மாவீரன் கேணல் பரிதியின் கொலை10 நவம்பர் 2012

ஈழப் பிரதேசத்துக்குள் நடத்தி முடித்த யுத்தத்தை  இன்று புலத்துக்கும் நீட்டியிருக்கிறாரகள். புலம் பெயர் ஈழர்களின் கருத்துப் பரப்பல் இலங்கைப் பாசிச சக்திகளுக்கு தீராத தலையிடியாக வருகிறது. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாத வேளை பாசிசம் ஆயுதத்தால் மவுனிக்க முயலுகிறது. அதை தன் உள்ளாட்கள் இல்லாமல் செய்ய இயலாது. இதுதான் மாவீரன் கேணல் பரிதியின் கொலை.

எல்லை தாண்டிய பயங்கர வாதமும் இதுதான். செப்டெம்பர் 11, 2001-ல் அமெரிக்கா எல்லை தாண்டிய  பயங்கரவாதம் என்றது. அதைக் காரணம் காட்டி சதாம் ஹுசேனை அழித்தது. உலக நாடுகள் மேலெல்லாம் பாய்ந்து நாடகத்தை அரங்கேற்றியது. இந்தியா 2008-ல் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என மும்பைத் தாக்குதலை சுட்டிக் காட்டி உள்நாட்டு மக்களை வேட்டையாடியது. இதை இப்போது இலங்கையின் ராஜபக்‌ஷேக்களும் செய்கிறார்கள்.

இன்னும் விடுதலை விடியல் தெரியும் வரை நம் பணிகள் தொடருகின்றன. வால்ட் விட்மன் கவிதை வரிகளை கேணல் பரிதிக்கும் மாவீரர் நினைவுக்கும் காணிக்கை யாக்குவொம்.

“விடுதலைக்காக விதைக்கப்பட்ட கல்லறைகளில்
விடுதலை விதை வளராத கல்லறை எதுவும் இல்லை.”

பா.செயப்பிரகாசம்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) வாழ்க்கை வரலாறு

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை