மதுரை வடக்கு மாசி வீதியில் பேரா.துளசிராமசாமியின் ‘அரூசா’ அச்சகத்தின் படியில் அவர் நின்று கொண்டிருந்தார். நிஜ நாடக இயக்கம் பேரா.மு.ராமசாமியின் ‘விழிகள்’ மாத இதழும் அச்சாகியதால் மு.ரா.வும் இருந்தார். மதுரையில் கோயில்களுக்கும் சாமி வலங்களுக்கும் குறைவில்லை. முன் மாலையை லேசாய் அசைத்துத் தள்ளியபடி இரவு பின்னால் மெதுவாக வந்தது. அது குளிர்காலமில்லை. கோடைகாலம். மதுரைக் கோடையில் இரவு அப்படித்தான் ஆடி அசைந்து வரும். ‘பெட்ரோமாக்ஸ்’ – விளக்கு வெளிச்சத்தில் வடக்கு மாசி வீதியில், கிழக்கிலிருந்து மேற்காக ‘அம்மன்’ சப்பரத்தில் வந்து கொண்டிருந்தாள். ஒவ்வொருவரது கைகளும் கன்னங்களும் இதற்காகவே இருப்பது போல் கூப்புவதும் கன்னத்தில் போடுவதுமாய் இருந்தார்கள். “எவ்வளவு பெரிய தேர். எத்தனை பெரிய கூட்டம். இவ்வளவு பெரிய தேரில் அம்மன் உரு மட்டும் கண்ணுக்குத் தெரியலே. இந்த மனுசப்பயல்களைப் பார்த்து பயந்து ஒரு மூலையில் ஒடுங்கி உக்காந்திட்டா போல” - அவர் பேசினார். கூட்டத்திலிருந்து அவர் பேச்சு விலகியதாய்க் காணப்பட்டது. எதுவொன்றையும் பொதுப்புத்திப் பார்வையிலல்லாமல் புதிய கோணமாய் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருந்
ஒவ்வொரு கவிஞனுக்கும் கவிதை அவனது கடந்த காலத் தோள்கள் மீது அமர்ந்திருக்கிறது. கடந்த கால உயரத்திலிருந்து சமகாலக் கவிதை வெளிப்பாட்டினை எடுத்துக் கொள்கிறான். பிற கலை இலக்கிய வடிவங்கள் புஞ்சைத் தானியங்கள் போல் அருகிவிட்ட நிலையிலும், இதன் காரணமாகலே கவிதைக் காடு செழித்து வளருகிறது. காலம் – மொழி இரண்டினையும் சரியாக கையகப்படுத்த கடந்தகாலம் பயனுறு வினையாற்றுகிறது. ஒரு மந்திரவாதியின் கைவினை போல் இரண்டினையும் கைக்கொள்பவனிடம் கவிதை தங்கியிருக்கிறது. அவை கால எல்லை தாண்டி நிலைக்கின்றன. ஒரு மொழிக்குள் பிறப்புக் கொண்டபோதும், அம்மொழி கடந்ததாய், புவி எல்லை தாண்டியதாய் ஆகிவிடுகின்றன. எழுத்து, பேச்சு, செயல் மூன்றிடலும் பாரதி தன் காலத்தின் ஆங்கிலேய அடிமைத்தனத்தை எதிர்த்து போர் செய்தான்! ஆங்கிலேய அடிமைத்தனத்தை மட்டுமல்ல, மொழி, சாதி, பெண்ணென அனைத்து அடிமைப்படுத்தும் குணங்களைக் கிழித்து எரிந்தவன். ”போர்த்தொழில் பழகு” என, மனிதனுக்குள் இயல்பாகப் பொதிந்துள்ள கலகக் குணத்தை உசுப்பி, புதிய ஆத்திசூடி முதலாய் தேசீய கீதங்கள் தந்தான். அடக்கவியலாச் சிந்திப்பு கொண்டவனைக் கைது செய்யும் முயற்சியில் ஆங்கிலேய ஏகாதிப
மனித வரலாற்றின் எந்தப் புள்ளியில் மொழி பிறந்தது? “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா?” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது? சைகை. சைகை – என்பது ஆதிமொழி. சைகை இருந்த இடத்தில், ஓசையாக ஒலிக்குறிப்பு பிறக்கிறது. தாய், தகப்பன், உற்றார் என தன்னைச் சுற்றி அசைந்தவர்களோடு, தன் தேவைகளை நிறை வேற்றிக்கொள்ளும்
“பாடப் புத்தகங்களில் நவீன கவிதைக்கு இடமில்லையா?” - கேள்வி எழுப்பிய ஒரு கட்டுரை பிப்ரவரி 18, 2017 - தமிழ் இந்து நாளிதழில் வெளியாகியிருந்தது. பாடப் புத்தகங்களில் இடம்பெற வேண்டிய கவிஞர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. பாரதி இருக்கிறார்; அவரது தாசன் பாவேந்தர் இல்லை. ‘நவீன கவிதையின் தந்தை’ என்று மகுடம் சூட்டப்படும் ந.பிச்சமூர்த்தி, நவீன கவிதை மகுடத்தில் பதித்த நவரத்தினக் கற்களாக சி.மணி, க.நா.சு, நகுலன் எனப் பலர் சுட்டப்படுகிறார்கள். இவர்களின் காலத்தில் இயங்கி, ‘கவிதை என் கைவாள்’ என எடுத்துச் சுழற்றிய கவிஞர்கள் இந்தப் பட்டியிலில் இல்லை. நவீன கவிதையின் அடுத்த தலைமுறையைச் சார்ந்தவர்கள் என விக்கிரமாதித்யன், தேவதேவன், தேவதச்சன், ராஜாசுந்தர ராஜன் போல் நண்டு, சிண்டுகளெல்லாம் தூக்கிக் காட்டப்படுகிறார்கள். கவிஞர்கள் மீரா, அப்துல் ரகுமான், புவியரசு, சிற்பி, நா.காமராசன், ஈரோடு தமிழன்பன், இன்குலாப் - என எவரும் இல்லை. இவர்களற்ற ஒரு கவிதையுலகத்தை இளையமாணவருக்கு பாடத்திட்டத்தில் விரித்துவைக்க இந்த தலையங்கமும் அதை எழுதினவரும் விரும்புகி றார்கள் எனத் தெரிகிறது. நவீன கவிதை என இவர்கள் அடையாளப்படுத்த
ஒரு மளிகைக் கடைக்குப் போகிறீர்கள். சாமான்களின் பட்டியல் தருகிறீர்கள். “துவரம் பருப்பு புதுசு வருகிறது. நயம் பருப்பு, வந்ததும் சேர்த்து அனுப்பி வைக்கிறேன்” என்கிறார் கடைக்காரர். சிட்டை போட்டு, வரவு வைக்கிறார். அவருக்கும், உங்களுக்கும் தெரியாத வேறொரு இடத்தில் உங்கள் பெயரும் வரவு வைக்கப்படுகிறது. பெட்ரோல்ட் பிரெக்டின் நாடகம் அது. கருத்தாக்கம், நாடக வடிவமைப்பு இவைகளால் உடுக்கடிப்பு செய்து முடுக்கி விடப்பட்ட சிந்தனைகளுடன் நெற்றிக் கோடுகள் நெருக்கமாகி நடக்கிறேன். என்னைப் போலவே கனமாய் நாடகத்தால் பாதிப்புற்ற அவரை யாரென்று நான் அறியேன். என்னுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டே நடக்கிறார். எப்போதாவது அந்த நண்பருடன் தொலைபேசியில் பேசுகிறேன். அது கணக்கு வைக்கப்படுகிறது. ஒருவர் திருமண நிகழ்வுக்குச் செல்கிறார். மணமக்கள் ஒப்பனை முடித்து மணமேடை வரத் தாமதம். அருகிலிருப்பவர்களிடம் “எல்லாத்துக்கும் புஷ் அரசாங்கம்தான் காரணம், குண்டு வச்சுத் தகர்க்கணும்” என்கிறார் கேலியாக. பக்கத்திலும், எதிரிலும் ஹஹ்ஹா சிரிப்பு பீறிடுகிறது. கேலியும் எதிர்ச் சிரிப்புகளும் திருமண மண்டபத்தின் ஏதோ ஒரு மூலையில் உள்ள கருவியில் பத
கருத்துகள்
கருத்துரையிடுக