உங்களுக்கு பின், உங்கள் நினைவு எப்படி அனுசரிக்க பட வேண்டும் என நினைக்கிறீர்கள்? என் எழுத்துக்களால் கொண்டாடப்பட வேண்டும். - பா.செயப்பிரகாசம்...
உங்களுக்கு பின், உங்கள் நினைவு எப்படி அனுசரிக்க பட வேண்டும் என நினைக்கிறீர்கள்?
என் எழுத்துக்களால் கொண்டாடப்பட வேண்டும்.
- பா.செயப்பிரகாசம் (கடைசி நேர்காணலில்)

![]() |
| தினமலர், 23 அக்டோபர் 23 2023 |
எழுத்தாளர் பா.செயபிரகாசம் நினைவு நாள்...
தமிழ், தமிழீழம், சமூகம், கலை, இலக்கியம் என பல நிலைகளில் பல ஆண்டுகள் இணைந்து செயல்பட்ட தோழர் எழுத்தாளர் சூரியதீபன் என்கிற பா.செயபிரகாசம் அவர்களின் முதல் ஆண்டு நினைவு நாள் இன்று..
- ஓவியர் புகழ்
தூய தமிழ்த்தேசியர், இந்தி எதிர்ப்பு போராளி, எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்களுக்கு முதலாம் ஆண்டு புகழ் வணக்கம்.
- இறையழகன்
80 களில் மாணவர் கரங்களில் இடம் பிடித்த இதழ் என்றால் மன ஓசை இதழை குறிப்பிட்டு சொல்லலாம் இடது சாரிமாணவர்களிடம் படைப்பாற்றலை உருவாக்கியது. நெம்புகோல் இயக்க படைப்பாளிகள் மன ஓசை இதழில் பொறுப்பாசிரியரக பணியாற்றும் உத்வேகம் பெற்றனர். மொழிப்போரின் மாணவதளபதிகளின் ஒருவராக விளங்கிய பா. ஜெயப்பிரகாசம் அவர்களின் நிர்வாகத்தில் அது வெற்றிபெற்றது. செய்திமக்கள் தொடர்பு துறையில் பணியாற்றிய அவரில் படைப்புகள் சூரியதீபன் என்ற பெயரில் வெளிவந்தது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சமூகத்திற்கும் அவர் ஆற்றிய பங்கு நினைவுக்குரியது புகழ் வணக்கம்.
- இரவி கார்த்திகேயன்
எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் (சூரிய தீபன்) மறைந்து ஓராண்டு.
•••••••••••••••••••••••••••••••••••••••••••
[1941 - 23.10.2022]
1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர் தலைவராக இந்திய பாதுகாப்புச் சட்டத்தில் தளைப்படுத்தப்பட்டவர்.
இடதுசாரி சிந்தனையாளர், எழுத்தாளர். "மன ஓசை" இதழில் அவர் எழுதியவற்றை விரும்பிப் படித்துள்ளேன்.
ஈழவிடுதலைப் போராட்டம் தொடர்பில் மிகவும் ஈடுபாடு காட்டியவர்.
- குப்பன் சா


கருத்துகள் / Comments