யமுனா ராஜேந்திரன் கட்டுரை குறித்து கடிதம்

அன்புள்ள யமுனா,

தமிழர் அரசியலின் சாபம் கட்டுரை கண்டேன். தமிழரின் சாபம் எங்குள்ளது என மிக நுணுக்கமாக கண்டடைந்துள்ளீர்கள். உணர்ச்சி வசப்படுதலில், உணச்சிவயமான பின்பற்றுதலில், சார்ந்து நிற்பதில் தங்கியுள்ளது. இது சனநாயகம் கருதப்படாத, அதனை மக்களோடு இணைத்துக் கொள்ளாத செயல் முறையினாலேயே பிறக்கிறது. அதாவது முதலில் ஒவ்வொருவருக்கும் சிந்திப்புத திறன் இயல்பானது என ஏற்றுக் கொள்ளல் வேண்டும், அளவில் முன் பின் இருக்கலாம், ஆனால் அதை ஏற்றுக் கொள்ளவே ஒரு சனநாயகம் வேண்டும். மேதமை என்பதே பிம்ப வழிபாட்டை உருவாக்கும் ஒரு ஊற்றுக் கண்தான். சமீபத்தில் சட்டமன்றக் கூட்டத்திலேயே நிதி அமைச்சர் ஒ.பன்னிர்செல்வம்  அழுத அழுகை தாங்கொனாதது. அது தமிழில் இருப்பதால் என்னால் அனுப்ப இயலவில்லை. இணையத்தில்  தினமலர் கிடைக்குமானால் இம்மாதம் 5-ந்தேதி பாருங்கள்.

"முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான விடுதலை அரசியல்" என்ற எனது கட்டுரை மே காலச்சுவடில் வெளிவருகிறது. அதனை தனியாக அஞ்சலில் அனுப்பியுள்ளேன். அதற்குரிய font-ம் இணைத்துள்ளேன்.

பா.செ

10 ஏப்ரல் 2012


கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

Manal Novel - Jeyapirakasam deftly blends many folktales, rituals, folk beliefs with the modern day political happenings

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்