பங்குப்பெற்ற நிகழ்வுகள் 2017 - இந்தியா

விஜயா பதிப்பகம் சார்பில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் 95-ஆவது பிறந்த நாள் விழா, கோவை, 23-9-2017  சனிக்கிழமை

தலைமை: எழுத்தாளர் நாஞ்சில் நாடன் 
கலந்து கொண்டோர்: விஜயா பதிப்பக நிறுவனர் மு.வேலாயுதம், பேராசிரியர் க.பஞ்சாங்கம், எழுத்தாளர் பா.செயபிரகாசம், பேராசிரியர் துரை
கலை நிகழ்ச்சி: சென்னை பெர்ச் கலைக் குழுவினரின் "கி.ரா. குழம்பு" 


5-11-2017, 11 மணிக்கு பொதிகை தொலைக்காட்சி இலக்கிய தர்பார் நிகழ்ச்சியில் முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களோடு உரையாடல்

  • விமர்சகர் பேரா.க.பஞ்சாங்கம்
  • எழுத்தாளர் சூரியதீபன் @ பா.செயப்பிரகாசம்
  • பேரா.பா.ரவிக்குமார்
  • பிரெஞ்சு பேராசிரியர் வெங்கடசுப்பராய நாயகர்
  • ஒளிப்படக்கவிஞர் புதுவை இளவேனில்
  • எழுத்தாளர் ஞா.கலையரசி
  • பேரா.இளமதி சானகிராமன்
  • கவிஞர். சீனு தமிழ்மணி
  • பத்திரிகையாளர் தணிகைத்தம்பி
  • பேரா.இரா.ஸ்ரீவித்யா
  • ஓய்வு பெற்ற தலைமையாசிரியரும் தீவிர வாசகரும் ஆன அமரநாதன் அரிகிருஷ்ணன்
  • உமா மோகன்

கோவில்பட்டியில் கரிசல் இலக்கிய விழா - 02 அக்டோபர் 2017

கி.ராஜநாராயணனின் 95ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினர் சாரிபில் கோவில்பட்டியில் கரிசல் இலக்கிய விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.




கோவில்பட்டி பூங்கா சாலை தனியார் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க கிளைத் தலைவர் அபிராமி முருகன் தலைமை வகித்தார். கிளைச் செயலர் பொ. வேலுச்சாமி வரவேற்றார். சங்க மாநிலத் தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் நோக்கவுரையாற்றினார். தொடர்ந்து, எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய முன்னொரு காலத்தில் என்ற தலைப்பிலான நூலை சங்கத்தின் மாநிலச் செயலர் சு. வெங்கடேசன் வெளியிட, அதன் முதல் பிரதியை கிளைத் தலைவர் அபிராமிமுருகன் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து, புதுவை இளவேனில் இயக்கிய இடைசெவல் ஆவணப்படம் திரையிடப்பட்டது. பின்னர், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், கி.ரா ஒரு பல்கலைக்கழகம் என்ற தலைப்பிலும், எழுத்தாளர் எஸ்.லட்சுமணப்பெருமாள் கி.ரா.வின் படைப்புகளில் மண்ணும், மனிதர்களும் என்ற தலைப்பிலும் பேசினர்.

தொடர்ந்து, மதரா இயக்கிய கதவு குறும்படம் திரையிடப்பட்டது. பின்னர், கி.ரா.வும், நானும் என்ற தலைப்பில் எழுத்தாளர்கள் பூமணி, வண்ணதாசன், சோ.தர்மன், கோணங்கி, வித்யாஷங்கர், மாரீஸ், சாரதி, பொன்னுராஜ், நாறும்பூநாதன், உதயசங்கர், ஜா.மாதவராஜ், பால்வண்ணம், தேவப்பிரகாஷ், பாலு, திடவை பொன்னுச்சாமி, முருகபூபதி, எஸ்.காமராஜ், சுவடி ஆகியோர் பேசினர். மு.மதியழகன் கி.ரா.வின் கதை என்ற தலைப்பில் பேசினார். எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலர் ஆனந்தன் வாழ்த்தினார். மாநிலச் செயலர் எழுத்தாளர் சு.வெங்கடேசன் வேரும், விழுதுகளும் என்ற தலைப்பில் பேசினார்.

தொடர்ந்து, புதுவை இளவேனில் இயக்கிய முன்னத்தி ஏர் ஆவணப்படம் திரையிடப்பட்டது. நிகழ்ச்சிகளை சங்க மாநிலத் துணைச் செயலர் அ.லட்சுமிகாந்தன் தொகுத்து வழங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் ராமசுப்பு நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பெருமாள்சாமி, கோபால்சாமி, அய்யலுசாமி, பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர்.




தமிழ்த் தேசிய அமைப்புகள் திருச்சியில் 31-05-2017 நடத்திய போராட்டம் 





தமிழ்த் தேசிய அமைப்புகள் திருச்சியில் 31-05-2017ல் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நானும் பங்கேற்றேன். 1965 மாணவர் போராட்டதில் முன்னணியில் நின்ற பழைய நினைவுகள் மேலெழுந்தன. கைதாகி அன்று மாலை விடுவிக்கப் பட்ட வேளை நான் சக போராளி வீர சந்தானமிடம் தெரிவித்தது ”மீண்டும் ஒரு போரில் சந்திப்போம்”.

போராட்டத்தில் நானும், தோழர் வீரசந்தானமும், தோழர் பெ.மணியரசன், அய்யா பழநெடுமாறன் ஆகியோர்


மறைந்த மக்கள் பாவலர் இன்குலாப் முதல் ஆண்டு நினைவேந்தல் கவிதை திரட்டு வெளியீடு  - 16 டிசம்பர் 2017










விளாத்திகுளத்தில் நூல், ஆவணப்படம் வெளியீட்டு விழா - 26.04.2017

இசைமேதை ஸ்ரீலஸ்ரீ நல்லப்ப சுவாமிகளின் 52ஆவது ஆண்டு இசை ஆராதனை விழா மற்றும் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்று நூல், ஆவணப்படம் வெளியீட்டு விழா நடைபெற்றது.



விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதி முன்னாள் உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் தலைமை வகித்தார். எழுத்தாளர்கள் புதுச்சேரி பா.செயப்பிரகாசம், எட்டயபுரம் இளசைமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல்லப்பசுவாமிகள் கலை இலக்கிய இசை மன்றப் பொறுப்பாளர் இளையராஜா மாரியப்பன் வரவேற்றார்.

விழாவில், நல்லப்ப சுவாமிகள் ஜீவ சமாதி அமைவிடத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, இசை அஞ்சலி நடைபெற்றது. தொடர்ந்து விழா மேடையில் நல்லப்பசுவாமி திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


விழாவில், நல்லப்ப சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் வெளியிட, வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக அவைத்தலைவர் மு. சங்கரவேலு பெற்றுக்கொண்டார். நல்லப்பசுவாமிகளின் ஆவணப்படத்தை சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் வெளியிட, மதுரை தியாகராஜர் கல்லூரியின் முதன்மை இசை ஆய்வாளர் நா. மம்மது, வேம்பு தொண்டு நிறுவன இயக்குநர் பங்குத்தந்தை லாரன்ஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

நூல் தொகுப்பு ஆசிரியர் என்.ஏ.எஸ். சிவகுமார், ஆவணப்பட இயக்குநர் சி.மகேந்திரன் ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.

விழாவில், வீரபாண்டிய கட்டபொம்மனின் வழித்தோன்றல் வீமராஜா (எ) ஜெகவீரபாண்டிய துரை, நல்லப்பசுவாமிகளின் வழித்தோன்றல் பி.பால்ராஜா, கலைமாமணி கைலாசமூர்த்தி, கலைவளர்மணி இசக்கியப்பன், கவிஞர் மா.மேனன், நல்லப்ப சுவாமிகள் இசைக்குழு பொறுப்பாளர் பி.சென்னையன், எட்டயபுரம் பரமானந்தம், பேராசிரியர் சங்கரராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நல்லப்ப சுவாமிகள் இசைக்குழுத் தலைவர் துரை அரசன் நன்றி கூறினார்.

நன்றி: தினமணி - மே 2017

நல்லப்ப சுவாமிகள் பற்றிய பா.செயப்பிரகாசம் கட்டுரையை இங்கு படிக்கலாம்.



கி.ராஜநாராயணனின் 95-ஆவது பிறந்தநாள் - 16 செப்டம்பர் 2017

கரிசல் காட்டு எழுத்தாளர் என போற்றப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் 95-ஆவது பிறந்தநாள் விழா கடந்த 16-ஆம் தேதி புதுச்சேரி பல்கலைக்கழக மாநாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிராவின் பேத்தியின் திருமண வரவேற்பும் நடந்தது.

கருத்தரங்கம், வாகை முற்றம், நிலாச்சோறு, வாழ்த்தரங்கம் என பல பிரிவுகளாக நிகழ்ச்சி நடைபெற்றது. தொடக்கத்தில் இளவேனில் இயக்கிய ‘முன்னத்தி ஏர்’, இடைச்செவல், ஆகிய கதைகள் ஆவணப்படங்களாக திரையிடப்பட்டன. வாகை முற்றத்தில் கி.ராவுடன் வாசகர்கள் கலந்துரையாடினர். சிறந்த சிற்றிதழ்க்கான கரிசல் விருது தளம் காலாண்டிதழ்க்கும், எழுத்தாளர்க்கான கரிசல் விருது ரமேஷ் பிரேதனுக்கும் வழங்கப்பட்டது. சிலம்பு நா.செல்வராசு எழுதிய ‘பேராசிரியர் கி.ரா’ நூலை கி.ரா வெளியிட, அவரது துணைவியார் கணவதி அம்மா பெற்றுக்கொண்டார். கி.ரா.பிரபி எழுதிய ‘கரிசல் மனிதர்கள்’ நூலை எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் வெளியிட கவிஞர் கலாப்பிரியா பெற்றுக் கொண்டார்.









மறைந்த மக்கள் பாவலர் இன்குலாப் முதல் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு - 03 டிசம்பர் 2017

இன்குலாப் கவிதைகளின் முழுத் திரட்டான “ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்” மற்றும் இன்குலாப் பற்றிய கட்டுரைத் தொகுப்பான “அதிர்வுகள்” ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.




எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் - செக்கோஸ்லோவாகியத் தலைநகர் திபிராகில் “இசைக்கலைஞன் மொஸார்ட் பிறந்த மண் உங்களை வரவேற்கிறது” என்பதாக பெரிய தோரணவாயில் உள்ளது! … ‘புதுமைப்பித்தன் பிறந்த நெல்லை மண் வரவேற்கிறது’ என்று நாம் எழுதிவைத்திருக்கிறோமா? இதை இங்கு எதிர்பார்க்க முடியுமா? ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து 1970-ல் சட்டமன்றத்தில் இன்குலாப் எழுதிய படைப்பை பாடத்திட்டத்திலிருந்து நீக்கிய நிகழ்வு தமிழ்நாட்டில் நடந்தது. கூட்டம் நடத்தவும் கெடுபிடிகள் இங்கு உண்டு. பாரதி, பாரதிதாசன் காலம் போல, இன்குலாப் காலம் ஒன்று உண்டு என்று புகழாரம் சூட்டினார்.


இன்குலாப் குறித்து ‘நிழல்’ திருநாவுக்கரசு உருவாக்கிய ஆவணப் படமும் திரையிடப்பட்டது. காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தினரும் பாடகி அகிலாவும் இன்குலாப் பாடல்களை உணர்வுடன் பாடி மகிழ்வித்தனர். இயக்குநர் அம்ஷன்குமார் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மனுசங்கடா…’ பாடல் ஒலிபரப்பும் அனைவரையும் கவர்ந்தது.





எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தலைமை உரையை இங்கு காணலாம்.

நன்றி: தீக்கதிர்



கரிசல் எழுத்துக்களின் முன்னத்தி ஏராகத் திகழ்ந்தவர் கி.ரா.
நன்றி: தினமணி - 1 அக்டோபர் 2017


பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற கி.ராஜநாராயணனின் 95 -ஆவது பிறந்த நாள் விழாவில்  வெளியிடப்பட்ட 'கிரா என்றொரு கீதாரி' என்ற புத்தகத்துடன் எழுத்தாளர்கள் வண்ணதாசன், பா.செயப்பிரகாசம் உள்ளிட்டோர்.


தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் ஆகியவை சார்பில் பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற கி.ராஜநாராயணனின் 95 ஆவது பிறந்த நாள் விழாவில் வண்ணதாசன் பேசியது:

கேரள மாநிலத்தில் எழுத்தச்சன் என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல பல இளம் தலைமுறை எழுத்தாளர்கள், வாசிப்பாளர்களுக்கு எழுத்தறிவித்தவராக கி.ராஜநாராயணன் விளங்கினார்.

தமிழ் இலக்கியத்தில் கரிசல் எழுத்துக்களின் முன்னத்தி ஏராகத் திகழ்ந்தவர் கி.ரா. அவரது வழியில் பின்னத்தி ஏராக பா.செயப்பிரகாசம், பூமணி, சொ.தர்மன் உள்ளிட்டோர் பயணித்து வருகிறார்கள். அதனால் கரிசல் காட்டில் உழுது உழுது மண் புரண்டு கொண்டே இருக்கிறது.

கதவு உள்ளிட்ட அவரது படைப்புகள் அனைத்தும் வாசிப்பாளர்களைக் கவர்ந்திழுக்கும் அம்சமாகும். திறனாய்வாளர் தி.க.சி.யின் மகனாக இருந்ததால் கி.ரா. உள்ளிட்ட பலரது கடிதங்கள், நூல்களை வாசிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அதன்படி கதவு சிறுகதை பிரசுரிக்கும் முன்பாக கைப்பிரதியின்போதே படித்து பார்த்து வியந்தேன். அதேபோல எனது கதையை அவரிடம் கொடுத்து திருத்தித்தரும் ஆசானாகவும் ஆக்கிக்கொண்டேன். கி.ரா.வின் வலது கரம் போல கழனியூரான் செயல்பட்டார்.

மனதை இறுக்கமாக்கும் துயரமான கதைகளுக்குக்கூட ஆனந்தமான சங்கீதம் கொடுத்து தனது படைப்பில் வித்தியாசத்தை ஏற்படுத்தினார். குழந்தைப் பருவ நிகழ்வுகளை, ஆனந்தக் கழிப்புகளை தனது பாணியில் எழுத்தாக்கி வாசகர்களைக் கவர்ந்தவர். கதைத் தலைப்புகளில் நுட்பத்தோடு செயல்பட்டால் உச்சம் பெறலாம் என்பதைக்கூட அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள முடியும்.

புதிய வாசிப்பாளர்கள் அனைவரும் கி.ரா.வின் அனைத்து படைப்புகளையும் படித்தறிய வேண்டும். அவரது வாழ்வை ஆவணப் படமாக எடுத்துள்ள புதுவை இளவேனில், கழனியூரானின் தொகுப்பை வெளிகொணர்ந்துள்ள கார்த்திக் புகழேந்தி ஆகியோருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.

தமுஎகச மாவட்டச் செயலர் இரா.நாறும்பூநாதன், எழுத்தாளர்கள் பா.செயப்பிரகாசம், எம்.எம்.தீன், உதயசங்கர், கவிஞர் கிருஷி ஆகியோர் வாழ்த்தி பேசினர். மயன் ரமேஷ்ராஜா, ஏ.பாலசுப்பிரமணியன், சுந்தர், முத்துக்குமார், மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மா.முருகன் நன்றி கூறினார்.



பெரியாரியம் - பெண்ணுரிமை விவாதங்களுடன் ‘பெண் மானுடம்’ நூல் வெளியீட்டு விழா - 9 ஜூலை 2017
நன்றி: கீற்று

பெரியார் சிந்தனைகள் - பெண்ணுரிமை குறித்த விவாதங்களின் நிகழ்வாக பேராசிரியர் சரசுவதி எழுதிய ‘பெண் மானுடம்’ நூல் வெளியீட்டு நிகழ்வு ஜூலை 9ஆம் தேதி மாலை சென்னை ‘கவிக்கோ’ அரங்கில் சிறப்புடன் நிகழ்ந்தது. பல்வேறு இதழ்களில் பேராசிரியர் சரசுவதி எழுதிய 32 கட்டுரைகளின் தொகுப்பாக வெளி வந்திருக்கும் இந்த நூலை, பரிசல் புத்தக நிலையம் வெளியிட்டிருக் கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளையும் உணர்வுகளையும் இலக்கியங்களாக்கிய எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் தலைமையில் நடந்த நிகழ்வில் மணிமேகலை சவுரிராசன் வரவேற்புரையாற்ற, கவிஞர் காளமேகம், ஓ. சுந்தரம், கீதா இராமகிருட்டிணன், கவிஞர் ஜெய பாஸ்கரன், ஆழி. செந்தில்நாதன், முனைவர் சுந்தரவள்ளி ஆகியோர் நூல் குறித்தும் பெண்ணுரிமை குறித்தும் ஆழமான கருத்துகளை முன் வைத்தனர். நிறுவனங்களின் வழியாகவும் குடும்ப அமைப்பின் வழி யாகவும் மறுக்கப்படும் பெண்ணுரிமை குறித்தும் சமூகத்திலும் குடும்பத்தி லும் எதிர்கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன.


மனித உரிமைப் போராளி, வழக்குரைஞர் பி.வி.பக்தவத்சலம் அவர்களின் பத்தாமாண்டு நினைவு நாள் - 
 02-09-2017, சென்னை லயோலாக் கல்லூரி



நிகழ்வின் தொடக்கதில் நீட் தேர்வால் படுகொலை செய்யப்பட்ட மாணவி அனிதாவுக்கு இரங்கல் தெரிவித்து இரு மணித்துளிகள் அமைதி காக்கப்பட்ட்து. எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அஞ்சலிக் குறிப்பை வாசித்தார். அஞ்சலிக் குறிப்பு வருமாறு:

“அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மாணவியான அனிதா, மாநில அரசுத் தேர்வில் கடுமையாய் உழைத்து 1176 மதிப்பெண்கள் பெற்றார்.அவருடைய கட்-ஆப் மதிப்பெண் 196. அதிகமான மதிப்பெண் பெற்றிருந்தும் நடுவணரசு கொண்டு வந்த நீட் தேர்வு முறை அவரது உயிரைப் பறித்துள்ளது. இருந்து போராடியிருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியது வரை, அவர் இருந்துதான் போராடினார். உச்ச நீதிமன்றத்தின் கதவுகளும் திறக்காத போது, இருந்து போராடிக் கிடைக்காத ஒன்றை இறந்து போராடிக் கொண்டிருக்கிறார். இது மரணம் அல்ல: படு கொலை. சுருங்கிவரும் சனநாயகம் இத்தகைய கொலைகளுக்கு பாதை அமைக்கும். மக்கள் உயிர் வாழத் தேவையான சன்நாயக உரிமைகளைத் தொடர்ந்து மறுத்து வரும் மத்திய, மாநில அரசுகள் தாம் இந்தக் கொலைக்குக் காரணம். போராடிப் பார்த்தும் கிடைக்காத, சமூக நீதியின் பொருட்டு உயிர் பறிக்கப் பட்ட மாணவி அனிதாவின் இழப்புக்கு, அனைவரும் இரு மணித்துளிகள் எழுந்து நின்று அமைதி அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.”





















பள்ளிகளுக்கிடையேயான கலைத்திறன் போட்டி நடுவர்கள்

’கரிசல் கலை இரவின்’ தொடக்கமாக மண்ணின் கலையான பறை முழங்கி நடக்க, கலைஞர்கள், பங்கேற்பாளர்கள் அனைவரும் பேருந்து நிலையத்திலிருந்து ஒன்றுகூடி கலைப்பேரணி வந்தனர். அனைத்துக் கலைஞர்களும் இணைந்து கலைகளைக் கௌரவிக்க விழாத் திடல் நோக்கி நடந்தனர்.
 
கரிசல் கலை இரவை பாவலர் இன்குலாபுக்கு காணிக்கையாக்கி வேம்பு இளையோர் கூட்டமைப்பினர் தொடங்கினர். இன்குலாபுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது எழுச்சிமிகு பாடலான "மனுசங்கடா நாங்க மனுசங்கடா……." பாடலோடு கரிசல் கலை இரவு தொடங்கியது.

மாலை 5.25 மணிக்கு, கரிசல் வட்டாரத்தில் கிராமியக் கலைகளைத் தொடர்ந்து நிகழ்த்தி வரும் கிளாரினெட் கலைக்குழுவினரின் கிளாரினெட் மங்கள இசையைத் தொடர்ந்து, பள்ளிகளுக்கிடையேயான கலைத்திறன் போட்டி நடந்தது. திருமிகு ஜெயந்தி (தமிழ்ப்பேராசிரியை, தொன்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,கீழஈரால்), எழுத்தாளர் திரு பா.செயப்பிரகாசம், ஆவணப்பட இயக்குநர் தோழர் திருமிகு திவ்யா, அருட் தந்தை ஆரோக்கியம் ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கலைத்திறன் போட்டிகளுக்கு நடுவர்கள் பொறுப்பை ஏற்றிருந்தனர்.

மாலை 5.35 மணிக்கு வேம்பு இளையோர் கூட்டமைப்பு நடத்தும் கரிசல் கலை இரவு 2017 க்கான அறிமுகவுரையினை வேம்பு மக்கள் சக்தி இயக்குநர் தந்தை ஆரோக்கியம் அவர்கள் நிகழ்த்தினார். விழாவினைத் தொடங்கிவைத்து பா.செயப்பிரகாசம் உரையாற்றினார். பா.செ.வின் முழுமையான உரையை இங்கு வாசிக்கிலாம்.

மாலை 6.00 மணி முதல் பல்வேறு குழுவினரின் கலை நிகழ்த்தல் நடந்தது. நிகழ்ச்சியில் தூய சேவியர் கல்லூரி நாட்டார் வழக்கியல் துறையைச் சார்ந்த பேரா.திருமிகு பிரிட்டோ, தோழர் திவ்யா ஆகியோர் உரையாற்றினர்.

இரவு 12 மணிக்கு இளையோர் கூட்டமைப்பு உறுப்பினர் ஜஸ்டின் அவர்கள் நன்றியுரை கூற, விழா  எழுச்சிகரமாய் நிறைவுற்றது












எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் 1962-1967 மதுரை தியாகராசர் கல்லூரி முன்னாள் மாணவர், 
மொழிப் போராட்ட ஈகி. 1967க்குப் பிறகு 
முதல் முறையாக தியாகராசர் கல்லூரியில் உரை... 

இப்போதைய மாணவர்களோடு முன்னாள் மாணவர்களாக பழைய நினைவுகளுடன் தோழர்கள் ஐ.செயராமன், வீராச்சாமி (மறவர்கோ), மீ.த.பாண்டியன் மற்றும் கவிஞர் லிபி ஆரண்யா ஆகியோர் நிகழ்ச்சியை காண வந்திருந்தனர்.
























நாடக விழா, தூய நெஞ்சக் கல்லூரி, திருப்பத்தூர், மே 2017



கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

பலியாடுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்