லண்டனிலிருந்து திரும்பி வந்துள்ள தமிழ்ப் பெண், தன் மகனை அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளார்

இன்று ஒரு நற்செய்தி: லண்டனிலிருந்து திரும்பி வந்துள்ள தமிழ்ப் பெண் சுபாஷினி, தன் ஏழு வயது மகனை விழுப்புரம் அருகேயுள்ள ’தன்னாடு’ ஊராட்சி ஒன்றிய அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளார் (இந்து- தமிழ், ஜூன் 23).

”அரசுப் பள்ளியில் படித்தால் தான் சமூக அக்கறையும் விழிப்புணர்வும் ஏற்படும்“ என்று சொல்கிறார். தனியார் பள்ளிகளை நோக்கிப் படையெடுக்கும் தமிழ்ப் பெற்றோர்களுக்கு இது சொரணை உண்டாக்கும் வாசகம். “தனியார் பள்ளிகளில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் மன அழுத்தத்தை பிள்ளைகளிடம் காட்டுகின்றனர். இதனால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும்“ என்கிறார். கால்வாசி, அரைவாசி சம்பளத்துக்கு கடமையாற்றும் நிர்ப்பந்தம் அவர்களுக்கு; எவ்வாறு அவர்கள் மாணவர்களுடன் ஒன்றுவார்கள்? உழைப்புக் கேற்ற கூலி கொடுக்கவேண்டும்: அதில் வழிகாட்டியாக இருக்க வேண்டுமென்னும் எண்ணம் எந்தத் தனியார் பள்ளி முதலாளிக்கும் உண்டாவதில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் பெறும்போது ஏற்படும் அக மலர்வு முகத்தில் தெரியும். செக்கில் எண்ணை பிழிவதுபோல் ஆசிரியைகளையும் மாணவர்களையும் இறுக்கிக் கெட்டியாய்ப் பிழியும் தனியார் பள்ளிக் கல்வியைத் தலைமேல் வைத்துக் கொண்டாடும் அரசுக்கும் பெற்றோருக்கும் பொருத்தமான அறிவுரையினை வழங்கி எடுத்துக்காட்டய்த் திகழ்கிறார் சுபாஷினி.

- பா. செயப்பிரகாசம் முகநூல் பக்கம் (23 ஜூன் 2019)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி

திசையறிந்த தென்மோடிக் கூத்து

பாரதிபுத்திரன் என்ற மானுடன்