மார்க்சிம் கார்க்கியின் நாவல் ”கிளிம் சாம்ஜியின் வாழ்வு” மூன்றாம் தொகுதி: தமிழ் இலக்கிய உலகை முன்னிறுத்தி….

உண்மையான கருத்துக்களை மறைத்து, நேரெதிர் செயல்கள் ஆற்றும் ஒரு அறிவு ஜீவி கிளிம் சாம்ஜி. நடுத்தர வர்க்கத்தின் அச்சு அசலான தாமரை இலைத் தண்ணீர். வரலாற்றை தனக்கே உரிய வகையில் எடுத்துக் கொள்வதோடு,   வரலாற்றின் தேர்வு செய்யப்பட்ட ஒரு பகுதி முகத்தில் மாத்திரமே விழிக்க விரும்புகிறவன். புழுக்கம் மிகுந்த இவ்வமைப்பை கேள்விக்குட்படுத்தாமல், அதற்குள்ளிருந்து உருவாகும் வெக்கை மனநிலைகள் குறித்துப் பேசாமல், ஒளித்து மறைத்துத் திரியும் இலக்கிய நுண்ணரசியல் குறித்து இந்நாவலில் வெளிப்படுத்துகிறார் மார்க்சிம் கார்க்கி.

“வாழ்க்கை குறித்த முழுமையான எதிர்நிலை நோக்கு தமிழ் நவீனத்துவத்தின் முதிர்ச்சி நிலை” என்று கூற்று சமகாலத்தில் முன்னெடுக்கப்படுகிறது. இந்நோக்கு காரணமாய் கிளிம் சாம்ஜியின் நகல்களின் நடமாட்டம் எழுத்துலகில் கூடுதலாகியிருக்கிறது. காற்றோட்டமான ஒரு அமைப்பை உண்டுபண்ணும் எழுத்து முயற்சி இன்றி, கிளிம் சாம்ஜி போல அவரவர் பாடல் அவரவர் பாடுகிறார்கள். கிளிம்மின் வாழ்வுச் செயல்பாடுகளை முன்னிறுத்தி, இதுவரை தமிழில் திறக்காத கதவுகள், சாளரங்களைத் திறந்து காட்டும் முதல் பதிவைச் செய்கிறார் ஈழத் தமிழ் எழுத்தாளர் ஜோதிகுமார். ’தீர்த்தக்கரை’ – இலக்கிய இதழாசிரியர், ஆய்வாளர். ஒவ்வொரு படைப்பாளியும் தன்னை உணரவும், அவ்வழியில் தன்னெழுத்தை மதிப்பீடு செய்யவும் தமிழின் சில எழுத்துக்காரர்களை ஒப்பிட்டுச் செய்யப்படும் இப்பதிவு அதிக பக்கங்களுடையதாயினும் தவிர்க்கவியலா வாசிப்புக்கு உரியதாகும். குறிப்பாக இறுதியாய் வருகிற நான்காம் பகுதி அவசியம் வாசிப்புக்கு உட்படவேண்டியாகும். 

- நன்றி: புக் டே (July 2020)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

பஞ்சாபி இலக்கியம் - ஆட்காட்டிக் குருவிகளாய் பெண் குரல்கள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) வாழ்க்கை வரலாறு

பா.செயப்பிரகாசத்தின் சிறுகதை ‘அம்பலகாரர் வீடு’ - பெ.விஜயகுமார்