பா.செயப்பிரகாசம் நினைவேந்தல் - 2022
மறைந்த முன்னோடி எழுத்தாளர்களை சிறப்பித்த ‘நினைவின் தடங்கள்’, சிங்கப்பூர், 26 நவம்பர் 2022
மறைந்த எழுத்தாளர்களின் படைப்புகளை நினைவு கூரவும் தமிழ் இலக்கியத்தில் அவர்களின் பங்களிப்பைச் சிறப்பிக்கவும் தேசிய நூலக வாரியம் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அந்தந்த ஆண்டில் மறைந்த எழுத்தாளர்களைக் கொண்டாடும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ‘நினைவின் தடங்கள்’ எனும் நிகழ்வு, தேசிய நூலக வாரியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகிறது.
மறைந்த எழுத்தாளர்களின் வாழ்க்கைக்குறிப்பு, தமிழ் மொழிக்காக அவர்கள் ஆற்றிய நற்பணி, வெளியீடு கண்ட படைப்புகள் உள்ளிட்டவை இந்நிகழ்வில் நினைவுகூரப்பட்டது.
தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இவ்வாண்டின் நிகழ்ச்சி நவம்பர் மாதம் 26ஆம் தேதியன்று மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை ‘ஸூம்’ வழியாக நடைபெற்றது. இவ்வாண்டு மறைந்த எழுத்தாளர்கள் செ.கணேசலிங்கன், ஏ.பி.ராமன், தெணியான் (கந்தையா நடேசன்), கு.சின்னப்ப பாரதி, பாவலர் இறையரசன், கே.எஸ்.சிவகுமாரன், தெளிவத்தை ஜோசப், பா.செயப்பிரகாசம் என்ற சூரியதீபன் ஆகிய எட்டு எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிய சொற்பொழிவுகள் இடம்பெற்றன.
விரிவுரையாளர் உள்பட பல்வேறு தமிழக அரசாங்கப் பொறுப்புகளை வகித்துள்ள எழுத்தாளர் சூரியதீபன், தம்முடைய படைப்புகளில் சமூக அக்கறையை வெளிப்படுத்துவதில் கைத்தேர்ந்தவர். அவர் பல்வேறு சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், கவிதைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.
சிங்கப்பூரைச் சார்ந்த தமிழ் ஆர்வலர்கள் பலர், ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றியும் சிறப்புரை ஆற்றினர். எழுத்தாளர்களுடைய சாதனைகள், வாழ்க்கை வரலாறு, பெற்ற விருதுகள் உள்ளிட்ட பல்வேறு குறிப்புகள் இவ்வுரைகளில் இடம்பெற்றன. இந்நிகழ்வினை திருவாட்டி இலக்கியா செல்வராஜி வழிநடத்தினார்.
எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் அவர்களுக்கு புகழஞ்சலி புதுச்சேரி மாநில கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் 05-11-2022 அன்று நடைபெற்றது.
புதுச்சேரியில் அவர் வாழ்ந்த காலத்தில் அவரை ஆதரித்த அவரது சகோதர் குடும்பத்தை சார்ந்தவர்கள் வந்து கலந்து கொண்டது பெரும் மனநிறைவு அளித்தது.
பேராசிரியர் க.பஞ்சாங்கம் ஆற்றிய உரை பா.ஜெயப்பிரகாசம் ஆளுமையை பணிகளை அனைவருக்கும் உணர்த்தியது.
அவருடன் நெருங்கி பழகிய பேராசிரியர் ரவிக்குமார் பேராசிரியர் சிவக்குமார் பேராசிரியர் ரேவதி குணசேகரன் எழுத்தாளர் சீனு.தமிழ்மணி ஆகியோரின் உரைகள் அவரது பணிகளை ஆளுமையை வெளிப்படுத்தியது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அ. மு. சலீம் தமிழ் மாமணி தமிழமல்லன் புதுச்சேரி தமிழ் சங்க துணைத் தலைவர் மு. பாலசுப்ரமணியன் செயலாளர் சீனு. மோகன்தாசு ஆகியோரின் உரைகள் அவருக்கு சிறப்பான புகழஞ்சலி உரைகள்.
முஎகச துணை செயலாளர் லெனின் பாரதி புதுச்சேரி மாநில கலை இலக்கியப் பெருமன்ற மாநிலக்குழு உறுப்பினர் திவ்யா ஆகியோர் கவிதைகள் சூப்பர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பேராசிரியர்கள் விசாலாட்சி பேராசிரியர் விவேகானந்ததாசன் கவிஞர் ஆறு. செல்வம் மு. சி. இராதாகிருஷ்ணன் சீனு. தமிழ்நெஞ்சன் பட்டிமன்ற பேச்சாளர்கள் கலக்கல் காங்கேயன் உமா அமலோற்பவமேரி உட்பட பலர் பங்கேற்றும் நேர நெருக்கடி காரணமாக பேச இயலவில்லை.
இந்த நிகழ்ச்சி யை ஏற்பாடு செய்த வகையில் புதுச்சேரி மாநில கலை இலக்கியப் பெருமன்றத்திற்கு பெருமிதம் என்பது ஒருபுறம் இருக்க தனிப்பட்ட முறையில் அவர் அழைப்பு விடுத்தும் அவரை சந்திக்காமல் வந்து விட்டோமே என்ற எனது மனத்துயரத்தை போக்க்கூடிய நிகழ்ச்சியாக இது அமைந்தது.
‘தூய இலக்கியவாதி’களின் விமர்சனங் களை தனது படைப்புகளால் வீழ்த்தியவர் பா.செயப்பிரகாசம் என்று தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர். 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முன்னணியில் நின்ற போது, கைது செய்யப்பட்ட 10 மாணவர் தலைவர்களில் ஒருவரான பா.செயப்பிரகாசம் அண்மையில் காலமானார். அவரது நினைவேந்தல் கூட்டம் புதனன்று (நவ.9) சென்னையில் நடைபெற்றது. தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் சென்னை மாவட்டக் குழுக்க ளும், மனித உரிமைப் போராளி வழக்கறிஞர் பி.வி.பக்தவச்சலம் அறக்கட்டளையும் இணைந்து இந்த நிகழ்வை நடத்தின. ச.தமிழ்ச்செல்வன் இந்நிகழ்வில் பேசிய எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் பேசுகையில், “கட்சி சார்ந்த படைப்பாளிகளுக்கு இலக்கியம் வராது, பிரச்சாரமாகத்தான் எழுதுவார்கள் என்ற பிரச்சாரத்தை முறியடித்தவர் பா.செயப்பிரகாசம். தூய இலக்கியவாதிகள் என்று கருதி கொண்டிருக்கக் கூடியவர்களின் விமர்சனங்களை, அவதூறுகளை வீழ்த்துகிற படைப்புகளை படைத்தார். சூரியதீபன் என்ற பெயரில் எழுதி அவரது படைப்புகள் கலை அமை தியை குலைத்தன. அவர் குறித்த நினைவு களை தொகுதிக்கு மலராக கொண்டு வரலாம். அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய தேவையை உணர்ந்து செயல் படுகிறோம்.
அவர் இறப்பதற்கு முன்பு எழுதிய உச்சிவெயில் நாவலை இணைந்து வெளியிடுவோம்’’ என்றார். தமுஎகச மாநில துணைத்தலைவர் சிகரம் ச.செந்தில்நாதன் பேசுகையில், 1965ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம், 1967ல் ஆட்சி மாற்றம் ஏற்பட காரணமாக அமைந்தது. அந்த போராட்டத்தில் பங்கேற்ற பா.செயப்பிரகாசம், திராவிட இயக்க கருத்தியலில் இருந்து விடுபட்டு, படைப்பிலக்கியத்திற்கு வந்து வெற்றி கண்டார். இறுதிவரை இடதுசாரி படைப் பாளியாக இருந்தார் என்றார். தமுஎகச-வுடன் பா.செயப்பிரகாசம் முரண்பாடு கொண்டிருந்தார். படைப்பு சார்ந்த பிரச்சனைகளில் தமுஎகச தொடர்ந்து தலையீடு செய்வதை கண்டு, நெருங்கி வந்தார். சங்கத்தில் உறுப்பி னராக இல்லையென்றாலும் இணைந்து பயணித்தார். அவருடைய மறைவு தமுஎகச -வுக்கு ஏற்பட்ட இழப்பு. அதன் அடையாள மாக நினைவேந்தல் கூட்டத்தை தமுஎகச நடத்துகிறது என்றும் அவர் கூறினார். மாநில துணைத் தலைவர் மயிலை பாலு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத் தில், பேரா. வீ.அரசு, பேரா. சரஸ்வதி, பேரா. ரவிக்குமார், பேரா. பெருமாள் முருகன், எழுத் தாளர்கள் அஸ்வகோஷ், வசந்தன், எஸ்.வி.வேணுகோபாலன், இரா.தெ.முத்து, மணிநாத், கவிஞர்கள் நா.வே.அருள், சி.எம். குமார், க.மலர்விழி, மருத்துவர் பி.வி. வெங்கட்ராமன், பா.செயப்பிரகாசத்தின் சகோதரி சரஸ்வதி உள்ளிட்டோர் பேசினர்.
நிகழ்ச்சி காணொளியை இங்கு காணலாம்.
விழுப்புரம், 25 அக்டோபர் 2022, கிரீன்ஸ் பிளாசா மினி ஹால்
1965 மொழிப்போர் மாணவ தளபதிகளில் முன்னணி தோழர் சூரியதீபன் அவர்களுக்கு நினைவஞ்சலி.
தலைமை: ரவிக்குமார்
பங்கேற்பு: பாவலர் அறிவுமதி, எழுத்தாளர் இமயம், பேராசிரியர் பா.கல்யாணி, கவிஞர் அன்பாதவன் மருதம், இரவிகார்த்திகேயன்
மீ.தா பாண்டியன் |
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் |
நினைவேந்தல் கூட்டத்தில் பேசும் பேராசிரியா் ம.பெ.சீனிவாசன். உடன் (இடமிருந்து) விரிவுரையாளா் அதிவீர பாண்டியன், பேராசிரியா் பெ.க.பெரியசாமி, பி.வரதராஜன். |
கருத்துகள்
கருத்துரையிடுக