பங்குப்பெற்ற நிகழ்வுகள் 2009 - இந்தியா

பேராசிரியர் க.பஞ்சாங்கம் மணிவிழா - 07.02.2009, புதுச்சேரி செயராம் உணவகத்தில் உள்ள மதுரா அரங்கு

புதுச்சேரிப் பேராசிரியர் க.பஞ்சாங்கம் அவர்களுக்கு அகவை அறுபதாண்டு நிறைவை ஒட்டி அவரின் மாணவர்கள் ஏற்பாட்டில் மணிவிழா 07.02.2009 அன்று  புதுச்சேரி செயராம் உணவகத்தில் உள்ள மதுரா அரங்கில் நடைபெற்றது. கவிஞரும் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவாராக இருந்தவரும் சாகித்திய அகாதெமியின் தமிழ்மொழிப் பிரிவின் ஒருங்கிணைப்பாளருமான சிற்பி தலைமை தாங்கினார்.

விழாவில் தமிழகம் புதுச்சேரி சார்ந்த தமிழ்ப் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஆய்வாளர்கள் பலர் கலந்துகொண்டனர். பேராசிரியர் பஞ்சாங்கத்தின் நூல்களையும் அவரின் மாணவர்கள் எழுதிய நூல்களையும் கவிஞர் சிற்பி வெளியிட்டார். புதுவை அரசின் மேனாள் கல்வி அமைச்சர் சிவக்குமார் அவர்கள் பெற்றுக்கொண்டார்.


எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், கி.இராசநாராயணன், இரவிக்குமார் (ச.ம.உ) பாரதிபுத்திரன், பாலா, காவ்யா சண்முகசுந்தரம், த.பழமலய், கேமச்சந்திரன், ஆ.திருநாகலிங்கம், ந.முருகேசபாண்டியன், கேசவ பழனிவேலு, இரவிசுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் உரையாற்றினர். பேராசிரியர் க.பஞ்சாங்கம் ஏற்புரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கு முனைவர் பழ.அதியமான், கவிஞர் பச்சியப்பன், பேராசிரியர் ஆரோக்கியநாதன், பழ.முத்துவீரப்பன் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) பேராசிரியர் இரவிக்குமார் உள்ளிட்ட எழுத்தாளர்கள் பேராசிரியர்கள், படைப்பாளிகள் வந்திருந்தனர்.

நன்றி: முனைவர் மு.இளங்கோவன்

உலகத் தமிழர் பேரமைப்பின் 7 வது ஆண்டு நிறைவு விழாவும், ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத்தமிழர் மாநாடும் - 26, 27 டிசம்பர் 2009

பழ.நெடுமாறன் அவர்களைத் தலைவராகக் கொண்ட உலகத் தமிழர் பேரமைப்பின் 7 வது ஆண்டு நிறைவு விழாவும் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத்தமிழர் மாநாடும் இரண்டு நாள் நிகழ்ச்சியாக டிசம்பர் 26, 27 தேதிகளில் தஞ்சையில் நடைபெற்றது.

நடராசன், வைகோ, ம.தி.மு.க, ராமதாசு, பா.ம.க, மகேந்திரன், வ.கம்யூ, திண்டிவனம் இராமமூர்த்தி, தேசியவாத காங்கிரசு கட்சி, அர்ஜுன் சம்பத், இந்து மக்கள் கட்சி, பெ.மணியரசன், த.தே.பொ.க, வைத்திலிங்கம், இந்து தமிழர் இயக்கம், நகைமுகன் தனித்தமிழர் சேனை, இராசேந்திர சோழன், சூரியதீபன் (பா.செயப்பிரகாசம் ) , பசுபதிபாண்டியன், வீர.சந்தானம், மறவன்புலவு சச்சிதானந்தன், காசி.ஆனந்தன் முதலானோர் முக்கியப் பங்கேற்பாளர்கள்.


இவர்களன்றி டத்தோ சாமிவேல் உள்ளிட்ட வெளிநாட்டுத் தமிழறிஞர்களும் உள்நாட்டுத் தமிழறிஞர்களுமாகச் சேர்த்து சுமார் 80 பேச்சாளர்கள் இரண்டு நாள் நிகழ்சசிகளிலும் பங்கேற்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.


தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், குமரிமாவட்டம்
கலை இலக்கிய மூன்று நாள் முகாம் - மே 22-24, 2009

சி.எஸ்.ஐ.ரிட்ரீட் மையம், முட்டம்

மே 23, சனி
இரண்டாம் அமர்வு – பண்பாட்டு அரசியல்

தமிழ்தேசியம் – ஈழத்தை முன்வைத்து
எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்

தலித்திய நோக்கில் தேசிய இனங்களின் எழுச்சி
முனைவர் எஸ்.ஸ்டாலின் ராஜாங்கம்

நிலம்- மொழி-தேசம்
முனைவர் டி.தர்மராஜன்
விவாத துவக்கம்
மா.பென்னி, த.ம.பிரகாஷ், அ.ஜகநாதன்கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நீட் தேர்வு – ஒரு ஊமை கண்ட கனவு!

கி.ரா - தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கடிதம்

கரிசல் வெள்ளாமை

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

கற்பக தரு சொக்கப்பனை ஆகிறது!