கார்ல் மார்க்ஸ் கட்டுரை மற்றும் கேள்வி பதில்கள்


மார்ச் 1983 மார்க்ஸின் நினைவு நூற்றாண்டு ஒட்டி ‘மனஓசை’ கலை இலக்கியத் திங்களிதழில் அவரைப் பற்றியும், ஜென்னிஃபர் மார்க்ஸ் பற்றியும் சில பதிவுகளைச் ஆசிரியர் குழு செய்தார்கள். அதிலிருந்து சில மீள்பதிவு இங்கே.ஒரு இளைஞனின் பிரதிபலிப்பு
(மார்க்ஸ் தன் 17-வது வயதில் கல்லூரி கட்டுரைப் போட்டி ஒன்றில் எழுதியது)

“மனிதர்களுக்குச் சேவை செய்வதற்கான வழிகளையும் சாதனங்களையும் தேடு. ஒருவர் தனக்காக மட்டும் வேலை செய்தால் அவர் ஒரு பெரிய படைப்பாளி, பெரிய ஞானி, சிறந்த கவிஞன் என்று பெயரும் புகழும் மிக்கவராக ஆகலாம். ஆனால் குற்றமற்ற முழுமையான மனிதனாக ஆக முடியாது. ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் சரியான நிலைபாட்டைத் தேர்ந்தெடுத்து மனித குலத்திற்குச் சிறந்த முறையில் சேவை செய்வாரானால், அவர் ‘நான்’ என்னும் தற்பெருமையுடன் கூடிய குறுகிய சொந்த சுகம் மகிழ்ச்சியைப் பற்றி அதிகமாக உணரமாட்டார். மாறாக அவருடைய மகிழ்ச்சி கோடிக்கணக்கான மக்களுக்குச் சொந்தமானதாக இருக்கும்”.சில கேள்விகள் பதில்கள்
(1865 ஏப்ரல் 1-இல் சாதாரணமான சில கேள்விகளடங்கிய கேள்வித்தாள் ஒன்று மார்க்சிடம் கொடுக்கப்பட்டது.தன் மகளின் வற்புறுத்தலால் மார்க்ஸ் பதில் எழுதிக் கொடுத்தார். பதில்கள் அவரது நேர்மையையும், மனித நேயத்தையும் காட்டுகின்றன.)
  • உங்கள் விருப்பத்திற்குகந்த நற்பண்பு - எளிமை
  • உங்களின் தலையாய குணஇயல்பு - செயல் நோக்கில் ஒருமுகப்பட்ட  தன்மை
  • நீங்கள் மிகவும் அதிகமாக வெறுத்தொதுக்கும் ஒழுக்கக்கேடு - குழைந்து செல்லும் அடிமை மனப்போக்கு
  • நீங்கள் ஓரளவு மன்னிக்கக்கூடிய கெட்ட குணம் - ஊதாரித்தனம்
  • உங்களுக்கு மகிழ்ச்சி தரும் கருத்து - போராடுவது
  • நீங்கள் மிக வெறுக்கும் கேடு - கீழ்ப்படிவு
  • உங்கள் விருப்பத்திற்குகந்த கதாநாயகன் - 1.ஸ்பார்ட்டகஸ், 2.கெப்ளர் (ஸ்பார்ட்டகஸ் கி.மு. 78-73-இல் ரோமில் நடந்த எழுச்சியின் தலைவன். கெப்ளர் செர்மானிய வானவியல் வல்லுநர் 1571-1630.)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) வாழ்க்கை வரலாறு

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்