பா.செயப்பிரகாம் கதைகள் - ம.மணிமாறன்‌


கரிசல்‌ காட்டு எழுத்தை பின்‌ தொடர்பவராக பா.செயப்பிரகாசத்தை வகைப்படுத்த முடியாது. கி.ராவும்‌, இன்ன பிற கரிசல்‌ கதைக்காரர்களும்‌ காட்டும்‌ மன உலகம்‌ வேறு. இவரின்‌ கதை மனம்‌ வேறு என்றுபடுகிறது. கிராமத்து வாழ்க்கையை இவர்‌ ரொமான்டிசைஸ்‌ செய்ததில்லை. மனஓசை இதழை நடத்தியவர்‌. அல்ட்ரா லெப்ட்‌ அமைப்புகளின்‌ சார்பாக தன்‌ கவிதைகளை பேசச்‌ செய்தவர்‌. கதைகளில்‌ ஒழுங்கு அமைதியுடன்‌ கூடிய நுட்பமான கதைகளைப்‌ படைத்தவர்‌. மனித மனங்களில்‌ சூழ்‌ கொண்டிருக்கும்‌ மனிதாபிமானம்‌ குறித்து இலக்கிய உலகில்‌ பேசாத எழுத்தாளன்‌ இல்லை. இது சக மனிதனின்‌ துயரத்தில்‌ பங்கேற்கிற மனிதர்கள்‌ நிறைந்த பூமி அன்பும்‌, கருணையும்‌ பொங்கி வழியும்‌ மனித மனதிற்குள்‌ தான்‌ வக்கிரம்‌ எனும்‌ குணமும்‌ நிறைந்திருக்கிறது என்பதையும்‌ வர்க்க குணமெனும்‌ ஒரு வகை மாதிரியை தன்‌ படைப்புளில்‌ படரவிட்டவர்‌ பா.செயப்பிரகாசம்‌. அதற்கான அழுத்தமான சாட்சியம்‌ 'மூன்றாவது முகம்‌' எனும்‌ அவரின்‌ கதையாகும்‌. நடுவழியில்‌ நின்ற காருக்கு நிழல்‌ தேடியவர்களுக்கு நிழல்‌ தந்த குடும்பம்‌ துளசி ராசு குடும்பம்‌. அதற்கு பிராயச்சித்தமாக துளசிராசுக்கு மில்‌ வேலை தருகறார்‌ காரில்‌ வந்தவர். கணவான மில்‌ வேலைக்கு நடுவில்‌ கூலி உயர்வு கேட்டுப்‌. போராட்டம்‌ நடக்கிறது. முதலாளி ரொம்ப நல்லவரு கட்டாயம்‌: செய்வாரு என்கிறான்‌ துளசிராசு. ஆனால்‌ மில்‌ மூடப்படுகிறது. மில்லைத்‌ திறப்பது குறித்து கருனையே வடிவானவர்‌ என தான்‌ நம்பிக்‌ கொண்டிருக்கும்‌ முதலாளிபைப்‌ பார்த்து பேசுகிறான்‌ துளசிராசு. அவரின்‌ முதலாளி குணம்‌ மெல்லத்‌ தட்டுப்படுகிறது அவனுக்கு. கதை இப்படி முடிகிறது. துளசிராசு முன்னால்‌ சிந்தனைப்‌ படங்கள்‌ ஓடின. கடந்த காலப்‌ பாசப்படங்களை நிகழ்கால கொடுரம்‌ அடித்து: நொறுக்கி விட்டது. மூன்றாவது மூகம்‌ மட்டுமே இப்போது துளசிராசிக்கு தெரிந்தது. கதையின்‌ கடைசியில்‌ பா. செயப்பிரகாசம்‌ பேசுகிறரே என நவீன விமர்சகர்‌ என தன்னை நம்பிக்‌ கொண்டிருப்பவர்கள்‌ கேட்கக்‌ கூடும்‌. ஏன்‌ பேச வேண்டி உள்ளது. என்பதே இங்கு முக்கியம்‌ பா.செயப்பிரகாசத்தைத்‌ தவிர வேறு எவரும்‌ முதலாளியின்‌ மூன்றவது முகத்தை அடையாளம்‌ காட்டமாட்டார்கள்‌. இது அரசியல்‌ கதை என்பதால்‌ கதைகளின்‌ அரசியலை எப்படிச்‌ சொல்லாமல்‌ விடுவது என்கிற துடிப்பே கலைஞனை இப்படிப்‌ பேசவும்‌ வைக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்‌.  

பா.செயப்பிரகாசத்தின்‌ கதைகளில்‌ குறிப்பாக காடு, தாலியில்‌ பூச்சூடியவர்கள்‌, ஒரு ஜெருசலேம்‌. அம்பலகாரர்‌ வீடு போன்ற கதைகள்‌ விதி விலக்கானவை எனலாம்‌. குறிப்பாக தமிழ்ச்‌ சிறுகதைகளில்‌ தலைசிறந்த கதைகள்‌ என்று உறுதியாகச்‌ சொல்லலாம்‌. ஒரு பிரம்மாண்டத்தின்‌ துயரத்தைச்‌ சொன்ன கதை அம்பலகாரர்‌ வீடு. சாமி கொண்டாடி மட்டுமல்ல ஊருக்கு வரும்‌ பாம்பாட்‌டிகள்‌ பிச்சைக்காரர்கள்‌ என எவரும்‌ கையேந்தி பசியாற்றிய வீடு இது. நீண்ட இடைவெளிக்குப்‌ பிறகு அம்பலகாரான்‌ வீடடைந்த சாமி கொண்டாடி மட்டுமல்ல தொலைந்த வசீகரம்‌ கண்டு அவனின்‌ உடுக்கையும்‌, தீச்சட்டியும்‌ கூட தடுமாறுகின்றன. தன்‌ சக்தியெல்லாம்‌ திரட்டி உடுக்கடிக்கிறான்‌. அவனின்‌ நினைவில்‌ அம்பலகாரர்‌ இறந்ததும்‌, அவருக்குப்‌ பிறகு வீட்டம்மாவும்‌ இறந்திருக்கலாம்‌. ஆனாலும்‌ சிரித்த முகத்துடன்‌ தன்னிடம்‌ திருநீறு வாங்கிய சின்னப்‌ பெண்ணை அழைக்கிறான்‌. தேவி என அழைக்கும்‌ போதே கேட்ட சிரிப்பொலியின்‌ நிறம்‌ அவனை குழப்பத்தில்‌ ஆழ்த்தும்‌ போதே கோட்டைச்‌ சுவரைத்‌ தாண்டி ஒடுகிற வேட்டி கட்டிய இளைஞனின்‌ துள்ளலில்‌ எல்லாம்‌ தெரிந்து விடுகிறது. வேர்த்துக்‌ களைத்து தட்டில்‌ வெள்ளிப்‌ பணம்‌ வைத்த தேவியைக்‌ கண்டு பதறிய சாமி கொண்டாடி தான்‌ சேர்த்த தானிய தவசங்களை போட்டது போட்டபடி வெளியேறுகிறான் துக்கமாக. வறுமையும்‌ துயரும்‌ சகலத்தையும்‌ அழித்து எழுதிய கதையிது. கதையின்‌ வாகளை நனைத்திடும்‌ கண்ணீரால்‌ எழுதப்பட்ட பிரதி அழிவதும்‌ நிஜம்‌. அமைப்பிற்குள்‌ தீவிரமாக இயங்கிக்‌ கொண்டிருந்த காலங்களில்‌ எழுதப்பட்ட கதையிது என்பதையும்‌ சேர்த்துத்‌ தான்‌ சொல்ல வேண்டியுள்ளது.

- நன்றி: கதைகளும் கதையாடல்களும் நூல் 

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

படைப்பாளியும் படைப்பும்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

“மணல்” நாவல் - செங்கொடியேந்திய சூழலியல் காவியம்

பா.செயப்பிரகாசம் நூல்கள்