ஜெயமோகன் மீது சட்ட நடவடிக்கை


தோழமை நெஞ்சங்களுக்கு வணக்கம்.

ஜெயமோகன் தனது இணையப் பக்கத்தில் என் மீது பரப்புரை செய்த அவதூறுக்கு எதிரான கண்டன அறிக்கையில் ஒப்புதல் தெரிவிப்போரின் வரிசை நீண்டுகொண்டே செல்கிறது. உலகெங்கிலிருந்தும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள், தங்களின் பெயர்களை இணைக்கக் கோரிக்கை வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். சற்றேழத்தாழ 200 பேர் ஆதரவு தந்து தங்கள் இதயத்தின் குளுச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இதை ஒரு தனி எழுத்தாளனுக்கான ஆதரவாகக் கருதவேண்டாம். மானுட விடுதலை நோக்கிய தேசீய இனக் கொள்கை, சமுதாய அறிவியல்களான மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்காரியம் போன்ற விடுதலை இயல்களுக்கு எதிரான எழுத்துக்கு எதிர்ப்புக் குரலாகவும், இக்கோட்பாடுகளுக்கு ஆதரவான வினைகளாகவும் காணுகிறேன். ஒரு கூட்டு முயற்சியின் வெளிப்பாடு எத்தகைய பயன்கள் தரவல்லது என்பதை இதன்வழி நாம் உணரமுடிகிறது. இது நமக்கு ஒரு படிப்பினை.

சட்ட நடவடிக்கை எடுப்பதே சிறந்த செயல் என முகநூலில் பலரும் தெரிவித்திருந்தனர். முகநூலில் எதிர்வினையாற்றிய அனைத்துத் தோழமை நெஞ்சங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்று (06-06-2020) ஜெயமோகனின் மேல் அவதூறு வழக்கை வழக்குரைஞர் வழியாக நான் தொடர்ந்துள்ளேன். வழக்குரைஞர் மின்னஞ்சல் மூலமாக ஜெயமோகனுக்கு அனுப்பிய சட்ட அறிவிக்கை (Legal Notice) விபரம் வருமாறு:

B.S. AJEETHA
J.SARAVANA VEL
V. PUSHKALA
P.KALPANA GEMMA HEPSIBEULAH
D.K. RAMESH KUMAR
N. SIVAKUMAR
ADVOCATES
OFFICE : No.35, First Main Road, Lake Area, Nungambakkam, Chennai -600034
Champer; No.13, Law Chambers, No. 336, , High Court Buildings Chennai – 600001.
Consultation :Thambu Street, 3rdFloor, (Opp. High Court),Chennai – 600104.
Tel: 28170989 Tel: 2533 0989.
Mob: 9444540989

06.06.2020
மின்னஞ்சல் மூலமாக பெறுதல்,
திரு.ப.ஜெயமோகன்,
எழுத்தாளர்
நாகர்கோயில்.

ஐயா,
சென்னை 600 034, நுங்கம்பாக்கம், லேக் ஏரியா, கதவு எண் 33, முதல் குறுக்குத் தெருவில் வசிக்கும் எமது கட்சிக்காரர் திரு.பா.செயப்பிரகாசம் சார்பாக உங்களுக்கு அனுப்பப்படும் சட்ட அறிவிக்கையாதெனில்,

கடந்த 29.05.2020 அன்று உங்கள் jayamohan.in என்கிற வலைப்பூவில் (Blog) “ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்” என்கிற தலைப்பில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளீர்கள். அதில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் முன்னாள் செயலாளராக இருந்த திரு.மருதையன் புகைப்படத்தையும் “மருதையன், வினவு, பின் தொடரும் நிழலின் குரல்” என்ற வாக்கியத்தையும் வெளியிட்டு “அன்புள்ள ஜெ” எனத் துவங்கும் கடிதத்தில் இடதுசாரி அமைப்புகள் மீது பொதுவான பல குற்றச்சாட்டுகள் ஆதாரமற்ற வகையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, எமது கட்சிக்காரர். பா.செயப்பிரகாசம் குறித்து நீங்கள் வெளியிட்டுள்ள பொய்யான மற்றும் அவதூறான கருத்தைக் கொண்ட அக்கடிதத்தில் கீழ்கண்டவாறு எழுதப்பட்டுள்ளது:

“பா.செயப்பிரகாசம் போன்ற சாதி வெறிகொண்ட அரசாங்க உயரதிகாரியெல்லாம் இங்கே இடதுசாரிக் குழுவின் தலைவராக புனைபெயரில் இருந்திருக்கிறார். சூரியதீபன் என்ற பேரில். இதெல்லாம் எந்த ஊர் பித்தலாட்டம். இதெல்லாம் கூட தெரியாததா நம்மூர் உளவுத்துறை?” என்ற வரிகளில் காணப்படும் அவதூறான செய்தியை பலரும் படிக்க வேண்டும் என்னும் நோக்கத்துடனேயே வெளியிட்டுள்ளீர்கள்.
எனவே, மேற்கண்ட அவதூறில் எமதுகட்சிக்காரர் “சாதி வெறி கொண்டவர்” எனவும் “சூரியதீபன் என்ற புனைபெயரில் இடதுசாரிக் குழுவின் தலைவராக இருந்தார்“ எனவும் பொய்யான அடிப்படை ஆதாரமற்ற கூற்றை வெளியிட்டுள்ளீர்கள். உங்கள் வலைப்பூவில் பதிவிட்ட பிறகு, எமது கட்சிக்காரரை அறிந்த பலர் இதுகுறித்து விசாரித்ததோடு, அவர் சாதி வெறி கொண்டவராக இருப்பதாக கருத வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளீர்கள். அவர்களுடைய பார்வையில் எமது கட்சிக்காரரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுதியுள்ளீர்கள். மேற்கூறிய அவதூறை பெயர் தெரியாத ஒருவரின் கடிதம் என்ற பெயரில் வெளியிட்டுள்ளீர்கள்.

எனவே உடனடியாக அந்தப் பதிவை நீக்கும்படியும், அத்தகைய அவதூறைப் பரப்பியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பை அதே வலைப்பூவில் அதே பக்க அளவில் வெளியிடும்படியும் கோருகிறோம். தவறும்பட்சத்தில் உங்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் நீதிமன்றங்களில் எமது கட்சிக்காரரின் மீது அவதூறு பரப்பியதற்காக தக்க சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் அதற்கான கஷ்ட நட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாவீர்கள் என்பதையும் அறியவும்.

இங்கணம்
ப.சு.அஜிதா
வழக்கறிஞர்.

தோழமையுடன்,
பா.செயப்பிரகாசம்.
06.06.2020

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

பலியாடுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

பா.செயப்பிரகாசத்தின் சிறுகதை ‘அம்பலகாரர் வீடு’ - பெ.விஜயகுமார்