தமிழ் இனி 2000 - உலகத் தமிழ் இலக்கியக் கருத்தரங்கு செப்டம்பர் 1-3, ஹோட்டல் அட்லாண்டிக், எழும்பூர், சென்னை காலச்சுவடு இதழ் நடத்திய, 2000-த்த...
தமிழ் இனி 2000 - உலகத் தமிழ் இலக்கியக் கருத்தரங்கு
செப்டம்பர் 1-3, ஹோட்டல் அட்லாண்டிக், எழும்பூர், சென்னை
காலச்சுவடு இதழ் நடத்திய, 2000-த்தில் ‘தமிழ் இனி மாநாடு’ சென்னையில் மூன்று நாட்கள் நிகழ்வுற்ற போது, உலகெங்குமிருந்து தமிழ் ஆய்வாளர்கள், படைப்பாளிகள் பங்கேற்று பதிவுகள் செய்தனர். இரண்டாம் நாள் அரங்கில் மதிய உணவுக்குப்பின் நடைபெற்ற அமர்வில் இராசேந்திரசோழனும் பா.செயப்பிரகாசமும் ‘மார்க்சிய அழகியல்’ என்னும் தலைப்பில் கட்டுரை படித்தார்கள்.
கருத்தரங்கில் பங்குபெற்றவர்கள்: பஞ்சாங்கம், அசுவகோஸ், சேரன், சிவத்தம்பி, நுஃமான், அடூர் கோபாலகிருஷ்ணன், மாலன், சுஜாதா, சிவசங்கரி, எஸ்.வி. இராஜதுரை, த.மு.எ.ச. கதிரேசன், சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், அசோக மித்திரன், ராஜ் கௌதமன், உஞ்சை ராசன், அம்பை, மங்கை, வ.கீதா, ஒளவை, பூரணச் சந்திரன், ஜீ.எஸ்.ஆர். கிருஷ்ணன், பிரேம், தருமராஜ்.
காற்றுக்கென்ன வேலி திரைப்படம் தணிக்கை எதிர்த்து போராட்டம், செப்டம்பர் 2000
காலை கண்டனக்கூட்டம்: திரைப்பட வர்த்தக அரங்க முற்றம்
மாலை ஆர்ப்பாட்டம்: சென்னைக் கடற்கரை காந்தி சிலை பின்புறம்
இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் தயாரித்து இயக்கிய, ‘காற்றுக்கென்ன வேலி’ படம் தணிக்கை அலுவலகத்தில் பிரச்சனையானது. தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியின் முதற் போராட்டம் ‘காற்றுக்கென்ன வேலி’ திரைப்படத் தணிக்கையை எதிர்த்து அமைந்தது; ஈழப்போரில் காயமுற்று தமிழகக் கடற்கரையில் வந்தடையும் அகதிகளுக்கு, நாகப்பட்டிணத்திலுள்ள ”மகாத்மா காந்தி மருத்துவமனையில்” மனித நேய மருத்துவரான சுபாஷ் சந்திரபோஸ் உதவி புரிவதாகக் கதை. ஈழத்தமிருக்கு உதவிக்கரம் நீட்டுவதாகப் பாவலா பண்ணினாலும், அது காங்கிரஸ், பா.ச.க என எந்தப்பெயரிலான நடுவணரசாகவும் இருப்பினும், வாய் கருப்பட்டி, கை கருணைக்கிழங்கு தான் (பேச்சு கருப்பட்டியாய் இனித்தாலும், காரியம் அத்தனையும் கருணைக்கிழங்காய் அரிப்பெடுக்க வைத்து அலையக்குலையச் செய்யும்). தமிழரைப் பகையாளியாய்ப் பார்ப்பது நடுவணரசுக்கு உடன்பாடான கொள்கை. உடன்பாடற்ற முரணான கொள்கைக்குத் தணிக்கைத்துறை எவ்வாறு ஒப்புதல் தரும்.
தணிக்கைத்துறையின் சூழ்ச்சியைத் திரைப்பட வர்த்தக அரங்க முற்றத்தில் 2000 செப்டம்பரில் முன்னணியின் செயலர் என்ற வகையில் பா.செயப்பிரகாசம் தலைமையேற்க, பாரதிராஜா, பாக்யராஜ், ஆர்.சி.சக்தி, சேகர் போன்ற திரைத்துறை இயக்குநர்கள், இன்குலாப், மு.மேத்தா போன்ற இலக்கியவாதிகள் பங்கேற்ற கண்டனக்கூட்டம், நடைபெற்றது. அன்று மாலையே சென்னைக் கடற்கரை காந்தி சிலையின் பின்புறம் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. அனுமதிக்காவிடினும் தடையை மீறி நடத்துவதென தமிழ்ப் படைப்பாளிகளும் திரைப் படைப்பாளிகளும் இணைந்து தீர்மானித்தனர். காவல்துறை அனுமதிக்காதென்பது அனைவரும் முன்னக்கூட்டி அறிந்ததுதான்; தடுத்துப் பார்த்தும் பாரதிராஜா போன்ற திரைப்படைப்பாளிகள் உரையாற்றியதைக் காவல்துறையால் ஏதும் செய்யமுடியவில்லை.

கருத்துகள் / Comments