொண்ட பாடகராக பன்முகத்திறனுடன் திகழ்ந்தவர் அமரர் கலைக்குரிசில் நீ.வ.அந்தோனி அண்ணாவியார் அவர்களாகும். அவரின் மறைவுக்குப் பின் அவரது மகன் கலைவருணன் சவிரிமுத்து அவர்கள் அண்ணாவியாராகப் பணியாற்றி வருகின்றார். அவருடைய மகன் அண்ணாவி ச.மிக்கேல்தாஸ் 90களில் இருந்து பல பிரதிகளை உருவாக்கி புலம் பெயர்ந்த தேசங்களின் கலைஞர்களை ஒன்றிணைத்து அரங்காற்றும் பணியை முழுநேர ஊழியமாக செய்து வருகின்றார்.


இந்த வகையில் அண்ணாவியார் ச.மிக்கேல்தாஸ் அவர்களை கெளரவிக்கும் முகமாக பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் அவர் நம் தமிழ்மரபை அயராமல் வெளிக்கொணரும் கலைப்பணியை எண்ணங்களிலேற்றி மாசி மாதம் 23ம் நாள் 2015ல் புதுவை பல்கலைக்கழக நிகழ்கலைப்பள்ளி அரங்கில் பேராசிரியர், முனைவர் கரு.அழ.குணசேகரன் புலமுதன்மையர் அவர்களின் தலைமையில். பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் முன்னிலையில் “கூத்துக்கலைச் செம்மல்” விருது வழங்கலும், கூத்துக்கலை பற்றிய விளக்கவுரையும், செய்முறைப் பயிற்ச்சியும் வெகு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் பேராசிரியர், முனைவர் கரு.அழ.குணசேகரன் அவர்கள் தமது தலைமை உரையில், கூத்து என்ற சொல் தமிழ் இனத்துக்குரிய மரபின் அடையாளம். மனிதரின் கண்டு பிடிப்புக்களில் கலைகள் குறிப்பாக கூத்துக்கள் மக்களின் முகவரியை காட்டவல்லன அந்த வரிசையில் கூத்து பாரம்பரியத்தைப் பேணிக்காத்துவரும் அண்ணாவியார் மிக்கேல்தாஸ் அவர்கள், கலைக்குரிசில் நீ.வ.அந்தோனி அவர்களின் கலைப்பணியை மூன்றாம் தலைமுறையாளராக தொடர்ந்து வளர்த்து வருவதுடன் புலம் பெயர்ந்து கனடா, நோர்வே, பிரான்ஸ் நாடுகளில் வாழும் கலைஞர்களை ஒன்றிணைத்து அரங்காற்றுகை அளிப்பதும், மேலைநாட்டில் பிறந்து வளர்ந்த புதிய தலைமுறையினர் தமிழில் பேசுவதே அபூர்வம் அதிலும் தாள நயத்துடன் பாடுவது ஆச்சரியம். இவர்களுக்கான அரங்காற்றுப் பிரதிகளை உருவாக்கி தாள நயத்துடன் பாடவைத்து அடுத்த தலைமுறையினரிடம் கையளிக்கும் பணியில் ஈடுபடுவதனாலும், இத்தகைய அண்ணாவிமார்கள் கூத்துக் கலைஞர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே கெளரவிப்பது நாம் நம் பாரம்பரிய கலைகளுக்குச் செய்யும் பெரும் பணி என்பதினால் அண்ணாவியார் அவர்களை கெளரவிக்கும் இவ்விழா நிகழ்கலைத் துறையால் முன்னெடுக்கப்படுகின்றது என்றார்.



அடுத்து, எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்கள் தனது அறிமுக உரையில், அண்ணாவியார் ச.மிக்கேல்தாஸ் அவர்கள் வரலாற்றுக்கூத்துக்களான கண்ணகி, மனுக்குல மீட்பர், ஸ்நாபக அருளப்பர், மாவீரன் பண்டாரவன்னியன், எதிரேறு எல்லாளன், ஆகிய சரித்திர வரலாற்றுக் கூத்துக்களை எழுதியதுடன், சமகால சமூக பாடுபொருள் நிகழ்வுக் கூத்துப் பிரதிகளாக சிறுமை, வீரசுதந்திரம், சுதந்திரமும் முரண்பாடுகளும், தமிழ் மரபுப் பொங்கல் ஆகிய கூத்துக்களை புதிய வடிவில் மீளுருவாக்கி நோர்வேயிலிருந்து இங்கு வந்திருக்கும் அவரது இளவல் அண்ணாவியார் ச.ஜெயராசாவுடனும், பிரான்ஸ் நாட்டில் வாழும் அடுத்த தலைமுறைக் கலைஞர் சூ.றொபின்சனுடனும் இணைந்து பல அரங்காற்றுகைகளை நடாத்தி வருவது நம் தமிழ் பாரம்பரிய கலைகளுக்குச் செய்யும் தொண்டெனக் குறிப்பிட்டார்.


தொடர்ந்து உரையாற்றிய புதுவை பல்கலைக்கழக பேராசிரியர், முனைவர், பதிவாளர் எஸ்.பன்னீர்ச்செல்வம் அவர்கள் எல்லாம் இழந்த நிலையிலும் புலம்பெயர்வோடு இவர் இப்பாரம்பரிய மரபுக்கலையை காவிச்சென்று, அங்கு நம் பண்பாட்டின் வேர்களை படைக்கும் ஆற்றலுடய அண்ணாவியார் ச.மிக்கேல்தாஸ் அவர்களுக்கு, அவரின் கலைப்பணியை போற்றும் முகமாக புதுவை பல்கலைக்கழகம் இக்கெளரவ விருதினை வழங்குவதாக “கூத்துக்கலைச் செம்மல்” விருதினை வழங்கி விளக்கமளித்தார்.

தொடர்ந்து கருஞ்சுழி என்னும் நாடகத்தின் மூலம் இந்திய நாடக அரங்கிலும், உலக நாடக மேடைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்திய நாடக இயக்குனரும், பேராசிரியருமான வ.ஆறுமுகம் அவர்கள் அண்ணாவியார் ச.மிக்கேல்தாஸ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பளித்தார். தொடர்ந்து பேராசிரியர்களுக்கும், அண்ணாவியார் ஜெயராசா அவர்களுக்கும் சிறப்பளிக்கப்பட்டது.


பின்பு கூத்துக்கலை பற்றிய விளக்கவுரையும், செய்முறைப் பயிற்ச்சியும், பாடல், நடிப்பு என அண்ணாவியார் மிக்கேல்தாஸ், அண்ணாவியார் ஜெயராசா, வனபிதா வீனஸ் செபஸ்ரின் மற்றும் தர்சிகா, யுனிஸ்ரா ஆகியோரால் நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டது. இறுதியில் புதுவை பல்கலைக்கழக பேராசிரியர், முனைவர், நாடகருமான இரா.இராசு அவர்களின் நன்றியுடன் விழா இனிதே நிறைவுற்றது.

நன்றி: கலைக்குரிசில்

நிகழ்ச்சி காணொளியை இங்கு காணலாம்.


மாவீரன் பண்டாரவன்னியன் – கண்ணகி நூல் வெளியீட்டு விழா



கனடா வாழ் ஈழத்து கூத்துக் கலைஞரான அண்ணாவியார் திரு.ச.மிக்கேல்தாஸ் எழுதிய “மாவீரன் பண்டாரவன்னியன்”, மற்றும் “கண்ணகி” என்னும் தென்மோடிக் கூத்து வடிவிலான ஈழத்தின் பாரம்பரிய கூத்துக் கலை நூலின் வெளியீட்டுவிழா தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் 21-02-2015 அன்று கவிக்கோ மன்றத்தில் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்கள் தலைமையில் நிகழ்ந்தது.


தமிழரின் புராதன இசைக்கருவியான தப்பு எனப்படும் பறையிசை, மாற்று நாடக இயக்கத் தலைவர் பேராசிரியர் கி.பார்த்திபராசா தலைமையில் மாற்று இயக்க மாணவர்களினால் புதிய உத்வேக எழிற்சியுடன் ஆடப்பட்டது. அருகி வரும் இத்தாளக்கட்டும் ஆட்டமுறைமையும், அவையில் அறிமுகம் செய்தமை மகிழ்ச்சிக்குரியதாகும்.

தொடர்ந்து வரவேற்புரையை நோர்வேயிலிருந்து விழாவில் கலந்து கொண்ட அண்ணாவியார் ச.ஜெயராஜா அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.


தலைமையுரையாற்றிய எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்கள்- அண்ணாவியார் ச.மிக்கேல்தாசின் நூலின் திறன் குறித்தும், கருத்தாளம் பற்றியும் விளக்கியதுடன், இவர்கள் தொடர்ந்து நான்கு தலைமுறைகளாக இக்கலையை அழியாமல் பாதுகாத்து வளர்த்துவரும் அக்கறை குறித்து விளக்கினார்.

அருட்தந்தை வீனஸ் செபஸ்ரின் அவர்கள் தமது ஆசியுரையில் ஆடலும், பாடலும் மனிதனை மகிழ்விக்கும் கலையாகும். “பண்டாரவன்னியன்”, “கண்ணகி” வரலாற்றை தமிழ் மரபுக் கலையான கூத்து வடிவத்தில் சமூகத்திற்க்கு ஏற்றவாறு படைத்திருப்பதாகவும், எனது குடும்பத்தை சேர்ந்த இவர்கள் இக்கலையை தொடர்ந்து பேணிக்காத்து வருவது பெருமைக்குரியது என்றார்.


கவிஞர் இன்குலாப் அவர்கள் தனது உரையில் வடமோடிக் கூத்து துன்பியல் சார்ந்ததாகவும், தென்மோடி இன்பியலாகவும் இருக்கும் எனக்கூறப்படுகிறது. புலம்பெயர் நாடுகளிலும் இக்கூத்து கலையை தொடந்து முன்னெடுத்து கட்டிக்காத்து வளர்ப்பது நெகிழ்வைத்தருகின்றது என்றார்.

பேராசிரியரும் நாடக செயற்பாட்டாளருமான அ.மங்கை அவர்கள் தமது உரையில், கிழக்கிலங்கை மட்டக்கிளப்பில் கண்ணகி சூளூர்த்தி மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாகும். அதேபோல் வன்னி வற்றாப்பளையிலும் கண்ணகிக்கு விழா எடுப்பார்கள். வெளிவரும் பண்டாரவன்னியன், கண்ணகி நூல்கள் சொல் வீச்சும், கவிச்சுவையும் குன்றாமல் ஓர் அரிய வரலாற்றுப் படைப்பாக அண்ணாவியார் அளித்துள்ளார் என எடுத்துரைத்தார்.


அடுத்து உரையாற்றிய தஞ்சை தமிழ் பல்கலைக் கழக நாடகத்துறை தலைவரும் பேராசிரியருமான மு.ராமசாமி அவர்கள்- தமிழன் எதிரிகளால் வீழ்ந்ததை விட துரோகிகளால் வீழ்ந்த கதைதான் அதிகம், அதை இந்நூலில் பண்டார வன்னியன், காக்கை வன்னியன் பாத்திரங்களின் பாடல் வழிமூலமாகவும், காதல், வீரம், சோகம், என்பவற்றை நாடக மொழியில் மண்ணின் உணர்வுகளுடன் சிறப்பாக பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது என்றார்.


நூலாசிரியர் அண்ணாவியாரின் ஏற்ப்புரையை அடுத்து நிறைவுரையாற்றிய கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள்- தன் ஈழத்து மக்களிடையே பெற்றிருந்த முக்கித்துவம் பற்றியும் எடுத்து கூறியதுடன், அந்நாளில் கூத்துக்களை விடிய விடிய இருந்து பார்த்துச் சுவைத்தவன் என்ற உணர்வோடு, அண்ணாவியார் மிக்கேல்தாஸ் இந்நூலை மிகவும் சிறப்பாக வரலாற்று வடிவமாக புதிய உயிர்த்துடிப்போடு தொன்மை மிகு இக் கலையை தமிழுலகிற்க்கு அளித்திருக்கின்றார் எனக் கூறினார்.



நூலாசிரியர் அண்ணாவியார் ச.மிக்கேல்தாசிற்கு கவிஞர் காசி ஆனந்தனும், அவரது சகோதரர் அண்ணாவியார் ச.ஜெயராஜாவுக்கு கவிஞர் இன்குலாப்பும் பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர். பின்பு நூலாசிரியரும், அவரது சகோதரரும் விழா விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கி சிறப்பு செய்தனர். அடுத்து விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் வெளியிடப்பட்ட “மாவீரன் பண்டாரவன்னியன்”, “கண்ணகி” நூல்கள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

நன்றி: கலைக்குரிசில்

நிகழ்ச்சி காணொளியை இங்கு காணலாம்.


Manipur State Kala Akademi - 4th Festival of Literature - June  6 & 7, 2015
Kangla hall, Kangla Fort Complex, Imphal






மணிப்பூர் மாநில அரசின் கலை இலக்கிய அமைப்பு (Manipur State Kala Akademi)  நான்காம் இலக்கிய விழா (4th Festival Of Literature) 2015 ஜுன் 6-7 ஆகிய இரு நாட்களில் தலைநகர் இம்பாலாவில் ஏற்பாடு செய்திருந்த விழாவில் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் கலந்துகொண்டு உரையாற்றினார்.


ಹಿಂದಿ ಹೇರಿಕೆ ವಿರೋಧಿ ಹೋರಾಟಕ್ಕೆ 50 ವರುಶಗಳು / 50 years of opposition to Hindi imposition
25 January 2015 - The Indian Institute of World Culture, B P Wadia Road, Bangalore





1965ರಿಂದ ಹಿಂದೀಯನ್ನು ಮಾತ್ರ ಕೇಂದ್ರ ಸರಕಾರದ ಏಕೈಕ ಅಧಿಕೃತ ಭಾಷೆಯಾಗಿಸುವ ನಿರ್ಧಾರವನ್ನು ಭಾರತದ ಸಂವಿಧಾನ ಬರೆಯುವಾಗ ಕೈಗೊಳ್ಳಲಾಗಿತ್ತು. ಹಿಂದೀಯೇತರ ನುಡಿಸಮುದಾಯಗಳ ವಿರೋಧದ ನಡುವೆಯೂ ಕೇಂದ್ರ ಸರಕಾರವು ಈ ಕೆಲಸಕ್ಕೆ ಮುಂದಾದಾಗ, 1965ರಲ್ಲಿ ದೊಡ್ಡಮಟ್ಟದಲ್ಲಿ ಹೋರಾಟ ನಡೆದು, ಹಿಂದೀ ಮತ್ತು ಇಂಗ್ಲೀಷ್ ಎರಡನ್ನೂ ಕೇಂದ್ರ ಸರಕಾರದ ಅಧಿಕೃತ ಭಾಷೆಗಳಾಗಿ ಮುಂದುವರೆಸಲು ತೀರ್ಮಾನಿಸಲಾಯಿತು. ಹಿಂದೀ ಹೇರಿಕೆ ವಿರೋಧಿ ಹೋರಾಟಕ್ಕೆ ಇದೇ ಜನವರಿ 25ರಂದು 50 ವರುಶಗಳು ತುಂಬುತ್ತಿದ್ದು, ಈ ಹೊತ್ತಿನಲ್ಲಿ ಹೋರಾಟದ ನೆನಪುಗಳನ್ನು ಮೆಲುಕು ಹಾಕುತ್ತಾ, ಎಲ್ಲಾ ಭಾಷೆಗಳನ್ನೂ ಸಮಾನವೆಂದು ನೋಡುವ ಭಾಷಾನೀತಿಯ ಅವಶ್ಯಕತೆಯ ಬಗ್ಗೆ ಒಂದು ಚರ್ಚೆ ಹಮ್ಮಿಕೊಳ್ಳಲಾಗಿದೆ.

ಹೆಸರಾಂತ ಸಾಹಿತಿ ಮತ್ತು ಹಿಂದಿ ಹೇರಿಕೆ ಬಗ್ಗೆ ಹಲ ವರುಶಗಳಿಂದ ದನಿ ಎತ್ತಿರುವ ಶ್ರೀ ಪಿ.ವಿ. ನಾರಾಯಣ ಅವರು ಈ ಕಾರ್ಯಕ್ರಮದಲ್ಲಿ ಮಾತನಾಡಲಿದ್ದಾರೆ. "ಹಿಂದೀ ಹೇರಿಕೆ - ಮೂರು ಮಂತ್ರ ನೂರು ತಂತ್ರ" ಹೊತ್ತಗೆಯ ಬರಹಗಾರರಾದ ಶ್ರೀ ಆನಂದ್ ಅವರೂ ಈ ಕಾರ್ಯಕ್ರಮದಲ್ಲಿ ಮಾತನಾಡಲಿದ್ದಾರೆ.
ತಮಿಳುನಾಡಿನ ಹಿರಿಯ ಸಾಹಿತಿ ಶ್ರೀ ಜಯಪ್ರಕಾಸಮ್ ಅವರು ಈ ಕಾರ್ಯಕ್ರಮದಲ್ಲಿ ಮಾತನಾಡಲಿದ್ದು, 1965ರಲ್ಲಿ ತಮಿಳುನಾಡಿನಲ್ಲಿ ನಡೆದ ಹಿಂದೀ ಹೇರಿಕೆ ವಿರೋಧಿ ಹೋರಾಟದ ಬಗ್ಗೆ ತಮ್ಮ ಸ್ವಂತ ಅನುಭವಗಳನ್ನು ಹಂಚಿಕೊಳ್ಳಲಿದ್ದಾರೆ. ಭಾಷಾನೀತಿ ಹೋರಾಟಗಾರರಾದ ಶ್ರೀ ಮಣಿ ಮಣಿವಣ್ಣನ್ ಅವರೂ ಕಾರ್ಯಕ್ರಮದಲ್ಲಿ ಮಾತನಾಡುತ್ತಾರೆ.


When the constitution of India was adopted, it was decided that Hindi will remain the sole official language of the union government from 1965 onwards. Non-Hindi speaking communities of India resisted this move strongly. Despite the opposition, when the government of India moved towards adopting Hindi as sole official language, large scale protests erupted across India. This January 25th marks the 50th anniversary of these agitations against Hindi imposition. This event is to recall about the protests against Hindi imposition and also discuss about the importance of the need for a language policy that treats all Indian languages as equal.


Mr. P.V. Narayana, a Kannada littérateur, will be speaking at the event. Mr. P.V.Narayana has long been a voice of opposition to Hindi imposition.

Mr. Anand G, author of Kannada book 'Hindi herike - mooru mantra nooru tantra' that talks about perils of Hindi imposition, will also be speaking at the event.


Mr. Jeyapirakasam, Tamil littérateur, will be present at the event as a guest, and he will be sharing his experiences of anti-Hindi imposition protests of 1965. Mr. Mani Manivannan, a language policy activist, will also be addressing the audience at the event.

நன்றி: bhashasamanathe

நிகழ்ச்சி உரையை இங்கு படிக்கலாம்.

உலகத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு - 14 ஜூன் 2015

உலகத் தமிழர் பேரமைப்பின் 8ஆவது மாநாடாக உலகத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சூன் 14ஆம் நாள் 2015 ஞாயிற்றுக் கிழமையன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. பா.செயப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற மாணவர் அரங்கை பி.ஜோ.பிரிட்டோ தொடக்கி வைத்தார். செம்பியன் பா.கார்த்திக், பா.பாரதிதாசன், செல்வி இரா.மணிமொழி ஆகியோர் பேசினர்.



மொழி உரிமை மாநாடு - செப்டம்பர்  19 & 20, 2015

தொன்மை மொழியான தமிழ் முதலான இந்தியாவின் பல்வேறு மொழிகளின் உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டு, பத்திரிக்கையாளரும், தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின் ஒருங்கினைப்பாளருமான திரு. ஆழி செந்தில்நாதன் அரும்பெரும் முயற்சியாக, “மொழி உரிமை மாநாடு” சென்னையில் இரண்டு இடங்களில் இரு நாளாக (புரட்டாசி 02 & 03, 2046 / செப். 19 & 20, 2015) நடைபெற்றது.

தமிழ் முதலான பல்வேறு மொழி உரிமைக்கான தீர்மானங்களை உருவாக்குவதற்காகப் பல்வேறு தமிழ் அறிஞர்களும், செயல்வீரர்களும் வல்லுநர்களும், இணைந்து உரையாடிய கலந்துரையாடல்களுடன் மொழி உரிமை மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களுக்கான “கருத்துரையாடல்” நிகழ்ச்சி சென்னை, மயிலாப்பூர் ந.மே.அ. குடியிருப்பில்(சி.ஐ.டி. காலனியில்) உள்ள “கவிக்கோ அரங்கத்தில்” புரட்டாசி 02 / செப்டம்பர் 19- சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை   நடைபெற்றது.

மாநாட்டில் திரு. கி. த. பச்சையப்பன் (ஒருங்கினைப்பாளர், தமிழ்  உரிமைக் கூட்டமைப்பு), திரு. பெ. மணியரசன் (தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்), திரு.பா.செயப்பிரகாசம் (நெறியாளுகைக் குழுத் தலைவர், தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம்), திரு. அருகோ (ஆசிரியர், எழுகதிர்) ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.



பெருமாள் முருகனுக்கு ஆதரவாக சென்னையில் ஆர்ப்பாட்டம் - 20 ஜனவரி 2015
நன்றி: கீற்று

கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இணைந்து நடத்தும்

எழுத்தாளர் பெருமாள் முருகனை ஆதரித்து ஆர்ப்பாட்டம்.


நாள்: 20 ஜனவரி 2015; காலை 10 மணி; இடம்: வள்ளுவர் கோட்டம் அருகில்

கருத்துரிமையைப் பாதுகாப்போம்! பெருமாள் முருகனுக்குத் துணை நிற்போம்!


தொடங்கி வைப்பவர்: தோழர் ஆர்.நல்லக்கண்ணு

பங்கேற்கும் தோழர்கள்:

பழ நெடுமாறன், ஜி.ராமகிருஷ்ணன், தொல். திருமாவளவன், விடுதலை ராஜேந்திரன், தியாகு, மணியரசன், பீமராவ் எம்.எல்.ஏ, அ.பாக்கியம், பியூசிஎல் சுரேஷ், திருமுருகன் காந்தி, ஆர்.ஆர்.சீனிவாசன், இளந்தமிழகம் சையது, எவிடென்ஸ் கதிர், நித்யானந்த் ஜெயராமன், ஹிந்து ராம், வீ.அரசு, அ.மார்க்ஸ், வ.கீதா, ஓவியர் மருது, எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், பத்திரிக்கையாளர் ஞாநி, எடிட்டர் பி. லெனின், நக்கீரன் கோபால், குமரேசன், வெளி ரங்கராஜன், ப்ரசன்னா ராமசாமி, டி.எம்.கிருஷ்ணா, இயக்குநர் அம்ஷன்குமார், ஓவியர் சந்துரு, எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், சு.வெங்கடேசன், சிகரம் ச செந்தில்நாதன், ஃப்ரென்ட்லைன் ஆர்.விஜயசங்கர், கவிஞர் பரிணாமன், பேராசிரியர் லட்சுமணன், நாடகக்கலைஞர் பிரளயன், அலைகள் சிவம், பதிப்பாளர் காலச்சுவடு கண்ணன், பேரா.ஆ. இரா.வெங்கடாசலபதி, கவிஞர் குட்டி ரேவதி, கவிஞர் சல்மா, திரைக்கலைஞர் ரோகிணி, லிவிங் ஸ்மைல் வித்யா, இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் ராம், எழுத்தாளர் சுபகுணராஜன் மற்றும் பல முக்கிய எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், கலைஞர்கள் கலந்துகொள்வர்.

கருத்துரிமை ஒடுக்குமுறையை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் -
சென்னை ஆர்ப்பாட்டத்தில் அறைகூவல். அருகில் வைக்கப்பட்டிருந்த திரைச்சீலையில் பல்வேறு தரப்பினரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டனர்.





தினமணி (தஞ்சை) - 28 அக்டோபர் 2015










திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி - கூத்துகலை நிகழ்வு, நாள்: 27 பிப்ரவரி 2015

























கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

Manal Novel - Jeyapirakasam deftly blends many folktales, rituals, folk beliefs with the modern day political happenings

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்