அது மேல் நோக்கி செலுத்திய குரலாகத்தான் வந்தது. கீழ்வீட்டில் யாரும் இல்லை. வெகு நேரமாகக் கூப்பிட்டுக் கொண்டிருப்பது போல் தெரிந்தது. ''ஸாரி ஸார்'' என்ற அழைப்புக் குரல் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து சுருண்டது. காலை முதல் சுறுசுறுப்பாய் இயங்கிய வீதி விறைப்பு அடங்குகிற மதியப் பொழுது, சத்தமில்லாமல் அடங்கி விட்ட வீடுகளும், மௌனத்தின் குகை போல் நீண்டு கிடக்கும் வீதியும், கொஞ்சம் தலைசாய்க்க அனுமதித்தன. இமைகள் வலுக்கட்டாயமாகப் பிரித்து, எதிரேயும், சுற்று முற்றும் பார்த்தாள். எவரும் இல்லை. கீழ் வீடு காலியாக இருந்தது. நல்ல வாடகை, கிடைகிற வரை வீட்டுக்காரர் வாடகைக்கு விடப்போவதில்லை. செண்பக தேவியிடம் வீட்டுச் சாவியைக் கொடுத்திருந்தார். வீடு பார்க்க வருகிற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தடவையும் அவள் வீட்டைத் திறந்த காட்டவேண்டும். ''இதோ வர்றேன்'' எழுந்து வீடு காட்டுவதற்காக கையில் சாவியை எடுத்துக்கொண்டு கீழிறங்கினாள். கீழ்வீட்டுக்கு ஒரு அழைப்பு மணியும், மேல் வீட்டுக்கு ஒன்றும் தனித்தனியாக இருந்தன. அம்புக் குறியிடப்பட்டிருப்பதைப் பார்த்து, வலது பக்க அ
கி.ரா, கு.அழகிரிசாமி, மேலாண்மை பொன்னுச்சாமி, லட்சுமணப் பெருமாள் என்று காய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து வரிசையில் மற்றுமொரு தவிர்க்க முடியாத பெயர் பா.செயப்பிரகாசம். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்து இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறவர். தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடர்புத் துறையில் இணை இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற செயப்பிரகாசம் ‘சூரியதீபன்’ என்ற புனைப் பெயரில் எழுதிவருகிறார். 1965இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றமைக்காக இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் இருந்தார். தாமரை, தினமணி, புதிய பார்வை, தீராநதி, கணையாழி, காலச்சுவடு, மனஓசை போன்ற இதழ்களில் இவரின் படைப்புகள் வெளிவந்துள்ளன. சமூக நீரோட்டத்துடன் செல்லாமல் எதிர்க் கருத்தியலை வைத்து நடைபோட்ட மனஓசை இதழின் பொறுப்பாசிரியராக இருந்தவர். இலக்கிய மேடைகளிலும், அரசியல் அரங்குகளிலும் கருத்து செறிந்த சொற்பொழிவுகள் ஆற்றுபவர். இதுவரை கதை உலகின் காலடி படாத கிராமத்தின் ஒடுக்கப்பட்ட மக்களையும், அவர்களின் பாடுகளையும் தன் புனைவிலக்கியத்தில் சித்தரிக்கிறார். இவரின் கதைகள் மனிதர்களின் துய
மதுரை வடக்கு மாசி வீதியில் பேரா.துளசிராமசாமியின் ‘அரூசா’ அச்சகத்தின் படியில் அவர் நின்று கொண்டிருந்தார். நிஜ நாடக இயக்கம் பேரா.மு.ராமசாமியின் ‘விழிகள்’ மாத இதழும் அச்சாகியதால் மு.ரா.வும் இருந்தார். மதுரையில் கோயில்களுக்கும் சாமி வலங்களுக்கும் குறைவில்லை. முன் மாலையை லேசாய் அசைத்துத் தள்ளியபடி இரவு பின்னால் மெதுவாக வந்தது. அது குளிர்காலமில்லை. கோடைகாலம். மதுரைக் கோடையில் இரவு அப்படித்தான் ஆடி அசைந்து வரும். ‘பெட்ரோமாக்ஸ்’ – விளக்கு வெளிச்சத்தில் வடக்கு மாசி வீதியில், கிழக்கிலிருந்து மேற்காக ‘அம்மன்’ சப்பரத்தில் வந்து கொண்டிருந்தாள். ஒவ்வொருவரது கைகளும் கன்னங்களும் இதற்காகவே இருப்பது போல் கூப்புவதும் கன்னத்தில் போடுவதுமாய் இருந்தார்கள். “எவ்வளவு பெரிய தேர். எத்தனை பெரிய கூட்டம். இவ்வளவு பெரிய தேரில் அம்மன் உரு மட்டும் கண்ணுக்குத் தெரியலே. இந்த மனுசப்பயல்களைப் பார்த்து பயந்து ஒரு மூலையில் ஒடுங்கி உக்காந்திட்டா போல” - அவர் பேசினார். கூட்டத்திலிருந்து அவர் பேச்சு விலகியதாய்க் காணப்பட்டது. எதுவொன்றையும் பொதுப்புத்திப் பார்வையிலல்லாமல் புதிய கோணமாய் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருந்
பா.செயப்பிரகாசத்தின் 51 ஆண்டு (1971 - 2022) கால படைப்பில் இதுவரை எழுதிய 142 சிறுகதைகளில் 129 சிறுகதைகள் 13 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. இதுவரை பா.செயப்பிரகாசத்தின் கட்டுரைத் தொகுப்புகள் 18, கவிதை தொகுப்புகள் 2, நாவல்கள் 2, மொழி பெயர்ப்பு நூல்கள் 2, தொகுப்பாளராய் 15 நூல்கள் வெளிவந்துள்ளன.
மனித வரலாற்றின் எந்தப் புள்ளியில் மொழி பிறந்தது? “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா?” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது? சைகை. சைகை – என்பது ஆதிமொழி. சைகை இருந்த இடத்தில், ஓசையாக ஒலிக்குறிப்பு பிறக்கிறது. தாய், தகப்பன், உற்றார் என தன்னைச் சுற்றி அசைந்தவர்களோடு, தன் தேவைகளை நிறை வேற்றிக்கொள்ளும்
கருத்துகள்
கருத்துரையிடுக