தினமலர்: இதே நாளில் அன்று
அக்டோபர் 23: தூத்துக்குடி மாவட்டம், ராமச்சந்திராபுரத்தில், பாலசுப்பிரமணியன் - வெள்ளையம்மாள் தம்பதிக்கு மகனாக, 1941, டிசம்பர் 1ல் பிறந்தவர் பா.ஜெயபிரகாசம். இவர், இளம் வயதிலேயே தாயை இழந்ததால், சென்னம்ம ரெட்டிப்பட்டியில் இருந்த பாட்டி வீட்டில் தங்கி, பள்ளி படிப்பை முடித்தார். மதுரை தியாகராஜர் கல்லுாரியில் எம்.ஏ படித்தபோது, மாணவர் தலைவராக இருந்தார். அப்போது, ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று, பாளையங்கோட்டை சிறையில் மூன்று மாதங்கள் அடைக்கப்பட்டார். தி.மு.க அரசில், 1971ல், செய்தி மக்கள் தொடர்பு துறையில் இணை இயக்குநராக பொறுப்பேற்றார். 'தாமரை, கணையாழி, வானம்பாடி, புதிய பார்வை, தீராநதி' உள்ளிட்ட இதழ்களில் கவிதை, சிறுகதை, தொடர்கள் எழுதினார். 'சூரியதீபன்' என்ற புனை பெயரில், 'மனஓசை' இதழின் ஆசிரியராக இருந்தார். இவரது, 'காடு' சிறுகதை தொகுப்பு, காமராஜர் பல்கலையில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. 'தமிழ் படைப்பாளிகளின் முன்னணி' என்ற அமைப்பை துவக்கி, இலக்கிய, சமூக செயல்பாடுகளுக்காக, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை சந்தித்தார். இவர் தன் 81வது வயதில், 2022ல் இதே நாளில் மறைந்தார். இவரது நினைவு தினம் இன்று!
தோழர் புலியூர் (முகநூல், 23 அக்டோபர் 2025)
நேசிப்பிற்குரிய தோழர், இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராளியாக வரலாற்றில்.நிலைத்து நிற்பவர், போற்றுதலுக்குரிய படைப்பாளுமை எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்களின் மூன்றாமாண்டு நினைவு நாளில் புகழ் வணக்கம் செலுத்துவோம்...
மோகன்ராஜன் இராமையன் (முகநூல், 23 அக்டோபர் 2025)
எழுத்தாளர், கதைசொல்லி, காத்திரமான கட்டுரையாளர்தோழர் ஜே.பி.அவர்களின் நினைவேந்துவோம்!
Sundaran Murugesan (முகநூல், 23 அக்டோபர் 2025)
எழுத்தாளர்.பா. செயப்பிரகாசம்
மறைந்து
மூன்றாண்டுகள்
கடந்துவிட்டது.
அவரின்
பங்களிப்பைப்
போற்றி
நினைவு கூர்வோம்.
🎉❣️🙏🙏🙏🙏
இறையழகன் (முகநூல், 23 அக்டோபர் 2025)
தூய தமிழ்த்தேசியர்,
இந்தி எதிர்ப்பு போராளி,
நாடறிந்த எழுத்தாளர்
ஐயா பா.செயப்பிரகாசம் அவர்களுக்கு தமிழ்நிலம் தமிழ்ப்பண்ணை உணவுக்காடு மற்றும் வேளாண் சுற்றுலா நடுவத்தின் மூன்றாமாண்டு நினைவு புகழ் வணக்கம்.
Prabhala Subash, Albert Raj, Sankar Sankar (முகநூல், 23 அக்டோபர் 2025)
🦉முற்போக்கு எழுத்தாளர் பா.செயப்பிர காசம் நினைவு நாள். 😢
பா.செயப்பிரகாசம் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என ஏராளமான படைப்புகளை தந்துள்ளார். சிறுகதைத்துறையில் இவரது பங்களிப்பு முக்கியமானது. சூரிய தீபன் என்ற புனை பெயரிலும் ஏராளமான படைப்புகளை எழுதியுள்ளார். மன ஓசை ஏட்டின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார். இந்தி மொழி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் மாணவப் போராளியாக பங்கேற்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.
கரிசல் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளில் பா. செயப்பிரகாசம் ஒருவர். எளிய மக்களின் வாழ்வியல் போராட்டத்தையே அவர் படைப்புகளாக்கினார். இவருடைய ஒரு ஜெருசலேம், காடு ஆகிய தொகுப்புகள் முக்கியமானவை. மூன்றாவது முகம்,இரவுகள் உடைபடும் ஆகிய தொகுப்புகள் சூரியதீபன் என்னும் பெயரில் வெளிவந்துள்ளன.
தமிழ் படைப்பாளிகள் முன்னணி என்ற அமைப்பின் செயலாளராகவும் இருந்துள்ளார்.
ஈழப் போராட்டத்தை குறித்தும் படைப்புகளை எழுதியுள்ளார்.
பா.செயப்பிரகாசம் தனது மொழியை அதிகாரத்துக்கெதிரான, ஒடுக்குமுறைக்கு எதிரான வலிமையான உரையாடலாக நிகழ்த்தியவர் எழுத்தாளராக மட்டுமின்றி, களப் போராளியாக வாழ்ந்தவர் .
மரணத்துக்குப் பின்னர் அவருடைய உடல் அவருடைய விருப்பப்படி தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
Meenakshisundarm Nataraajn (முகநூல், 23 அக்டோபர் 2025)
நினைவஞ்சலி
//+40 ஆண்டு காலநட்புடைய மூத்த முன்னோடி தோழர்!
மானுட நேயமிகு
எழுத்தாளர், தோழர் பா.செயப்பிரகாசம் இயற்கையெய்தினார். வீர வணக்கம்!//
Veli Rangarajan (முகநூல், 23 அக்டோபர் 2025)
கரிசல் வாழ்வியல் சார்ந்த இலக்கியப் படைப்பாளியும், இடதுசாரி இயக்க ஆதரவாளரும் ,நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைகளில் ஆழ்ந்த ஈடுபாடுகள் கொண்டவருமான பா.செயப்பிரகாசம் நினைவுக்கு அஞ்சலிகள்.
Maran Sornam (முகநூல், 23 அக்டோபர் 2025)
தமிழ்நாட்டில் பெரும் அரசியல் மாற்றங்களுக்குக் காரணமாக இருந்த
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் உண்மைத் தளபதி பா. செயப்பிரகாசம் அவர்கள் நினைவு நாள் இன்று.
இருமுறை இந்தியப் பாதுகாப்புச் சட்டபடி (DIR) தளைப்படுத்தப்பட்டவர் / 1965.
Thulakol Soma Natarajan (முகநூல், 23 அக்டோபர் 2025)
பகுத்தறிவுப் பொதுஉடைமைப் போராளி .
படைப்பாளி #பா_ஜெயப்பிரகாசம் (#சூரியதீபன்)
நினைவுநாள் அக்டோபர் 23. (2022)
பா. செயப்பிரகாசம் (1941 – 23 அக்டோபர் 2022) தமிழ்நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும்
#திராவிட - #பொதுவுடைமைச் சிந்தனையாளர்.
பேராசிரியராகவும், தமிழ்நாட்டரசில்
இணை இயக்குநராகவும் பணியாற்றியவர்.
சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள்
ஆகியவற்றை எழுதியுள்ளார். குறிப்பாகச் சிறுகதைகளில் இவரது பங்களிப்பு
தனித்துவமானது. எழுத்து வட்டத்திற்குள்
மட்டுமே தன்னை சுருக்கிக் கொள்ளாமல்,
போராட்டக் களத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து
கொண்டு சிறை சென்றவர். எழுத்தாளர்,
பேச்சாளர், பேராசிரியர் உள்ளிட்ட
பன்முகத் திறமை கொண்டவர்.
தமிழ் இலக்கிய உலகில் மிகப்பெரும்
பங்காற்றியவர்.
உடல் நலக்குறைவால் கடந்த
2022, அக்டோபர். 23 ஆம் நாள் அமரரானார்.
⚖️💪புரட்சிவீரப் புகழ் வணக்கம்💪⚖️
⚖️ #துலாக்கோல்/ 23.10.2025⚖️
Baskaran Srinivasan (முகநூல், 23 அக்டோபர் 2025)
அக்டோபர் 23,
வரலாற்றில் இன்று.
எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் நினைவு தினம் இன்று (2022).
செயப்பிரகாசம், தனது முதுகலை தமிழ் படிப்பை மதுரை தியாகராசர் கல்லூரியில் முடித்தார்.
1965இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவப் போராளியாய்ச் செயலாற்றினார். தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த 10 மாணவர்களில் இவரும் ஒருவர். 1968ஆம் ஆண்டு முதல் 1971ஆம் ஆண்டு வரை மதுரையில் கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றினார்.
பின்னர் 1971ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறைப் பணி மற்றும் இணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
தாமரை, கணையாழி, தினமணி, புதிய பார்வை, தீராநதி, கதைசொல்லி, ஆனந்த விகடன், காலச்சுவடு, அம்ருதா, உயிர்மை, நந்தன், சதங்கை, இந்தியா டுடே, தமிழ் நேயம், மனஓசை போன்ற இதழ்களில் இவரது படைப்புக்கள் வெளி வந்துள்ளன.
இதில் கவிதை, கதை, கட்டுரை மற்றும் உருவகக் கதைகள் எனப் பலவற்றை இவர் படைத்துள்ளார். இவரது படைப்புகள் கீற்று, பொங்கு தமிழ் போன்ற இணைய இதழ்களில் தொடர்ந்து வெளிப்படுகின்றன. ‘மனஓசை’ என்ற கலை இலக்கிய மாத இதழின் பொறுப்பாசிரியராகவும் இருந்தார்.
1981 முதல் 1991 வரை வெளியான மனஓசை இதழ், பத்து ஆண்டுகள் தமிழிலக்கிய உலகில் முன் மாதிரிப் பதிவுகளை உருவாக்கியது. இந்த இதழ் ஏற்கனவே இயங்குகிற சமூக நீரோட்டத்துடன் செல்லாமல் எதிர்க் கருத்தியலை வைத்து நடை போட்ட இதழ் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி என்னும் அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். 2008இல் ஈழத்தின் மீதான யுத்தம் உச்சத்திலிருந்த நேரத்தில், அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு (ஈழம்) எழுதி வெளிவந்த “இந்தியாவைத் தொடர்ந்து தோற்கடிக்கும் இலங்கையின் இராசதந்திரம்” என்னும் சிறு வெளியீடு, பத்தாயிரம் படிகள், தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி சார்பில் இவரது முயற்சியில் மறுபதிப்பு செய்து, இலவசமாக தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.2002இல் ஈழத்தில் ‘அமைதி ஒப்பந்த காலம்’, 2002 அக்டோபரில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் விடுதலைப் புலிகளின் முன்னெடுப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘மானுடத்தின் தமிழ்க்கூடல் மாநாட்டில்’ பங்கேற்றார். கவிஞர் இன்குலாப், ஓவியர் மருது, திரை இயக்குநர் புகழேந்தி, விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் ஆகிய ஐந்து பேரும் பங்கேற்ற அந்நிகழ்வில், ஒவ்வொரு நாள் நிறைவிலும் ஒருவர் உரையாற்றினர்.
மூன்றாம் நாள் நிகழ்வில் இவருடைய உரை நிகழ்ந்தது. ’மானுடத்தின் தமிழ்க்கூடல்‘ மாநாட்டின் தொடர்ச்சியாய் ஈழத்தில் பத்து நாட்கள் மேற்கொண்ட பயண அனுபவங்களின் தொகுப்பாக ”ஈழக் கதவுகள்” என்னும் நூல் வெளியானது.

கருத்துகள் / Comments