பங்குப்பெற்ற நிகழ்வுகள் 2013 - இந்தியா

சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையத்தின் ஏற்பாட்டில் "தமிழீழ சுதந்திர சாசனம்" உருவாக்கம் கருத்தரங்கம் - 18.4.2013சென்னை தியாகராநகர் பகுதியில் சந்திர சேகர் திருமண மண்டபத்தில் பேராசிரியர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஈழத்தில் எரியும் நெருப்பாய் தமிழீழ பெண்கள் என்ற ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது ஆவண படத்தினை சீமான் வெளியிட எழுத்தாளர் செயப்பிரகாசம் பெற்றுக்கொண்டார்.


ஈழத்தில் 2009 ற்கு பின்னர் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் படையினரால் பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் வல்லுறவுகள் படையினரின் ஆக்கிரமிப்புக்கள், பௌத்த விகாரைகள் உருவாக்கால் என்பன தொடர்பில் ஈழத்திற்கு சென்று வந்த இந்தியாவினை சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்தும் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களின் கருத்தும் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளதுடன் ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து தமிழீழ சாசனம் தொடர்பான கையேட்டினை திராவிடர் விடுதலைக்கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் வெளியிட மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவகருல்ல பெற்றுக்கொண்டார். தொடர்ந்து ஆவணப்படத்தினை இயக்கிய வழக்கறிஞர் பாண்டிமா தேவி இந்த படம் தொடர்பான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்துக்களை சாத்தப்பன், எழுத்தாளர் செயப்பிரகாசம், தோழர் தியாகு, தமிழக மனிதநேய மக்ககள் கட்சியின் தலைவர் ஜவாகர், கொளத்தூர் மணி ஆகியோர் நிகழ்த்த சிறப்புரையினை நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிகழ்தினார்.


இந்த நிகழ்வில் தமிழீழ சுதந்திர சாசனம் தொடர்பான கேள்விக்கொத்துக்களும் அதற்கான பதில்களை அனைத்து தமிழ் மக்களிடம் இருந்தும் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது

இந் நிகழ்வு ஏற்பாட்டினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழ்நாட்டு தோழமை மையம் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சி உரையை இங்கு காணலாம்.

குறுந்தட்டு வெளியீடு இங்கு காணலாம்.


அத்தருணத்தில் பகைவீழ்த்தி - நூல் வெளியீடு - 30.03.2013, சென்னை
நாள்: 30.03.2013
காலம்: மாலை மணி ஐந்து
இடம்: வடபழனி, திரை இசை கலைஞர்கள் சங்க அரங்கம்,சென்னை
பங்கேற்பு: பா.செயப்பிரகாசம், மனுஷபுத்திரன், பாமரன்
நூல் ஆசிரியர்: தோழர். அகரமுதல்வன்


சென்னை வடபழனியில் உள்ள திரை இசை கலைஞர்கள் சங்க அரங்கில் நடைபெற்ற நிகழ்விற்கு மூத்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தலைமை தாங்கினார், வரவேற்புரையினை ஈழத்தைச் சேர்ந்த ஏழாலையூர் வரன் நிகழ்த்த, சென்னையைச் சேர்ந்த பாமரன் “அத்தருணத்தில் பகைவீழ்த்தி” என்ற நுலினை வெளியீடு செய்ய, செயப்பிரகாசம் பெற்றுக்கொண்டார்.

இந்த நூலுக்கான கருத்துரைகளை ஓவியர் புகழேந்தி, ஈழத்தைச் சேர்ந்தவர்களான தீபச்செல்வன், ஈழவாணி, சோமிதரன், அன்பரசி ராஜ்குமார் ஆகியோர் நிகழ்த்த ஏற்புரையினை நூலின் ஆசிரியர் அகரமுதல்வன் நிகழ்தினார். கோகுலன் நடராஜனின் நன்றியுரையுடன் நூல் வெளியீட்டு நிகழ்வு நிறைவு பெற்றுள்ளது.இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது - 7 செப்டம்பர் 2013


நவம்பர் 15 ஆம் தேதி தமிழர் குறுதி தோய்ந்த இலங்கைத் தீவில் “காமன்வெல்த் அரசுகளின் தலைவர்கள் மாநாட்டை” நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். மார்ச் மாதத்தில் தமிழக மாணவர்களின் எழுச்சி மிக்க போராட்டத்தை துச்சமென மதித்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கையை பாதுகாத்த இந்தியா, இப்போது இனக்கொலையாளி இராசபக்சேவுக்கு ‘காமன்வெல்த்தின் கெளரவத் தலைவர்’ என்ற மகுடம் சூட்டப் போகின்றது.

சேவ் தமிழ்ஸ் இயக்கமும், தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவும் இணைந்து, தமிழினப் படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்ற முழக்கத்தோடு செப்டம்பர் 7 சென்னையில் பன்னாட்டு இளைஞர் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பல்வேறு மாணவர் இயக்கங்களைச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் அரசியல் தலைவர்களும் எழுத்தாளர்களும் தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டு மாநாட்டு கோரிக்கைகளுக்கு வலு சேர்த்தனர்.


தமீழழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவின் மாணவர் திவ்யாவின் தலைமையில் காலை அமர்வு மாணவர்களின் அமர்வாக நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், தமிழகத்திற்கு வெளியில் உள்ள இந்தியத் தொழில் நுட்பக் கழகம் போன்ற கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள், பிரித்தானியத் தமிழர் பேரவையின் (BTF) பிரதிநிதி ஆகியோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தமிழக வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் த.வெள்ளையன், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், பேராசிரியர் பால் நியூமன்,மருத்துவர் எழிலன், சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் தோழர் ச.இளங்கோவன் ஆகியோரும் இவ்வமர்வில் பங்கேற்று, ஏன் இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடக்கக் கூடாது என்பதை விளக்கியும், மாணவப் போராட்டங்களின் ஒருங்கிணைப்பையும் வலியுறுத்தியும் தமது கருத்துகளை பதிவு செய்தனர். தமிழக மாணவர் போராட்டத்தை வாழ்த்தியும் இம்மாநாட்டின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் தெலுங்கானாவில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் மாணவத் தலைவர் அருணக் அவர்களும் தில்லிப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மிர்த்யுன் செய் அவர்களும் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தனர்.

70-களில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் ஏற்பட்ட மாணவர் எழுச்சிக்கு பிறகு, மாபெரும் மாணவர் போராட்டமாக, கடந்த‌ மார்ச் மாதத்தில் நடைபெற்ற‌ மாணவர் போராட்டம் அமைந்திருந்தது எனவும், தற்போதுள்ள அரசியல் களத்தில் நம்பிக்கையளிப்பதாகவும் அமைந்திருக்கிறது என பா.செயப்பிரகாசம் குறிப்பிட்டார்.


Writer Jeyaprakasam said that Sri Lanka has never been a friendly nation to India. Whereas India sees Pakistan and China as a threat, it refuses to recognize Sri Lanka a potential threat in the south. He stated that India should not participate in the Commonwealth of Nations. நன்றி: TamilNet

மேலும் உலகத் தமிழர் அமைப்பு (WTO), USTPAC, தமிழீழ மக்கள் அவை (ICET), நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) உள்ளிட்ட புலம்பெயர் அமைப்புகள் ‘காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது’ என்று கோரியும் இம்மாநாட்டை வாழ்த்தி செய்தி அனுப்பியிருந்தனர்.

நன்றி: கீற்று


மாணவர் போராட்டம் - 8.3.2013
நன்றி: கீற்று

ஐ.நா.மனித உரிமை அவையில்,அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தும்,ஈழத்தில் நடந்தது இனப்படு கொலை என்ற உண்மையை ஐ.நா ஏற்க வேண்டு மென்று கோரியும் தமிழீழ மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென வலியுறுத்தியும் கோரிக்கைளை முன்வைத்து, சென்னை இலயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் இலயோலா கல்லூரி வளாகத்திற்குள் உள்ள அய்க்கப் (AICUF) அரங்கில் 8.3.2013 அன்று காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தைத் தொடங்கினர்.

நள்ளிரவுக் கைதுகளுக்கும்,காவல்துறை அடக்கு முறைகளுக்கும் பெயர் பெற்ற ஆரியப் பார்ப்பன பாசிஸ்டான செயலலிதா, மீண்டுமொருமுறை தனது வெறித் தனத்தைக் காட்டினார். மாணவர்களுக்கு ஆதரவாக அங்கிருந்த அனைவரும் கைது செய்யப்பட்டனர். மாணவர்களை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டி, தம் தரத்தை வெளிக்காட்டினர் காவல் துறையினர்.

உண்ணாப் போராட்டத்திலிருந்த 8 மாணவர்களும், இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கும் தமது உண்ணாப் போராட்டத்தை கை விடாமல் தொடர்ந்தனர் மாணவர்கள்.

ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தென் சென்னை மாவட்டச் செயலாளர் திரு.வேளச்சேரி மணிமாறன், வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன்,தமிழ்நாடு மக்கள் கட்சி செயற்குழு உறுப்பினர் தோழர் அருண் சோரி, திரை இயக்குநர்கள் மு.களஞ்சியம், கவுதமன், இராம், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் உள்ளிட்ட திரளான உணர்வாளர்கள் கைது செய்யபட்டு, அரும்பாக்கத்திலுள்ள சமூக நலக் கூடம் ஒன்றில் அடைக்கப்பட்டனர்.மரக்காணத்தில் நேரில் சென்று நடத்திய ஆய்வு - 29.4.2013
நன்றி: கீற்று

காஞ்சிபுரம் மாவட்டம், மகாபலிபுரத்தில் நடைபெற்ற கோடி வன்னியர்கள் கூடும் ‘சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா’வையொட்டி 25.4.2013 அன்று கிழக்குக் கடற்கரைச் சாலை மரக்காணம் காலனி (தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு) கட்டையன் தெரு, இடை கழியூர், கூனிமேடு ஆகிய இடங்களில் தலித் மக்கள் தாக்கப்பட்டது மற்றும் குடியிருப்புகள் கொளுத்தப்பட்டது குறித்த உண்மைகளை அறிய மக்கள் சிவில் உரிமைக் கழகம் (ம.சி.உ.கழகம்), தமிழ்நாடு -பாண்டிச்சேரி, ஒரு குழுவினை அமைத்தது.

பேராசிரியர் சரசுவதி-தலைவர் (ம.சி.உ.க.), பா. செயப்பிரகாசம் - எழுத்தாளர், த. முகேஷ் - பொறியாளர் - ம.சி.உ. கழக மாநில பொதுக் குழு உறுப்பினர், ராகவராஜ் - ம.சி.உ. கழக மாநில பொதுக் குழு உறுப்பினர், கௌதம் பாஸ்கர் - புதுவை சட்டக் கல்லூரி மாணவர் ஆகியோர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

உண்மை அறியும் குழுவினர் 29.4.2013 திங்களன்று தாக்குதலுக்குள்ளான பகுதிகளையும் வீடுகளையும் தலித் மக்களையும் நேரில் சென்று பார்த்தனர். மக்களைச் சந்தித்தனர்.

ஆய்வு குழு அறிக்கையை இங்கு படிக்கலாம்.

கலவரம் பற்றிய கட்டுரையை இங்கு படிக்கலாம்.தோழர் மணிவண்ணன் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு - 29.6.2013
நன்றி: கீற்று

தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் தமிழ்த் தேசியப் பற்றாளர் இயக்குநர் தோழர் மணிவண்ணன் அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு, 29.6.2013 அன்று மாலை சென்னை, வடபழனியிலுள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க அரங்கத்தில் நடைபெற்றது.தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், இயக்குநர் வெ.சேகர், ஓவியர் கு.புகழேந்தி, இயக்குநர் வ.கெளதமன், இயக்குநர் ம.செந்தமிழன் ஆகியோர் கலந்து கொண்டு இயக்குநர் மணிவண்ணன் அவர்களுடனான தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டு உரை நிகழ்த்தினர். தமிழ்த் தேசிய உணர்ச்சிப்பாவலர் கவிஞர் காசி ஆனந்தன், இயக்குநர் மணிவண்ணன் அவர்களது படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார்.

இங்கு பேசிய எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், ஒருவன் முற்போக்கானவன் என்றால் அவன் சார்ந்துள்ள இனம், தேசம் அடிமைப்பட்டுக் கிடப்பதை எதிர்த்து அவன் குரல் கொடுக்க வேண்டும் என்றார். 

முன்னதாக, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழக அமைப்பாளர் தோழர் உதயன் வரவேற்புரையாற்றிய பின், இயக்குநர் மணிவண்ணன் அவர்களது வாழ்க்கைக் குறிப்புகளை உள்ளடக்கி கவிஞர் கவிபாஸ்கர் எழுதிய குறுநூல் வெளியிடப்பட்டது. நூலை தோழர் பெ.மணியரசன் வெளியிட, இயக்குநர் மணிவண்ணன் அவர்களது மகன் திரு. இரகுவண்ணன், மகள் திருமதி ஜோதி ஆகியோர் நூலைப் பெற்றுக் கொண்டனர். கவிஞர் கவிபாஸ்கர் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.
பைபாஸ் சாலையிலுள்ள தனியார் அரங்கத்தில் நடந்த விழாவில்,  இப்புத்தகத்தை இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வெளியிட, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பெற்றுக்கொண்டார். இதில் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தலைமை தாங்க, ‘பூவுலகின் நண்பர்கள்’ ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் சுந்தர்ராஜன், நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பின் பாம்பன் அருளானந்தம், சென்னை சட்டக் கல்லூரி மாணவி திவ்யா, மதுரை முகிலன், நெல்லை பன்னீர், கோவை சிவா, தீபக் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

புரட்சிக் கவிஞர் கலை இலக்கிய மன்றம், வேலூர், 5 டிசம்பர் 2013

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார இலக்கியம்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

அறிவுசார் புலமைச் சமூகம்

பலியாடுகள்