கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன
எனக்கு முதன் முதலாக பா.செ அவர்களின் அறிமுகம் என்பது கவிதை வழியேதான் நிகழ்ந்தது. அது கரிசல் மண்ணின் கதை சொல்லியாக அல்ல. கரிசலின் தீவிரமும், தகிப்பும் கொண்டதான ஓர் கவிதைக்காரராக, சூரியதீபனாகதான் அந்த அறிமுகம். கவிதைகளில் வெம்மை கொண்ட சூரியதீபன் தான் செயப்பிரகாசம் என்று அறிவதற்குள்ளாக அவரது கட்டுரைகளை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். கிராவின் ‘கரிசல்காட்டுக் கடுதாசிக்குப்’ பிறகு, ஜுனியர் விகடன் இதழில் வந்த தொடர்களில் எனக்குப் பிடித்ததாக ‘தெக்கத்தி ஆத்மாக்கள்’ இருந்தது. கரிசல் என்பது இரத்தமும், சதையும் கொண்ட மனிதர்கள் நம்மக்கிடையே உலவும் ஒரு பகுதிதான் என்பதை அவரது எழுத்துக்கள் சொல்லின. அந்த வாழ்க்கை முற்றிலும் தஞ்சை மண்ணுக்கு அந்நியமான ’கம்மஞ்சோறு’ போலவே இருந்தது. பா.செ தொகுத்த-மொழிபெயர்த்த ‘சோசலிசக் கவிதைகள்’ என்ற உலக ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டக் களங்கள் பற்றிய சிறு-கவிதைத் தொகுப்பு. அதை தேடி வாசிப்பதற்கு காரணமாக இருந்தது தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்-கலை இலக்கிய முகமான ‘புலிகளின்குரல்’ ஏட்டில் ‘சோசலிசக் கவிதைகள்’ நூலிலிருந்து ஒரு கவிதை பிரசுரமாகியிருந்தது. போருக்குப் போகும் ஓர்
கருத்துகள்
கருத்துரையிடுக