நதியோடு பேசுவேன் - வாசகர் மதிப்புரை


புத்தகத்தின் பெயர்: நதியோடு பேசுவேன்

வகை: கவிதைத் தொகுப்பு 

ஆசிரியர்: சூரியதீபன்  

வெளியீடு: 'அகரம்-அன்னம்' / 2003

விலை: ரூ.30/-

பக்கங்கள்: 80

சூரியதீபனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு இந்நூல். "ஜெருசலேம்" எனும் அற்புத கதைத் தொகுப்பைக் கொடுத்தவர் பா.செயப்பிரகாசம் எனும் இயற்பெயர் கொண்ட சூரியதீபன்.

"கவிதையில் இணையும் 'சொல்' தனது நிஜமான உருவத்திலிருந்து கழன்று, அச்சொல் உணர்த்தும் அர்த்தத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றையோ அல்லது பலவற்றையோ குறிப்பதாகிறது" எனும் கருத்தாக்கம் கொண்டவர் இக்கவிஞர்; அதனை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளன இத்தொகுப்பிலுள்ள கவிதைகள். 'கவிதை என்பது உரத்துப் பேசாத மௌனம்; நேரடி விவரிப்பைத் தவிர்த்த ஒன்று' எனும் நவீன கவிஞர்களின் மனவோட்டத்திற்கு நேரெதிரானது சூரியதீபனின் கவிதை மொழி. மக்கள் உணர்ச்சிமயமான தங்கள் வாழ்க்கையை, வலிகளை, இன்பப்பெருக்கை, உவமைகள், சொல்லாடல்கள் மூலம் வெளிப்படுத்தும் போது ஆயிரங்காலத்துச் செறிவு வெளிப்படுகிறது; அந்த செறிவுகளின் அதிர்வுகளை தனது கவிதை மொழியாக்கக் கருப்பொருளாகக் கொண்டவர் சூரியதீபன். மக்கள் மொழியை தனக்குள் உள்வாங்கி கவித்துவ வடிவமாக்கி உருக்கொள்ளச் செய்யப்பட்ட கவிதைகளைக் கொண்டது இத்தொகுப்பு. மக்கள் இலக்கியத்தின்பால் நேசம் கொண்டவர்களை வசீகரிப்பவைகள் "நதியோடு பேசுவேன்" எனும் இக்கவிதைத் தொகுப்பு.

- துரை அறிவழகன்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

படைப்பாளியும் படைப்பும்

கீழத்தெரான் – துரை.குணா கவிதைகள்

வட்டார இலக்கியம்

பலியாடுகள்