கூடைக்காரிகள்

தேன் சொட்டும் பாகல்
தித்திக்கும் வெண்டை
நாக்கூற வைக்கும் நல்பீர்க்கை
ஆரோக்கியம் தலைச்சுமையாய் வந்தன
அன்று வீதிக்கு;
கூடை சுமந்துவரும் பெண்டுகளுடன்
காடும் வரும்
தோட்டக்காடு ஊடுருவி
சுமந்துவந்த காட்டுவாசத்தை
முற்றத்தில் இறக்கி வைப்பார்கள்;
பெண்டுகள் அகன்ற பின்னும்
முற்றத்தில் நின்று பேசிக்கொண்டிருக்கும்
மணம்;
மறையாப் பெருவெளி வாசத்துக்குள்
மரணமிலா மனசுகள்!
’வாம்மா என்றழைத்தால்
வயிற்றிலிருப்பதையும்
வாந்தி எடுத்துக் கொடுக்கும்’
கூடைக்காரிகள் கிடைப்பார்களா
’ரிலையன்ஸில்’ இனி ?

- சூரியதீபன் (2 ஜூன் 2019)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி

திசையறிந்த தென்மோடிக் கூத்து

பாரதிபுத்திரன் என்ற மானுடன்