பா.செயப்பிரகாசக்தின்‌ "பள்ளிக்கூடம்‌” நாவல்‌: தமிழர்கள்‌ தமிழர்களாக இல்லை, சாதிகளாகச்‌ சிதைவுற்றுக்‌ கிடக்கிறார்கள்‌


1

மனித சமூகம்‌ என்பது அதிகாரங்களின்‌ விளையாட்டு மைதானமாக இருக்கிறது. இந்த அதிகாரங்கள்‌ குடும்பம்‌, மதம்‌, கல்வி, அரசு, நீதிமன்றம்‌, கலை இலக்கியம்‌ முதலிய நிறுவனங்களின்‌ வழியாக, ஒவ்வொரு தனிமனிதர்களையும்‌ திருகி, முறுக்கிச்‌ சாவி கொடுத்து மனித இயந்திரமாக ஓட வைக்கின்றன. விளைவு, ஒவ்வொரு மனிதர்களுமே அதிகார இயந்திரங்களாக மாற்றிப்போடப்‌ பட்டவர்கள்தான்‌. இப்படியான இந்த மனிதர்களை ஒரு பெரும்‌ போக்காகப்‌ பிரித்தப்‌ பார்த்தால்‌ இவர்கள்‌ இரண்டே பிரிவுக்குள்‌ வலுவாகச்‌ சமூக வெளியில்‌ இயங்கிக்‌ கொண்டே வருகிறார்கள்‌ எனக்‌ கணிக்க முடிகிறது. ஒன்று, மேற்கண்ட சமூக நிறுவனங்கள்‌ வழியாக அதிகாரத்தைக்‌ குவித்துச்‌ சுரண்டிச்‌ செழிப்பவர்கள்‌. மற்றொன்று, இந்தச்‌ சுரண்டும்‌ அதிகாரத்திற்கு எதிராக மாற்று அதிகாரத்தைக்‌ கட்டமைக்க முயலுகிறவர்கள்‌. அதாவது அறத்தின்‌ பாற்பட்டவர்கள்‌ என்று சமூக வரலாற்றில்‌ அடையாளப்‌ படுத்தப்‌ படுபவர்கள்‌. இந்தப்‌ பெரும்‌ பிரிவில்‌ நாம்‌ யார்‌ பக்கம்‌ போய்ச்சேர்கிறோம்‌ என்பதே நம்‌ வாழ்க்கைக்கான விதியாகி விடுகிறது. இந்தத்‌ தேர்வு, தந்தை பெரியார்‌ ஓரிடத்தில்‌ சொல்வது போல நமது குணநலன்‌ சார்ந்ததாக இருக்கிறது.

தோழர்‌ பா. செயப்பிரகாசம்‌ (குரியதீபன்‌) கல்லூரியில்‌ படித்தபோதே - இந்தி எதிர்ப்புப்‌ போராட்டக்‌ காலத்திலேயே (1965) சுரண்டும்‌ அதிகாரத்திற்கு எதிராக மாற்று அதிகாரத்தைக்‌ கட்டமைக்கும்‌ பாதையைத்‌ தேர்வு செய்து கொண்டவர்‌. அதற்கேற்பவே எந்தவிதச்‌ சமரசமும்‌ இல்லாமல்‌ தொடர்ந்து 75 வயதை நெருங்கிவிட்ட இன்றுவரை எழுத்தாலும்‌ செயலாலும்‌ சிந்தனையாலும்‌ இயங்கி வருகிறார்‌ என்பதே நமது அடிமைக்‌ கலாச்சாரப்‌ பின்னணியில்‌ வைத்துப்‌ பார்க்கும்போது மிகப்பெரிய சாதனையாக எனக்குப்‌ படுகிறது. இத்தகைய அறத்தின்பாற்பட்ட ஒரு பயணத்தின்‌ விளைச்சலாகத்தான்‌ ' பள்ளிக்கூடம்‌” என்ற அவருடைய இந்த முதல்‌ நாவலும்‌ இப்பொழுது 'வம்சி' மூலமாக வெளி வந்திருக்கிறது. ஒரு ஜேருசேலம்‌, தாலியில்‌ பூச்சூடியவர்கள்‌ முதலிய புகழ்பெற்ற நூற்றுக்கணக்கான சிறுகதைகளைப்‌ படைத்து அளித்தவர்‌, புனைவுவெளியின்‌ மற்றொரு வடிவமான 'நாவல்‌' ஒன்றைக்‌ தனது 75 வயதை ஒட்டித்தான்‌ எழுதி வெளியிடுகிறார்‌. இது, ரெனிவெல்லாக்‌, ஆஸ்டின்வாரன்‌ சொல்வது போல, படைப்பாளிகளை அவர்களை மீறி ஆட்டிப்படைக்கின்றவைகளாக வகைமை அல்லது வடிவமென்ற ஒன்று பேருரு எடுத்து வினைபுரிந்திருப்பகைப்‌ புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக எனக்கு அமைகிறது.


2

பொதுவாக, நாவல்‌ என்பது கதை கட்டுவது என்பதாகத்தான்‌ பொதுமக்கள்‌ வெளியில்‌ மட்டுமல்ல, வெகுஜன பத்திரிக்கைகளின்‌, பதிப்பகங்களின்‌, ஊடகங்களின்‌ பார்வையிலும்‌ அமைந்துள்ளது. ஆனால்‌ இரண்டாயிரத்திற்குப்‌ பிறகு. இந்தப்‌ பார்வையின்‌ ஆக்கிரமிப்பில்‌ இருந்து தப்பித்து, நாவல்‌ என்பது, தன்‌ காலச்‌ சமூகத்தில்‌ தன்னைச்‌ சுற்றி நடக்கும்‌ அத்தனை நிகழ்வுகள்‌ மீதும்‌, சமூக உரையாடல்கள்‌ மீதும்‌ கூர்மையான விமர்சனப்‌ பார்வையைப்‌ புனைவு மொழியில்‌ வடிவமைக்கும்‌ ஒருவிதமான சமூகச்‌ செயல்பாடு என்கிற அணுகுமுறை மேலெழுந்து அற்புதமான நாவல்கள்‌ வெளிவந்த வண்ணம்‌ உள்ளன. அத்தகையதொரு அணுகு முறையில்‌ நம்‌ சமகால வாழ்வில்‌ பள்ளிக்கூடம்‌, கல்வி கற்றுக்‌ கொடுத்தல்‌ என்கின்ற போர்வையில்‌ நடந்து கொண்டிருக்கும்‌ சமூகச்‌ சீரழிவின்‌ பலவகைப்பட்ட முகத்தையும்‌ கரிசல்காட்டு மொழியில்‌, கரிசல்‌ காட்டுக்‌ கிராமச்‌ சூழலில்‌ ஆவணப்படுத்தவதோடு, சென்னை மாநகரின்‌ பின்புலத்திலும்‌ பதிவு செய்திருப்பது இப்படைப்பின்‌ தனிச்சிறப்பு எனச்‌ சொல்ல வேண்டும்‌.

தினம்‌ தினம்‌ மூன்று மூன்று ஆறு கிலோ மீட்டர்‌ நடந்து படிக்கும்‌ எட்டாம்‌ வகுப்பு மாணவி தனம் வகுப்பிற்கு வந்தவுடன்‌ பருவம்‌ அடைந்துவிடும்‌ நிகழ்ச்சியைத்‌ கதையாக்கும்‌ போக்கில்‌ கரிசல்‌ காட்டுக்‌ கிராம வாழ்க்கையின்‌ ஒரு கூறைக்கதை சொல்லிப்‌ படம்‌ பிடிப்பதோடு நாவல்‌ தொடங்குகிறது. இப்படியான ஒரு பண்பாட்டு நிகழ்ச்சியோடு தொடங்கும்‌ நாவல்‌, பள்ளிக்கூடம்‌ சார்ந்து சமூகத்தில்‌ நிலவும்‌ அனைத்துப்‌ பிரச்சனைகளைப்‌ பற்றியும்‌ உரையாடுகிறது. ஓவ்வொரு கிராமத்திலும்‌ சூரியக்‌ கதிர்கள்‌ நிலத்தில்‌ படுவதற்கு முன்பே பட்டாசுத்‌ தொழிற்சாலை முதலாளிகளின்‌ வண்டிகள்‌, கண்‌ முழிக்கும்‌ சிறுவர்‌, சிறுமிகளை அள்ளிப்போட்டுக்‌ கொண்டு போகும்‌ அவலத்தைக்‌ கி.ரா, தமிழ்ச்‌ செல்வன்‌, கோணங்கி ஆகியோர்‌ நெஞ்சு வலிக்க எடுத்துரைத்துள்ளனர்‌. இப்பொழுது அது பத்தாது என்று மெட்ரிகுலேஷண்‌ ஆங்கிலப்‌ பள்ளிகளின்‌ முதலாளிகள்‌ போட்டிப்‌ போட்டுக்‌ கொண்டு, நாலு எழுத்துப்‌ படிக்க வேண்டும்‌ என்று ஆசைப்பட்டு மிஞ்சிய சிறுவர்களையும்‌ கூட்டி அள்ளித்‌ இணித்துக்கொண்டு போய்விடுகிறார்கள்‌; தொடக்கக்‌ கல்வியே வணிக மயமாகிவிட்டது. விடுதலை பெற்ற காலந்தொட்டு அரசுப்‌ பள்ளிகளைக்‌ தொடங்கிப்‌ பள்ளிக்‌ கூடத்திற்குப்‌ போகிற அல்லது அனுப்பிவிடுகிற பழக்கத்தை அரும்பாடுபட்டு ஏற்படுத்திய பிறகு, இன்று அத்தனை உழைப்பையும்‌ தனியார்ப்‌ பள்ளி முதலாளிகள்‌ பணம்‌ சம்பாதிப்பதற்கான ஒன்றாக மாற்றிவிட்டார்கள்‌ என்பது எவ்வளவு பெரிய அவலம்‌. ஏறத்தாழ ஓராசரியர்‌ பள்ளிகள்‌ (2000 அரசுப்‌ பள்ளிகள்‌) மூடப்பட்டுவிட்டன என்ற தகவலைத்‌ தருகிறார்‌ கதை சொல்லி.

குழந்தைகள்‌ கால்‌, கைகளை வீசி விளையாடுவதற்குக்‌ கூட விளையாட்டு மைதானம்‌ ஏதுமின்றி ஆட்டுப்பட்டிப்‌ போல உள்ள இந்தத்‌ தனியார்‌ ஆங்கப்‌ பள்ளிகளின்‌ அட்டூழியத்தை நாவல்‌ அழுத்தமாக எடுத்துரைக்கிது. அரசுப்‌ பள்ளியில்‌ வேலைபார்க்கும்‌ ஆசிரியர்களே - கனகராஜ்‌ - அமராவதி - தங்கள்‌ பிள்ளைகளை அரசுப்‌ பள்ளியில்‌ சேர்க்காமல்‌ தனியார்‌ பள்ளிகளில்‌ சேர்ப்பது மட்டும்‌ இல்லாமல்‌, அப்பள்ளிகளுக்குப்‌ “பிள்ளை பிடிக்கும்‌" பணியையும்‌ தீவிரமாகச்‌ செய்கின்றனர்‌. தங்கள்‌ பிள்ளைகளுக்குப்‌ பார்த்தில்‌, சுபீக்ஷா  என்று வித்தியாசமான பெயர்களையும்‌ குட்டிச்‌ கொண்டு கொள்ளைக்குக்‌ துணை போகின்றனர்‌; அரசு ஆசிரியர்கள்‌ மட்டுமா? கல்வித்துறை சார்ந்த அரசு அதிகாரிகளும்‌ அலுவலர்களும்‌ தனியார்‌ பள்ளிகளுக்கே சேவை புரிகின்றனர்‌. இந்தச்‌ சேவைக்குப்‌ பரிசாக நட்சத்திர விடுதிகளில்‌ தங்கல்‌, குடும்பத்தோடு கோயில்‌, குளமென்று ஊர்‌ சுற்றும்‌ வசதிகள்‌ அவர்களுக்கு இலவசமாகக்‌ கிடைக்கின்றன. மேலும்‌, இந்தத்‌ தனியார்‌ மெட்ரிக்குலேஷன்‌ பள்ளிகளின்‌ உரிமையாளர்களாக ஆளும்‌ கட்சியைச்சார்ந்தவர்களே வலம்‌ வருகிறார்கள்‌.

இப்படியாக ஏழைச்‌ சிறுவர்களின்‌ படிப்பிற்கும்‌ அரசுப்‌ பள்ளிகளுக்கும்‌ எதிரான ஒரு நச்சுச்‌ சூழல்‌, ஆக்டோபஸ்‌ கரங்களாய்‌ வலை விரித்திருக்கும்‌ கிராமப்‌ பின்னணியில்‌, கிராம மொழியில்‌ நாவலைப்‌ புனைந்துகொண்டு போகிறார்‌ கதை சொல்லி. வில்வநத்தம்‌, கமலாபுரம்‌, சென்னம்பட்டி ஆகிய கிராமங்களில்‌ உள்ள அரசுப்‌ பள்ளிகளை அழியவிடாமல்‌, அவ்வட்டாரம்‌ சார்ந்த செங்குளம்‌, வெம்பூர்‌, தீத்தாரப்பட்டி, மணக்குடி, பச்சையாபுரம்‌, எப்போதும்‌ வென்றான்‌ முகலிய கிராமத்து ஏழைச்‌ சிறுவர்களின்‌ கல்வியைக்‌ காப்பாற்றிக்‌ கொடுக்கும்‌ மாபெரும்‌ பணியில்‌ அப்துல்கனி என்ற தலைமையாசிரியரின்‌ தலைமையின்‌ கழ்‌ சில ஆசிரியர்களும்‌ (ஜான்‌, முத்துராக்கு) - சேர்ந்து போராடும்‌ காட்சிகளைத்தான்‌ நாவலாக விரித்துக்காட்டுகிறார்‌. கூடவே அரசுப்‌ பள்ளிகள்‌ கிராமத்தில்‌ மட்டுமல்ல, சென்னை மாநகரம்‌ போன்ற பெரிய நகரங்களிலும்‌ இப்படித்தான்‌ அதிகாரிகள்‌, அரசியல்வாதிகள்‌, வணிக முதலாளிகள்‌ ஆகியோரின்‌ கூட்டில்‌ நசுக்கப்படுகின்றன என்பதையும்‌ இங்கே கிராமத்திற்கு மாற்றலாகி வருவதற்கு முன்பு நகரத்தில்‌ பணியாற்றிய அதே தலைமையாசிரியர்‌ அப்துல்‌ கனியின்‌ மேன்மையான ஆரியப்‌ பணியைச்‌ சித்திரிப்பதன்‌ மூலமாகவும்‌ சொல்லிவிடுகிறார்‌. அந்தக்‌ தலைமை ஆசிரியர்‌, சென்னை எம்‌.எம்‌.டி.ஏ அரசு மேனிலைப்‌ பள்ளியை வளர்த்தெடுத்த அற்புத மனிதர்‌; அரசுப்‌ பள்ளிகளில்‌ கழிவறை உட்பட எந்க வசதியும்‌ இல்லை என்ற விமர்சனமே எழாதபடி எல்லாவிதமான நவீன வசதிகளோடு வளர்த்தெடுக்தவர்‌; அப்படிப்பட்ட தியாகம்‌ செறிந்த தலைமை ஆசிரியரைப்‌ பள்ளிக்‌ கூடத்தை ஓட்டியிருந்த சாராயக்கடையை அகற்றியே தீர வேண்டும்‌ என்ற விடாப்பிடியான போராட்டத்திற்குத்‌ தண்டனையாக அரசு அவரைத்‌ “தண்ணி இல்லாக்‌ காட்டுக்கு மாற்றுகிறேன்‌ பார்‌” என்று பெரிய அண்ணன்‌ 45வது வட்ட மாமன்ற உறுப்பினர்‌ டில்லிதுரை பேச்சைக்‌ கேட்டு கமலாபுரம்‌ என்ற இந்தக்‌ கரிசல்‌ காட்டிற்கு மாற்றியது; அப்படி வந்தவர்தான்‌ இங்கே இந்தக்‌ கரிசல்காட்டிலும்‌ அதே பணியை விடாமல்‌ தொடர்கிறார்‌.

****


அரசுப்‌ பள்ளிக்குப்‌ பிள்ளைகளைச்‌ சேர்க்கும்‌ முயற்சியில்‌ ஒவ்வொரு கிராமமாகத்‌ தலைமையாசிரியர்‌ தன்னோடு இன்னும்‌ மூன்று ஆசரியரைச்‌ சேர்த்துக்கொண்டு மிதிவண்டியில்‌ வரும்‌ காட்‌சி ஒன்றை இப்படிக்‌ கூறுகிறார்‌ கதைசொல்லி:

“அவர்கள்‌ நால்வர்‌ சைக்கிளில்‌ வந்தார்கள்‌. வருகிறபோது கிழக்குச்‌ சூரியனையும்‌ கேரியரில்‌ ஏற்றிக்கொண்டு வந்ததுபோல்‌ தெரிந்தார்கள்‌” (ப 38)

இத்தகைய கவித்துவமொழி, நாவலின்‌ எடுத்துரைப்பிற்குத்‌ தனி அழகைக்‌ கூட்டுகின்றது; நாவல்‌ முழுக்கக்‌ கையாளுதிற உவமைகள்‌ பலவும்‌ மண்‌ சார்ந்த விவசாயம்‌ சார்ந்தனவாகவே அமைந்திருக்கின்றன. நாவலை வாசிக்கும்‌ போதே இந்தத்‌ தனித்தன்மையை என்னால்‌ அவதானிக்க முடிந்தது. ஆசிரியர்கள்‌ ஊருக்குள்‌ வருகிறார்கள்‌; பெண்டுகள்‌ இரு கைகளையும்‌ குவித்து வணங்குகிறார்கள்‌; இந்தக்‌ காட்சியை ஆசிரியர்‌ சொல்லுகிறார்‌:

“சோளக்‌ கருதுகளை மூடிய தோகைபோல்‌ இரு கைகளுக்குள்‌ விலையில்லா வாஞ்சையைப்‌ பொதிந்த கும்பிடு”. (ப 44)

என்கிறார்‌. பள்ளிக்கூடத்கை வளர்த்தெடுக்கத்‌ தலைமை ஆசிரியர்‌, பெற்றோர்‌ + ஆசிரியர்‌ சங்கத்தை உருவாக்குகிறார்‌ என்பதை,

பெற்றோர்‌ + ஆசிரியர்‌ சங்க அமைப்பை இணக்கமாக்கி, நெருக்கி உழவு போட்டதால்‌ வெள்ளாமை கிடைத்தது. (ப 286)

என எழுதுகிறார்‌. நீண்ட நாள்கழித்து யசோகரை, அன்னக்கிளியைச்‌ சந்தித்துத்‌ துக்கம்‌ மேலிட பீறிட்டு அழுகிறாள்‌. அதை ஆரியர்‌,

கண்களுக்குப்‌ புலனாகாக நீரோட்டம்‌ பூமிக்கடியில்‌ ஓடுகிறது. ஊற்றுத்‌ தோன்றி பாறை கீறுவிட்டதும்‌ 'குபுக்‌'கென்று வெளியில்‌ கொப்பளித்துக்‌ கொட்டுவது போல்‌, வாழ்வுக்குள்‌ ஓடிய நிலத்தடி வெக்கை தனக்கு உயிரான உறவைக்‌ கண்டதும்‌ 'குபுக்‌' கென்று ஓலமிட்டுக்‌ கொட்டியது. (ப 328)

இவ்வாறு நாவல்‌ முழுவதும்‌ விவசாயமும்‌ மண்ணும்‌ சார்ந்த பார்வைகளே நிரம்பிக்‌ கிடக்கின்றன.

இதுபோலவே கிராம வழக்கு மொழியாலும்‌ இடத்திற்கேற்ற பழமொழிகளாலும்‌ உரையாடலை நிகழ்த்திக்‌ காட்டுகிறார்‌.

கொள்ளைக்‌ குமரு வில்லாச்‌ சரக்கு (ப 8) கால்ல ஒட்டுன கரிசல்காட்டு மண்ணா, சேலையில ஓட்டுன செவக்காட்டு மண்ணா (ப 8) இப்படி நூற்றுக்கணக்கான சொலவடைகளைக்‌ தொகுக்கமுடியும்‌! மேலும்‌ செத்துப்‌ போதல்‌ என்ற நிகழ்வை,

நாங்க அரிச்சந்திராபுரம்‌ போறோம்‌

சொந்த ஊர்‌ போய்ச்‌ சேர்ந்திட்டார்‌

கம்பு வாங்கப்‌ போயிட்டார்‌

வாகை மரத்தடியில்‌ இலையைப்‌

போட்டுட்டார்‌

உப்புக்‌ கண்டம்‌ ஆகிட்டார்‌. (ப 125)

என்றெல்லாம்‌ பலப்பல வழக்காறுகளில்‌ சுட்டப்படுவதைப்‌ பதிவு செய்கிறார்‌. பள்ளிக்கூடப்‌ பிரச்சனையைப்‌ பேசுதல்‌ என்ற ஒரு பின்னணியில்‌, குறிப்பிட்ட ஒரு மண்‌ சார்ந்த மக்களின்‌ வாழ்க்கை வழக்காறுகளை எல்லாம்‌ பதிவு செய்துள்ளார்‌.

இந்தச்‌ சமூகத்தின்‌ சாபக்கேடான சாதியத்தின்‌ கோரமுகத்தைப்‌ பள்ளிக்கூடப்‌ பின்னணியில்‌ எடுத்துரைக்கிறார்‌; சாதிவிட்டுச்‌ சாதி என்ற கலப்புத்‌ திருமணம்‌, அதுவும்‌ கடைச்சாதி ஓர்‌ ஆண்‌ மகனோடு காதல்‌ திருமணம்‌ நடந்து விடாமல்‌ ஒட்டுமொத்தக்‌ கிராமமே கண்காணிப்பு மிக்க ஒரு காவல்‌துறை போல நடந்து கொள்கிறது. யசோதரை என்ற உயர்‌ சாதி மாணவிக்கும்‌ நல்ல பாடகனான உறுமிக்காரக்‌ கடைச்சாதிப்‌ பையனான தனஞ்செயனுக்கும்‌ ஏற்படும்‌ இயற்கையான காதலைப்‌ பெண்ணின்‌ தந்தையும்‌ ஆதிக்கச்‌ சாதிக்‌ கிராமமும்‌ எப்படி ஆங்காரத்தோடு எதிர்கொள்கிறது என்பதை மிக நுட்பமாக எடுத்துரைக்கிறார்‌. நம்‌ பொருளை அபகரிச்சிட்டுப்‌ போயுறக்‌ கூடாது (ப.20) என்று பெண்ணை உடைமைப்‌ பொருளாகவும்‌ சாதிப்‌ பெருமையின்‌ குறியீடாகவும்‌ கண்டு கனன்று கொண்டு கிடக்கும்‌ கிராமத்து மனங்களைப்‌ படம்‌ பிடிக்கிறார்‌. எல்லோரும்‌ தமிழ்‌ பேசினாலும்‌ இங்கே (89%) யாரும்‌ தமிழனாக இல்லை: சாதியாக இருக்கிறார்கள்‌ (ப. 254) என்று நம்‌ சம காலத்தில்‌ உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும்‌ “ஆணவக்‌ கொலைகளின்‌” சாட்சியாக நாவல்‌ விரிகிறது. கிராமத்தில்‌ இருந்து உயர்கல்வி படிக்க நகரத்திற்குள்‌ போனாலும்‌. அங்கேயும்‌ இதே சாதி அடையாளங்களைச்‌ சுமந்து கொண்டுதான்‌ வாலிப மாணவர்‌ உள்ளங்கள்‌ கூட நடமாடுகின்றன என்பகை வண்ணார்‌ குடி பரமன்‌, பஞ்சுமில்‌ சங்கனன்‌ என்ற கதாப்‌ பாத்திரங்களை வைத்து விளக்கிவிடுகிறார்‌.

இவ்வாறு சாதியச்‌ சமூகமாக இறுகிக்‌ கிடந்தாலும்‌ அதற்குள்ளும்‌ ஏற்பட்டுக்‌ கொண்டிருக்கும்‌ மாற்றங்களையும்‌ நுட்பமாக அவதானித்து நாவல்‌ பதிவு செய்துள்ளது: 'சாமி', 'முதலாளி' என்ற அழைப்பு வார்க்தைகளுக்குப்‌ பதிலாக 'ஸார்‌' என்று உயர்‌ சாதிக்காரர்களை அழைக்கும்‌ பழக்கம்‌ முன்னெடுக்கப்‌பட்டுள்ளது. இதுபோலவே பச்சை மண்ணு, மாடன்‌, மாடத்தி, ஓட்டான்‌, பூந்திரன்‌ என்று மனுதர்மம்‌ விதித்த பெயர்கள்‌ எல்லாம்‌ மறைந்து சக்கிலியக்‌ குடி மக்கள்‌ நடுவில்‌ மாதவி, கவியரசர்‌, பானுமதி போன்ற பெயர்கள்‌ வந்துவிட்டதையும்‌ பதிவு செய்கிறார்‌. 'உறுமி' அடித்தல்‌ என்கிற குலத்‌ தொழிலைச்‌ செய்ய மாட்டேன்‌ என்ற தனஞ்செயலின்‌ எதிர்‌ நடவடிக்கை, யசோகரை மேல்‌ ஏற்பட்ட காதல்‌ தோற்கடிக்கப்பட்டு மீண்டும்‌ அவனை உறுமி தூக்க வைக்கிற சாதி ஆக்கம்‌ ஒரு சிறிதும்‌ குறையாமல்‌ நிலவுகிறது என்று ஒரு பக்கம்‌ காட்டப்பட்டாலும்‌, பெரிய அளவில்‌ வளரும்‌ வாலிபப்‌ பையன்கள் இந்தக்‌ குலத்‌ தொழில்களைத்‌ தூக்கி எறிந்துவிட்டுக்‌, கண் காணா நகரங்களில் போய்ப்‌ பலசரக்குக்‌ கடைகளிலும்‌, உணவு விடுதிகளிலும் போய்ப் பிழைப்பிற்கு வேறுவழி தேடிவிட்ட சமூக மாற்றங்களையும் நாவல்‌ சுட்‌டிக்காட்டுகிறது.

இதுபோலவே கிராமக் கலைஞர்கள்‌ ஒரு காலத்தில்‌ அரியலூர் இரயில் விபத்து மதுரை ஆர்.வி மில்‌ போராட்டம்‌, தூத்துக்குடி டூரிங்‌ டாக்கீஸ்‌ தீ விபத்து, மதுரை சரஸ்வதி பள்ளிக்கூடம்‌ இடிந்து விழுந்து மாணவிகள்‌ அடைந்த மரணம்‌, ராமேஸ்வர பாம்பன்‌ பால ரயில்‌ விபத்து என்று பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிகழ்ச்சிகளைக்‌ கதைப்‌ பாடலாகப்பாடி மக்கள்‌ மனத்தில்‌ இடம்பிடித்த நிலையெல்லாம்‌ போய்‌ இன்றைக்குச்‌ 'சினிமாப்‌ பாணிகள்‌' அந்த இடத்தை ஆக்கிரமித்துக்‌ கொண்டன என்ற மாற்றத்தைப்‌ பதிவு செய்கிறார்‌; கூடவே கடற்கரை, தோப்பூர்‌ கோவிந்தன்‌, கழுகுமலை சுப்பையா போன்ற அந்த நாட்டுப்புறக்‌ கலைஞர்கள்‌ நடுவில்‌ ஏற்பட்டுள்ள விழிப்புணர்வையும்‌ அழுத்தமாகச்‌ சொல்லி விடுகிறார்‌. டீக்குடிக்கப்‌ போகிறார்கள்‌, 'டீ' சிரட்டையில்‌ கொடுக்கப்படுகிறது; “மத்தவங்களுக்குக்‌ கொடுக்கிற மாதிரி டம்ளர்ல குடு” என்று கேட்க வேண்டியதுதானே என்கிறார்‌ தமிழாசிரியரான முத்துராக்கு. அதற்குக்‌ கடற்கரை இப்படிப்‌ பதில்‌ சொல்லுகிறார்‌:

'அவங்க சாப்பிடுற டம்ளரில நாங்க சாப்பிட மாட்டோமில்ல'

'அடிரா சக்கை' என்று கொண்டாடத்‌ கோன்றுகிறது முத்துவுக்கு. இப்படியான சாதி ஆதிக்கத்திற்கான எதிர்ப்பு உணர்வு அவர்கள்‌ பாடுகிற பாடல்களிலும்‌ எதிரொலிப்பதை ஆசிரியர்‌ காட்டுகிறார்‌.

“நாங்க தொட்டா மட்டும்‌ பட்டுக்கீருமா?” என்ற தீண்டாமைக்கு எதிரான பாடலை மேடைகளில்‌ பாடிப்‌ பட்டி தொட்டியெல்லாம்‌ எடுத்துச்‌ சென்றனர்‌ இந்தக்‌ கலைஞர்கள்‌. கிராம வாழ்வோடு பிணைந்து கிடக்கும்‌ இந்தக்‌ கலைஞர்களைக்‌ குறித்துப்‌ பேசாமல்‌, கிராமச்சமூக வாழ்வைச்‌ சொல்லிவிட முடியாது என்பதால்‌ நாவலுக்குள்‌ இக்கலைஞர்களை அழகாக இணைத்துள்ளார்‌; இணைத்தது மட்டும்‌ அல்லாமல்‌ மாறிக்‌ கொண்டிருக்கும்‌ பல பண்பாட்டு அசைவுகளையும்‌ ஆவணப்படுத்தியுள்ளார்‌; இந்த நோக்கில்தான்‌ பட்டிமன்றம்‌ குறித்தும்‌, விவசாய வாழ்வு அழிந்து கொண்டிருக்கும்‌ நிலை குறித்தும்‌, ஊருக்குப்‌ பொதுவான குளத்து நிலங்களும்‌, மண்மேடுகளும்‌, அடர்த்தியான மரங்களும்‌ ஆதிக்கச்‌ சாதிகளால்‌ கேள்வி கேட்பாரற்றுக்‌ கொள்ளை போகும்‌ காட்சிகளையும்‌ நாவலுக்குள்‌ கொண்டு வருகிறார்‌. இதுபோலவே போலீஸ்‌ இன்ஸ்பெக்டர்‌ ஆழ்வாரப்பன்‌, பேரூராட்சித்‌ தலைவர்‌ ஆகிய கதைமாந்தர்கள்‌ மூலம்‌ இங்கே நிரந்தர அதிகார அமைப்பு என்கிற ஒன்று, ஜனநாயகம்‌ என்கிற புதிய மொழியை ஒரு சிறிதும்‌ பொருட்படுத்தாமல்‌ கோலோச்சிக்‌ கொண்டிருப்பதையும்‌ தன் கதையாடலுக்குள்‌ சேர்த்து விடுகிறார்‌.

இவ்வாறு 'பள்ளிக்கூடம்‌' என்ற இந்த நாவல்‌ நம்‌ சமகாலத்‌ சமூக வாழ்வு எதிர்கொள்ளும்‌ அத்தனை வகையான பிரச்சனைகளையும்‌ அறத்தின்‌ பக்கம்‌ நின்று அழகான நாட்டுப்புற வழக்காற்று மொழி கொண்டு கவித்துவ நடையில்‌ அலசுகிறது. ஓரிடத்தில்‌ இளநீர்‌ வழுக்கை போல்‌ மேகங்கள்‌ குவிந்தன (ப 318) என்கிறார்‌.மேலும்‌ “நரைஇருட்டு” (ப 3) என்றும்‌, "நகவெதும்பலாய்‌ இளஞ்‌ சூடு” (ப 326) என்றும்‌, ரோஜாப்பூ நிறத்திலுள்ள ஈறு சிரிக்கும்போது அழகாகத்‌ தெரியும்‌ (ப 194) என்றும்‌ அவர்‌ எழுதிக்கொண்டு போகும்போது வாசிப்பு, மணம்‌ பெறுகிறது.

இந்த நாவலில்‌ இரண்டு ஆசிரியர்கள்‌ அரசால்‌ தண்டிக்கப்பட்டு மாற்றத்திற்கு உள்ளாகிறார்கள்‌. ஒருவர்‌ அப்துல்கனி. அவர்‌ சென்னை மாநகரத்திலிருந்து கரிசல் பூமியான கமலாபுரத்திற்கு மாற்றப்படுகிறார்‌; மற்றொருவர்‌ முத்துராக்கு. இவர்‌ கமலாபுரத்திலிருந்து தர்மபுரிக்கு மாற்றப்படுகிறார்‌; ஒருவர்‌ நகரத்தில்‌ இருந்து கிராமத்திற்கு, மற்றொருவர்‌ கிராமத்தில்‌ இருந்து நகரத்திற்கு. நேர்மைக்குப்‌ பரிசாகக்‌ தண்டிக்கப்படுகிறார்கள்‌ என்ற பின்புலத்தில்தான்‌ இக்காட்சி எடுத்துரைக்கப்படுகிறது என்றாலும்‌, எனக்குக்‌ கூடுதலாக வேறொன்றையும்‌ ஞாபகப்படுத்தியது. மாவோ நடத்திய கலாச்சாரப்‌ புரட்சிதான்‌ அது. கிராமத்து அதிகாரிகளை நகரத்திற்கும்‌ நகரத்து அதிகாரிகளைக்‌ கிராமத்திற்கும்‌ மாற்றிப்‌ போடுவதன்‌ மூலம்‌ கிராமம்‌ x நகரம்‌ என்னற மாபெரும்‌ பிளவினைச்‌ சமநிலைப்படுத்த வாய்ப்பு ஏற்படலாமென்று அவர்‌ அத்திட்டத்தை மேற்கொண்டார்‌. இங்கேதான்‌ இந்தச்‌ சாதி என்ன செய்தாலும்‌ 'வந்து பார்‌' என்கிறதே! என்ன செய்வது? இந்தக்‌ கேள்வி இந்த நாவலுக்குப்‌ பின்னாலும்‌ தொடர்ந்து வந்து கோண்டேதான்‌ இருக்கிறது. சாதித்‌ திமிருக்குக்‌ கரிபூசிவிட்டு யசோதரை, கிராமத்தை விட்டுக்‌ கிளம்பி தர்மபுரியிலுள்ள முத்துராக்கு வீட்டு வாசலுக்கு வந்து சேர்கிறாள்‌. சாதி வெறி சும்மா விடாது இவளைப்‌ பின்தொடர்ந்து வரும்‌, “அவனுக வரட்டும்‌. இங்கதான வருவானுக" என்று முத்து சொன்னதாக நாவல்‌ முடிகிறது. தர்மபுரி என்பது இங்கே ஒரு குறியீடாக வருகிறது. பாலன்‌ போன்ற தீவிர இடதுசாரிகள் குருதி சிந்தின மண்‌ தர்மபுரி! அது பார்த்துக்‌ கொள்ளும்‌ இந்தச்‌ சாதித்‌ திமிரை என்ற பொருளில்‌ நாவல்‌ முடிகிறது; நம்பிக்கை கலை இலக்கியப்படைப்பின்‌ பணி என்ற ஒரு கோட்பாட்டுப் பார்வை கொண்டு நாவல்‌ முடிகிறது. ஆனாலும்‌, இந்தச்‌ சாதியை என்ன செய்வது? என்ற கேள்வி இன்னும்‌ தொடர்வதாகத்தான்‌ எனக்குப்‌படுகிறது. 

 (க. பஞ்சாங்கம்‌ - சில நாவல்களும்‌ என்‌ வாசிப்புகளும்‌, செப்டம்பர் 2018)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - ஆல் இந்தியா ரேடியோ, புதுச்சேரி

அமுக்குப் பேய்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி