பா.செயப்பிரகாசம் அஞ்சலி - ச.தமிழ்ச்செல்வன்
கரிசல் இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான தோழர் பா.செயப்பிரகாசம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் கடந்த 23-10-2022 அன்று காலமானார். 1941 ஆம் ஆண்டு விளாத்திகுளம் அருகே ராமச்சந்திராபுரம் என்கிற கரிசல் கிராமத்தில் பிறந்த பா.செயப்பிரகாசம் மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்த காலத்தில் கிளர்ந்தெழுந்த 1965 ஆம் ஆண்டின் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராடத்தின் தளபதிகளில் ஒருவராக இருந்தவர். அப்போராட்டத்தில் பங்கேற்றமைக்காகக் கைது செய்யப்பட்டுப் பாளையங்கோட்டைச் சிறையில் மூன்று மாத காலம் அடைபட்டிருந்தார். அந்த நாட்களில் திராவிட இயக்கப் பிடிப்போடு இருந்தவர், காலப்போக்கில் திமுக மீது அவநம்பிக்கையுற்று மார்க்சிய லெனினிய இயக்கத்தோடு தன்னைப் பிணைத்துக்கொண்டார். கரிசல் வாழ்க்கையை அவருக்கே உரிய தனித்த மொழி, நடையில் தன் சிறுகதைகளில் எழுதினார். 1960களில் நேரு யுகம் முடிவுக்கு வந்து, சுதந்திர இந்தியா விரித்த கனவுகள் ஏதும் நிறைவேறாத ஏமாற்றத்தில் இந்தியா தள்ளாடிக்கொண்டிருந்த காலத்தில் தன் கரிசல் மண்ணில் வாழ்க்கை சீர்குலைந்ததைத் தன் ஒவ்வொரு சிறுகதையிலும் வாசகர் நெஞ்சம் பதைபதைக்க எழுதினார். ஒரு ஜெருசலேம், அம்
கருத்துகள்
கருத்துரையிடுக