எழுத்தாளர் பா.ஜெயப்பிரகாசம் மறைவு - சிபிஐஎம் இரங்கல்


 அக்டோபர் 25, 2022, தீக்கதிர் 

எழுத்தாளர் பா.ஜெயப்பிரகாசம் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

இடதுசாரி எழுத்தாளர் தோழர் பா.ஜெயப்பிரகாசம் அவர்கள், மாணவப் பருவத்திலேயே இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர். கரிசல் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர்.

பா.ஜெயப்பிரகாசம் என்ற பெயரிலும், சூரியதீபன் என்ற புனைபெயரிலும் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைகள் என எழுதிக்குவித்தவர். சிறுகதை துறையில் காத்திரமான பங்களிப்பைச் செய்தவர். மொழி உரிமைக்காகவும், மாநில உரிமைகளுக்காகவும் இடையறாது களமாடி வந்தவர். தன்னுடைய இறுதிக்காலத்தில் தமுஎகசவோடும், செம்மலர் ஏட்டோடும் தம்மை நெருக்கமாக பிணைத்துக் கொண்டவர். அரசு உயர் பொறுப்பில் இருந்தபோதும் பாட்டாளி மக்களுக்காகவே பாடுபட்டவர்.

அவரது மறைவு இடதுசாரி இலக்கியத்திற்கும், இயக்கத்திற்கும் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு கட்சியின் சார்பில் ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) வாழ்க்கை வரலாறு

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை