பங்குப்பெற்ற நிகழ்வுகள் 2008 - இந்தியா

'கருத்துரிமையும் வாழ்வுரிமையும்' கருத்தரங்கு, 14.06.2008, சென்னை புக் பாயிண்ட் அரங்கு  

காலச்சுவடு நடத்திய  'கருத்துரிமையும் வாழ்வுரிமையும்' என்னும் தலைப்பிலான கருத்தரங்கு 14.06.2008 அன்று நடைபெற்றது.

ஆட்சியாளர்களாலும் அதிகார வர்க்கத்தாலும் தொடர்ந்து சோதனைகளுக்குள்ளாகிவரும் கருத்துரிமை, வாழ்வுரிமை சார்ந்த பிரச்சினைகளில் அக்கறையோடு இயங்கிவரும் படைப்பிலக்கியவாதிகள், இதழியலாளர்கள், மனித உரிமைப் போராளிகள் பங்குபெற்ற இக்கருத்தரங்கிற்குத் திரளான வாசகர்கள் வந்திருந்தனர். 

பிற்பகல் 5.30 மணிக்குக் காலச்சுவடு பொறுப்பாசிரியர் தேவிபாரதியின் கட்டுரையோடு நிகழ்வு தொடங்கியது. தொடர்ந்து எழுத்தாளர் ராஜேந்திர சோழன், தியாகு, அனிருத்தன் வாசுதேவன், பேராசிரியர் கல்யாணி, ஓவியா, சதானந்த் மேனன், கிருஷ்ணானந்த், பா.செயப்பிரகாசம் ஆகியோர் கலந்துகொண்டு, சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசுகள் மனித உரிமைகள் சார்ந்து கடைபிடித்துவந்துள்ள கொள்கைகளின் அரசியலைக் குறித்துத் தம் கருத்துகளை விரிவாகப் பதிவுசெய்தனர். கருத்துரிமை சார்ந்த விவாதங்களைத் தொடர்ந்து நடத்துவதும் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வதும் இன்றைய தேவை என்பதை அனைவரும் வலியுறுத்தினர். தீவிர இதழ் தளத்தில் இயங்கிவரும் பத்திரிகையாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் கருத்துரிமையைப் பாதுகாப்பதில் முக்கியப் பொறுப்புள்ளது என்பதும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட முக்கியமான கருத்து.

காலச்சுவடு ஆசிரியரும் பதிப்பாளருமான கண்ணன் நன்றி கூறினார்.


வின்' தொலைக்காட்சி விவாதம்  - ஆகஸ்ட் 2008
பெரியார் நூல்களுக்கு - அறிவுசார் சொத்துடமை கோரி, கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிவிப்பு தொடர்பாக `வின்' தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த விவாதத்தில் எழுத்தாளர்கள் ஞாநி, சூரியதீபன், ஓவியா, ஆகியோர் பங்கு கொண்டு, பெரியார் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திப் பேசினர். சி.ஆர்.பாஸ்கரன் நிகழ்ச்சியை வழி நடத்தினார்.

சூரியதீபன் பேசுகையில், பாரதியின் பாடல்கள் மார்வாடியிடம் அடகு வைக்கப்பட்டிருந்தது; அதை திரைப்பட அதிபர் ஏ.வி. மெய்யப்ப செட்டியார் மீட்டு, பாரதியின் பாடல்களை இசைத் தட்டுகளாக வெளியிட்டார். பிறகு வல்லிக்கண்ணன் போன்ற தமிழறிஞர்கள் முயற்சியால் நாடு முழுதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு, அன்றைய முதல்வர் ஓமந்தூர் ராமசாமி அவர்களிடம் அளித்து, நாட்டுடைமையாக்க வலியுறுத்தினர். அப்போதுதான் பாரதி பாடல்கள் நாட்டுடைமையாக்கப் பட்டது. அதன் காரணமாகத்தான், இன்று அனைத்து பதிப்பகங்களும் பாரதி கவிதை நூல்களை வெளியிட்டு வருகின்றன என்றார்.

பெரியாருடைய கருத்துகளை தவறாக திரித்து விடுவார்கள் என்று இப்போது கூறுகிற வீரமணி போன்றவர்கள்தான், பெரியார் கொள்கைக்கு நேர் எதிரான ஜெயலலிதாவோடு பெரியாரையும் இணைத்து படங்களை வெளியிட்டு, பெரியாரின் கொள்கை எதிரிகளோடு கை கோர்த்து நின்றார்கள் என்று சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் கண்டனக்கூட்டம் - 30 செப்டம்பர் 2008

கடந்த 22 செப், 2008 அன்று போரூரில் பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் தமுஎச 11-வது மாநில மாநாட்டு பிரச்சாரத் துவக்க விழாவில், இந்து முன்னணி மதவெறியர்களின் தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் கண்டனக்கூட்டம்.

30-09-2008, செவ்வாய்க்கிழமை
மாலை 5.30 மணி
இடம் - ஆற்காடு ரோடு,
காரம்பக்கம்ம்(அண்ணா சிலை அருகில்)
போரூர்

தப்பாட்டம் - போக்குவரத்து தொழிலாளர்கள்.
இசைப்பாடல்கள் - தமுஎச தோழர்கள்.
தபேலா - சுந்தர்
கண்டனம் முழங்கிட...
ச. தமிழ்ச்செல்வன், மாநில பொதுச்செயலாளர், தமுஎச.
விடுதலை ராசேந்திரன், பெரியார் திராவிடர் கழகம்
வழக்கறிஞர் ச. செந்தில்நாதன்
கவிஞர் இன்குலாப்
எழுத்தாளர் பிரபஞ்சன்
கவிஞர் சூரியதீபன், தமிழ்படைப்பாளிகள் முன்னணி
பேராசிரியர் அ.மார்க்ஸ்
எழுத்தாளர் இராசேந்திரச் சோழன், தமிழ்படைப்பாளிகள் முன்னணி
திருமிகு. த. வெள்ளையன், வணிகர் சங்கத் தலைவர்
இயக்குனர் சீமான்
கூத்துப்பட்டறை ந. முத்துசாமி
பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால்
பத்திரிக்கையாளர் ஜவஹர்
தோழர்.சு.பொ.அகத்தியலிங்கம்
கவிஞர். இரா.தெ. முத்து
ஓவியர் சந்துரு
ஓவியர் வீரசந்தானம்,
தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம்
பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன்
ஓவியர் மருது
தலித்முரசு புனித பாண்டியன்
பேராசிரியர். சி. லட்சுமணன்
தோழர் அன்புத் தென்னவன், திராவிட இயக்கப் பேரவை
ஓவியர் புகழேந்தி
புலவர் பா. வீரமணி
நாடகக் கலைஞர் காளீஸ்வரன்
கவிஞர் பச்சியப்பன்
கவிஞர் கார்முகில்
ஓவியர் நடராஜ்
ஓவியர் கார்த்திகேயன்
ஓவியர் மனோகர்
ஓவியர் வின்சி
திருமிகு கிருபானந்த சாமி துறைமுகத் தமிழ்ச்சங்கம்
கருப்புப் பிரதிகள் நீலகண்டன்
உதயம் வ.செல்வம்
தோழர் கருணாகரன், போக்குவரத்து சம்மேளனம், சி.ஐ.டி.யு.
தோழர் ச. அசோகன்
நாடகக் கலைஞர் ஜேசுதாஸ்
தோழர் சந்தோஷ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
தோழர் ஸ்டாலின், இந்திய மாணவர் சங்கம்
வழக்கறிஞர் அ. காரல் மொழி
தோழர் எம். சேகர், ஆட்டோ சங்கம், சி.ஐ.டி.யு.
நாடகக் கலைஞர். கி. அன்பரசன்
கவிஞர் நா.வே.அருள்
எழுத்தாளர் மணிநாத்
எழுத்தாளர் பா.ராமச்சந்திரன்

இவர்களுடன்...
போரூர் பகுதி அனைத்துக் கட்சித் தலைவர்கள்

அனைவரும் வாரீர்! கண்டனம் முழங்கிட...


உலகத் தமிழர் பேரமைப்பு - 6ஆம் ஆண்டு நிறைவு விழா
உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு
மதுரை திருவள்ளுவர் ஆண்டு 2039 - 2008 ஆகஸ்டு 16 சனி

உலகத் தமிழர் பேரமைப்பின் ஆறாம் ஆண்டின் நிறைவு விழா உலகத் தமிழ் எழுத்தாளர் சிறப்பு மாநாடாக ஆகஸ்ட் 16, 2008 அன்று மதுரையில் நடைபெற்றது.

மதுரை மாநகரில் உள்ள அரசரடிப் பகுதியில் இறையியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஏராளமான தமிழக எழுத்தாளர்களும், வெளி நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர்.


உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் தமிழ் எழுத்துலகிற்கு அருந்தொண்டாற்றி வரும் எழுத்தாளர்கள் தி.க. சிவசங்கரன், கி.இராஜநாராயணன், எஸ்.பொன்னுதுரை (எஸ்.பொ), ஜே.வி.கண்ணன், வே.தங்கவேலு (நக்கீரன்) ஆகியோருக்கு உலகப் பெருந்தமிழர் விருது வழங்கப்பட்டது.

இம்மாநாட்டில் பல்வேறு கட்சிகளையும் அமைப்புகளையும் சேர்ந்த எழுத்தாளர்களும் தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

மொழிச் செழுமையில் எழுத்தாளர் பங்கு கருத்தரங்கிற்கு முனைவர் நடன காசிநாதன் தலைமை தாங்கினார். முனைவர் தமிழப்பன் தொடக்கி வைத்தார். சூரியதீபன், மலேசியா செம்பருத்தி இதழ் ஆசிரியர் சுப.பசுபதி, முனைவர் இராம.சுந்தரம், மரு.அன்பழகன், முனைவர் பழ.கோமதிநாயகம் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். வரவேற்புக் குழுச் செயலாளர் ப.சிவக்குமார் நன்றியுரையாற்றினார்.

மொழிச் செழுமையில் எழுத்தாளர் பங்கு என்ற தலைப்பில் நடைபெற்றக் கருத்தரங்கில் 'மொழிப்பெயர்ப்புத் தமிழ்' என்ற தலைப்பில் எழுத்தாளர் சூரியதீபன் அவர்கள் உரையாற்றுகிறார்.



பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் எழுச்சியூட்டும் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மாநாட்டிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து தமிழின உணர்வாரள்கள் பெருந்திரளில் கூடியிருந்தனர்.


‘கூடு’ இலக்கிய ஆய்வரங்கின் மூன்றாமாண்டு தொடக்க விழாவும், 25ஆவது அமர்வும், நாமக்கல் - 20.07.2008

‘கூடு’ என்ற இலக்கிய ஆய்வரங்கின் மூன்றாமாண்டு தொடக்க விழாவும், 25ஆவது அமர்வும் நாமக்கல்லில் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் இல்லத்தில் சிறப்பாக (20.07.2008 மாலை 4.00 - 7.00) நிகழ்ந்தது. இதில் பா.செயப்பிரகாசம் மற்றும் பிரபஞ்சன் ஆகியோர் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டு, பா.செயப்பிரகாசம் ‘வட்டார இலக்கியம்’ என்ற தலைப்பிலும் பிரபஞ்சன் ‘கதைகளினூடே பயணம்’ என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர். நிகழ்வில் தமிழ் ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.

திரு பா.செயப்பிரகாசம் மொழியின் முக்கியத்துவம், வட்டாரச் சொற்களின் அழிவு, கரிசல் எழுத்தாளர்கள் வட்டார மக்களின் புழங்கு பொருள் சார் வழக்காறுகள் போன்றன பற்றி விளக்கிக்கூறினார். இவரது உரை தஞ்சை மற்றும் கரிசல் வட்டார இலக்கியத்தைப் பற்றி இருந்தது.

திரு. பிரபஞ்சன் கதை படிப்பதன் நோக்கம் என்ன, கதையைப் படைப்பதன் நோக்கம் என்ன, சிறந்த கதை எவ்வாறு இருக்கும் என்று பல்வேறு சிறுகதைகளை எடுத்துக்கூறி விளக்கினார். வரலாற்று மீட்டுருவாக்கக்கதைகள் என்ற போர்வையில் எழுதப்படும் விசம்தோய்ந்த கதைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இரண்டு படைப்பாளர்களும் தங்களின் உரையில் உதாரணத்திற்காகக் கூடத் தாங்கள் எழுதிய கதைகளைப் பற்றிக் கூறவில்லை என்பது இலக்கிய அவையடக்கத்திற்குச் சான்றாக இருந்தது.

சிறப்புரைகளைத் தொடர்ந்த கலந்துரையாடல் நிகழ்ந்தது. பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதோர் இலக்கியம் பற்றியும் கணிப்பொறிப் பயன்பாட்டினால் ஏற்படும் வட்டார வழக்குச் சொற்களின் அழிவு பற்றியும் வட்டார இலக்கியங்களின் பயன் குறித்தும் வினாக்கள் எழுப்பப்பட்டு விடைகள் பெறப்பட்டன.
நிகழ்ச்சியின் நன்றியுரையில் சரவணன் மறைந்த எழுத்தாளர் திரு. நா.பார்த்தசாரதி நடத்திய ‘தீபம்’ இலக்கிய அரங்குபோலக் ‘கூடு’ இலக்கிய அரங்கும் அழிந்துபடக் கூடாது என்று தனது ஆதங்கத்தை முன்வைத்துப் பேசினார்.

சிறப்பு விருந்தினருக்குப் பெருமாள் முருகன் அவர்கள் நினைவுப் பரிசாகப் புத்தகம் வழங்கினார். தேனீர் விருந்துடன் அரங்கு கலைந்தது. நிகழ்ச்சியினை ம. நடராஜன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.


சட்டமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற தமிழ்த் தேசிய அமைப்பினர் கைது

சென்னை, 12-11-2008
ஈழத்தமிழர் மீதான சிங்கள அரசின் போரை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென்பதை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தை நோக்கி பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற தமிழ்த் தேசிய அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர்.


சென்னை அண்ணா சாலை பெரியார் சிலை அருகிலிருந்து ஊர்வலமாக சென்று தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு முன்பு இந்திய அரசை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். காவல்துறையின் தடையை மீறி இவ்வார்ப்பட்டம் நடைபெறும் என தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளரான பழ.நெடுமாறன் அறிவித்திருந்தார்.


12-11-2008 காலை சென்னை அண்ணா சாலை பெரியார் சிலை அருகே காவல்துறையின் தடையை மீறி சட்டமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற தமிழ்த் தேசிய அமைப்பினர் 130 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.


இப்பேரணிக்கு பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன், தமிழ்த் தேசிய விடுலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு, மறுமலர்ச்சி மக்கள் தமிழகத்தின் தலைவர் துரையரசன், கவிஞர் இன்குலாப், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், இராசேந்திரசோழன், ஓவியர் வீரசந்தனம் உள்ளிட்டோர் இவ்வார்ப்பட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தில், "இந்திய அரசே! போரை நிறுத்து", "ராசபட்சே திரும்பிப் போ", "இந்திய அரசு சிங்களவனுக்கு அள்ளிக் கொடுத்த ஆயுதங்களை திரும்பப் பெறு" போன்ற முழக்கங்கள் எழுப்பட்டன. கைதானவர்களை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

நன்றி: தமிழ் தேசிய பேரியக்கம்


ஈழத்தமிழரைக் கொன்று குவிக்கும் சிங்கள இனவெறி அரசைக் கண்டித்து தமிழ்ப் படைப்பாளிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைக்கும் உண்ணாநிலைப் போராட்டம்

நாள்: 24.12.2008
இடம்: சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில்

தலைமை - எழுத்தாளர் பிரபஞ்சன்
உண்னாவிரத்தை துவக்கிவைப்பவர் - சி.மகேந்திரன் பொது, செயலாளர் இந்திய பொதுவுடமைக் கட்சி
முடித்துவைப்பவர் - பாவலர் இன்குலாப்

ஒருங்கினைப்பு
  • பாவலர் கரிகாலன்
  • லலித் குமார்
  • பா.ஜோதிநரசிம்மன்

பங்கேற்று கண்டன உரை
  • தியாகு தமிழ்தேசியவிடுதலை இயக்கம்
  • எழுத்தாளர் இராஜேந்திரசோழன்
  • பாவலர் த.பழமலய்
  • எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்
  • மங்கயர்ச்செல்வன்
  • மீனவர் விடுதலை வேங்கைகள்
  • எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி
  • ஓவியர் வீரசந்தனம்
  • ஓவியர் புகழேந்தி
  • தோழர் செந்தாரகை
  • பாவலர் மனுஷ்யபுத்திரன்
  • முனைவர்.இரத்தினபுகழேந்தி
  • எழுத்தாளர் அஜயன் பாலா
  • எழுத்தாளர் இமயம்
  • எழுத்தாளர் ந.முருகேசபாண்டியன்
  • எழுத்தாளர் விழி.பா.இதயவேந்தன்
  • பாவலர் தமிழேந்தி
  • சுதீர்செந்தில்
  • ஆசிரியர் உயிர் எழுத்து
  • எட்வின்
  • யுகமாயினி
  • பாவலர் குட்டிரேவதி
  • பாவலர் யூமாவாசுகி
  • பாவலர் இரமேஷ் பிரேதன்
  • பாவலர் தமிழ்நதி
  • பத்திரிக்கையாளர் டி.எஸ்.எஸ்.மணி
  • பத்திரிக்கையாளர் கோவி.லெனின்
  • பாவலர்.கண்டராதித்தன்
  • பாவலர் பொதியவெற்ப்பன்
  • பாவலர் இனபா சுப்பரமணியன்
  • பாவலர் இலக்குமிகுமாரன் ஞானதிரவியன்
  • பாவலர் ந.மு.தமிழ்மணி
  • பாவலர் புதுவைத்தமிழ்நெஞன்
  • பாவலர் சி.சுந்தரபாண்டியன்
  • பாவலர் ரவிசுப்ரமணியன்
  • பாவலர் தேன்மொழி
  • பாவலர் எழில்.இளங்கோ
  • பாவலர் தமிழநம்பி
  • பாவலர் பட்டி.சு.செங்குட்டுவன்
  • பாவலர் ஆறு.இளங்கோவன்
  • பாவலர் ஆழி.வீரமணி
  • பாவலர் இளந்திரையன்
  • பாவலர் செஞ்சி தமிழினியன்
  • பாவலர் நற்றமிழ்நங்கை
  • பாவலர் முத்துகதிரவன்
  • பாவலர் லிபி ஆரண்யா
  • வி.வி.கதிர் திரைப்படஇயக்குனர்
  • வி.சேகர் திரைப்படஇயக்குனர்
  • மரியா மனோகர் இசையமைப்பாளர்

ஒருங்கிணைப்புகுழு
  • விழுப்புரம் சீ.தங்கராசு
  • கோ.பாபு
  • சென்னை ச.மாரிவேல்
  • உளுந்தூர்பேட்டை ஆ.சதக்கதுல்லா

தமிழ்ப் படைப்பாளிகள் கூட்டமைப்பு, தமிழ்நாடு
தொடர்புக்கு 99769 52022, 9894561154, 97510 75072, 99448 52295,93629 45655


சிங்கள அரசுக்கு இந்தியா கொடுத்த ஆயுதங்களை திரும்பப் பெற வேண்டும், சென்னையில் ஆர்ப்பாட்டம் - 13 அக்டோபர் 2008

ஈழத்தில் தமிழர்களை இனப்படுகொலை செய்து வரும் சிங்கள அரசுக்கு இராணுவ உதவிகள் செய்து வரும் இந்திய அரசைக் கண்டித்து சென்னை, பூங்கா நகர், நினைவரங்கம் (மெமோரியல் கூடம்) அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தேறியது. தமிழ்த் தெசப் பொதுவுடைமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகள் இவ்வார்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினர்.

இவ்வார்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு ஒருங்கிணைத்தார். இவ்வார்ப்பாட்டத்தில் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தோழர் சி.மகேந்திரன், பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சார்ந்த சோழன் நம்பியார், தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியின் செயலாளர் எழுத்தாளர் செயப்பிரகாசம், புலவர் புலமைப்பித்தன், ஓவியர் புகழேந்தி, எழுத்தாளர் ஓவியா, கவிஞர் தாமரை, வழக்கறிஞர்கள் அஜிதா, சேசுபாலன்ராஜா, எழுகதிர் இதழ் ஆசிரியர் அரு.கோபாலன், தஒவிஇ சென்னை மாவட்டச் செயலாளர் செய்யாளன், சட்டக் கல்லூரி மாணவர் அலை பாஸ்கர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் தமிழக மீனவர்கள் வலைகளுடன் குண்டு காயம் பட்டது போன்ற காட்சியை அமைத்து காண்போர் கவனத்தை ஈர்த்தனர். ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 பேர் கலந்து கொண்டு இந்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

பெண் படைப்புலகம் - இன்று சமகாலக் கருத்தரங்கம், விழுப்புரம் 12.10.2008

தலித் இலக்கிய எழுத்தாளர் இதயவேந்தன், தலித் இலக்கியக் கவிஞர் அன்பாதவன், இருவரும் இணைந்து, விழுப்புரம் நகரில் 12.10.2008ல் பெண் படைப்புலகம் - இன்று சமகாலக் கருத்தரங்கத்தை நடத்தினர்.

கவிஞரும், பேராரசிரியருமான த.பழமலய், மயிலம் தமிழ்க் கல்லூரி முனைவர் மா.சற்குணம், பேரா.பிரபா கல்விமணி (திண்டிவனம் மனித உரிமை இயக்கம்), எழுத்தாளர்கள் பா.செயப்பிரகாசம், பிரபஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

பெண் படைப்பாளர்களான முனைவர் பத்மாவதி விவேகானந்தன், ப.சிவகாமி இ.ஆ.பெ, முனைவர் அரங்கமல்லிகா, இரா.தமிழரசி கீதாஞ்சலி பிரியதர்ஷினி, சுதிர்தராணி, திலகபாமா, சு.தமிழ்செல்வி, கவிஞர் மதுமிதா, சக்தி அருளானந்தம், சக்தி ஜோதி ஆகியோர் கருத்தரங்கில் தங்களின் கருத்துக்களை பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள்.

இக்கருத்தரங்கில் எழுத்தாளர்களான பா.செயப்பிரகாசம், குரு.ராதாகிருஷ்ணன், பிரபஞ்சன் ஆகியோர் சிறப்புப் பொழிவுகளை நிகழ்த்தினர்.







தமிழீழத் தமிழர் வாழ்வுரிமை காக்க ஒரு நாள் தொடர் முழக்க ஆர்பாட்டம் - 22 செப்டம்பர் 2008



பா.செ.வுடன் ஓவியர் புகழ், கவிஞர் இன்குலாப்


பா,செயப்பிரகாசத்தின் "முடிந்து போன அமெரிக்க கற்பனைகள்" நூல் வெளியீட்டு விழா - 16/03/2008

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

Manal Novel - Jeyapirakasam deftly blends many folktales, rituals, folk beliefs with the modern day political happenings

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்