பா.செயப்பிரகாசம் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். குறிப்பாகச் சிறுகதைகளில் இவரது பங்களிப்பு தனித்துவமானது. ஒரு ஜெர...
பா.செயப்பிரகாசம் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். குறிப்பாகச் சிறுகதைகளில் இவரது பங்களிப்பு தனித்துவமானது. ஒரு ஜெருசலேம், காடு ஆகிய தொகுப்புகள் முக்கியமானவை. மனஓசை இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்துள்ளார். சூரியதீபன் என்னும் புனைபெயரிலும் எழுதியுள்ளார். அன்று தொடங்கி இன்று வரை மொழி, தேசியம், வர்க்கம், சாதி, பாலியல் என்று எதுவானாலும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே சார்ந்து போதல் என்ற உண்மைக் கலைஞனுக்கே உரிதான உளவியலைச் சிந்திச் சிதறவிடாமல் தக்க வைத்துக் கொண்டு வருகிறார். ஏறத்தாழ பத்து ஆண்டுகள் மனஓசை இதழை  நடத்துவதற்காக தனது படைப்பாக்க மனநிலையையே தாரை வார்த்திருக்கிறார்.
பா.செயப்பிரகாசம் கதைகள் முழுமையான தொகுப்பு எனும் இப்புத்தகம் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பாகும். சந்தியா பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருக்கிறது. "ஜே. பி" என நண்பர்களால் அழைக்கப்படும் பா.செயப்பிரகாசம் 1941இல் பிறந்தவர். எழுபதுகளின் புகழ் பெற்ற இலக்கியப் போக்குகளில் ஒன்றான கரிசல் இலக்கியத்தைச் செழுமைப்படுத்திய முக்கியமான சிறுகதைக் கலைஞர்களுள் ஒருவர். வானம் பார்த்த பூமியான கரிசல் காட்டு வாழ்வின் துயரார்ந்த பகுதிகளைக் கவித்துவம் ததும்பும் தன் படைப்பு மொழியில் ‘உந்திக் கொடியோடும் உதிரச் சேற்றோடும்’ முன்வைத்த பா.செ, தொடக்கத்தில் தன் சொந்தப் பெயரிலும் பிறகு சூரியதீபன் என்னும் புனைபெயரிலும் சிறுகதைகள் எழுதியவர் மறைந்த கரிசல் படைப்பாளி வீர.வேலுச்சாமி அவர்களின் அனைத்துப் படைப்புகளையும் தேடிச் சேகரித்து ஒரே தொகுப்பாக தோழர் பா.செயப்பிரகாசம் ‘மண்ணின் குரல்’ என்ற பெயரில் நூலாக்கியுள்ளார். இவரின் சிறந்த சிறுகதைகள் ஒரு ஜெருசலேம், அம்பலக்காரர் வீடு, கரிசலின் இருள்கள், இருளுக்கு அழைப்பவர்கள், தாலியில் பூச்சூடியவர்கள்.
- என். செல்வராஜ், திண்ணை - 5 செப்டம்பர் 2016
 
							     
							     
							     
							     
 
 
 
 
 
 
 
 
கருத்துகள் / Comments