(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சைதை கிளைப் பேரவையில் `நாம் எதிர்கொள்ளும் பண்பாட்டு சவால்கள்' என்ற தலைப்பில் தோழர் சூரியதீபன் ஆற்றிய உரையின் சுருக்கம். எழுத்துருவம்: சூரியசந்திரன்) தென்மாவட்டத்தில் சங்கரன்கோயில் என்றொரு சிறுநகரம். அந்த நகரத்துக்கு நான் சென்றிருந்தபோது பொங்கல் நேரம். வீதிகளெல்லாம் சிமெண்ட் சாலை போடப்பட்டிருந்தன. எல்லா வாசல்களிலும் இரவு முழுவதும் கண்விழித்து கோலங்கள் இட்டிருந்தார்கள். அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நானும் எனது நண்பரும் கோலங்களைப் பார்ப்பதற்காகச் சென்று கொண்டிருந்தோம். அந்தக் கோலங்கள் ஒவ்வொன்றையும் தாண்டிச் செல்கிறபோது என்னுடைய கால்கள் சடக்கென ஒடிந்து விழுவதைப்போல ஒரு கோலத்தின் மீது நின்றது. காரணம் அந்தக் கோலத்தில் Happy pongal என்கிற வாசகம் இருந்தது. காலையிலே, அவர்கள் வீட்டு முற்றத்திலே பொங்கலிட்டு முடிந்த பிறகு ஒன்பது மணியளவில் ஒலிபெருக்கியிலிருந்து “இப்போது நாம் பொங்கலிடுவதற்காக பிள்ளையார் கோயில் முன் கூடுவோம்” என்றொரு அறிவிப்பு வருகிறது. அதாவது, இன்னொரு பொங்கலுக்குத் தயாராகும்படியான அறிவிப்பு அது. இந்த இரண்டு சம்பவங்களிலும் இரண்டு பண்பாட்ட...
எஸ்.எஸ்.போத்தையா என்னவாக இருக்க நினைத்தார்? “உள்ளத்தால் உயர்வுள்ளல்” - எனும் அறமொழிக்குப் பொருத்தமாய் - நினைப்புக்கு ஏற்ப வாழ்க்கை அமைகிறது என்பது பொதுவான நம்பிக்கை. நல்ல கணவன் அல்லது நல்ல மனைவி அமைய வேண்டுமென்று நினைப்புக்களில் விதை போடுகிறோம். பெரும்பாலான வாழ்க்கைகளில் விதையொன்று போட சுரையொன்று முளைக்கிறது. சமூக அமைப்பில் கணவன் என்பதும் மனைவி என்பதும் வேறுபாடான யதார்த்தங்களால் தீர்மானிக்கப்படுகிறது. நினைப்பு நிறைவேறாத பட்சத்தில். “திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது” “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” - இவ்வாறு சொர்க்கத்துக்கோ, கடவுளுக்கோ, பொறுப்பைத் தள்ளி விடுகிறோம். கனவினும் கூடுதலான புனைவு இது. போத்தையா காலத்தின் கிராமப்புற ஆசிரியர்களுக்கு அவர்கள் என்னவாக வேண்டுமென விரும்புகிறார்களோ, அதுவாக ஆகிற வாய்ப்புகள் சூழ இருந்தன. 1950, 60-களின் ஆசிரியர்கள் சுதாரிப்பானவர்கள். கிராமங்களில் இருந்தாலும், அவர்களுக்கு நகரவாழ்வின் சூழ்ச்சி தட்டியிருந்தது. கைக்கும் மெய்க்கும் இல்லாமல் (அன்றாடச் செலவுக்குமில்லாமல்) இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்றிரு...
சென்னை, 22-03-2003 அன்பு நண்பருக்கு, கடிதம் வந்தது. இப்படி அவ்வப்போது தொடர்பு கொள்ளுங்கள். நனவில் உயிர்த்தெழுதல் நிகழும். அந்தக் கதை நீண்டதாக இருந்ததால், படைப்பாளிக்கு எல்லாமே முக்கியம் தானே, வாசிப்பில் விடுபட்டுத் தெரிகிற இடங்களை வெட்டுங்கள் என்று சொல்ல, ஏகத்துக்கும் வெட்டி, இஷ்டத்துக்கு பகுதி பிரித்து என்னென்னமோ செய்து விட்டார்கள். அதனால் ஒரு எழவும் புரியாது. புரியாததுக்கு எல்லாம் இருக்கறதே ஒரு பெயர் “பின் நவீனத்துவம்”! 30-03-2003-ல் கல்கி இதழில் சாகித்ய அகாதமி பற்றி எனது நேர்காணல் வருகிறது. சாகித்ய அகாதமியை எப்படி இந்துத்வா ஆக்கரமித்துவிட்டது என்று விளக்கியுள்ளேன். எனக்கென்னமோ பிரகாஷை ஒன்றுக்கும் ஆகாமல் செய்துவிட்டது போல் தோன்றுகிறது. அவனுக்குள் எப்பேர்ப்பட்ட கலைஞன் இருக்கிறான். வீர.வேலுச்சாமி என்ற ஆகாயமார்க்க நிழல்பட்டதால் அவனுக்குள் கருவுற்றது படைப்பாற்றல். வந்தது வரட்டும் என்று ஒரு நாவல் எழுதச் சொல்லுங்கள் - வளமாய் வெளிப்படும். நட்புடன் பா.செயப்பிரகாசம்
பல புத்தகங்களை நாம் புரட்டுவோம், சில புத்தகங்கள் நம்மை புரட்டிப்போடும். இந்த புத்தகம் இரண்டாம் ரகம். முதலில் நான் ஒரு உண்மையைச் சொல்லி விடுகிறேன். ஐயா பா.செயப்பிரகாசம் கரிசல் எழுத்துலகை கட்டி எழுப்பியவர்களில் முக்கியமான எழுத்தாளர். மண் மனம் மாறாத எழுத்துக்குச் சொந்தக்காரர் என்பது போன்ற மேலோட்டமான தகவல்களன்றி அவரது எழுத்துக்களை அதிகம் வாசித்ததில்லை. முதன்முதலாக அவரது எழுத்துக்களை இந்த “பள்ளிக்கூடம்” நாவல் வழியே சமீபத்தில்தான் வாசித்தேன். பல நூறு சிறுகதைகளை, கட்டுரைகளை, கவிதைகளை எழுதியுள்ள ஐயா பா.செயப்பிரகாசத்திற்கும் இதுதான் முதல் நாவல். எழுத்துலகில் முதுபெரும் ஆளுமையான ஐயா பா.செயப்பிரகாசத்தின் எழுத்துக்களை விமர்சனம் செய்யவோ, மதிப்பிடவோ எனக்கு உண்மையில் இயலாது. இங்கு இந்நூலைப் பற்றிய வாசிப்பனுபவத்தைத் தருகிறேன், குறையிருந்தால் பொறுத்தருள்க! இந்நாவல் சுமார் முப்பதாண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களோடு விரிகிறது. அதுவரை தமிழ்நாட்டில் பொதுப்பள்ளிகள் என்னும் அரசுப்பள்ளிகளே கல்வி வழங்கும் சேவையைச் செய்து வந்தன. ஆனால் இந்நாவல் தொடங்குமிடம் அரசுப் பள்ளிகள் மட்டுமே என்னும் நிலை மாறி தனியா...
கருத்துகள்
கருத்துரையிடுக