பா.செயப்பிரகாசத்துக்கு 'மாமனிதர்’ என்ற அதியுயர் தேசிய விருது
மாமனிதர் பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்)
தமிழ் மண்ணையும், தமிழ் மக்களையும் ஆழமாக நேசித்த ஒரு நல்ல மனிதரை இன்று தமிழர் தேசம் இழந்துவிட்டது.
திரு, பா.செயப்பிரகாசம் அவர்கள் எளிமையும் நேர்மையும் கொண்ட தனித்துவமான மனிதர். நிறைந்த அறிவு படைத்தவர், தமிழினத்தின் பேரறிஞர், தலைசிறந்த எழுத்தாளர். எமது சுதந்திர போராட்டத்தின் வளர்ச்சியிலும், உயர்ச்சியிலும் பெரும் பங்காற்றியவர். தமிழீழ விடுதலையை உயிர் மூச்சாக வரித்து இறுதிவரை வாழ்ந்தார்.
2009 தமிழினப் படுகொலையை ஓயாது கண்டித்து வந்தார். தமிழீழ மக்களுக்கு சுதந்திர தமிழீழமே ஒரே தீர்வு என ஓயாது ஓங்கி உரிமைக்குரல் எழுப்பியவர்.
திரு, பா.செயப்பிரகாசம் அவர்களின் இனப் பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து அவரது நற்பணியை கௌரவிக்கும் முகமாக ‘மாமனிதர்’ என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் பெருமை அடைகின்றோம்
உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு அழித்துவிடுவதில்லை. எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு.
கருத்துகள்
கருத்துரையிடுக