கிறித்துதாஸ் காந்தி மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்கங்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கிறித்துதாஸ் காந்தி மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி தமிழக முற்போக்கு இயக்கங்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அறிக்கையின் விவரம் வருமாறு:

தொலைக்காட்சி (தந்தி) விவாதம் ஒன்றில் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் கிறித்துதாசு காந்தி அவர்கள் கூறிய கருத்துக்காக, பார்ப்பனிய இந்துத்துவ சக்திகள் அவர் மீது தனிப்பட்ட தாக்குதலில் இறங்கியுள்ளன. அந்த நிகழ்ச்சியில் அவர் தெளிவாக, ”தனிப்பட்ட ஒருவர் எந்த மத நிகழ்ச்சியிலும் பங்கேற்கலாம்; ஆனால் முதலமைச்சராகவோ பிரதமராகவோ குறிப்பிட்ட ஒரு மத நிகழ்ச்சியில் மட்டும் கலந்துகொள்வது, மதச்சார்பற்ற நாட்டில் தவறானது. ஒன்று எல்லா மதத்தினரின் நிகழ்வுகளிலும் பங்கேற்கலாம் அல்லது அனைத்து மதநிகழ்வுகளையும் புறக்கணிக்கலாம்” என்று விளக்குகிறார். அதற்கு பதில்கூற வேண்டிய பா.ச.க பிரமுகர் இராகவன் என்பவர், “திமுக தலைவர் கருணாநிதியிடம் போய் இதைக் கூறுங்கள்” என்கிறார். தொடர்ந்த விவாதத்தில், “இந்த நாட்டில் கடவுள்மறுப்புக் கொள்கையும் உண்டு; இதுதான் மதச்சார்பின்மை…அப்புறம் யாரையோ..” எனச் சொன்ன காந்தி, “ராமனை செருப்பால் அடிப்பேன் எனக் கூறவும் மதச்சார்பின்மை நாட்டில் உரிமை உண்டு; அதை எப்படி தப்புனு சொல்வீங்க; எனக்கு அதற்கு உரிமை இருக்கு..” என்ற பொருளில் பேசிக்கொண்டிருந்தபோதே, அவரின் பேச்சு தடுக்கப்பட்டது. கடைசிவரை அதில் அவர் பேசி முடிக்கவிடாமல் பாசக பிரமுகர் கூச்சலிட்டபடி இருந்தார். அவரின் நியாயமான கேள்விக்கு கடைசிவரை பதிலளிக்கப்படாதது பற்றிப் பேசாமல், அவரின் ஒரு வாசகத்தை மட்டும் பிடித்துத் தொங்கிக்கொண்டு, பிரச்னை ஆக்கினர். அவர் அதற்காக மன்னிப்பு கேட்டபிறகும் விடவில்லை! இதுதான் நடந்தது!

முன்னாள் கூடுதல் தலைமைச் செயலர் என்ற அனுபவத்திலும் ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களுக்கான செயல்பாட்டின் மூலமான சமூக அறிவைக் கொண்டு, இரண்டு ஆண்டுகளாக தொலைக்காட்சி உரையாடல்களைப் பொருள்கொண்டவையாகச் செய்துவருகிறார். குறிப்பாக, மைய, மாநில அரசின் செயல்பாடுகள், நிர்வாகம் பற்றிய அவருடைய கருத்துகள் குறிப்பிடத்தக்கவை.

இந்த நிலையில், இந்திய அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை உரிமையான கருத்துரிமையின் வரம்புக்கு உட்பட்டு ஐயா காந்தி பேசியதற்கே, அவர் மீது பார்ப்பனிய இந்துத்துவ சக்திகள், தினமலர் போன்ற ஊடகங்களைப் பயன்படுத்தி, அவரின் முகவரி, தொலைபேசி எண்ணை வெளியிட்டு, சாதிய சக்திகள்- முகம்காட்டத் திராணியற்ற கோழைகளை ஏவிவிட்டு மிரட்டுவது, காந்திக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் உளைச்சலை உண்டாக்குவது, இதன் மூலமாக பொதுசமூகத்தில் அவரைச் செயல்படவிடாமல் தடுப்பது என பாசிசத்தை அரங்கேற்றியுள்ளன.

குறிப்பாக, காந்தி அவர்களை கிறித்துவர் எனப் பொய்கூறி, சாதியசக்திகளிடம் மதவாதத்தைத் தூண்டிவிடும் பெரும் சதியிலும் பார்ப்பனிய இந்துத்துவ சக்திகள் ஈடுபட்டுள்ளன. இதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

இது தனியொரு காந்தி மீது நடத்தப்படும் தாக்குதல் அல்ல; பொது சமூகத்தில் மதம் எனும் பெயரால் முன்வைக்கப்படும் அனைத்துக்கும் இதே சமூகத்தில் மாற்றுக்கருத்தை வைக்கவும் அனைவருக்கும் உரிமை உண்டு என்பதை நாம் இந்த நேரத்தில் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

எனவே, கிறித்துதாசு காந்தி அவர்கள் மீது புனையப்பட்டுள்ள வழக்கை ரத்துசெய்யவேண்டும்.

* சனநாயகரீதியில் நடந்த உரையாடலை, பார்ப்பனிய இந்துத்துவ சக்திகளின் புகாரைப் பெற்றுக்கொண்டு, ஒரு குற்றமாக எடுத்து, வழக்காகப் பதிவுசெய்த போலீசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்படிச் செய்தால்தான் இனி இது போன்ற தவறுகளை உடந்தையாகக்கூட செய்வதற்கு மற்றவர்கள் தயங்குவார்கள் எனும் நிலை உறுதிசெய்யப்பட வேண்டும்.

* தொலைக்காட்சிகளில் நடப்பாய்வுகளில் பங்கேற்கும் கருத்துரையாளர்கள் மீது இவ்வாறு சட்டரீதியிலான, சமூகவிரோத, சட்டவிரோத தாக்குதல்கள் நடத்தப்படும்போது குறிப்பிட்ட ஊடகங்கள் இதை எதிர்த்துநிற்கவேண்டும். இது, நான்காவது தூண் எனக் கூறப்படும் ஊடகங்களின் கடமை என்பதையும் அழுத்தமாக சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இவண்
கருத்து வெளிப்பாட்டுக்கான சனநாயகக் குரல்கள்


கையெழுத்திட்டுள்ளவர்களின் விவரம்:
*மாற்றத்துக்கான ஊடகவியலாளர் மையம்
* மே பதினேழு இயக்கம்
* இளந்தமிழகம் இயக்கம்
*கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்
* டி.கே.ரங்கராஜன், நா.ம.உ., சிபிஐ(எம்) மத்தியக்குழு உறுப்பினர்
* ஜவாஹிருல்லா, ம.ம.க. தலைவர்
* பெ.சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச்செயலர்
* தியாகு- தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
* வாலாசா வல்லவன்- மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி சென்னை மாவட்டச் செயலாளர்
* ஓவியா- ஒருங்கிணைப்பாளர், புதிய குரல்
* சி.சொக்கலிங்கம்- கலைஇலக்கியப் பெருமன்றத் தலைவர்
* இரா.காமராசு, க.இ.பெ.ம. பொதுச்செயலாளர்
* ப.பா.ரமணி, க.இ.பெ.ம. பொருளாளர்
* மீ.த.பாண்டியன்- மா-லெ மக்கள் விடுதலை கட்சி தலைமைக்குழு
* சாமுவேல்ராஜ்- தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொ.செ.
* அதியமான், ஆதித்தமிழர் பேரவைத் தலைவர்
* மஞ்சுளா, இந்திய மாதர் தேசிய சம்மேளனம், மாநிலத் து.செ.
* செல்வி, தமிழ்நாடு மக்கள் கட்சி, பொதுச்செயலர்
* சுப. உதயகுமாரன், பச்சைத் தமிழகம் கட்சி அமைப்பாளர்
* கௌதம சன்னா, வி.சி.க. துணைப்பொதுச்செயலர்
* ஆளூர் ஷானவாஸ், விசிக, து.பொ.செ.
* முத்துகண்ணன் – முன்னாள் தலைவர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
* அருள்- ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி
* சீராளன் – புரட்சிகரத் தொழிலாளர் முன்னணி
* தமிழ்வாணன்- புரட்சிகர இளைஞர் முன்னணி
* திவ்யபாரதி – அ.இ.மாணவர் கழகம், ஆவணப்பட இயக்குநர்
* திலீபன் – புரட்சிகர மாணவர் முன்னணி
* இளையராஜா, தமிழ்நாடு மாணவர் இயக்கத் தலைவர்
* தீபா, ஜனநாயக வாலிபர் சங்க மாநிலப் பொருளாளர்
* பெர்னார்ட் பாத்திமா, பெண் தொழிலாளர் கூட்டமைப்பு
*நாச்சிமுத்து ஹரிசங்கர், மாணவர் சங்கத் தலைவர், பூனா திரைப்படக் கல்லூரி

மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள்
அ.மார்க்ஸ்
கோ.சுகுமாரன்
ச.பாலமுருகன்- பி.யு.சி.எல். தேசியக் குழு உறுப்பினர்
கிரேஸ் பானு- (திருநங்கையர் தளம்)

ஆய்வாளர்கள்
ஆ.சிவசுப்பிரமணியன்
டி. இலட்சுமணன்
கஜேந்திரன், தற்சார்பு ஆய்வாளர்
ஜெ.பாலசுப்பிரமணியம்
புது எழுத்து மனோன்மணி
ஏர் மகாராசன்

கல்வியாளர்கள்
பேரா.வசந்திதேவி
பேரா. வீ.அரசு
பேரா.வெங்கடேஷ் சக்கரவர்த்தி பேரா.அரங்கமல்லிகா
பேரா.பூவை இலெனின்
பேரா.டி.தர்மராஜ்
பேரா.பிரேம்
பேரா. ஜோதிராணி
பேரா.சுந்தரவள்ளி
பேரா.வீ. மலர்க்கொடி
ராஜ்தேவ், விரிவுரையாளர்

திரைப்படைப்பாளிகள்
அஜயன் பாலா- இயக்குநர்
ஏகாதசி-பாடலாசிரியர்
எஸ்.கருணா- இயக்குநர், தமுஎகச
தனிக்கொடி-பாடலாசிரியர்
மீரா கதிரவன்- இயக்குநர்
யுகபாரதி-பாடலாசிரியர்
ஜேம்ஸ் வசந்தன்- இசையமைப்பாளர் கலீல் ராஜா

ஆவணப்பட இயக்குநர்கள்
ஆர்.பி.அமுதன்
ஆர்.ஆர்.சீனிவாசன்
கோம்பை அன்வர்
மகா. தமிழ் பிரபாகரன்

வழக்குரைஞர்கள்
சிகரம் செந்தில்நாதன்
ஹென்றி திபேன் (மனிதவுரிமைத் தளம்)
மு.வெற்றிச்செல்வன்
சுசீலா
ஆர்தர் குமார்
கிருபா முனுசாமி

நிகழ்த்துகலைச் செயற்பாட்டாளர்கள்
பிரகதீஸ்வரன், புதுகை பூபாளம் கலைக்குழு
அ. மங்கை
லிவிங் ஸ்மைல் வித்யா
பிரேமா ரேவதி
பார்த்திபராஜா- நாடகவியலாளர் பிரளயன்- நாடகவியலாளர்
ஹேமா- கலைஞர், த.மு.எ.க.ச.
ஸ்ரீஜித் சுந்தரம், கட்டியக்காரி குழு

ஓவியர்கள்
புகழேந்தி
ஸ்ரீரசா

பதிப்பாளர்கள்
எதிர் அனுஷ்
சரோலாமா- பாதரசம் பதிப்பகம்
சிராஜுதீன்- பாரதி புத்தகாலயம்
ஆழி செந்தில்நாதன்
நீலகண்டன்- கருப்புப் பிரதிகள்
கீற்று ரமேஷ்

சூழலியல் செயற்பாட்டாளர்கள்
அருண் நெடுஞ்செழியன்- எழுத்தாளர்
கோ.சுந்தர்ராஜன்
நக்கீரன்- கவிஞர்
நித்யானந்த் ஜெயராமன்

மருத்துவர்கள்
மரு.அன்பழகன்
மரு. ஷாலினி
மரு.அரவிந்தன் சிவக்குமார்
மரு.எழிலன்
மரு.குருமூர்த்தி

எழுத்தாளர்கள்
எஸ்.வி.ராஜதுரை
அம்பை
யமுனா ராஜேந்திரன்
பா.செயப்பிரகாசம்
இரா.ஜவஹர்
அப்பணசாமி
அசதா
ஆதவன் தீட்சண்யா
இமையம்
இந்திரன்
கவின் மலர்
எஸ்.காமராஜ்
வ.கீதா
துரை.குணா
குமார் அம்பாயிரம்
சுப்ரபாரதிமணியன்
கி.நடராசன்
பாலசுப்பிரமணியன் பொன்ராஜ்
பூங்குழலி
சம்சுதீன் ஹீரா
கே.என்.செந்தில்
எச்.பீர்முகம்மது
பெருமாள்முருகன்
வே.மதிமாறன்
மாரி செல்வராஜ்
மீனா கந்தசாமி
அ.முத்துகிருஷ்ணன்
இரா.முருகவேள்
ராஜன் குறை
ப.கு.ராஜன்,
எஸ்.விஜயன்
ஜமாலன்
பா.ஜீவசுந்தரி
ஸ்டாலின் ராஜாங்கம்
புதியதடம் மேகவண்ணன்

கவிஞர்கள்
கலாப்ரியா
சுகுமாரன்
மனுஷ்யபுத்திரன்
இசை
ஒடியன்
கண்டராதித்தன்
தை.கந்தசாமி
கரிகாலன்
காலபைரவன்
குட்டி ரேவதி
சல்மா
சாம்ராஜ்
சிபிச்செல்வன்
சுகிர்தராணி
நரன்
நறுமுகைதேவி
தி.பரமேசுவரி
ந.பெரியசாமி
மாலதி மைத்ரி
யாழன்ஆதி
ஹெச்.ஜி.ரசூல்
லிபி ஆரண்யா
ச.விஜயலட்சுமி
ஷங்கர் ராமசுப்பிரமணியன்
சுந்தரபுத்தன் – எழுத்தாளர், செய்தியாளர்
கார்முகில், எழுத்தாளர், செய்தியாளர்

செய்தியாளர்கள்
அருள்எழிலன்- இணையாசிரியர், இணைய ஊடகம்
வ.மணிமாறன் – செய்தியாசிரியர், காட்சி ஊடகம்
கா.சு.துரையரசு – பொறுப்பாசிரியர், அச்சு ஊடகம்
மு.வி.நந்தினி, ஆசிரியர், இணைய ஊடகம்
பீர் முகம்மது- ஆசிரியர், இணைய ஊடகம்
கோவி.லெனின்- பொறுப்பாசிரியர், அச்சு ஊடகம்
விஜயசங்கர் – ஆசிரியர், அச்சு ஊடகம்

அமுதா- இணைய ஊடகம்
அதிஷா – அச்சு ஊடகம்
இராதிகா- தற்சார்புச் செய்தியாளர்
இளமதி சாய்ராம் – காட்சி ஊடகம்
உமா மகேஸ்வரன் – காட்சி ஊடகம்
கவிதா முரளிதரன்- அச்சு ஊடகம்
குணவதி – காட்சி ஊடகம்
ச.கோபாலகிருஷ்ணன்- இணைய ஊடகம்
கௌரி நீலமேகம்- அச்சு ஊடகம்
சுபஸ்ரீ தேசிகன்- அச்சு ஊடகம்
இர.இரா.தமிழ்க்கனல் – அச்சு ஊடகம்
தயாளன்- காட்சி ஊடகம்
பிரின்ஸ் என்னாரெஸ் பெரியார்- இணைய ஊடகம்
நீரை மகேந்திரன்- அச்சு ஊடகம்
மகிழ்நன்- காட்சி ஊடகம்
கே.கே.மகேஷ்- அச்சு ஊடகம்
ஜெ.முருகன்- அச்சு ஊடகம்
ராமேஸ்வரம் ராஃபி- அச்சு ஊடகம்
விஜய்ஆனந்த்- காட்சி ஊடகம்
ஜோ.ஸ்டாலின் – அச்சு ஊடகம்
ஹசீஃப் முகம்மது, காட்சி ஊடகம்

உடுமலை கௌசல்யா சங்கர்

நன்றி: த டைம்ஸ் தமிழ் - நவம்பர் 1, 2016

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - ஆல் இந்தியா ரேடியோ, புதுச்சேரி

அமுக்குப் பேய்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி