இன்றுதான் நான் பிறந்தேன்


(அரசுப் பணியிலிருந்து நான் ஓய்வு பெற்ற போது “இன்று நான் பிறந்தேன்“ என்று கவிதை எழுதி அந்த நாளைக் கொண்டாடினேன்.

அரசுப் பணி என் சிந்தனையில் ஏற்றப்பட்ட பளு! அந்தப் பளுவை எப்போது உதறுவது என்று காத்திருந்தேன். கேவலங்களும் பரிதாபங்களும் வன்மங்களும் நிறைந்த ’இருட்டுக் கெசம்’ அது. ஒவ்வொருவரையும் பேய் பிடித்தாட்டும் இடம். அந்தப் பேயாட்டத்திலிருந்து தப்பித்த நாளை பிறந்த நாளாய்க் கொண்டாடிய கவிதை)

இன்றுதான் நான் பிறந்தேன்
கிளி என்றால் பேச,
பறவை என்றால் பறக்க,
வெற்றுடம்பின் புழு என்றால்
ஊர்வதும் உண்டாம்;
பேச, பறக்க, ஊர்ந்து செல்லவும்
அனுமதி வேண்டும் அரசு ஊழியனுக்கு.
இன்று சிந்தனைச் சுதந்திரம் தொடக்கம்,
நான் ஓய்வு பெறுகிறேன் (30-06-1999)
இன்றுதான் நான் பிறந்தேன்
நேரடியாயும் மறைந்தும் பிணைத்த
அடிமை விலங்குகள் அற!
இலக்கியப் பெருவெளியில்
கத்தரித்த சிறகுகள்
இனி முளைக்கும்
கலைந்த கரு உயிர்க்கும்
இனி உங்களுடன் என்றென்றும் நான்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

இலக்கியப் பிரச்சினைகள் - தலித் எழுத்து

பா.செயப்பிரகாசம் நூல்கள்

கி.ரா.வின்‌ கன்னிமை