மீ.த.பாண்டியன் - MDPandian (முகநூல், 24 அக்டோபர் 2024
#அக்_23_2022_தோழர்_பா_செயப்பிரகாசம்_எ_சூரியதீபன்_நினைவு_நாள்_செவ்வணக்கம்!
1965 தியாகராசர் கல்லூரி மாணவர் மொழிப்போராட்ட ஈகி,
80களில் இரவுகள் உடையும், காடு எனச் சிறுகதைத் தொகுப்புகள், மனஓசை கலை , இலக்கிய இதழின் ஆசிரியர், கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல் குறித்து எழுதிய எழுத்தாளர், ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டிலிருந்து டெல்லி வரை இயங்கியவர்.
தமபக 2009, 2016இல் நடத்திய
மக்கள் கலை விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.
மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்களின் நெருங்கிய நண்பர்...எனக்கு நீண்ட காலத் தோழர்..எனை ஈர்த்த படைப்பாளி!
செவ்ணக்கம்!
மீ.த.பாண்டியன், தலைவர்,
தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்
பேச: 94431 84051
குப்பன் சா (முகநூல், 23 அக்டோபர் 2024)
எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்(சூரிய தீபன்)மறைந்த நாள். 23.20.2022
1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர் தலைவராக இந்திய பாதுகாப்புச் சட்டத்தில் தளைப்படுத்தப்பட்டவர்.
"மனஓசை" இதழில் அவர் தொடர்ந்து எழுதிவந்தார். பல இதழ்களில் அவர் எழுதிவந்தார். நூல்கள் பல வெளிவந்துள்ளன.
ஈழவிடுதலைப் போராட்டம் தொடர்பில் மிகவும் ஈடுபாடு காட்டியவர்.
புகழ் வணக்கம்.
Thulakol Soma Natarajan (முகநூல், 23 அக்டோபர் 2024)
பகுத்தறிவுப் பொதுஉடைமைப் போராளி .
படைப்பாளி #பா_ஜெயப்பிரகாசம் (#சூரியதீபன்)
#இரண்டாம்_ஆண்டு நினைவுநாள் அக்டோபர் 23. (2022)
பா. செயப்பிரகாசம் (1941 – 23 அக்டோபர் 2022) தமிழ்நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும்
திராவிட - பொதுவுடைமைச் சிந்தனையாளர்.
பேராசிரியராகவும், தமிழ்நாட்டரசில் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர்.
சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். குறிப்பாகச் சிறுகதைகளில் இவரது பங்களிப்பு தனித்துவமானது. எழுத்து வட்டத்திற்குள் மட்டுமே தன்னை சுருக்கிக் கொள்ளாமல்,
போராட்டக் களத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். எழுத்தாளர், பேச்சாளர், பேராசிரியர் உள்ளிட்ட பன்முகத் திறமை கொண்டவர்.
தமிழ் இலக்கிய உலகில் மிகப்பெரும் பங்காற்றியவர்.
உடல் நலக்குறைவால் கடந்த 2022, அக்டோபர். 23 ஆம் நாள் அமரரானார்.
⚖️💪புரட்சிவீரப் புகழ் வணக்கம்💪⚖️
⚖️ #துலாக்கோல்/ 23.10.2024⚖️
கருத்துகள் / Comments